ஐந்து லட்சம் கோடி – 3 ஆண்டுகளில்…!!! எங்கே போகிறது பெட்ரோலில் வரும் பணம்….?



ஐந்து லட்சம் கோடி – 3 ஆண்டுகளில்…!!!
எங்கே போகிறது பெட்ரோலில் வரும் பணம்….?

கடந்த 3 ஆண்டுகளில், பெட்ரோலிய பொருட்களின் மீதான
வரிகளின் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள வருமானம்
சுமார் 5 லட்சம் கோடி என்று –

நான் சொல்லவில்லை…
பிபிசி செய்தி ரிப்போர்ட் கூறுகிறது…. கீழே –

—————————————————
…..
இந்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் கச்சா
எண்ணெயின் விலை பாதியாக குறைந்திருக்கிறது.
2014 ஜூன் மாதத்தில் 115 டாலர்களாக இருந்த ஒரு பேரல்
கச்சா எண்ணெயின் விலை, தற்போது 50 டாலர்களாக
வீழ்ச்சியடைந்துள்ளது.

சுங்க வரி மற்றும் கலால் வரியால் எண்ணெய் விலைகள்
அதிகரித்து, மக்களின் சுமையை கூடுதலாக்குகிறது.
லிட்டர் ஒன்றுக்கு கொடுக்கும் விலையில் கிட்டத்தட்ட
பாதித் தொகையானது அரசுக்கே சென்று சேர்கிறது.
மாநிலத்துக்கு மாநிலம் வரிகள் வேறுபட்டாலும்,

லாபமடைவது அரசே, நுகர்வோர் அல்ல.

கடந்த மூன்று ஆண்டுகளில், குறைந்தபட்சம்
ஐந்து லட்சம் கோடி ரூபாய்

அரசுக்கு எண்ணெய் மூலம் கிடைத்துள்ளதாக பொருளாதார
வல்லுநர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.

வங்கதேசம், இலங்கை என அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டுப்
பார்த்தாலும், இந்தியாவில் எண்ணெய் விலை அதிகமாகவே
இருக்கிறது. இதற்கு காரணம் இந்திய அரசு விதிக்கும் சுங்க
வரி, மற்றும் கலால் போன்ற வரிகளே.

பெட்ரோல், டீசலின் விலை உயர்வு அத்துடன் நின்று
விடாமல், அதன் தாக்கமாக, போக்குவரத்து செலவு அதிகரித்து
அடக்க விலை அதிகரிக்கிறது.

எனவே பிற பொருட்களின் விலைகளும் உயர்ந்து,
ஒட்டுமொத்தமாக அனைத்துப் பொருட்களின் விலையும்
அதிகரிக்கிறது.

கடந்த மூன்றாண்டுகளில் விலைவாசி குறையவில்லை
என்றால் அதற்கு ஒரே காரணம் பெட்ரோல் மற்றும் டீசலின்
விலை குறையாததுதான்.


இந்திய அரசின் தரவுகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி
வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமை
மிகவும், மோசமாக இருக்கிறது. தனியார் துறைக்கு
முதலீடுகள் வருவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு
வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை, வங்கிகளில் கணிசமான
பணம் தேங்கிக் கிடக்கிறது.


இதுபோன்ற சூழ்நிலையில், கடந்த ஆண்டு உயர் மதிப்புமிக்க
ரூபாய் நோட்டுகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை
அரசு மேற்கொண்டது. அதனால் மக்களிடையே குழப்பம்
ஏற்பட்டது. அரசுக்கு வருவாய்க்கு வேறு வழியும்
இல்லாததால், வருவாயை அதிகரிக்க பெட்ரோலிய
பொருட்களுக்கான வரியைத் தவிர அரசுக்கு வேறு மார்க்கம்
இல்லை. எண்ணெய் மீதான வரியை அரசு குறைக்காததற்கும்
காரணம் இதுவே.

( http://www.bbc.com/tamil/india-41287903?ocid=socialflow_twitter )

—————————————————————–

எதிர்காலத்தில்
இப்படியும்
நடக்கலாமோ ..?

இது தவிர வயிறு எரியும் இன்னொரு செய்தி –

குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி நடத்தப்படும்
தமாஷாக்களில் ஒன்றாக அண்மையில் துவக்கி வைக்கப்பட்ட
புல்லட் ட்ரெயின் திட்டத்தின் இன்றைய அளவிலான
செலவின மதிப்பீடு 1.10 லட்சம் கோடி ( ஒரு லட்சத்து
பத்தாயிரம் கோடி ) ரூபாய்…

இதில் 88 ஆயிரம் கோடி ரூபாயை ஜப்பான் நீண்ட கால
கடனாகத் தருகிறது… அதில் பிரச்சினை இல்லை.

