(பகுதி -5) சீனா ஜெயிக்க காரணம் சர்வாதிகாரமா …?


கம்யூனிசம் காரணம் இல்லையென்றால் சீனா ஜெயிக்க வேறென்ன
காரணம் …? சர்வாதிகாரமா ? அல்லது …….?

கம்யூனிஸ்ட் ஆட்சி என்பதால், சீனத்தில் தனியே
தொழிற்சங்க அமைப்புகள் இல்லை. இருக்கும்
அமைப்புக்கள் எல்லாம் கட்சிக்கு கட்டுப்பட்டவையே.

கட்சி என்ன முடிவெடுக்கிறதோ அது தான் அரசாங்கத்தின்
முடிவு. அரசாங்கம் ஒரு முடிவெடுத்து செயலில் இறங்கி
விட்டால், அதை யாரும் எதிர்க்க முடியாது.

எதிர்க்கட்சிகள் இல்லை. எதிர்ப்புகள் இருந்தால் –
அவை கட்சிக்குள்ளாகவே பேசி தீர்க்கப்பட்டு விடும்.

பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி –
அனைத்தும் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டவையே.

வலைத்தளம் கூட தணிக்கைக்கு உட்பட்டது தான்.

ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ,
வேலை நிறுத்தமோ –
ஏன் விமரிசனமோ கூட யாரும் செய்ய முடியாது.

எனவே எந்தவித எதிர்ப்புகளும் இல்லாமல் திட்டமிட்டதை
குறித்த நேரத்தில், குறித்தபடி செய்ய முடிகிறது.
ஒரே ஒரு முக்கியமான விஷயம் –
திட்டமிடும்போதே அது
நேர்த்தியாகத் திட்டமிடப்பட வேண்டும்.

தவறுகளோ, தோல்விகளோ – அரசால் சகித்துக்
கொள்ளப்படுவதில்லை. அதனால், திட்டமிடலும்,
செயல்படுத்தலும் திறமையாக நடைபெறுகின்றன.

அடுத்தது வேலை செய்ய தேவைப்படும் –
உழைப்பு சக்தி – working force. இப்போதைக்கு – சீனாவில்
இதற்குப் பஞ்சமில்லை. எங்கெல்லாம் தொழிலாளர்கள்
தேவைப்படுகிறார்களோ –
அந்த இடத்திற்கு அவர்களை கொண்டு செல்வதில் –
(to migrate workers ) எந்தவிதப் பிரச்சினையும் இருப்பதில்லை.

புதிய பணியிடத்தில், தங்க இடமும், உணவும், கொடுப்பதற்கு
அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டு விடுகிறது.

சம்பளமோ, வேலை நேரங்களோ – அரசு சொல்வது
தான் சட்டம். நம் ஊரைப்போல் வாரத்திற்கு 40, 45, 48 மணி
நேரம் என்றெல்லாம் கணக்கு போட்டு உழைக்கும் நேரத்தை
கட்டுப்படுத்த முடியாது.

– தொழிற்சங்கங்களின் பொறுப்புகள் அனைத்தையும்
அரசே ஏற்றுக் கொண்டு விடுவதால் –
சம்பளம், வேலை நேரம், விடுமுறைகள் போன்ற
விவகாரங்களில் பேரத்திற்கோ, பேச்சு வார்த்தைகளுக்கோ
இடமில்லை. இதனால், தேவைப்படும்போது தொழிலாளர்களிடம் அதிகநேரம் வேலை வாங்குவதில் சிரமம் ஏற்படுவதில்லை.

தொழிலாளர்களின் உணவு, இருப்பிடம், சுகாதாரம்
போன்றவற்றில், அரசாங்கம் உண்மையான அக்கரை எடுத்துக்
கொள்வதாலும், கொஞ்சம் கொஞ்சமாக சீனக் குடிமக்களின்
வாழ்க்கைதரம் மேம்பட்டு வருவதாலும், மக்களின்
ஒத்துழைப்பு கிடைப்பது சுலபமாகிறது. பிரம்மாண்டமான
திட்டங்களின் மூலம் 10 வருடங்களில் 15 கோடி வேலை வாய்ப்புக்களை – புதிதாக உருவாக்கி இருக்கிறார்கள் !!

