…
…

…
திண்டுக்கல்லில் நடந்த, அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா,
பெரியார் பிறந்த நாள் விழாவில் திரு ஸ்டாலின் அவர்கள்
பேசியதிலிருந்து சில பகுதிகள் –
—————–
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை கொண்டுவந்து தமிழை
சீர்குலைக்க முயற்சி நடக்கிறது.
மத்திய அரசிடம் அடமானம் அதிமுக அரசு தமிழகத்தை
மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்டது. பெரும்பான்மை
இல்லாத அரசு செயல்பட ஆளுநர் எப்படி அனுமதி
அளிக்கிறார்?
அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு நொடியும் நமது உரிமையை
இழந்து வருகிறோம்.
எப்பொழுது திமுக ஆட்சிக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்துக்
கொண்டுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு எப்போது
திமுக ஆட்சிக்கு வரும் என்பதுதான். மைனாரிட்டி அதிமுக
அரசை பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடக் கோரி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
அந்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரவில்லை எனில் மக்கள்
விரும்பாத இந்த எடப்பாடி ஆட்சியை அகற்ற மக்களைத்
திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார் மு.க. ஸ்டாலின்.
( http://tamil.oneindia.com/news/tamilnadu/m-k-stalin-says-that-he-
will-protest-with-public-if-court/articlecontent-pf263061-296042.html )
——————————————-
திரு.ஸ்டாலின் அவர்களுக்கு இரண்டு கேள்விகள் –
1) நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும்
என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர்
இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறி இருக்கிறார்…
திருநாவுக்கரசருக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லாமல் மவுனம்
காக்கிறீர்கள்…? இந்த விஷயத்திலும் காங்கிரசுடன் உங்கள்
(திமுக) கூட்டணி தொடர்கிறதா…?
2) “நம்பிக்கை வாக்கு” வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக
இல்லாவிட்டாலென்ன…?
நீங்கள் சட்டமன்றத்தில் “நம்பிக்கை இல்லா தீர்மானம்”
கொண்டு வருவதில் என்ன பிரச்சினை ?
ஏன் தயங்குகிறீர்கள்…?
எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று நீங்கள் நம்பினால், உடனடியாக –
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுகவே கொண்டு வந்து
நிறைவேற்ற வேண்டியது தானே…?
– அதை திமுக எம்.எல்.ஏ.க்களே ஆதரிக்கவில்லை, மீதமுள்ள
நான்கு ஆண்டு பதவியை இழப்பதை அவர்கள்
விரும்பவில்லை என்பது உண்மை தானா…?
—————————————————



ஸ்டாலினுக்கு திமுக செயல் தலைவர் பதவி தன்னாலேயே தன் மடியில் விழுந்தமாதிரி, தமிழக முதலமைச்சர் பதவியும் தன் மடியில் விழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு நொடியும் எந்த உரிமைகளை இழந்துவருகிறோம்? ஸ்டாலின் நடத்துகிற மெட்ரோ பள்ளி, கல்லூரிகளையா? இல்லை, மீத்தேன், 2ஜி, தொலைத்தொடர்புத் துறையில் அள்ளியது போன்ற கொள்ளைகளை நடத்தும் உரிமையையா?
ஸ்டாலினைத் தவிர வேறு யாருக்கும் இந்த அரசு போகவேண்டும் என்றோ அல்லது திமுக ஆட்சி அமைக்கவேண்டும் என்றோ ஆர்வம் இல்லை. நீட் அனிதா சாவு மக்கள் மனதில் மறைய ஆரம்பித்துவிட்டதால், வேறு என்ன செய்யலாம் என்று இப்போது ஸ்டாலின் யோசித்துக்கொண்டிருக்கிறார். திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவராது, கொண்டுவந்தால் எல்லா அதிமுக எம்.எல்.ஏக்களும் அந்தத் தீர்மானத்தைத் தோற்கடித்துவிடுவார்கள், ஸ்டாலினுக்கு எங்கு முகத்தை வைத்துக்கொள்வது என்பது தெரியாது. அதனால் தானாகவே ஆட்சியைக் கவிழ்த்து முதல்வர் நாற்காலியைத் தனக்குத் தந்துவிடமாட்டார்களா என்று முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவதுபோல எண்ணிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
ஒரு தனிப்பட்ட செய்தி. ஹெச்.ராஜாவின் சாரணர்… தோல்வியைத் தொடர்ந்து பாஜக, இப்போதாவது புரிந்துகொண்டிருக்கும், படம் காண்பித்து தமிழகத்தில் வாக்கு அறுவடை செய்ய இயலாது என்று.
