ஜே.ஷா. பற்றி எழுத 100 கோடி தேவை -அது மற்றவர்களுக்கு…. ஆனால், நமக்கந்த கவலை இல்லை…!!!


” தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில்
நெறி கட்டுகிறதாம் ” என்று தமிழில் ஒரு வழக்கு உண்டு.
வேறு யாரைப்பற்றியோ எழுதுபவர்களை பியூஸ்ஜி
எச்சரிக்கிறார்… 100 கோடி மான நஷ்ட வழக்கு தொடரும்
ஜாக்கிரதை என்று…!!! இவருக்கேன் இத்தனை அக்கறை என்று சிலர் கேட்கிறார்கள்…. ஆனாலும் கட்சித்தலைவரின் பிள்ளை அல்லவா…? அக்கறை இல்லாமல் இருக்குமா…?

ஒரு சந்தேகம்…நம்மைப் போல் ஓட்டாண்டிகளிடம் எப்படி
100 கோடி வசூல் செய்வார்கள்…? ஒருவேளை கட்டிஇருக்கிற வேட்டியை உருவிக்கொண்டு விடுவார்களோ….? செய்தாலும் செய்வார்கள் – நமக்கு ஏதுக்கு வம்பு..!!!

கிடக்கு விடுங்கள். குற்றம் சாட்டி எழுதுபவர்கள் தானே
கவலைப்பட வேண்டும். நாம் பாராட்டத்தானே போகிறோம்… மெச்சத்தானே போகிறோம்…!!!

திறமை இருக்கிறவர்களை, அதை தகுந்த வழியில்
பயன்படுத்திக் கொள்கிறவர்களை – அதுவும் இளைஞர்களை

– பாராட்டுவதை விட்டு விட்டு, குற்றம் குறை சொல்வதையே வழக்கமாக கொண்டால் இந்த நாட்டின் இளைஞர்கள், முக்கியமாக பாஜக தொழிலதிபர்கள் – எப்படித்தான் வளர்வார்கள்…?

இப்பத்தான் திருமணமாயிற்று… வளர வேண்டிய
பிள்ளையை வாழ்த்துவோம் … அவரது
திறமையை, சாமர்த்தியத்தை பாராட்டுவோம்.

அதுவும் இந்த வயர் செய்தித்தளம் இருக்கிறதே…
அநியாயத்துக்கு வயிறெரிகிறது…!!!

அந்த பிள்ளையாண்டானின் கம்பெனி 2013-ஆம் ஆண்டில்
Rs 6,230/- நஷ்டமும், 2014-ஆம் ஆண்டில் Rs 1,724/- நஷ்டமும் காட்டி இருக்கிறது.

2014-க்கு பிறகு ‘” தொழில் நுணுக்கங்களை “‘ கற்றுக்கொண்டு 2015-ல் மொத்தம் சுமார் ரூ.50,000 /-க்கு வியாபாரம் செய்து, அதில் ரூ.18,728/- லாபம் பார்த்து விட்டது.

அதற்கு அடுத்த ஆண்டில் இன்னமும் தொழில்
“நுணுக்கங்களை” கற்றுக்கொண்டு பிரமாதமாக, 80.5 கோடி
ரூபாய்க்கு “வியாபாரம்” செய்திருக்கிறது –
இந்த வளர்ச்சியை பாராட்ட மனமில்லாமல் –

இந்த அளவிற்கு வியாபாரம் செய்ய முதல் ஏது, எங்கே
என்று கேட்கிறார்கள்….வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள்…!!!

அதான் பாஜக ராஜ்ய சபா எம்.பி.யும், ரிலையன்ஸ்
நிறுவனத்தை சேர்ந்தவருமான திருவாளர்
நத்வானி அடமானம் எதுவும் கேட்காமலே Rs 15.78 கோடி
கடன் கொடுத்திருக்கிறாராமே…!!! அப்புறமென்ன சந்தேகம்..?

