…
…
“ஹிந்துஸ்தான் டைம்ஸ்” ஆங்கில இதழ் நடத்திய
“லீடர்ஷிப் சம்மிட்”மாநாட்டில் திருவாளர் முகேஷ் அம்பானி நேற்று பேசியதன் சாரம் கீழே -( https://minnambalam.com/k/2017/12/02/1512199030)

…
இரட்டிப்பாகும் பொருளாதாரம்!
வருகிற 2024-ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் இரட்டிப்பு வளர்ச்சியுடன் 10 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
நிறுவனத் தலைவருமான முகேஷ் அம்பானி டெல்லியில் நடந்த
ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உச்சி மாநாட்டில் டிசம்பர் 1ஆம் தேதி கலந்துகொண்டார்.
அம்மாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி, “2004-ஆம் ஆண்டில்,
அப்போது 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியப்
பொருளாதாரமானது இன்னும் 20 வருடங்களில் 5 லட்சம் கோடி டாலர்
மதிப்பை அடையும் என்று கூறியிருந்தேன்.
நான் கூறியதுபோல அதற்கு முன்னரே இந்தியப் பொருளாதாரம் அந்த
மதிப்பை அடைந்துவிட்டது. இன்றைய நிலையில், எனது கணிப்புப்படி,
2024-ஆம் ஆண்டுக்குள் அதன் மதிப்பு இப்போதுள்ள 5 லட்சம் கோடி
டாலரிலிருந்து 10 லட்சம் கோடி டாலராக உயரும்.
இந்தியா தற்போது 7 லட்சம் கோடி டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி
(ஜிடிபி) மதிப்புடன் உலகின் ஆறாவது மிகப்பெரிய நாடாக உள்ளது.
இந்த மதிப்பை இன்னும் 10 வருடங்களுக்குள் மும்மடங்கு உயர்த்தி
மூன்றாவது மிகப்பெரிய நாடாக நாம் உயர முடியுமா? முடியும்.
—————————————————————-
திரு.அம்பானியின் பேச்சைத் தொடர்ந்து
நமக்கு எழும் சில கேள்விகள் ….!!!
2004-ஆம் ஆண்டில், அடுத்த 20 ஆண்டுகளில்,
அதாவது 2024-ல் இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலர் ஆகும்
என்று கணித்ததாகச் சொல்கிறார்.
அது போலவே இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக அவர் சொல்வதே முதலில் சரி இல்லை…..!
ஏனெனில், இப்போதே – 2017-லேயே,
அதாவது 20 வருடங்களல்ல….
13 ஆண்டுகளுக்குள்ளாகவே, அவர் சொன்ன 5 லட்சம் கோடி டாலரை
விட ஒன்றரை மடங்கு அதிகமாக 7 லட்சம் கோடியை இந்திய
பொருளாதாரம் தாண்டி விட்டது. எனவே முதல் கணிப்பே சரி அல்ல…
under estimation…!!!
அடுத்து மீண்டும் தவறாக கூறுகிறார் – “எனது கணிப்புப்படி, 2024ஆம்
ஆண்டுக்குள் அதன் மதிப்பு இப்போதுள்ள 5 லட்சம் கோடி டாலரிலிருந்து
10 லட்சம் கோடி டாலராக உயரும்.” (“இப்போதுள்ள” – 5 லட்சம் அல்ல
7 லட்சம் டாலரிலிருந்து என்று சொல்லியிருக்க வேண்டும் )
அதாவது அடுத்த 7 ஆண்டுகளில் ( 2017-24) வெறும் 3 லட்சம் கோடி
தான் அதிகரிக்கும் என்று கூறுகிறார்….அதுவும் under estimation…!!!
மீண்டும் உளரல்- அடுத்த 10 ஆண்டுகளில் GDP யை மும்மடங்காக
உயர்த்த முடியும், முதல் வார்த்தையில், அடுத்த 7 ஆண்டுகளில்
7 லட்சம் கோடியை 10 லட்சம் கோடியாக உயர்த்த முடியும் என்பவர் –
அடுத்த வார்த்தையில், அடுத்த 10 வருடங்களில், இந்த 7 லட்சம் கோடி
டாலரை மும்மடங்கு, அதாவது 21 லட்சம் கோடி டாலராக உயர்த்த
முடியும் என்று கூறுகிறார்.
சரி… இந்த மேடையில்… தான் கூறுவதை யாரும் சீரியசாக
எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால் வாய்க்கு வந்ததை எல்லாம்
பேசி விட்டார் என்று பார்த்தால்….
சில அதி முக்கியமான விஷயங்களை சொல்லாமல் விட்டு விட்டாரே…!!!
1) முக்கியமாக, கடந்த மூன்றரை ஆண்டுகளில், தனது நண்பரின்
ஆட்சியில் இந்திய பொருளாதாரம் அதாவது GDP எவ்வளவு வளர்ச்சி
அடைந்தது ( …!!!!!!!! ???? ) என்பதை கூறவில்லை….
