ஜு.வி.யின் போக்குக்கு காரணம் 46.15 % பங்குகளை வைத்திருப்பவர் தானே …..?

.

global invest-horse

கீழே இருப்பது GIM பற்றி ஜூ.வி வெளியிட்டிருக்கும் செய்திகள்….!!!

இங்கே எல்லாமே சினிமா தான்….

பலன் தருமா … பணால் ஆகுமா …?

தள்ளாட்டம் போட்ட மாநாடு….!

சந்திக்க முடியாத முதல்வர் …!

புரிந்து கொள்ளப்படாத ஒப்பந்தங்கள்….!

கானல் நீராகிப் போன விஷன் 2023 …!

பறக்கும் சாலையா – பறக்காத சாலையா …!

50 ஆயிரம் கோடி போயே போச்சு …!

வரும் .. ஆனா …. வராது..!

விளை நிலங்கள் அபகரிக்கப்படலாம்…!

ஹோட்டல்களில் அறைகள் புக் ஆகவில்லை…!

மாநாடு தொடங்கியதுமே ஒரு லட்சம் கோடி ரூபாய்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியது எப்படி சாத்தியம்…?

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு என்பதைவிட
தொழில்துறை கண்காட்சி அரங்கம்போல தான்
அமைக்கப்பட்டிருந்தது….

கருத்தரங்கங்களில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை.

கூட்டிக்கழித்து பார்த்தால்-
தமிழக அரசாங்கம், முதலமைச்சர், அமைச்சர்கள்,
மத்திய அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு
ஒரு விளம்பரம் கிடைக்கும் – அவ்வளவு தான்…!

பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனியிலிருந்து
முதலீட்டாளர்கள் யாரும் வரவில்லை…..

( பிரான்ஸிலிருந்து 107 பேரைக் கொண்ட பிரம்மாண்டமான குழு
வந்திருந்தது – அதன் தலைவர் டிவிக்கும் பேட்டி கொடுத்தார்…
அமெரிக்க பெண் பிரதிநிதி இரண்டாம் நாள் நிறைவு
விழாவில் மேடையிலேயே பேசினார்….! )

——————————————

கீழே தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில்
வந்த செய்திகளின் தொகுப்பு –

தமிழ்நாட்டுக்கு புதிதாக நிறைய தொழில் முதலீடு வருகிறது.

global invest-2

இந்த முதலீடுகளை தென் மாவட்டங்களை நோக்கித்
திருப்பிவிடவும், இதற்காகக் கூடுதல் சலுகை அளிக்கவும்
தமிழக அரசு விசேஷ திட்டங்களை அறிவிடத்திருக்கிறது…..

மிக முக்கியமாக – முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள
single window licence system
மற்றும் 30 நாட்களுக்குள்ளாக தொழில் அனுமதி

என்கின்ற அறிவிப்பு, நிறைய முதலீட்டாளர்களுக்கு
ஆர்வத்தை உண்டு பண்ணி இருக்கிறது.

புதிய தொழில் திட்டங்களை தென் தமிழ்நாட்டிற்கு
கொண்டு போவது பல விதங்களில் நன்மை பயப்பதாக
இருக்கும். வேலை வாய்ப்பை தேடி, அனைவரும்
சென்னையில் வந்து குவிவதை தவிர்க்க உதவும்.

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடார் (எச்.சி.எல்.)
இந்த மாநாட்டில் பேசுகையில் – அடுத்த ஐந்து ஆண்டுகளில்
மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் தங்கள் நிறுவனம்
ரூ.6,600 கோடி முதலீடு செய்யும் என்று அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே எச்.சி.எல். நிறுவனத்தில் பணிபுரியும்
1.10 லட்சம் தொழிலாளர்களில் 35,000 பேர் தமிழர்கள்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மதுரை, திருநெல்வேலி பகுதிகளில்
இந்நிறுவனம் புதிய வாய்ப்புகளை
உருவாக்கும்போது இன்னும் ஆயிரக்கணக்கான படித்த
தமிழ் இளைஞர்களுக்கு
வேலை வாய்ப்பு உருவாகும்.