இதனால் தான் பெரிய பெரிய திட்டங்களை குறிப்பிட்ட
காலத்திற்குள் நிறைவேற்ற அவர்களால் முடிகிறது.

164 கிலோமீட்டர் தூரமுள்ள உலகிலேயே
நீண்ட மேம்பாலத்தைக் கட்ட அவர்கள் எடுத்துக்கொண்ட
காலம் நான்கே ஆண்டுகள் தான் !
( நாம் சென்னையிலிருந்து – திருச்சி வரையிலான
இரட்டை ரெயில் பாதையையே 15 வருடங்களாக
போட்டுக்கொண்டே……… இருந்தோம்….)

கடவுள் நம்பிக்கைக்கோ, மத நம்பிக்கைக்கோ – அரசு
நிர்வாகத்தில் இடமில்லை. “aethist government” என்று அரசியல்
சட்டத்திலேயே விதியைக் கொண்டு வந்து விட்டதால் –
இது குறித்த விஷயங்களிலும், விவாதங்களிலும்
செலவழிக்கப்படும் நேரமும், சக்தியும், பணமும் மிச்சமாகிறது.

மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த, ஒரு
குடும்பத்திற்கு ஒரு குழந்தை தான் என்கிற சட்டத்தை
அரசாங்கம் கடுமையாக, மிகக்கடுமையாக நிறைவேற்றுகிறது.

( எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு அண்மையில்,
இந்த கொள்கையில் சிறிது மாற்றம் கொண்டு
வரப்பட்டிருக்கிறது.)

கல்வி, சுகாதாரம், பெண்கள் – குழந்தைகள் நலன்,
ஆகியவற்றில் முன்னேற்றம் காண திட்டமிட்டு அக்கரையுடன்
நிறைவேற்றுகிறார்கள்.

சிவில், கிரிமினல் சட்டங்கள் கடுமையாக
நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
வழக்குகளின் விசாரணை விரைவாக நடைபெற்று
தாமதமின்றி தீர்ப்புகள் நிறைவேற்றப்படுகின்றன.

அப்படியானால் பிரச்சினைகளே இல்லையா ?

இருக்கிறது. நிறைய இருக்கிறது. அனைவருக்கும் வேலை
வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றால், ஏற்றுமதி
அதிகரிக்க வேண்டும்.

ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும் என்றால் – உலக அளவில்
சந்தைப்போட்டியை சமாளிக்க உற்பத்திச் செலவை குறைக்க
வேண்டும்.
( விளைவு – தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு
அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் .. ! அதுவும்
முடிகிறது – சர்வாதிகாரம் காரணமாக கம்யூனிஸ்ட்
ஆட்சியாக இருந்தாலும் அங்கே முடிகிறது.
இங்கே – முடியாது….! )

நம்மூர் மார்க்கெட்டுகள் பூராவும் சீனத்தயாரிப்புகள்
நிறைந்திருப்பதைக் காண்கிறோம். சிறுவர்களுக்கான
விளையாட்டு பொருட்கள், பொம்மைகள்,
ஸ்டேஷனரி, ஸ்பூன், கரண்டி கூட விடாமல்
பல்வேறு விதமான சமையலறைப் பொருட்கள்,
கொசுவலை முதற்கொண்டு கொசு பேட் வரை,

எக்கச்சக்கமான எலெக்ட்ரானிக் சாதனங்கள், செல்போன்கள்,
என்று பற்பல பொருட்கள் இங்கு வந்து குவிந்திருக்கின்றன.
விலையோ கொள்ளை மலிவு. இங்கு மட்டுமல்ல.
உலகம் பூராவும் பெரும்பாலான நாடுகளில் இவ்வாறு
மலிவு விலையில் சீனத்தயாரிப்புகள் கிடைக்கின்றன.

