…
…

…
தவறு செய்யும் ஒருவருக்கு இயற்கையே தண்டனை கொடுக்கும்போது
அதை “natural justice” என்று சொல்வோம்.
ஆனால், செயற்கையாக ஒருவருக்கு “natural justice” கொடுக்கப்படும்
சுவாரஸ்யமான கதை தான் திரு.விஷாலுக்கு நடந்து கொண்டிருப்பதோ
என்று எண்ண வைக்கின்றன நேற்றைய நிகழ்ச்சிகள்….!!!
“இந்த மக்களுக்காக உழைப்பதற்காகவே ஆர்.கே.நகர் தேர்தலில்
நிற்கிறேன்…” என்று வெளியில் உரைத்து,
திருவாளர் தினகரனிடமிருந்து நிதியுதவியும், திருவாளர் உலகநாயகனிடமிருந்து இதர உதவிகளையும் பெற்று இவர் தேர்தலில் நின்றதன் உண்மையான காரணம், பின்னணி என்ன…?
ஜெயிப்பதற்காகவா இவர் தேர்தலில் நின்றார்…?
ஏழரை கோடி ரூபாய் கடன் இருக்கிறது என்று தேர்தல் ஆவணத்தில்
எழுதிக் கொடுத்திருக்கிறார்… இத்தனை கடன் உடைய ஒருவர்
தன் கடன்களை அடைக்கும் வேலையை பார்க்காமல், பொது
தொண்டிற்கு வருவது ஏன்…?
தேர்தலில் நிற்பது கடன்களை அடைக்கத்தானோ….!!!
பின்னணியில் உள்ள, உண்மையான குறிக்கோள் என்ன என்பது
அரசியலை கவனித்து வருபவர்கள் அறியக்கூடியதே. வெற்றி வாய்ப்புடைய இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் ஓட்டுகளை சிதறடிப்பது என்பது ஒன்றே அவருக்கும், அவரது “sponsors” – க்கும் உள்ள ஒரே லட்சியம்… குறிக்கோள் எல்லாம்…!!!
முதலில் நடிகர் சங்கம், பிறகு தயாரிப்பாளர் சங்கம் – பின்னர்
முன்னறிவிப்பில்லாத திடீர் தேர்தல் பிரவேசம்…!!! தமிழ்நாட்டில்
மக்களுக்கு இத்தனை தொண்டுகளையும் செய்ய இவரை விட்டால்
ஆளே இல்லை பாவம்…
ஒரு வேளை நான் ஆர்.கே.நகர் வாக்காளராக இருந்திருந்தால் என்ன
செய்திருப்பேன்…?
என்னைப்பொருத்த வரை இந்த ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்கும் முக்கிய
வேட்பாளர்கள் யாரும் எனக்கு ஏற்புடையவர்கள் அல்ல. உண்மையில்
கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் இங்கே நின்றிருந்தால், அவர் தான் இங்குள்ள மக்களின் உண்மையான பிரதிநிதியாக இருந்திருப்பார்…
அவருக்குத்தான் என்னுடைய ஓட்டும் சென்றிருக்கும்…
சரி – கதைக்கு வருவோம்…
சட்டப்படி “நிராகரிப்பு” செல்லுமா…?
தாராளமாக செல்லும்…
ஒன்று – தேர்தல் நடைமுறைகள் துவங்கி விட்டால், தேர்தல் கமிஷன்
தான் ராஜா. தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, எந்த
நீதிமன்றமும் குறுக்கிட முடியாது…!!!
இரண்டு – இவர் எப்படி “வெளிப்படையாக சொல்ல முடியாத
காரணங்களை முன்வைத்து” தேர்தலில் நின்றாரோ,
அதே போல் தான், இவரது வேட்பு மனுவில் கையெழுத்து போட்ட
இரண்டு நபர்களும், “வெளிப்படையாக சொல்ல முடியாத காரணங்களுக்காக” பல்டி அடித்திருக்கிறார்கள்…
ஆனால், இரண்டுக்கும் பின்னால் இருப்பது
ஒரே விஷயம் தான்….
நம்முடைய பழமொழிகள் சொல்லும் விஷயம் தான்…
“பணம் பத்தும் செய்யும்…
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும்”
செயற்கையாக கொடுக்கப்பட்ட “natural justice” ….!!!
இதன் பின்னணிகள் விரைவில் தமிழ்நாட்டின் investigative journals-களில்
வெளிவரும்….மக்களுக்கு முழு பின்னணியையும் “ஓரளவு” தெரிந்து
கொள்ளக்கூடிய வாய்ப்பு கிட்டும்..!!!
இப்போதைக்கு – வாழ்க “natural justice”… அதிர்ச்சி வைத்தியம்…!!!



“கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் இங்கே நின்றிருந்தால், அவர் தான் இங்குள்ள மக்களின் உண்மையான பிரதிநிதியாக இருந்திருப்பார்…” – உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாரம் சுமப்பதற்குத்தானே தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை, ஒரு ராஜ்ஜியசபா சீட்டு மற்றும் சில பல சட்டமன்றத் தொகுதிகள். அதனால்தான், ஊருக்கு முன்னால் போய், திமுகவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
இந்த இடைத் தேர்தலாவது, மக்கள் ஆதரவு எந்தக் கட்சிக்கு என்று தெளிவுபடுத்தட்டும். இதற்காகவாவது எல்லாக் கட்சிகளும் தேர்தலில் நின்றிருந்திருக்கலாம். பயந்து நடுங்கும் கட்சிகள், இனி சட்டமன்றத் தேர்தலிலேயே நிற்கக்கூடாது. இது தொகுதியில் போட்டியிடும் கட்சிகளைத்தவிர அனைத்துக்கட்சிகளுக்கும் (காங்கிரஸ் உள்பட) பொருந்தும்.
// விஷால் தம்பியும், தீபாவும் இன்னும் அரசியலில் பாலபாடம் கற்கவில்லையே.. எச்.ராஜா நக்கல் //
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/vishal-deepa-has-learn-nursery-education-politics-304070.html …. இவரிடம் கற்றுக்கொள்ளலாம் … !
நக்கல் மட்டுமே பண்ணுவது இல்லை இவர்…… // பகவானை பட்டினி போடுவதாலேயே இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன.. // என்று அறிய கருத்துக்களை கூறும் அறிவு ஜீவி …! இவர்களது ஆட்சியில் கூடவா ” பகவான் பட்டினி ” கிடக்கிறார் …. ?
பிரனீஷ்,
இவரைப் பற்றி பேசவே அருவருப்பாக இருக்கிறது…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
உண்மை அய்யா.
எனக்கு வேற வார்த்தை வருது. நாகரீகம் தடுக்கிறது.
இவர் R S S இந் ஒரு இற்றுப்போன எலக்ஷனில் தோற்றவர் தானே! அதை மறந்து பேசுகிறார்?
“திருவாளர் தினகரனிடமிருந்து நிதியுதவியும், திருவாளர் உலகநாயகனிடமிருந்து இதர உதவிகளையும் பெற்று இவர் தேர்தலில் நின்றதன் உண்மையான காரணம், பின்னணி என்ன…?” —- எதனை அடிப்படையில் இதனை கூறுகின்றீர்கள் ஏதேனும் ஆதாரம் இல்லாமல் கூறமாட்டீர்களே….
ஸ்ரீநிவாச முருகேசன்,
தங்களது உண்மையான நோக்கம், பின்னணி ஆகியவை வெளியே தெரிந்து விடக்கூடாது என்று மிக ஜாக்கிரதையாக திட்டமிட்டு செயல்படுபவர்களிடமிருந்து ஆதாரத்தை நம்மால் அவ்வளவு சுலபமாக கண்டுபிடிக்க முடியுமா…?
வெளியே சொல்கிற மாதிரி என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை… அனுமானம் தான். அனுபவத்தின் அடிப்படையிலான அனுமானம்.
கொஞ்ச நாட்கள் போனால் ஏதேனும் ஆதாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்போது அவசியம் பகிர்ந்து கொள்கிறேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
விஷாலின் செயல்பாடுகள் அனைத்தும் உண்மையான பிரச்சனையை திசை திருப்புவதாகவே உள்ளது. தமிழகத்தில் உள்ள எல்லா செய்தி ஊடகங்களும் இவரின் வேட்பமனு நிராகரிக்க பட்டதை மட்டும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றன. நியூஸ் 7, நியூஸ் 18, புதிய தலைமுறை எல்லோருமே… அது ஒரு சட்டமன்ற தொகுதி மட்டுமே…
கன்னியாகுமரியில் ஒக்கி புயலில் சிக்கி உயிர் உடைமைகளை இழந்த மக்களுக்கு என்ன நடக்கின்றது என்று எந்த ஊடகமும் விவாதிப்பதாக தெரியவில்லை.
Poor chap,has to learn a lot in all fields
Natural justice செயற்கையாக அல்ல இயற்கையாகவே தரப்பட்டுள்ளது. செயற்கையாக Natural Justice ஐ அளித்தவர்களால் இவர் கோமாளி ஆகி நிற்பது பரிதாபத்திற்குரியது. இவர் வேறு வழிகளில் வெவ்வேறு அவதாரங்கள் எடுக்கக்கூடும். அப்போதும் இந்த Natural Justice நிகழ வேண்டும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..