ஆனால், மீதி 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்திய பட்ஜெட்டில்
நிதி ஏதும் இதுவரை வெளிப்படையாக ஒதுக்கப்பட்டதாகத்
தெரியவில்லை….

இந்த பெட்ரோல் வரிகளின் மூலம் கிடைக்கும் 3 லட்சம்
கோடியிலிருந்து அதை சமன்செய்ய உத்தேசம் என்று
ஒரு தகவல் வெளி வந்திருக்கிறது.

ஆக, குஜராத் மக்களை, சட்டமன்ற தேர்தலின்போது
குஷிப்படுத்தவும், நம்மிடமிருந்து பிடுங்கப்படும் இந்தப்பணம் உதவப் போகிறது…

——————————–

பின் சேர்க்கை – இரவு 9 மணி….


இந்த பொருள் குறித்து என்னிடம் எழுதுவதற்கு இன்னும்
சில செய்திகள் இருக்கின்றன.

கடந்த 2014 மே மாதத்திலிருந்து ( அதாவது,
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ) இதுவரை –

பெட்ரோல் மீது 133 % எக்சைஸ் வரியும்,

டீசல் மீது 400 % எக்சைஸ் வரியும்,

மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளன.

கேரளாவில் பாஜகவிற்கு மைனாரிடி (கிறிஸ்தவர்கள்)
ஓட்டுக்களை அப்படியே ஒட்டு மொத்தமாக அள்ளி எடுத்து
வந்து விடுவாரென்று கருதி புதிதாக, பாராளுமன்றத்தின்
இரண்டு அவையிலுமே உறுப்பினர் அல்லாத ஒரு
அறிவுப்பெருந்தகையை அமைச்சராக்கியதன் விளைவு
அவர் செய்நன்றியை பிரதிபலிக்கும் விதமாக சில
கருத்து முத்துக்களை இன்று தெரிவிக்கப் போய், அது
கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது….

அப்படி என்ன அள்ளி விட்டார் அவர்….?

” Somebody who has a car, bike;
certainly he is not starving.
Somebody who can afford to pay, has to pay,
So we are going to tax people who can afford to pay.”

– he said.

காரிலும், ஸ்கூட்டரிலும் போகின்றவர்கள் மட்டும் தான்
பெட்ரோல், டீசல் பயன்படுத்துகிறார்கள் என்பது இந்த
“மந்த்ரிஜி” யின் விசால கண்ணோட்டம் போலும்…!!!

பஸ்ஸில் போகிற சாதாரண மக்கள் என்ன பாவம் செய்தார்கள்…? அவர்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறி, பால் பொருட்கள்,
மளிகை சாமான்களை ஏற்றி வரும் லாரிகளுக்கும்
இந்த “ஹைக்” பொருந்துமே… அந்த காய்கறி, பால், மளிகை
பொருட்களை வாங்குபவர்களும் – இந்த மந்தி(ரி)யின்
பார்வையில் – வசதியானவர்கள் தானோ…?

ஒரு விதத்தில் பார்த்தால், இவர்கள் இவ்வாறு உளறுவது
நல்லது தான் என்று தோன்றுகிறது… இன்னமும் மயக்கத்தில்
ஆழ்ந்திருக்கும் சிலரை விழிக்கச் செய்ய இவை உதவும்.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to ஐந்து லட்சம் கோடி – 3 ஆண்டுகளில்…!!! எங்கே போகிறது பெட்ரோலில் வரும் பணம்….?

  1. CDR's avatar CDR சொல்கிறார்:

    110 லட்சம் கோடி இல்லங்க…
    1 லட்சத்து 10 ஆயிரம் கோடி…..
    குறை சொல்றதுக்கு முன்னாடி செய்தியை ஒழுங்கா படிங்க சார்….

  2. Arun's avatar Arun சொல்கிறார்:

    110 LAKH CRORES ????? IDIOT

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      ” IDIOT ” ?

      BJP காரர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்கலாமா என்ன? இது (1.10) நிச்சயம் typing error தான். இதை கா.மை. ஐயா அவர்கள் தெளிவு படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அதற்குள் தன் முகத்தை காண்பித்தமைக்கு நன்றி.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      1.10 லட்சம் கோடி என்று தட்டச்சு செய்ய வேண்டியதை தவறுதலாக 110 லட்சம் கோடி என்று தட்டச்சு செய்து விட்டேன்.