உலகச் சந்தையைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே
சீன அரசு திட்டமிட்டு வேலை செய்கிறது. அடக்க விலையை
விட (raw material+labour + transportation cost )
குறைந்த விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
செய்கிறது. விலை வித்தியாசத்தை சீன அரசே ஈடுகட்டுகிறது.

இவை எல்லாம் எப்படி சாத்தியமாகிறது ?

லஞ்ச ஊழல்கள் சீனாவில் இல்லையா ?
இருக்கிறது. ஆனால் உடனடியாக நடவடிக்கை
எடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.
விசாரணகள் வேகமாக நடக்கின்றன.

கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுவதால் –
குற்றச்செயல்கள் குறைகின்றன.

அரசியலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு வாய்ப்பு
கொடுக்கப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அடிப்படை
உறுப்பினராகச் சேர்ந்து, படிப்படியாக உழைத்து மேலே வர
வேண்டியது தான்.

ஓரளவு மேல் மட்டத்திற்கு வந்த பிறகு தான் – வளர்வது
பிரச்சினை. அதிகாரப் போட்டிகள் மேல் மட்டத்தில் நிறைய
உண்டு. திறமை, சாமர்த்தியம் உள்ளவர்கள் -உயர்மட்டத்திற்கு
வருகிறார்கள் – survival of the fittest !

பரம்பரை ஆட்சியை ஊக்குவிப்பதில்லை என்பதால்,
அம்மாவிற்கு பிறகு பிள்ளை, புருஷனுக்குப்பிறகு
பெண்டாட்டி என்று பதவிக்கு வர வாய்ப்பு இல்லை.
தனிப்பட்ட ஒருவரிடம் அதிகாரம் குவிவதற்கு பதிலாக, இறுதி
நிலையில் உயர்மட்டக்குழுக்கள் ஆட்சி செய்கின்றன.

இந்த மட்டத்தில் கூட, ஊழல் செய்பவர்கள் –
(ஓரளவிற்கு மேல் ..? ) பொறுத்துக்கொள்ளப்படுவதில்லை.

ஊழல் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
தவறு செய்வோர், தயவுதட்சண்யமின்றி
தண்டிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு குழு
பொறுப்பு ஏற்றுக் கொண்டு செயல்படுகிறது.
ஒவ்வொரு குழுவும் போட்டி போட்டுக் கொண்டு –
தன் நாட்டை உலக அரங்கில் முன்கொண்டு செல்ல
திட்டமிட்டு உழைக்கிறது.

அப்படியானால் – சீனா இன்று உலக அரங்கில் முன்நிலையில்
இருப்பதற்கு சர்வாதிகாரம் தான் காரணம் என்று
தோன்றுகிறதா ? இது சரியா ?

அப்படியானால் சர்வாதிகார ஆட்சி வந்தால்
இந்தியாவும் முன்னுக்கு வந்து விடுமா ?

( தொடர்வோம் – பகுதி-6-ல்…. )

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to (பகுதி -5) சீனா ஜெயிக்க காரணம் சர்வாதிகாரமா …?

  1. இன்றில்லாவிட்டாலும்'s avatar இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

    கண்டிப்பாக சர்வாதிகாரத்தன்மையுடன் கூடிய கம்யூனிஸம் இருந்ததால் தான் இதைப்போல ஒரு இலக்கை அடைய முடியும். இப்படி செய்ய முதலில் நடைமுறை சட்டமே இடம் கொடுக்காது. மேலும் நம்மை மேலும் முட்டாளாக்கி மக்களிடம் அறியாமையை உண்டாக்கி அதையே மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்தும் நம் நாடு கட்சிகள் இருக்கும் வரை எந்த கொம்பனாலேயும் நமது பாரதத்தை முன்னெடுக்க முடியாது. அப்படி சில ஆண்டுகள் முன்னர் நினைத்த அன்னா ஹசாரேயை என்ன செய்தார்களோ தெரியவில்லை. நம் போன்ற சில அறியாமை தாக்க பாதிப்பு கம்மியாக உள்ளவர்கள் இன்றில்லாவிட்டாலும் என்று நம்புவோம் காமை ஐயா அவர்களே

