…
…

வழக்கமாக, வடகிழக்கு பருவ மழைக்காலத்தில், வங்காள விரிகுடா
பகுதியில் தான் கடலின் சீற்றங்களும், காற்றழுத்த தாழ்வு
மண்டலங்களும், புயல்களும் உருவாகி பாதிப்புகள் அதிகமாக நிகழும்.
அதனால், தமிழக மீனவர்களில் பெரும்பாலானோர் இந்த
பருவகாலத்தில் பாதுகாப்பான பகுதி என்று கருதி, கேரளத்தையோட்டிய
அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்கிறார்கள். கரையையொட்டி மீன்
பிடித்தால், உள்ளூர், வெளியூர் மீனவர்களிடையே பிரச்சினைகள்
உருவாகும் என்பதால், அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்கு
செல்கிறார்கள்.
இந்த முறை யாரும் எதிர்பார்க்காமல் வங்கக்கடலில் உருக்கொண்டு,
இடம் பெயர்ந்து கன்யாகுமரியை ஒட்டி இந்து மகா கடலில் பலம் கொண்ட “ஒச்சி” புயல் அரபிக்கடலை நோக்கி தீவிரம் கொண்டது.
அது வரை காற்றழுத்த தாழ்வு பகுதி என்று சொல்லப்பட்டுக்
கொண்டிருந்தது, புயல் வடிவம் எடுத்த பின்னர் தான் புயல் உருவாகி
இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்திலிருந்தும், கேரளத்திலிருந்தும் அரபிக்கடல் பகுதியில்
ஆழ்கடலில் நூற்றுக்கணக்கான படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த
ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு இந்த தகவல் தெரிய எந்தவித
வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டது….
பாவம், புயலில் சிக்கி சின்னாபின்னமான மீனவர்களின் படகுகள்…
இதில், தமிழகம் மற்றும் கேரளத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான
மீனவர்கள் இதில் மாட்டிக்கொண்டனர். பல படகுகள் புயல்காற்றில்
சிக்கி, தட்டுத்தடுமாறி மேற்கு கடற்கரையில், கேரளம், கர்நாடகம்,
கோவா, மஹாராஷ்டிரா, குஜராத் என்று பல மாநில கடற்கரைகளில்
ஒதுங்கின.
பல படகுகள் கடலிலேயே கவிழ்ந்து மூழ்கின. எத்தனை பேர் கரைகளில்
ஒதுங்கினர்; எத்தனை பேர் இன்னமும் நடுக்கடலில் தத்தளித்துக்
கொண்டிருக்கின்றனர்; எத்தனை பேர் பிணமாக ஒதுங்கினர்; – உண்மை
நிலவரம், சரியான விவரம் இன்னமும் யாருக்கும் தெரியவில்லை.
மாநில அரசு ஒரு புள்ளி விவரத்தை வெளியிடுகிறது.
கேரள அரசு ஒரு விவரம், மத்திய அரசு வேறு விவரம்…
உண்மை நிலவரம் என்னவென்று தெரியாமல் தவிக்கின்றன இன்னமும்
வீடு திரும்பாத மீனவர்களின் குடும்பங்கள்.

நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவ கிராமத்தைச்
சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் குழித்துறை ரெயில்
நிலையத்தில் நள்ளிரவு வரை போராட்டம் நடத்தின…
இன்னமும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வீடு திரும்பவில்லை என்பது
உண்மை. பலர் பல்வேறு மாநிலங்களில் கரை ஏறி இருக்கவும்
வாய்ப்பு இருக்கிறது. பலர் நடுக்கடலில் பிணமாக மிதந்து
கொண்டிருக்கும் துரதிருஷ்டத்திற்கும் வாய்ப்பு இருக்கிறது. அபூர்வமாக
இன்னமும் கூட சிலர் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கவும் கூடும்.
இவற்றை எல்லாம் யார் ஒருங்கிணைத்து “புயல் வேகத்தில்”
செயல்பட வேண்டுமோ அவர்களில் சிலர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
கொண்டாட்டங்களிலும், சிலர் குஜராத் மாநில தேர்தல்களிலும்
“பிஸி”யாக இருக்கிறார்கள்….
கதறி அழும் மீனவர் குடும்பங்களை பார்க்கும்போது நமக்கும் கண்ணீர்
வருகிறது….