வங்கியில் கடன் வாங்காமல், தனியாரிடம் ஏன் கடன் என்று
கேட்கிறார்கள்… வங்கியில் அடமானம் கேட்பார்கள்…
வட்டி கேட்பார்கள்… அதை விட, தெரிந்தவர்களிடம்,

அதிலும் வசதியான ரிலையன்ஸ் பிரமுகரிடம்,
இன்னொரு குஜராத்திக்காரரிடம் –
கடன் வாங்குவது சுலபம் அல்லவா…?

பிறகு வேறு இடங்களிலும் வாங்கினார்கள்.
மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் தொழில்
விஸ்தரிப்பு செய்தபோது….!!!

திரு.பியூஸ்ஜி அவர்கள் அமைச்சராக இருந்தபோது, அவரது
இலாகாவை சேர்ந்த ரினியூவபிள் எனர்ஜி டெவலெப்மெண்ட்
ஏஜென்சியிடமிருந்து ரூ.10.35 கோடி கடன் வாங்கி
புதுப்பிக்கதக்க மின் ஆற்றல் தொழிலில் ஈடுபட்டார்கள்…!!
அதனால் என்ன…? புத்திசாலித்தனமான காரியம் தானே…?

எப்படிப் பார்த்தாலும், நம் கண்களுக்கு,
கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் அற்புதமாக பயன்படுத்திக்கொண்டு முன்னேற துடிக்கின்ற
ஒரு இளைஞர் தான் புலப்படுகிறார்..

எனவே, வயிற்றெரிச்சல் கொள்ளாமல்,
வசவில் ஈடுபடாமல்,

அவர் தனது தொழிலில் மேன்மேலும் வளம் பெற்று
வாழ்க… வளர்க… என்று வாழ்த்துவோமாக…
இது தான் அவருக்கும்,
நமக்கும் நல்லது…!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to ஜே.ஷா. பற்றி எழுத 100 கோடி தேவை -அது மற்றவர்களுக்கு…. ஆனால், நமக்கந்த கவலை இல்லை…!!!

  1. Sundar Raman's avatar Sundar Raman சொல்கிறார்:

    Unlike others, at least you are telling the truth – that 80 corores is a turnover , and not profit. Every body else is tweeting and Puthiya thalaimurai tv is saying it is a profit. He has incurred loss for that year , though it is not specified in the wire article as to how much is the loss for that year .

    A company when started doesn’t take off immediately , and in the export and import business , 80 crores turnover is not a big figure. Please work hard to find out the truth , don’t quote half baked article and write slanderous article ( immediately don’t say that I have written good about shah, everyone knows your intentions – including you ). It might be a talking point in the TV /Media , they might bash Modi , BJP , Shah – but it won’t stand , as it is not based on truth . ( Your claim of Media is behind BJP is also untrue- almost everyone is happy that Shah is caught – only thing is that there is truth behind the allegations, watch out for Gujarat elections ) . He borrowed from a reliance relative – private borrowing, what is there to hide, everything is declared , through cheques – he got a contract for wind power , either you talk to some expert or you go for some more digging, what kind of people get power finance , does the ministry gives loan at all ? if so to whom ? how much ? – unconventional power ( wind power) is very much is in TN, u might get some names , who got it , how much etc.,? LC facility is not a crime . He has not represented foreign companies , and promised them that he would get contracts , and collected fee for the same. ( like Karthik Chidambaram)

  2. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    வாங்க சுந்தர்ராமன் சார். நேத்து கூட யாரோ இங்கே கேட்டிருந்தாங்க.
    எங்கே காணோம்னு.
    ஆமாம் நீங்க ஏன் இந்த ஆளுக்காக இவ்வளவு பரிஞ்சு பேசிக்கிட்டு வர்ரீங்க ?
    இந்த நாட்டுல எத்தனை இளைஞர்களுக்கு அடமானம் இல்லாம கோடிக்கணக்குல
    கடன் கிடைக்குது ?
    பியூஸ்ஜி ஏன் வக்காலத்து வாங்கினார்னு தெரிஞ்சு போச்சு. 10 கோடிக்கு மேல கடனை அவர் இலாகா தான் கொடுத்திருக்கு.
    இந்த மாதிரி சான்ஸ் நாட்டுல எல்லா இளஞர்களுக்கும் கிடைக்குமா ?
    பாஜக ஆட்சில இல்லேன்னா இவர் இந்த கடன் களை எல்லாம் வாங்கியிருக்க
    முடியுமா ? இது அதிகார துஷ்பிரயோகம் இல்லேன்னா வேறு என்னங்க ?

