காலையில் சொன்ன கொலையின் மீதிக்கதை – ( குஜராத் MP … )

அமித் ஜெத்வா-வின் தந்தை பிகாபாய் சமர்ப்பித்த மனுவை
ஏற்றுக் கொண்ட குஜராத் உயர்நீதிமன்றம், வழக்கை விவரமாக
பரிசீலித்து கீழ்க்கண்ட கருத்துகளை/உத்திரவுகளை வெளியிட்டது…

1) சாட்சிகள் பயமுறுத்தப்படுகிறார்கள்.
195 சாட்சிகளில் 105 பேர் தடம் புரண்டு விட்டார்கள்.. என்பதை
கண்கூடாக பார்த்தும்,

வழக்கை விசாரிக்கும் சிபிஐ ஜட்ஜ், அதைத் தடுக்க ஏதும் செய்ய
முன்வரவில்லை… அதே நிலையில் வழக்கை முடித்து தீர்ப்பு கூறவும்
முன்வந்த அந்த ஜட்ஜை, “நீதி குறைப்பிரசவம் ஆக அவர் காரணமாக
இருந்திருக்கிறார் ” என்று கடுமையாக கண்டனம் தெரிவித்து விட்டு,

உடனடியாக அந்த ஜட்ஜை இடமாற்றம் செய்யவும்,

2) வேறு ஒரு புதிய ஜட்ஜை நியமித்து, வழக்கை மீண்டும் துவக்கம்
முதல் தினசரி அடிப்படையில் விரைந்து விசாரிக்கவும் – உயர்நீதி
மன்றம் உத்திரவு பிறப்பித்தது.

– இப்படி ஒரு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து,
ஆனால் தீர்ப்பு வெளியாகும் முன்னரே –

உயர்நீதிமன்றம் முன்வந்து அதை ரத்து செய்து,
மறு விசாரணைக்கு உத்திரவு இடுவது –
இந்திய நீதிமன்ற வரலாற்றில் இது தான் முதல் தடவை என்று கூறப்படுகிறது.
( குஜராத் மாடல்…!!! )

————————-

இத்தோடு இதை விடுவாரா திருவாளர் சோலங்கி….?

குஜராத் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்திரவை எதிர்த்து சுப்ரீம்
கோர்ட்டுக்கு அப்பீல் செய்தார்….

அவரது அப்பீலை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இறுதியாக கீழ்க்கண்ட
உத்திரவுகளை பிறப்பித்தது –

1) அத்தனை சாட்சிகளையும் மீண்டும் விசாரிப்பதற்கு பதிலாக,
மிக முக்கியமான 26 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரித்தால்
போதுமானது. விசாரணை தாமதத்திற்கு இடம் கொடுக்காமல்,
எந்தவித குறுக்கீடுமின்றி, தினசரி தொடர்ந்து நடைபெற வேண்டும்.

2) நேரில் பார்த்த 8 சாட்சிகளை விசாரித்து முடியும் வரையில்
சோலங்கி சுதந்திரமாக நடமாடுவது விசாரணைக்கு குந்தகமாக
அமையும் என்பது தெரிகிறது. எனவே சோலங்கியின் பெயில்
உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. அவரை உடனடியாக குஜராத்
போலீஸ் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

3) முக்கியமான சாட்சிகளின் விசாரணை முடிந்த பின்னர்,
உரிய நிபந்தனைகளின் பேரில், அவருக்கு ஜாமீன் கொடுக்கப்படலாம்.

ஆனால், வழக்கு முடியும் வரை, கோர்ட் நடவடிக்கைகளுக்காக அவர்
அழைக்கப்பட்டாலன்றி, சோலங்கி குஜராத் மாநிலத்துக்குள் நுழையக்
கூடாது… அவர் குஜராத்தில் நுழைவதிலிருந்து தடை செய்யப்படுகிறார்.



————————————–

சுப்ரீம் கோர்ட் அக்டோபர் 30-ந்தேதியன்று இந்த உத்திரவை
பிறப்பித்தது.

ஆனாலும், திருவாளர் சோலங்கி இன்று வரை குஜராத் போலீசால்
கைது செய்யப்படவில்லை.