ராஜா தோல்வி பாஜகவுக்கு முகத்தில் விழுந்த அறை மாதிரி.
ராஜா போன்றவர்களால், தமிழகத்தில் பாஜக எதிர்ப்புணர்வு ஒன்று திரண்டு
வலுக்கொள்கிறது. இப்படி மறைமுகமாக திணித்துக் கொள்ளும் முயற்சிகள்
தொடரத் தொடர வெறுப்பு தான் அதிகமாகிறது.
Raja did not fight public election. Please note I am not saying he can or can not win public function. It’s small election …now a days even a building committee election has more than 500 votes .24 hr tv news made this election as a big issue.
சுந்தர்ராமன் – ஹெச்.ராஜா போன்றவர்களுக்கெல்லாம் இப்போ வெல்லும் வாய்ப்பு கிடையாது. அது தவிர, எனக்கு ஹெச்.ராஜாவின் தீர்க்கமான கருத்துக்கள் பிடிக்காது. அந்த மாதிரி தீர்க்கமான கருத்துக்கள், எப்போ மற்ற மதத்தினர் அடாவடி செய்கிறார்களோ அப்போது தோன்றினால் அர்த்தம் இருக்கும். இப்போ தேவை, தீவிர கண்காணிப்பு மட்டும்தான், வெறுப்பை உமிழும் பேச்சுக்களல்ல. ஈழம் ஈழம் என்று வெறுப்பை உமிழும் பேச்சை வைகோ பேசி, எந்தத் தேர்தலிலும் டெபாசிட் வாங்கினமாதிரி தெரியலையே. நமக்கு முதலில் நல்ல வாழ்வு, உணவு, இருப்பிடம், உடை போன்றவைதான் தேவை. அதற்கு பாஜக, முயற்சி எடுக்கிறார்களோ இல்லையோ, இன்னும் ரிசல்ட் தெரிந்தபாடில்லை.
ஸ்டாலின் குடும்பத்தினர் சிபிஎஸ்சி பள்ளி நடத்தி இந்தியை திணிப்பார்களாம், அது சரியாம். ஆனால் நவோதயா மட்டும் ஆகாதாம்.. என்ன லாஜிக் எழவோ, இவங்களுக்கு ஓட்டுப்போடும் ஜனங்களுக்கே வெளிச்சம்!
ராஜாவின் தோல்வி: அண்ணாவே எலெக்சனின் மண்ணைக் கவ்வியவர்தான். அப்புறம் எம்ஜியாரை வைத்து பின்னர் வென்று முதலமைச்சராகவே ஆனார். ராஜா அண்ணா அளவுக்கு இல்லைதான். ஆனால் வாஜ்பாயிக்கு பொறுவு அடிமேல் அடி வாங்கி தோற்ற பிஜேபிக்கு மோடி கிடைத்தது போல தமிழ்நாட்டில் ஒரு தலைவர் தோன்றினால் பிஜேபி வெல்லமுடியும். இப்போதைக்கு தலைமை வெற்றிடம் நிலவுகிறது. ஆனால் அதை நிரப்பத்தான் கட்சிகளையே ஆளில்லை!
தமிழ்’நாட்டில் நமக்கு இரண்டு தலைவர்கள் தேவை. ஒருவர் ஆளும் கட்சிக்கு, ரெண்டாவது எதிர்க்கட்சிக்கு. இப்போ இருக்கும் ஸ்டாலின் அல்லது அதிமுகவின் ரெண்டு தலைமை, நமக்கு நல்லதில்லை. ஸ்டாலின் போன்ற old school of thought தமிழ்’நாட்டை வளரவிடாது, அவர்கள் குடும்பம் இன்னும் ஊழலில் திளைத்து பணத்தைக் கொள்ளையடித்து வளரத்தான் உபயோகப்படும். அதுவும்தவிர, படிக்காத தற்குறிகளிடம், அதிலும் முக்கியமாக மக்கள்மீது கொஞ்சம்கூட அன்பு இல்லாத, மக்களுடன் வாழ்ந்தறியாத ஸ்டாலின் போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது முதலமைச்சராவதற்கு? பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லக்கூட ஒழுக்கமில்லாதவர்கள் தலைமைப் பதவிக்கு வருவதற்கு ஆசைப்படுவதற்கு, கொள்ளையடிப்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும்?