  3. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    இந்த ஆளுக்கு என்ன வயசு ஆறது ?
    இந்த வயசு இளைஞருக்கு அப்பா தயவு இல்லேன்னா, அப்பா பெயரை யூஸ் பண்ணல்லேன்னா இத்தனை துட்டு கடன் கிடைத்திருக்குமா ?
    இது அதிகார துஷ்பிரயோகம் இல்லேன்னா வேற என்னங்க பேரு ?

  4. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    இந்த ஸ்டைலில் கூறுவதற்கு நம் தமிழ் இலக்கணத்தில் உள்ள ” பல அணிகளில் ” ஒரு வகை … இதுவும் ஒரு நல்ல முறைதான் ….
    ” பேரன்களை ” பற்றிய ஒரு கேள்விக்கு … சாமர்த்தியம் இருக்கிறது சம்பாதிக்கிறார்கள் என்று தமிழக தலைவர் ஒருவர் கூறியதாக ஞாபகம்…. !!!

  5. Sundar Raman's avatar Sundar Raman சொல்கிறார்:

    Selvarajan Sir , your so called parens ( grand children) stole the P&T wire and used the same cable to their TV stations – In this case Shah borrowed money , used the LC facility – and paid back the entire money – he has incurred losses – though the turnover was 80 crores , he did not make money, that is why the company was folded . What is the fraud he has committed ? commodity trading wasn’t a banned transaction . Even in today NDTV discussion, the congress spokesperson was kept harping that , he has earned 80 crores , No he has not earned 80 crore , he has incurred loss. To prove corruption, there should have been a monetary loss to the Govt. and gain to Shah. Yes it is fact that he borrowed money from a private NBFC – and co-operative bank . Both have recovered their money with interest ( profit ). He mortgaged his property for the LC facility , the goods in the LC is his prime mortgage. Try some other trick –

    இந்த வயசு இளைஞருக்கு அப்பா தயவு இல்லேன்னா, அப்பா பெயரை யூஸ் பண்ணல்லேன்னா இத்தனை துட்டு கடன் கிடைத்திருக்குமா ?
    இது அதிகார துஷ்பிரயோகம் இல்லேன்னா வேற என்னங்க பேரு ?

    If that person is not educated , or character is not perfect ( if he has a bad name , habits ) – despite being a son of big person , he may not get the loan. He must have been a straight person, that is why the private person and the co-operative bank gave the loan, They got back their money with profit.

    Again I am saying – you can not prove a single corruption case against this BJP Govt.

  6. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    Sundar raman,

    Just do not blindly support and close your eyes conveniently avoiding inconvenient questions :

    // இந்த நாட்டுல எத்தனை இளைஞர்களுக்கு அடமானம் இல்லாம கோடிக்கணக்குல கடன் கிடைக்குது ?
    10 கோடிக்கு மேல கடனை பியூஸ்ஜி – இலாகா தான் கொடுத்திருக்கு. இந்த மாதிரி சான்ஸ் நாட்டுல எல்லா இளஞர்களுக்கும் கிடைக்குமா ?
    பாஜக ஆட்சில இல்லேன்னா இவர் இந்த கடன் களை எல்லாம் வாங்கியிருக்க முடியுமா ? //

    Can you get loan of 15 crores and 25 crores from any Private Financier without any Security ? We are not fools to accept your blind arguments.

    How the Govt.of India agency gave over 10 crore rupees as loan to a person without any previous experience in renewable energy ? Can you show a simple example – name of any other such person who got this concession ?