      இது தவறு தான்… நிச்சயமாக என்னுடைய தவறு தான்.. ஆனால் அறியாமை காரணம் அல்ல – கவனக்குறைவு தான் காரணம்… இதற்காக மன்னிப்பு கோருகிறேன். இப்போது தவறு திருத்தப்பட்டு விட்டது.

      ————————————————–

      ஆனால், ஒரு விதத்தில் இந்த தவறு நேர்ந்தது நல்லதாகி விட்டது. எப்போதாவது இந்த வலைத்தளத்தில்
      “மோடி பக்தர்கள்” என்றோ, “பாஜக அனுதாபிகள்” என்றோ எழுதினால் கூட சிலர் பொங்கி எழுந்தது ஏன் என்பது இப்போது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது.

      மோடி பக்தர்கள் என்றால் – இப்படித்தான் மரியாதையின்றி எழுதுவார்கள். பண்பே இல்லாமல் ஏசுவார்கள் என்பது படிப்பவர்கள் எல்லாருக்கும் புரியும் வண்ணம் தெளிவாகி விட்டது. இதற்காக இந்த “மோடி பக்தர்” களுக்கு நன்றி.

      ———————————

      என்னுடைய கவனக்குறைவை ஒப்புக்கொண்டதோடு இந்த விஷயம் தீர்ந்து விட்டபடியால் –

      மேற்படி மோடி பக்தர்களை – main subject குறித்து தங்களது கருத்துகளை எழுதுமாறு
      வேண்டுகிறேன்…( அவர்களுக்கு அதெல்லாம் எழுத வராது, எழுதத் தெரியாது என்பது புரிந்தாலும்…!!! )

      ——————————————————

      இப்போது விஷயத்திற்கு வருவோம்..
      இந்த பொருள் குறித்து என்னிடம் எழுதுவதற்கு இன்னும்
      சில செய்திகள் இருக்கின்றன.

      கடந்த 2014 மே மாதத்திலிருந்து ( அதாவது,
      பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ) இதுவரை –

      பெட்ரோல் மீது 133 % எக்சைஸ் வரியும்,

      டீசல் மீது 400 % எக்சைஸ் வரியும்,

      மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளன.

      கேரளாவில் பாஜகவிற்கு மைனாரிடி (கிறிஸ்தவர்கள்)
      ஓட்டுக்களை அப்படியே ஒட்டு மொத்தமாக அள்ளி எடுத்து
      வந்து விடுவாரென்று கருதி புதிதாக, பாராளுமன்றத்தின்
      இரண்டு அவையிலுமே உறுப்பினர் அல்லாத ஒரு
      அறிவுப்பெருந்தகையை அமைச்சராக்கியதன் விளைவு
      அவர் செய்நன்றியை பிரதிபலிக்கும் விதமாக சில
      கருத்து முத்துக்களை இன்று தெரிவிக்கப் போய், அது
      கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது….

      அப்படி என்ன அள்ளி விட்டார் அவர்….?

      ” Somebody who has a car, bike;
      certainly he is not starving.
      Somebody who can afford to pay, has to pay,
      So we are going to tax people who can afford to pay.” he said.

      காரிலும், ஸ்கூட்டரிலும் போகின்றவர்கள் மட்டும் தான் பெட்ரோல், டீசல் பயன்படுத்துகிறார்கள் என்பது இந்த “மந்த்ரிஜி” யின் விசால கண்ணோட்டம் போலும்…!!!

      பஸ்ஸில் போகிற சாதாரண மக்கள் என்ன பாவம் செய்தார்கள்…? அவர்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறி, பால், மளிகை சாமான்களை ஏற்றி வரும் லாரிகளுக்கும் இந்த “ஹைக்” பொருந்துமே… அந்த காய்கறி, பால், மளிகை பொருட்களை வாங்குபவர்களும் – இந்த மந்தி(ரி)யின் பார்வையில் – வசதியானவர்கள் தானோ…?