இன்னமும் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்ட
கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார். அவரே பேரணிகளை முன்னின்று
நடத்துகிறார். நவம்பர் 2-ந்தேதி அவர் கலந்து கொண்ட “சினேஹ் சம்மேளன்” என்கிற நிகழ்ச்சியின் புகைப்படங்கள், அவர் தொடர்புடைய வலைத்தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.
சட்டத்தின் சிறப்பான ஆட்சி …….நடைபெறும் ….குஜராத்தில்…!!!


குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு பிரச்சார வேலைகள் எல்லாம் அதிதீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சோலங்கி போன்றவர்கள் தேவை இன்றைய காலகட்டத்தில், குஜராத் பாஜக வுக்கு மிகவும் தேவை.

எனவே, தேர்தல் முடியும் வரை அவர் கட்சிப்பணி ஆற்றிக் கொண்டிருப்பார் ….அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருப்பார் என்று நிச்சயமாக நம்பலாம்…!!!

இது கோர்ட் அவமதிப்பு இல்லையா என்று உங்களைப் போன்றவர்கள்,
என்னைப் போன்றவர்கள் யோசிக்கலாம். ஆனால், இதை சமாளிக்கவா குஜராத் நிர்வாகத்திற்கு தெரியாது…?

சுப்ரீம் கோர்ட் உத்திரவு இன்னமும் எங்கள் கைக்கு வரவில்லை….
கோர்ட் உத்திரவில் சில விஷயங்கள் தெளிவாக இல்லை. சந்தேகங்களுக்கு
விளக்கம் கேட்டு மீண்டும் கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்கிறது…
etc. etc…..!!!

பாவம் – செத்துப்போன அந்த அமித் ஜெத்வா-வின் தந்தை பிகாபாய்
இன்னமும் தனக்கு நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு,

மீண்டும் ஒரு மனுவை தயாரித்துக்கொண்டு, நீதிமன்றத்தின்
கதவினை தட்ட போய்க்கொண்டிருக்கிறார்….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to காலையில் சொன்ன கொலையின் மீதிக்கதை – ( குஜராத் MP … )

  1. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள்.
    நீங்கள் கூட வெளியே செல்கையில் முன்னெச்சரிக்கையுடன்
    நடமாடுவது நல்லது.

  2. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    உத்திரவை மதித்து.நடக்கவேண்டும் என்பதெல்லாம் …. சாமானியர்களிடம் மட்டுமே காட்டப்படும் வீராப்பு … இவர்களுக்கு அது ஒரு நீதிமன்ற முறை …. அவ்வளவே …. யாேக்கியர்கள் ….?

  3. Gopi's avatar Gopi சொல்கிறார்:

    Dear K.M.Sir,

    I am really surprised to see the way you bring out unknown issues.
    I never came across all these stories. To my knowledge neither newspapers
    nor tvs have discussed about this story. However, you have brought out the facts
    with full authentic documents. Hats Off to you Sir.

  4. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    அய்யா…! ஒரு செய்தி : // குஜராத் தேர்தல் களத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய பாஜகவின் மதவாத போஸ்டர் //
    https://tamil.oneindia.com/news/india/bjp-posters-create-flutter-gujarat-election-campaign/articlecontent-pf272081-300943.html ….. இவர்களது மனதில் உள்ளதின் வெளிப்பாடு தானே இது …. பிரிவினையை உருவாக்குபவர்கள் யார் …?

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      பிரனீஷ் ,

      தவறு செய்கிறீர்கள், இது தான் அவர்களின் தேசப்பரற்று. மதக்கலவரத்தை உருவாக்கி கொலைகள் பல செய்து ஆட்சியை, பதவியை பெருவது தானே அவர்களின் நடைமுறை. இதை எப்படி நீங்கள் குறைகாணலாம்.

      ஹர்திக் பட்டேல், அல்பேஷ் தாக்கூர், தலித் தலைவரான ஜிக்னேஷ் ஆகிய மூவரும் தேச துரோகிகள். இந்த மூவரும் நாளையே தேசியவாதிகளாகக் கூடும் பாஜகவை ஆதரிக்கும் பட்சத்தில்.

      பாஜகவினரும் அதை ஆதரிப்பவர்கள் மட்டுமே தேசியவாதிகள் இந்நாட்டில் வாழத் தகுதியுள்ளவர்கள்.

      மற்றவர்கள்…எதற்கு…அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள்.

    • பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

      // மோடிஜி, அமித் ஷா குறித்து ராஜ் தாக்கரே இன்று வரைந்துள்ள கார்ட்டூன்…..!!! //
      Posted on பிப்ரவரி 12, 2015 by vimarisanam – kavirimainthan —- வேறொன்றை தேடும்போது கிடைத்த ” இடுகை இது ” … அன்று டெல்லி தேர்தல் முடிந்தபின் வந்த கார்ட்டூன் …. தற்போது குஜராத் தேர்தலுக்கு பின் …. ?

  5. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    இதுவும் ஒரு செய்திதான் … // பாரடைஸ் பேப்பர்ஸ்’ கருப்புப் பண பட்டியலில் 714 இந்தியர்கள்: விசாரணை நடத்த செபி முடிவு //
    http://www.dinamani.com/india/2017/nov/07/பாரடைஸ்-பேப்பர்ஸ்-கருப்புப்-பண-பட்டியலில்-714-இந்தியர்கள்-விசாரணை-நடத்த-செபி-முடிவு-2802926–1.html — விசாரணை பயன் உள்ளதாக இருக்குமா ….?

  6. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    உங்களின் பதிவுகளை படிக்கும் போது பயமாகவே உள்ளதும். மேலே நண்பர் கூறியது போல கவனமாக இருங்கள். அரசியல்வாதிகளின் அதிகாரம் சென்னை வரையிலும் பரவும். தென்னகத்தில் (இந்திய அளவில் தெரியவில்லை) யாரும் தராத செய்திகளை நீங்கள் தருகின்றீர்கள். அரசியலும் அதிகாரமும் அவர்களுக்காக மட்டுமே மிக நன்றாக வேலை செய்யும். ஊழல் ஒழிக்கிறேன், அதிகார வர்கத்தின் ஆணவத்தை ஒழிக்கிறேன் என்பதெல்லாம் வெறும் தேர்தல் நேர மேடை பேச்சு மட்டுமே.

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      நன்ப‌ புது வசந்தம் மற்றும் பிற நன்பர்களுக்கு,

      தங்களின் கவலையை கேஎம் ஐயா அவர்களின் பால் கொண்ட அக்கரையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நானும் அதே கவலையை அக்கரையை கொண்டிருந்தாலும் கேஎம் ஐயா அவர்களை இது விசயத்தில் தடுக்கவோ நிருத்த முயற்ச்சிக்கவோ வேண்டாம் என்பது என் எதிர்பார்ப்பு.

      என்ன செய்துவிடுவார்கள் கோழைகள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளமுடியா கொலைகார பாவிகள்.

      ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ஒன்னு இங்கு வந்து குறைத்துவிட்டு போனது நன்பர்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த மிரட்டலை ஐயா அவர்கள் சாதுரியமாகவே எதிர்கொண்டார்கள்.

      கௌரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் போன்றோரை எதிர்கொள்ள அந்த கோழைகளுக்கு துணிவிருந்ததில்லை. ஐயா அவர்களை எதிர்கொள்ளும் விதத்தில் அவர்கள் உலகின் மாபெரும் தீவிரவாத இயக்கத்தை அதன் துணை அமைப்புக்களை சார்ந்தவர்களில்லை என்று நிறூபிக்கட்டுமே.

      எதிர்கொள்வதென்பது கருத்தை கருத்தால் வினையாற்றுவது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் குமார் நமக்கு ஒரு நல்ல தகவலை தந்திருக்கிறார். உங்கள் latest செய்திக்கு நன்றி குமார்…!

      இன்றைய Indian Express நாளிதழ் தந்துள்ள செய்தியின்படி, செத்துப்போன அமீத் பாத்வாவின் தந்தை பிகாபாய் அவர்கள், சோலங்கி இன்னமும் கைது செய்யப்படாததை குறிப்பிட்டு, சுப்ரீம் கோர்ட்டில் “contempt petition” ( நீதிமன்ற அவமதிப்பு வழக்கு) போட்டிருக்கிறார்.

      அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்த வில்லன் பாஜக முன்னாள் எம்.பி. சோலங்கி
      உடனடியாக சிபிஐ கோர்ட்டில் சரண் அடைந்திருக்கிறார். சிபிஐ கோர்ட் அவரை சபர்மதி சிறைக்கு அனுப்பி இருக்கிறது…!

      சுப்ரீம் கோர்ட்டுக்கு இவர் பயப்படுகிறார் என்பதே ஒரு நல்ல செய்தி தான்…!!!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.