    How a company which was silent upto 2014 suddenly burst into business activities in gujarat, madhya pradesh, Rajasthan, chattisgarh etc. states i.e. only where bjp rules ?

  7. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    // மன்னார் அண்ட் கம்பெனியும் மேக்சிமம் கவர்னன்சும்! // http://vanakamindia.com/amit-shah-son-company-controversy/ இந்த செய்தியில் :– // 2013-14ல் இவ்வளவு சிறிய கம்பெனிக்கு KIFS ஃபைனான்சியல் சர்வீசஸ் என்ற நிதி நிறுவனம் 15.78 கோடி ரூபாய் கடன் தருகிறதாம்! விந்தை
    என்னவென்றால், அந்த ஆண்டில் KIFS நிறுவனத்தின் வருமானமே 7 கோடிதானாம்! // ……. வருமானம் குறைவாக இருந்தாலும் — கடன் தர பணம் நிறைய வைத்திருக்கும் KIFS நிறுவனம் — நல்ல நிறுவனம் தானே … ?
    இதில் இன்னுமொரு கவனிக்கத்தக்க செய்தி :– // இந்த விஷயத்தில் மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஜே ஷாவுக்காக வாதாடுவார் என்று மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது! அதுவும் எப்போது? விவகாரம் வெளியான 6ஆம் தேதியே அரசு அனுமதி அளித்து விட்டதாம்! // நல்லது நடந்தால் சந்தோஷமே …. !

  8. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஆ.ராசாவின் படிப்பறிவில்லாத சுற்றங்கள் கோடிகளுக்கு அதிபதிகள், டி.ஆர்.பாலு, வீரபாண்டி ஆறுமுகம், ராமதாஸ், ஓபிஎஸ், விஜயகாந்த் பையன்கள்/மச்சான், ஸ்டாலின்,ராபர்ட் வதோரா போன்ற ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகளின் வாரிசுகள், டிஜிஎஸ் தினகரன்-காருண்யா வாரிசுகள் பல நூறு கோடிகளுக்கு, ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாகும்போது வரவேற்ற தமிழர்கள், பாஜகவில் நடந்ததாகச் சொல்லப்பட்ட விஷயங்களில் கவலை காண்பிப்பதை (காமை சார்.. உங்களையல்ல) நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      தமிழக அரசியல் வாரிசுகள் அவர்களின் குடும்ப செல்வாக்கை பயன்படுத்தி வளர்ந்தது குற்றம் தான். யார் ஆதரித்தார்களோ இல்லையோ இந்த வளைத்தளம் நிச்சயம் ஆதரிக்கவில்லை என்பதை எல்லோரும் அறிவர்.

      ஆனால், அமித்ஷா வாரிசு செய்வதை
      இங்கு இவர்கள் ஆதரித்து எழுதுவதற்கு எவ்வளவு மனத்துனிவு வேண்டும். மட்டுமில்லாமல் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இவர்கள் இந்த தளத்தில் ஒப்பீட்டு எழுதுவதற்கு ஒரே காரணம் தான் இருக்கமுடியும். கண் மூடிய பக்தி மட்டுமில்லாமல் நல்ல payment – ம் ஒரு காரணமாக இருக்கக் கூடும். யார் கண்டா?

      அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு பதில் கொடுப்பதோ இவர்களை கண்டுகொள்வதோ அவசியமில்லை.

  9. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    //பல நூறு கோடிகளுக்கு, ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாகும்போது வரவேற்ற தமிழர்கள், பாஜகவில் நடந்ததாகச் சொல்லப்பட்ட விஷயங்களில் கவலை காண்பிப்பதை (காமை சார்.. உங்களையல்ல) நாம் புரிந்துகொள்ள முடிகிறது.//

    ஆனால், இந்த ஆளின் இந்த வரிகளை கண்டுகொள்ளாமல் விடுவது நல்லதில்லை.

    //வரவேற்ற தமிழர்கள்//

    இவர் ஒட்டுமொத்த தமிழர்களையும் குற்றப் படுத்துகிறார். இதற்கு இந்த தளத்தில் இவர் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.