      ஒரு விதத்தில் பார்த்தால், இவர்கள் இவ்வாறு உளறுவது நல்லது தான் என்று தோன்றுகிறது… இன்னமும் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் சிலரை விழிக்கச் செய்ய இவை உதவும்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • CDR's avatar CDR சொல்கிறார்:

        இது எழுத்து பிழையால் ஏற்பட்ட தவறு அல்ல. குறை சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக ஏற்பட்ட புரிதலின் கோளாறு. எண்ணிலும், எழுத்திலும் தெளிவாக எழுதியிருந்திர்கள். அதுபோக ஜப்பான் கடன் கொடுத்த தொகை, இந்தியா செலுத்த வேண்டிய மீதி தொகை எல்லாவற்றையும் தெளிவாக எண்ணிலும், எழுத்திலும் தெளிவாக குறிப்பிட்டுருந்திர்கள். ஒரு இடத்தில எழுத்து பிழை வரலாம், அதெப்படி அனைத்து இடத்திலும் வரும். இது உங்களின் அரைகுறை புரிதல் என்பதை ஒத்துகொள்ளுங்கள். இன்னும் பல இருக்கின்றன, நீங்கள் சொன்னதால் இதோடு முடித்து கொள்கிறேன்…

        • Ramesh J's avatar Ramesh J சொல்கிறார்:

          CDR……. Innuma nambareenga ……….(Modi) (இங்கே ஒரு வார்த்தை நீக்கப்பட்டது – நண்ப ரமேஷ் – வசவு வார்த்தைகள் இல்லாமல் எழுதுங்களேன்…கா.மை. )

        • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

          // மேற்படி மோடி பக்தர்களை – main subject குறித்து தங்களது கருத்துகளை எழுதுமாறு வேண்டுகிறேன்…//

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          நண்ப CDR,

          நான் ஒன்றும் தெரியாத மடையன் என்று சொல்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமேயானால்,
          தாராளமாகச் சொல்லுங்கள்…. நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

          ஆனால், அதற்காக விவாதப் பொருள் குறித்து உங்கள் கருத்துகளை பெருந்தன்மையோடு
          முடித்துக் கொள்வதாக சொல்ல வேண்டாம். இடுகையின் முக்கிய பொருளை குறித்த
          உங்கள் தரப்பு கருத்துகளை அள்ளி வீசலாம். காத்திருக்கிறோம் – நீங்கள் எப்படி இதை
          நியாயப்படுத்தப்போகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள…

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

    • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

      அறிவுக் கொழுந்து அருண்,

      மேலே times now தொலைக்காட்சியில், ஒன்றரை நிமிடங்களுக்கு
      ஒரு பெண்மணி சில கேள்விகள், விளக்கங்கள் கேட்கிறார்;
      அதைப்பற்றிய உங்கள் “புத்திசாலி”த்தனமான கருத்துக்களை
      கொஞ்சம் சொல்லுங்களேன்….
      ஒரு வேளை அவர் பேசும் மொழி உங்களுக்கு புரியவில்லையென்றால்,
      (அதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன ) உங்கள்
      நண்பர்கள் யாரையாவது கேட்டு தெரிந்து கொண்டு பதில் சொல்லுங்களேன்.

      இடுகை எழுதியிருக்கும் காவிரிமைந்தன் சாரைத்தான் இடியட் என்று
      தீர்மானித்து விட்டீர்கள். உங்கள் அறிவாளித்தனத்தையாவது கொஞ்சம் வெளிப்படுத்துங்களேன்.

  3. mak's avatar mak சொல்கிறார்:

    வரும் 2019 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் புகழால் மட்டும் வெற்றி கிடைத்து விடாது என ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) எச்சரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    ஆர்எஸ்எஸ் பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் உ.பி.யின் மதுராவில் சமீபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் சுமார் 40 பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர். ஆர்எஸ்எஸ் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ஒருநாள் கலந்து கொண்டார். இதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்திருப்பது, வேலைவாய்ப்புகள் குறைந்தது மற்றும் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக பாஜக மீது குற்றச்சாட்டு எழுந்ததாகக் கூறப்படுகிறது. பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம் மற்றும் விவசாயிகள் இடையே நிம்மதியின்மை குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து ஆர்எஸ்எஸ் பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர் வட்டாரம், ‘தி இந்து’விடம் கூறும்போது, “மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றி சாதாரண மக்களும் விவாதிக்கத் தொடங்கி விட்டனர். எங்கள் சந்திப்பின்போது மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியாததை எடுத்துரைத்தோம். தொடர்ந்து வீசும் மோடி அலையால் மட்டும் வெற்றி கிடைத்து விடாது என பாஜகவுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இதற்கு 2004-ம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த தோல்வி நினைவுகூரப்பட்டது. அத்தேர்தலில் வாஜ்பாய் அலை வீசியது. இந்தியா ஒளிர்வதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. எனினும் தோல்வியே கிடைத்தது” என்றனர்.