  2. sivakumar's avatar sivakumar சொல்கிறார்:

    ஐயா உங்கள் கட்டுரைகளை எல்லாம் நான் படித்து வருகிறேன் .புள்ளி விவரங்களுடன் நீங்க எழுதும் எல்லாமே அருமை. சில கட்டுரைகளை மலேசியா இணையத்தில் உங்கள் அனுமதியுடன் வெளியிட்டு வருகிறேன் . நன்றி ஐயா

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப சிவகுமார்,

      தாராளமாகச் செய்யுங்கள்…
      இந்த தகவல்கள் இன்னும் அதிகம் பேரை சென்றடைந்தால் எனக்கு மகிழ்ச்சியே.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    இன்னும் இரண்டு இடுகை பதிவுகள் [ பகுதி 6 மற்றும் 7 ] … மீதம் … 2013 ஜூலை — ஆகஸ்ட் களில் வெளிவந்த இடுகைகள் … நான்கு ஆண்டுகள் சென்றபின் மீண்டும் … ! அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி — அதன் பின் பா.ஜ . க ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன — ஆனால் நம்நாடு … ? இடுகைகளில் தாங்கள் குறிப்பிட்ட — குறிப்பிட போகும் நாடுகளின் முன்னேற்றங்கள் பிரமிப்பையூட்டி — ஒரு அங்கலாய்ப்பை நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்திய அதே அனுபவம் தற்போதும் ஏற்படத்தான் செய்யும் …. இங்கே ஆட்சிகள் மாறியதே தவிர காட்சிகள் மாறாதது — மாபெரும் சோகம் .. இன்னும் சில ஆண்டுகள் சென்ற பின்னும் —
    // கொஞ்சம் பிரமிப்பூட்டும் தகவல்களும் – கொஞ்சம் விவாதமும் …
    Posted on ஜூலை 29, 2013 by vimarisanam – kavirimainthan //
    என்பதை ” மறு பதிவாக ” இட்டாலும் ஆச்சர்யமில்லை … !!!

  4. S.Palanivelu's avatar S.Palanivelu சொல்கிறார்:

    முக்கியமாக சீனாவில் ஜாதி பாகுபாடு இல்லை. லஞ்சம் பரவி இருந்தாலும் எல்லோரும் முன்னேற சம வாய்ப்பு கிடைக்கிறது. போலி பெயரில் பெட்ரோல் பங்குகள்கூட அங்கு பார்க்கலாம். சுத்தம் பணம் கொடுத்தால் கவணிக்கப்படாது. பணம் இருந்தால் போதும் யாரும் எளிதில் சம்பாதிக்கலாம். ஏமாற்றலாம். அரசாங்கம் வீடு வீதி கொடுப்பது உண்மைதான். மருத்தவம் போலீஸ் நம் நாட்டைபோலதான். ஜாதிபாகுபாடு இல்லாத ஒரு விஷயமே பெரிய பலமாக இருக்கிறது. சமத்தவத்தின் அருமையை இங்கே காணலாம். இரண்டாவது தலைமை. திட்டங்கள் கொள்ளையடிக்க அல்ல. மக்களுக்கு அவை சரியாக நினைவில் வைத்து செய்கிறார்கள்!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நண்ப பழனிவேலு,

      உங்களுக்கு சீனா சென்ற அனுபவம் உண்டா…?