2) தன்னுடைய சுய பொருளாதாரம்( 🙂 🙂 🙂 ) எவ்வளவு மடங்கு
உயர்ந்தது என்பதையும் கூறவில்லை….
3) பாஜகவுக்கு தன்னுடைய கம்பெனிகள் மூலமாக எவ்வளவு
கோடி ரூபாய் ” நன்கொடை” கொடுக்கப்பட்டது என்பதையும்
கூறாமல் விட்டு விட்டாரே…!!! ( ரொக்கமாக கொடுத்ததை விடுங்கள்….
‘செக்’ மூலம் அதிகாரபூர்வமாக கொடுத்ததையாவது சொல்லலாமே…! )
பின் குறிப்பு – பாஜக ஆட்சியில் GDP அதாவது, பொருளாதார வளர்ச்சி இல்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வதை நான் ஏற்க மாட்டேன்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு பக்கம்…
தொழிலதிபர்களின் பொருளாதார வளர்ச்சி என்பது இன்னொரு பக்கம்…
இதை புரிந்து கொள்ளாமல், பொத்தாம் பொதுவாக பொருளாதாரம் வளரவில்லை என்று குற்றம் சாட்டுவது தவறு…. திரு.அம்பானி, திரு.அடானி போன்ற பல பெரும் தொழிலதிபர்களின் வளர்ச்சியை பார்த்தாவது, பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என்கிற கூற்றை ஏற்கத்தான் வேண்டும்….!!!
————————————————————————–



இதற்கு முன்னால், கம்பெனிகளுக்கு தாங்கள் யாருக்கு நன்கொடை அளிக்கிறோம் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய அவசியம் இருந்தது.
இந்த சட்டத்திற்கு பாஜக அரசு ஒரு நெகடிவ் திருத்தம் கொண்டு வந்தது.
அந்த புதிய திருத்தத்தின்படி, யாருக்கு டொனேஷன் கொடுக்கிறோம் என்பதை
தொழிலதிபர்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தனிப்பட லஞ்சம் வாங்காமல், கட்சியின் பெயரில் லஞ்சத்தை ‘செக்’காகவே
வாங்கிவிட தான் இந்த ஏற்பாடு போலும்.
உங்க இந்த பாயின்டை நான் ஆமோதிக்கறேன். (அதாவது பாஜக இந்த மாதிரி விஷயங்களில், வெளிப்படைத் தன்மையை நோக்கிச் செல்லாமல், இன்னும் மறைமுகமா இருக்கும்படிச் செய்வது). அதுபோலவே, 20,000க்கு மேலேதான் கணக்கு காண்பிக்கவேண்டும், நன்கொடை 20,000க்குக் கீழே இருந்தால் விவரம் தரவேண்டியதில்லை என்ற திருத்தமும் பாஜக ஆட்சியின்போதுதான் கொண்டுவந்தார்கள். இதை வைத்து மாயாவதி, அவர்களது எல்லா டொனேஷங்களும் 20,000க்குக் கீழேதான் என்று கணக்குக் காண்பித்தார்கள்.
நான் கேட்கிறேன், இதை ஏன் பொதுமக்களுக்கும் extend செய்யக்கூடாது? ஒவ்வொரு செக்கும் (அல்லது பணமும்) 20,000 க்குள் இருப்பவைகளுக்கு வருமான வரி கிடையாது, அதற்கு மேல் பணம் வரவு வந்தால் (ஒரே தடவையில்) வரி போடப்படும் என்று. அதாவது, வாரம் 15,000 ரூ வீதம் ஒரு மாதத்திற்கு 60,000 ரூ சம்பளம் வந்தால், வருமானவரி கிடையாது. நாளுக்கு 19,000 வீதம் 365 நாளுக்கும் வருமானம் வந்தால் வருமானவரி கிடையாது. (இது எப்படி இருக்கு)
கட்சிகளுக்கு 1 ரூ டொனேஷனும் வெளிப்படையாக இருக்கவேண்டும்.(அதாவது, ஆதார் போன்ற ஆதாரத்துடன்). எல்லா டிரஸ்டுகளையும் கலைக்கவேண்டும்.. யாரும் எந்த விதமான டிரஸ்டும் வைத்துக்கொள்ளக்கூடாது. இதுதான், ஒரு கட்சி வெளிப்படைத் தன்மையை ஆதரிக்கிறோம் என்று சொன்னால், செய்யவேண்டியது. இதைச் செய்யாமல், மற்றவர்களை (பொதுமக்களை) மட்டும் யோக்கியனாக இரு என்று சொல்வது, நகைப்புக்குரியது.
நான் புரிந்து கொண்டுள்ள இந்த செய்தி சரி தானே கே.எம்.சார் ?
சரி