…
…

…
மற்ற மாநிலங்களில் நடந்தபோது
தூரத்தில் இருந்து
பார்த்து ….. சிரித்தோம்…
இப்போது….?
நம்மைப் பார்த்து நாடே சிரிக்கிறது….
கேட்கப்பட்டது – சட்டமன்றத்தை கூட்டி,
“நம்பிக்கை தீர்மான”த்தை
“நிறைவேற்ற”
உத்திரவிடவேண்டுமென்று …
கிடைத்திருப்பது – நேரேதிர் –
நம்பிக்கை “தீர்மானத்தை நிறைவேற்ற தடை…”
…………தற்காலிக தடை…
ஒரே வழக்கு தான்… ஆனால்
வழக்கில் சம்பந்தப்பட்ட
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம்..
வெளிநோக்கம் ஒன்று – உள்நோக்கம் வேறோன்று…
24 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து போட்டு, சட்டமன்றம்
கூட்டப்பட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு
கொண்டு வரப்பட வேண்டுமென்று கோரினால் –
15 நாட்களுக்குள் சட்டமன்றம் கூட்டப்படும்…
இது விதி…. இதைச்செய்யாமல்,
கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடித்தே தீருவேன்
என்கிறார் ஒரு தானைத்தலைவர்….!
134 பேரில் 113 பேர் ஏற்றுக் கொள்ளும் நபரை
ஏற்க மாட்டோம் – 21 பேராகிய நாங்கள் கூறும் நபரை
தான் முதல்வராக ஏற்க வேண்டும் –
அது தான் ஜனநாயகம் என்கிறது –
“காசே தான் கடவுளடா” என்று
தமிழகத்திற்கு நிரூபித்துக் காட்டிய கும்பல்…!
அந்நியச் செலாவணி மோசடியில்
ஈடுபட்டதாக சில வழக்குகள்…
சட்டத்தை வளைத்து சொத்து சேர்த்ததாக சில வழக்குகள்..
கோடிக்கணக்கில் கருப்புப்பணம் செலவழித்து
தேர்தலில் ஜெயிக்க முயன்றதாக வழக்கு –
மாஃபியா கும்பல் என்று வர்ணிக்கப்படும் ஒரு குடும்பம் –
இப்பேற்பட்ட உத்தமபுத்திரர் பின்னால்
ஒரு உதவாக்கரை கும்பல்,
உல்லாச விடுதிகளில்
அவர்களின் பைத்தியக்கார செயல்கள்….
போட்டி போட்டுக்கொண்டு அவர்கள் பின் சென்று,
தொடர்ந்து அவர்களை ஹீரோக்களாக படம் காட்டும்
பொறுப்பில்லாத மீடியாக்கள்…
வானளாவிய அதிகாரம் கொண்ட மன்றத்தலைவர்
என்ன செய்யப்போகிறார்…? எப்படி செய்யப்போகிறார்…?
எப்போது செய்யப்போகிறார்…? என்று கேட்டால்….???
சொல்லி விட்டு அடிப்பதற்கு இது என்ன ஹார்வே புயலா…?
முன்னுதாரணத்துக்கா பஞ்சம் இங்கே…?
எதற்கு வேண்டுமானாலும் கிடைக்குமே…!
அவரவர் கோரிக்கைக்கு சாதகமாக காட்ட,
அவரவர் கையில் தயாராக
ஏற்கெனவே தரப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்கள்…!!!
முன்னே போனால் கடிக்கும்…
பின்னே வந்தால் உதைக்கும்…
யார் வேண்டுமானாலும்,
எப்படி வேண்டுமானாலும் –
அவரவர் விருப்பம்போல் வளைக்கும்…
சட்டம்….
இதற்கு என்ன பெயர் வைக்கலாம்… ???
எப்படி அழைக்கலாம்…!!!
“அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் அரசியல்”
என்று சொன்ன அறிஞர் பெர்னார்டுஷா-வின்
வார்த்தைகளை மெய்யாக்கும் முயற்சிகளா
இங்கே நடப்பவை..?
இப்போதைக்கு தமிழகம் ஒரு பரிசோதனைச்சாலை…!
இதன் சோதனைகளுக்கெல்லாம்,
மக்களின் வேதனைகளுக்கெல்லாம் –
ஒரு முடிவு –
சீக்கிரம் வந்தால் தேவலை..!!!
இறைவா… போதும் இந்த சோதனை…
கருணை காட்டு…! கதையை சீக்கிரம் முடி…!!!



இன்னும் நாலு வருஷம் நல்ல வச்சி செய்வாங்க. பிஜேபி க்கு இதை விட மனம் வராது.
Koovathoooorrrrrrrr
murpagal edapadi munnadi senjaaru koovathoor la.. ippo pirpagal .. vidhi valiyadhu
it is sam Johnson who satd politics was the last refuge of the scoundrels.The high court should have refused to entertain the petition and directed the petioner who is the opposition leader to follow the rules insteadof wasting its timeThe intra party affair should be settled only within the party forum and theED and income tax dept should conduct investigation of he expenditure and the locus standi of some of the peple involved.Thiruvengadam
நண்பர் செல்வராஜன் அவர்களிடமிருந்து வந்துள்ள
மறுமொழி –
selvarajan singaram
to me
காசுக்காகவும்… பதவிக்காகவும் … எதை வேண்டுமானாலும் …. இழக்கவும் .. காலை நக்கி அடிபணியவும் அலைகின்ற அரசியல்வாதிகள் நிறைந்த இடமாக மாறிவிட்ட தமிழகம்
… இவர்களை பயம்காட்டி தன் வழிக்கு இழுக்க முயலும் கூட்டம் மறுபக்கம் … எப்படியிருந்த தமிழகம் இப்படி ஆனதற்கு காரணம் மக்களுக்கு தெரிந்திரும் மெளனம் காப்பதின் காரணம் புரியாத புதிர் தானே …. ?
அரசியல்வாதிகள்தான் இப்படியென்றால் … பாெதுத்துறை நிறுவனம் என்று கூறிக்காெள்ளும் வங்கியின் ” அடாவடி .” வசூலுக்கு ஆளான பள்ளி சிறார்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது ….அதைப்பற்றி : — // KIDS PENNILESS AFTER MINIMUM BALANCE RULE //
https://mumbaimirror.indiatimes.com/mumbai/other/kids-penniless-after-minimum-balance-rule/articleshow/60505271.cms ….
குறைந்த பட்ச இருப்புயில்லை என்று இருந்ததையும் கபளீகரம்செய்துவிட்டு … கணக்கை முடிக்கவும் ஒரு தாெகையை எதிர்பார்க்கும் செயலைப் பற்றி யாரும் எழுதவும் .. விவாதிக்கவும் திராணியற்று பாேனது தான் மனவேதனை …
குறைந்த பட்ச இருப்பு தேவையில்லை என்கிற பிரதம மந்திரியின் யாேஜனா திட்டத்தில் சிறார்களின் சாெற்ப சேமிப்புகளை மாற்றி அவர்களின் சேமிப்புகளை தக்கவைத்திருக்க கூட மனம் இல்லாத வங்கியும் … அரசும் தான் நாட்டிற்கு நல்லது புரிய வந்த உத்தமர்கள் ….?