      இந்த வலைத்தள வாசகர்கள் யாருக்காவது, நேரில் சீனா சென்று
      தங்கியிருந்த அனுபவம் உண்டென்றால், தயவு செய்து,
      கள நிலவரத்தை ( ground realities ) பின்னூட்டத்தின் மூலம்
      இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்…

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • S.Palanivelu's avatar S.Palanivelu சொல்கிறார்:

        சீனாவை பார்த்த பிறகுதான் நாம் எவ்வளவு ஏமாற்றப்படுகிறோம் என்பது புரிகிறது. நம் வரிப்பணம் கொள்ளை போகிறது என்று தெரிகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது-பணத்துக்குதான். விரும்பியதை படிக்கலாம் தரமான கல்வி. படிப்புக்கு தக்க வேலை. திறமை இருந்தால் யாரும் முன்னேறலாம். கடவுள் பற்றி யாரும் கவலைபடுவதில்லை. ஆனால் நம்மைவிட மனுஷதன்மை உண்டு. ஏமாற்ற அஞ்சுவதில்லை-வாய்ப்பு நாம் தந்தால். குடும்பம் கட்டுபாடு மிக கண்டிப்பானவர்கள். பசியில் பலகாலம் வாழ்ந்தவர்கள் கொஞ்சம் வாய்ப்பு கிடைத்தாலும் சிறப்பாக பயன்படுத்தி விடுவார்கள். போட்டியென்றால் கோதாவில் இறங்கி ஜெயிக்காமல் விடமாட்டார்கள். ஆதலால் அன்னியரைக்கண்டால் அச்சத்துடனே அனுகுவார்கள். மின்சார ஸ்கூட்டர் இங்கு சர்வ சாதாரணம். பெட்ரோல் பைக் பல நகரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பெரிய கார்கள் சர்வ சாதரணம்.ழ டாக்சிகள் கட்டாயம் மின்சாரத்தால் இயங்க வேண்டும் என்று தனி மாடலே உற்பத்தி செய்கிறார்கள். பலவித மின்சாரக்கார்களை இங்கே காணலாம். லெட் அசிட் பேட்ரி கோண்டே இவை யாவும் இயங்குகின்றன. இந்தியாவிலிருந்து வந்த யாரும் சீனாவை பரலோகம் என்றே சொல்வர். நம்மீடியா சரியான படி கவர் செய்யவில்லை. யாரும் பிழைக்கலாம்-வேலை தெரியாவிட்டாலும் கற்றுக்கொண்டு வாழலாம். சட்டம் விலைக்கு வாங்கலாம்-இந்தியாவைப்போல. மாட்டிக்கொண்டால் தப்பிக்க முடியாது. கடும் தண்டனை கணவிலும் நினைத்து பார்க்க முடியாது. நம்மைகாட்டிலும் சீனனுக்கு சாதகமாகவே சட்டம் வளைந்து கொடுக்கும். நியாயம் பேச முடியாது. பொதுவாக 500 மில்லியன் ஜனங்களை உண்மையாக வருமை கோட்டிலிருந்து கடந்த இருபது வருடத்தில் மீட்டுவிட்டது இமாலய சாதனைதானே. ஆனால் மார்தட்டிக்கொண்டிருக்க அவர்களுக்கு நேரமில்லை. சென்றல் ஆசியாவழியாக இங்கிலாந்து வரை ரயில். வழிநெடுக மின்சாரம் தண்ணீர் வசதி தரமான சாலைவசதி செய்து மற்ற பின்தங்கியுள்ள நாடுகளையும் முன்னேற்றி தானும் பயனடைய பார்க்கிறது. ஆப்பிரிக்கா தென் அமேரிக்கா கிழக்காசியா என எங்கும் சாலை மின்சாரம் ரயில் தண்ணீர் வசதி என செய்து தருகிறது மிக பிரமிப்பாக இருக்கிறது. 21 நூற்றாண்டு சீனாவுடையது. இனி ஆங்கிலம் தொடர் மொழியாக இருக்காது மேண்டரினை கட்டாயம் கற்றால்தான் பிழைக்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

