(பகுதி-3 … சீனாவைக் கண்டு )… உலகிலேயே மிகப்பெரிய ராட்சத நீர்மின்சக்தி திட்டம்…!!!


தமிழ்நாட்டின் ஒரு நாளைய மொத்த அதிகபட்ச மின் தேவை சுமார் 14,000 மெகா வாட். ஏகப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அனல், புனல், சூரிய சக்தி மற்றும் அணுமின் நிலையங்களை வைத்துக் கொண்டும் பலவருடங்களாக மின் பற்றாக்குறையால் தவித்து வந்த தமிழகம் இப்போது தான் ஒருவழியாக தன்னிறைவு பெற்றிருக்கிறது.

இத்தோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களின் மொத்த மின் தேவைகளையும்
நிறைவேற்றக்கூடிய அளவிற்கு ஒரு நீர்மின் திட்டம் இருந்தால் …. ? அது எவ்வளவு பெரிதாக இருக்கும்…? பிரமிப்பூட்டக்கூடியதாக இருக்காது…?

அத்தகைய ஒரு நீர்மின் உற்பத்தி திட்டம் சீனாவில் 2012-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது.

ஆனால் சீனர்கள் கொடுத்து வைத்தவர்கள்… அதன் நீர் தேவைக்கு நம்மைப் போல் மற்றவர்களை நம்பி இல்லை….
நீர்வளத்திற்கு பஞ்சமே இல்லாத நாடு.

அதை தகுந்த விதத்தில் பயன்படுத்திக்கொண்ட அவர்களின் திட்டமிடலும், செயல்திறனும் பாராட்டத்தகுந்தது.

உலகிலேயே மிகப்பெரிய, சீனாவில் அமைந்துள்ள அந்த நீர்மின் உற்பத்தி நிலையம் பற்றிய விவரங்கள் கீழே –

———————————————————————-

உலகிலேயே பெரிய நீர்மின் நிலையம் சீனாவில் yanktse ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள Three Gorges dam -hydro electrical power project.

32 பெரிய பெரிய டர்பைன்களைக்கொண்டு செயல்படுகிறது இந்த ராட்சஸ நீர்மின்சக்தி உற்பத்தி நிலையம்.

மின் உற்பத்தியோடு மட்டும் அல்லாமல் யாங்க்ட்சே ஆற்றின் கட்டுக்கடங்காத வெள்ளப்போக்கை கட்டுக்குள்
கொண்டுவந்து ஆண்டு தோறும் வெள்ளத்தினால் நிகழ்ந்து வந்த ஏகப்பட்ட உயிர்ச்சேதங்களையும்,
பொருட்சேதங்களையும் கூட கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து – விவசாயத்திற்கும், போக்குவரத்திற்கும்
மிகச் சிறந்த முறையில் பயன்படுகிறது இந்த அணை.

உலகின் மிகச்சிறந்த engineering-marvel-களில் இதுவும் ஒன்றாகப் பேசப்படுகிறது.

இந்த அணை மற்றும் நீர்மின் நிலையத்தின் பிரமிப்பூட்டும் சில அழகான புகைப்படங்கள் கீழே –

tg-1

tg-2

ttg-3

tg-4

tg-5

tg-6

tg-7

tg-8

tg-9

(தொடர்கிறது -பகுதி-4-ல் )

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.