…
…
நடிகர்கள் அரசியலுக்கு வந்தால், விமரிசிக்கப்படுகிறார்கள் …
ஆனால், அரசியல்வாதிகள் நடித்தால்…????
இவர்கள் நீண்ட கால நெருங்கிய நண்பர்கள்.
நீண்ட பிரிவிற்குப் பிறகு இப்போது தான் சந்திக்கிறார்கள்….
எனவே, இவர்கள் அனைவரின் முகத்திலும் காணப்படுவது
இயற்கையான சிரிப்பு – இதில் நடிப்பு ஏதும் இல்லையென்று
மனப்பூர்வமாக நம்புவோமாக…!!!
…

…
கீழே – இன்றைய ஹிந்து நாளிதழில் திரு.சுரேந்திராவின் கார்ட்டூன்….

“இப்படி கூடவா நடக்கும்…????” என்று வியப்புடன் யோசிப்பவர்களுக்கு, அரசியல் ஞானி கவுண்டமணி அய்யாவின் பொன்மொழியை நினைவுபடுத்த விரும்புகிறேன்….
“அரசியலில் இதெல்லாம் ……. !!! ”
—————————————————————————-
பின் குறிப்பு –
லேடஸ்ட்டாக இன்று டாக்டர் சு.சுவாமி செய்தியாளர்களிடையே உதிர்த்தது….
“மோடிஜி, நேற்று கருணாநிதி வீட்டுக்கு போனது பற்றி என்ன சொல்கிறீர்கள்..?”,
“அதுவா…?….. சில அறிவுஜீவிகளின் ஆலோசனைப்படி அவர் போனார்….”
“யார் அந்த அறிவுஜீவி..?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு –
“அதான் – மைலாப்பூர்வாசி அறிவுஜீவி…” ( ஆடிட்டர்…??? )
என்று சொல்லி விட்டு சிரித்துக்கொண்டே “நான் கூட
மைலாப்பூர் வாசி தான் ” என்று சொல்லி விட்டு நடையை கட்டி விட்டார்….
கூடவே –
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற பழமொழியை
நினைவுபடுத்துவது போல –
2ஜி வழக்கில் தீர்ப்பு கூறும் தேதி தள்ளிப்போவதற்கும்
இதற்கும் சம்பந்தமில்லை என்று வேறு
சொல்லி விட்டு போனார் … 🙂 🙂 :-)-
” அ ர சி ய லி ல் ” இதெல்லாம் சகஜம் தானே…!!!



ஸ்டாலினும் கனிமொழியும் மோடி அவர்களைப் பார்த்துச் சிரிப்பதில் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கனிமொழியும் திருமாவளவனும் ராஜபக்ஷேயைப் பார்த்தபோது இதைவிட அதிகமாகவே சிரித்து மகிழ்ந்தார்கள் (இதில் கம்பேரிசன், நம் நாட்டு பிரதமர், அயல் நாட்டு அதிபர் என்ற ஒப்பீட்டளவில்தான். இந்த நிகழ்ச்சிகள் நடந்தபோதும் திமுக, திருமா ராஜபக்ஷேவைக் கடுமையாக எதிர்த்தது, பாஜக வையும் இப்போது எதிர்த்துவருகிறது). கொள்கை வேறு, வரவு வேறு.
இப்போதைக்கு திமுக, பாஜகவுடன் சேராது. அதற்குக் காரணம், பாஜகவுடன் சேர்வதால், மத்தியில் கிடைக்கும் அமைச்சர் பதவி, மற்றவர்களுக்குச் செல்வதால் (கனிமொழி, மாறன் குடும்பம்) ஸ்டாலினுக்குப் பயன் இல்லை. இப்போது அவரது முக்கிய அஜென்டா, தான் தலைவராக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து முதல்வர் ஆவது, தன்னுடைய இடத்தை நிலை நிறுத்திக்கொள்வது..
இந்த சந்திப்புக்கே வித்திட்டது பாஜக கூட்டணி தேவை (நீதிமன்ற வழக்குகளுக்காக) என்று எண்ணிய திமுக சக்திகள். அதனால்தான் ஸ்டாலில் அவசர அவசரமாக திரும்பிவந்தது.
காங்கிரஸ் போல் அல்லாமல், பாஜக, தமிழகத்தில் ஊன்றுகோலைக் கொண்டோ அல்லது தனிப்பட்ட முறையிலோ வளர்வது சாத்தியமில்லாதது. பாஜகவுக்கு இப்போது இருக்கும் வாக்குகள் இரண்டு இடங்களில்தான் பிரதானம். கன்யாகுமரி, கோவை. இந்த இரண்டு இடங்களிலும் மதக் கலவரமும், மத உணர்வும் இருப்பதால்தான். மற்ற இடங்களில் பாஜக, எப்போதும்போல் பூஜ்ஜியம் வாங்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
இதற்கும் கவுண்டமணி சொல்வது போலத்தான்..
அரசியலில் இதெல்லாம்…..
கருணாநிதியை மோடி சந்தித்த பிறகு பாஜகவுக்கு கருணை காட்டுகிறதா திமுக?
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/why-dmk-called-off-protest-against-centre-s-note-ban-eight-rain-hit-districts-301044.html — இனி இப்படிதான் …. ? நாளை தி.மு.க நடத்தவிருந்த பண மதிப்பிழப்பு எதிரான போராட்டங்கள் — அம்பேல் … ! ” கடவுள் சாட்சியாக, இது எல்லாம் உண்மையே… உண்மையை தவிர வேறோன்றுமில்லை…!!! “
// துரியோதனரின் அணைப்பும்… மோடிஜியின் ஆசிர்வாதமும் ….. !!! //
Posted on பிப்ரவரி 17, 2017 by vimarisanam – kavirimainthan https://vimarisanam.wordpress.com/2017/02/17/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ இந்த கார்ட்டூனும் ரசிக்கத்தக்கது தான் …!!!
// “இப்படி கூடவா நடக்கும்…????” என்று வியப்புடன் யோசிப்பவர்களுக்கு, அரசியல் ஞானி கவுண்டமணி அய்யாவின் பொன்மொழியை நினைவுபடுத்த விரும்புகிறேன்….
“அரசியலில் இதெல்லாம் ……. !!! ” //
“அரசியலில் இதெல்லாம் ……. !!! ச்சீய்.. நாய் பொலைக்கும் இந்த பொலப்பு.