திரு.குருமூர்த்தி புதிய கருத்து – “GST – இந்தியாவுக்கு ஏற்றதாக அமையவில்லை”



ஒரு வித்தியாசமான கருத்து திரு.குருமூர்த்தி அவர்களிடமிருந்து
வெளிப்பட்டிருக்கிறது.

ஜி.எஸ்.டி.யிலிருந்து சில பொருட்களுக்கு 3 வருட காலத்திற்கு
முற்றிலுமாக விலக்கு அளித்திருக்கப்பட வேண்டும் என்கிறார்
துக்ளக் ஆசிரியரும், பொருளாதார நிபுணருமான திரு.எஸ்.குருமூர்த்தி
அவர்கள்…


..

..

Madras Management Association, Konrad Adenauer Stiftung-உடன்
சேர்ந்து நடத்திய “GST reality check” என்கிற தலைப்பில் சென்னையில்
கடந்த சனிக்கிழமை நடத்திய ஒரு கருத்தரங்கில் பங்கு கொண்டு
விசேஷ உரை நிகழ்த்திய திரு.குருமூர்த்தி அவர்கள் கூறிய சில
கருத்துகள் –

– ஜி.எஸ்.டி. ஒரு சிறப்பான அணுகுமுறை தான் என்றாலும் கூட,
தற்போதைய வடிவில் – அது இந்தியாவிற்கு ஏற்றதாக அமையவில்லை….

– நிதி ஆதாயங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல்,
சில பொருட்களுக்கு 3 வருட காலத்திற்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து
முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்…

– அதைச்செய்யாதது, இன்ஸ்பெக்ஷன் ராஜ் ( அதிகாரிகளின் தலையீடு)
மற்றும் லஞ்ச ஊழலுக்கு வழி வகுக்கும்.

– Credit Suisse நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் –
அமைப்பு சாரா நிறுவனங்கள் ( un-organised sector ),
இந்தியாவின் GDP-யில் (மொத்த உற்பத்தியில்) 50 சதவீதம் பங்கு
வகிக்கின்றன என்றும், அதில் மட்டுமே 12.8 மில்லியன் (12.8 கோடி)
நபர்கள் வேலை செய்கிறார்கள் என்றும் தெரிவிப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

– இந்த அமைப்பு சாரா நிறுவனங்கள் மட்டுமே வருடத்திற்கு 18 % அளவிற்கு வளர்ந்து வருவதோடு, சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் 90 % வேலை வாய்ப்பை உருவாக்குவதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

( ஜி.எஸ்.டி.யின் தற்போதைய வடிவம் இந்த விஷயங்களை
கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது…)

திரு.குருமூர்த்தி அவர்களின் முழு உரையையும் பெற முயற்சித்தேன்.
தற்போதைக்கு வலைத்தளத்தில் கிடைக்கவில்லை……

திரு.குருமூர்த்தி அவர்களின் புதிய கருத்துகள் சில கேள்விகளையும்,
சந்தேகங்களையும் எழுப்புகின்றன….

ஜி.எஸ்.டி. திட்டம், அதற்கென உருவாக்கப்பட்ட கவுன்சிலால்,
பல மாதங்கள், பல தடவை கூடி, விவாதிக்கப்பட்டு, பலத்த
ஆலோசனைகளுக்குப் பிறகே முடிவெடுக்கப்பட்டது.

தற்போது திரு.குருமூர்த்தி சொல்லி இருக்கும் விஷயங்கள் அந்த
கூட்டங்களின் முன் விவாதத்திற்கு வைக்கப்பட்டனவா…?
இல்லை என்றால் ஏன் இல்லை… ??

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 5 மாதங்கள் கடந்த பின் முதல் தடவையாக
பொதுவெளியில் சொல்லப்படும் இந்த கருத்து, அமலுக்கு வந்தபின்
ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு தாமதமாக இப்போது தான் தோன்றும் கருத்தா …?

திரு.குருமூர்த்தி அவர்கள் மத்திய அரசுக்கு ஆலோசனை கூறக்கூடிய
இடத்தில் இருக்கிறார்… மத்திய அரசின் கொள்கைகளை மாற்றும்
அளவிற்கு கூட அவருக்கு ஆளும் கட்சியில் செல்வாக்கு உண்டு.

தனது தற்போதைய கருத்துகளை மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கிறாரா
என்பது குறித்தும், அதற்கு மத்திய அரசின் எதிர்வினை என்ன என்பது
பற்றியும் அவர் எதுவும் கூறவில்லை….

ஒரு விஷயம் … ஏனோ தெரியவில்லை…
ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர், ஜி.எஸ்.டி. குறித்து கூறியிருக்கும்
– மிக முக்கியமான இந்த செய்திக்கு மீடியாவில் எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை.

MMA நடத்திய இந்த கருத்தரங்குக்கு செய்தியாளர்கள் நிச்சயம்
அழைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், எனக்கு தெரிந்து ஹிந்துவில்
ஒரு சிறிய இடத்தில் போடப்பட்டிருந்ததை தவிர, பொதுவாக எந்த மீடியாவிலும் இந்த செய்தி வெளியாகவில்லை….. என்ன காரணம்..?

இந்த செய்திக்கு முக்கியத்துவம் கிடைக்காதபடி யாராவது பார்த்துக்
கொண்டார்களா…?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திரு.குருமூர்த்தி புதிய கருத்து – “GST – இந்தியாவுக்கு ஏற்றதாக அமையவில்லை”

  1. ராகவேந்திரா's avatar ராகவேந்திரா சொல்கிறார்:

    அவர் இந்த மாதிரி கருத்தரங்குகளில் பேசும்போது மட்டும், தான் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குபவர் அல்ல என்று இத்தகைய நடுனிலையான, வித்தியாசமான கருத்துகளை சொல்லி சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்கிறார்.
    ஆனால், தன்னுடைய இத்தகைய கருத்துகள் வெளியே பரவுவதை அவரே கூட
    விரும்பாமல் இருந்திருக்கலாம்.

  2. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    Modi government’s FRDI bill may take away all your hard-earned money. https://www.google.co.in/amp/m.indiatoday.in/lite/story/frdi-bill-banking-reforms-modi-government-india-parliament/1/1103422.html. இதுபற்றி ….?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      பிரனீஷ்,

      அரசுக்கு தைரியம் இருந்தால், நெஞ்சில் “தில்” இருந்தால்,
      இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வரட்டும் பார்க்கலாம்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.