    எனவே மக்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்த தயங்க வேண்டாம் என்று தனது பிரிவுகளிடம் ஆர்எஸ்எஸ் கூறியதாக தெரிகிறது. அதன்படி அப்பிரிவுகளில் ஒன்றான பாரதிய மஸ்தூர் சங் நவம்பர் 17-ல் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளது. இதில் மத்திய அரசு தனது பல்வேறு கொள்கைகளை மாற்றிக்கொள்ள வலியுறுத்தப்பட உள்ளது.

  4. Tamilian's avatar Tamilian சொல்கிறார்:

    மத்திய அரசு பெட்ரோல் ,டீசல் விலையை கச்சா எண்ணை விலை குறைப்பிறகு ஏற்ப குறிக்கவில்லை. இது பற்றி எழும் கேள்விகளுக்கு தக்க பதிலும் இல்லை. ஒரே ஒரு காரணமே இருக்க முடியும். இந்த விலையை குறைத்தால் மாநில அரசின் ,மத்திய அரசின் வருமானம் குறையும். 2014ல இருந்ததை விட இப்பபோது அரசுகளின் செலவுகள் மிக மிக அதிகம. படஜட்டின பற்றாக்குறைக்கு உச்ச வரம்பு உள்ளது. இவரகள கலால் வரியை அதனால் குறைக்க முடிவதில்லை . மேலும 7 வது சம்பள பரிந்துரைப்பின படி அதிக செலவை ( தண்ட சம்பளம்) அரசுகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தனது வருமானம் குறைய மத்தியமாநில அரசுகள் எவ்வாறு ஒப்பும? மேலும அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் எதிர்பார்த்த 3 லட்சம் கோடி வரவில்லை. கூட்டி கழித்து கணக்கு போடுங்கள். மொரார்ஜி போன்ற பிரதமர் இருந்தாலும் விலைக்குறைப்பு செயவாரா என்பது சந்தேகமே. அரசின் மற்ற வரி அதிகமானால் பெட்ரோல் டீசல் விலை குறையலாம்.

  5. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். குரூடாயில் விலை, கட்டுக்கடங்காமல் ரெண்டு மடங்குக்கு மேல் விலை ஏறினால், பொதுமக்களுக்கு ரெண்டே வாய்ப்புதான் உண்டு, ஒன்று கூண்டோடு கடலில் குதிப்பது, இல்லைனா, வேற வெளி’நாட்டுக்குச் செல்வது. உலகில் எந்த நாட்டிலும், வரையறக்கப்படாத இத்தகைய பெட்.ரோல் டீசல் வரிகள் இல்லை, ஒழுங்குபடுத்தப்படாத எல்லாரிடமும் வாகனம் அளவுக்கு அதிகமாக இல்லை. நாடு செல்லும் திசை நல்லதில்லை.

    என்னைக் கேட்டால், பொது வாகனங்களுக்கு குறைந்த விலையும், தனியார் (அதாவது தங்கள் உபயோகத்துக்காக, கமர்ஷியலுக்காக அல்ல) வாகனங்களுக்கு லிட்டருக்கு 2000 ரூ (Zero mistake இல்லை. 5000 ஆக்கினாலும் நல்லதுதான்) அல்லது அதற்கு மேலும் பெட்’ரோல் விலையை உயர்த்துவது. அரசு பொது வாகனங்களின் தரத்தை இந்தச் சட்டம் போடுவதற்குமுன் உயர்த்தவேண்டும் (பஸ், ரெயில் போன்றவை). மக்கள் பொதுத்துறை வாகனங்களை மட்டும்தான் உபயோகப்படுத்தவேண்டும் என்ற அளவு, அவைகளை அதிகமாக்கி, தரத்தை மேம்படுத்தவேண்டும்.

    • Tamilian's avatar Tamilian சொல்கிறார்:

      Also unrestricted parking of vehicles particularly vehicles for hire and taxis should be strictly dealt with. They are causing a big nusence. Fine must be heavy for unauthorized parking. In London or NewYork parking fee is prohibitively heavy. Private vehicles are. Thus discouraged to be brought there.

  6. ranjani135's avatar ranjani135 சொல்கிறார்:

    இந்த விஷயம் குறித்து பேஸ்புக்கில் மாரிதாஸ் என்பவர் விளக்கமாக எழுதியிருக்கிறார். ஏன் பெட்ரோல் விலையைக் குறைக்கக் கூடாது என்று தெளிவாக விளக்குகிறார். கொஞ்சம் படித்துப் பாருங்கள், ப்ளீஸ்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.