        • S.Palanivelu's avatar S.Palanivelu சொல்கிறார்:

          உலக வர்த்தக நாணயமான டாலரை நீக்க சீனாவின் யுவானை நியமித்துவிட்டார்கள். எப்படி? 1800 டன் தங்கம் அவர்களிடம் இருக்கிறபடியால் தங்கள் யுவானை தங்கமாக மாற்றலாம் என அறிவித்துவிட்டனர். டாலருக்கு இந்த வசதி கிடையாது. அது வெறும் காகிதம்தான். அமேரிக்க அரசாங்கம் தங்கமதிப்பை 73லில் நீக்கிவிட்டார்கள். இனி சகல வர்த்தகமும் யுவானில்தான் என்றாகிவிட்டது. ரோத்சைல்ட் தன் முதலீடுகளை 50% அமேரிக்காவிலிருந்து விலக்கி இந்தபக்கம் வந்து முதலீடு செய்தார். முனைப்புடன் செயல்படும் இடத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று விளக்கம் வேறு!

          • S.Palanivelu's avatar S.Palanivelu சொல்கிறார்:

            இந்திதியாவில்ம்ஆட்சியிலும் இருக்கும் உயர்ஜாதியினர் தன்னைவிட மற்ற ஜாதி முன்னேறக்கூடாது என்று சகல தடையும் போடுகிறார்கள். தன்னை ஆதரிக்காத மாநிலம் முன்னேறாதபடி கவணமாக ஆளும் கட்சி பார்த்துக் கொள்ளுகிறது. என்ன செய்ய? சகல மதத்தையும் அரசியல் கட்சிகளையும் தடை செய்தால்தான் இது சரிப்படும் கடவள் நம்பிக்கை தனிப்பட்டதாக மட்டும் இருக்க வேண்டும். அரசியல் கட்சி இல்லாத ஜனநாயகமே இந்தியாவுக்கு சரிபட்டு வரும். பூனைக்கு மணி யார் கட்டுவார்?

          • Sharron's avatar Sharron சொல்கிறார்:

            Yes you are absolutely right.

  5. Tamilian's avatar Tamilian சொல்கிறார்:

    My vote is for emergency again in India for 20 years. No other way to control the opposing forces to progress. Existing laws help the corrupt.

    • S.Palanivelu's avatar S.Palanivelu சொல்கிறார்:

      சீனாவிலும் நம்மைவிட பலவித குறைபாடுகள் உண்டு திபேத்திய புறக்கணிப்பு ஜியாங் முஸ்லீம்கள்மேல் அடக்குமுறை உள்ளது. ஆனால் ஜனங்களுக்காக ஜனங்களைக்கொண்டு ஜனத்தினால் என்ற சித்தாந்தம் சிதைக்கப்படவில்லை. சிறந்த தலமை இதை உறுதி செய்கிறது. கட்சிக்காக கட்சியைக்கொண்டு கட்சியினால் என்று இந்தியா என்றோ ஜனநாயகத்தை தொலைத்துவிட்டது. ஜாதிக்காக ஜாதியினால் ஜாதியைக்கொண்டு ஆட்சி செய்வது நம் சாபக்கேடு. இது ஒழியாதவரை நாம் இருண்ட காலத்திலிருந்து வெளிவரப்போவதில்லை.

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        பழனிவேலு,

        நீங்கள் எவ்வளவு காலம் சீனாவில் இருந்தீர்கள்…?
        எத்தகைய தொழிலில் ஈடுபட்டிருந்தீர்கள்…( தொழில் அல்லது வர்த்தகம்…) ..?
        உங்களுக்கு இந்தியர் என்கிற முறையில் தொல்லைகள், கெடுபிடி – எதாவது
        இருந்ததா…?

        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.