இயற்கை சீற்றங்கள் எப்போதுமே இப்படித்தான் –
எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத விதத்தில் உருவெடுப்பது……
அதன் குணமாவது நமக்கு தெரியும்.
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள்…
இப்படி மனசாட்சி இன்றி செயல்பட்டுக்கொண்டிருப்பது…?
தாங்கள் இப்படி கைவிடப்படுவோமென்று பாவம் இந்த மக்கள்
சற்றும் எதிர்பார்க்கவில்லை…
ஆனால், அரசியல்வாதிகள் என்றுமே வேடதாரிகள் தான்…
சுயநலவாதிகள் தான்.
அவர்களின் குறி -எப்போதுமே தேர்தலில் வெற்றியும்,
அதிகாரத்தை கைப்பற்றுதலும் தான்…
என்பதை மீண்டும் இப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விதியின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட
இப்போது தோன்றும் –
இது தான் விதி என்று …
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள்….
அந்த தெய்வமாக பார்த்து அவர்களுக்கு கருணை காட்ட
பிரார்த்திப்போம்.



அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என்ன செய்கிறார்? முதலமைச்சர், துணை முதல்வர் ஆகியோர் ஏன் களத்தில் இல்லை. உடனடி நிவாரணம் இல்லாவிட்டாலும், முக்கியமானவர்கள் களத்தில் இருந்து அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கவேண்டாமா? வருத்தமாகத்தான் இருக்கிறது.
பாஜக இதிலும் ஒருவேளை மதத்தைப் பார்க்கிறதோ?
Exactly – அதே தான்.
Sorry for the diversion.
K.M. Sir, what do you think about this news extract –
//In a 50-minute speech at a public meeting in Limbayat in Surat, Modi referred to Aiyar’s neech word 20 times and repeatedly urged people to respond and “teach them a good lesson” via the ballot for using such a word against the “son of Gujarat”.//
அப்படியாவது ஓட்டு கிடைக்காத என்ற ஏக்கம்தான். இவர்கள் பேசும் அநாகரீக பேச்சு ஏதும் இவர் காதில் கேட்பதில்லை.
கோபி,
எனக்குத் தெரிந்த வரை திரு.மணிசங்கர அய்யர், இவரை ஜாதியை சொல்லி திட்டவே இல்லை…
இந்தியில் “நீச் ஆத்மி” என்று சொன்னார்… அதற்கு “கீழ்த்தரமான மனிதர்” என்று தான் அர்த்தம். உண்மையில் மணி சங்கர அய்யர் மன்னிப்பு கேட்டிருக்கவே வேண்டியதில்லை. குஜராத் தேர்தல் சமயத்தில் இதைப்பயன்படுத்தி கட்சிக்கு தொந்திரவு ஏற்படுத்துவார்கள் என்பதாலேயே மன்னிப்பு கேட்டார்….
எதிர்பார்த்த மாதிரியே இந்த “பெரிய” மனிதர் 50 நிமிட பேச்சில் 20 தடவை அதையே சொல்லி குஜராத்தின் மானம் காப்பாற்றப்பட வேண்டுமானால், தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடியுங்கள் என்று குஜராத்தி மொழியில் திரும்ப திரும்ப சொன்னார்….
“யார் கேவலமான மனிதர்” என்று தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு இப்போதைக்கு குஜராத் மக்களிடமும், எதிர்காலத்தில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இருக்கிறது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நல்ல பதிவு. தேர்தல் இருந்தால் குமரியிலேயே குடியிருந்திருப்பார்கள். தேர்தல் குஜராத்திலும், R.K nagar இல் தானே ?
Am Anna GOd only ld help them.
பாென் . ரா இதை அரசியல் ஆக்காதீர்கள் என்கிறார் …ஆய்வுக்கு சென்ற ஆளுனரை முற்றுகையிட்டவுடன் விட்டால் பாேதும் என்று திரும்புகிறார் … .”டெட்பாடி அரசு ” கண்டுக் காெள்ளாமல் காலத்தை ஓட்டுகிறது … ”
அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
” என்பது பாேல மத்திய அரசு …. பிணங்களையாவது கணடுபிடிப்பார்களா …?