ஏற்கெனவே ராமநாதபுரம் பகுதியில் 650 மெகாவாட் சூரிய வெப்ப
மின் உற்பத்திக்கு ஒப்பந்தம் செய்துள்ள அதானி நிறுவனம்,
தற்போது ரூ.10,000 கோடி அளவுக்கு தென் மாவட்டங்களில்
அனல் மின் நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதேபோன்று சன் எடிசன் நிறுவனமும் தென் தமிழ்நாட்டில்
சூரிய வெப்ப மின் உற்பத்தி,
அனல் மின் உற்பத்தியில் ஈடுபடவுள்ளது.
இதற்காக ரூ.10,000 கோடி முதல் ரூ.15,000 கோடி
வரையிலான முதலீடு செய்யவுள்ளது.

தென் தமிழ்நாட்டில் 1200 கோடி ரூபாய் முதலீட்டில்
சூரிய மின் உற்பத்தி நிலையம் துவங்க அனுமதி பெற்றுள்ள
கோஸ்டல் எனர்ஜன் துணைத்தலைவர் அஹமது புகாரி,
கருத்தரங்கில் பேசும்போது – தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறக்க என்னால் முடிந்தது
அனைத்தையும் செய்வேன். தென் தமிழ் நாட்டில் தொழிற்சாலை
அமைக்க நிறைய நிலங்கள் இருக்கின்றன.
மதுரை-தூத்துக்குடி தொழில் பெருவழிச்சாலை
( industrial corridar ) மூலம் தூத்துக்குடி துறைமுகம்
மிகப்பெரிய வளர்ச்சி பெறும் –
என்று கூறுகிறார்.

—————————————–

ஜூ.வி.யில் இதே விஷயம் குறித்து வந்துள்ள
இன்னொரு செய்தி விமரிசனம் –

அப்படியானால் ஒரு லட்சம் கோடி முதலீடுகள் எப்போது
உறுதியாகும்?’’

‘‘தற்போது தங்களின் ஆர்வத்தைத் தெரிவித்த முதலீட்டாளர்கள், தமிழக அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எடுத்துக்கொண்டு தங்கள் நாடுகளுக்குச் செல்வார்கள். அங்கு அவர்களின் நிர்வாகிகளோடு
இவற்றைப் பற்றி விவாதிப்பார்கள்; அதன்பிறகு அவர்கள் ஒரு குழுவை அனுப்பி தமிழக அரசியல் நிலவரம், தமிழக அரசு அளித்த
வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை, மற்ற சாதக பாதக அம்சங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பார்கள்; அந்த அறிக்கை திருப்தி அளித்தால்,
அதன்பிறகு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில்
பேச்சுவார்த்தை நடக்கும். அதில் உடன்பாடு ஏற்பட்டால்,
புரிந்து உணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அதன்பிறகுதான் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளை
தமிழகத்துக்குள் கொண்டுவருவார்கள்.

‘‘கூட்டிக் கழித்துப் பார்த்தால்?’’

‘‘தமிழக அரசாங்கம், முதலமைச்சர், அமைச்சர்கள், மத்திய
அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு
ஒரு விளம்பரம் கிடைக்கும். அவ்வளவுதான். தற்போது
இவர்கள் விருப்பம் தெரிவித்துள்ள ஒரு லட்சம் கோடி முதலீட்டில்
25 சதவிகிதம் முதலீடு நமது மாநிலத்துக்கு வந்தாலே பெரிய
விஷயம்தான்.’’……..

——————————–

ஜு.வி.யில் இவற்றை எல்லாம் எழுதி,
சம்பளம் கொடுப்பவரை திருப்திப் படுத்திய பெருமகனுக்கும், அவற்றை விரிவாக்கம் செய்து நியாயப்படுத்தும்
சில அறிவுஜீவிகளுக்கும் –

சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்…

1) நிறைவு விழாவில் அறிவிக்கப்பட்ட தொகை
சுமார் 2.42 லட்சம் கோடி ரூபாய்.
( மாநாடு முடிந்த பின்னர் தான் இந்த இதழ் ஜூ.வி. வெளிவந்தது. இருந்தாலும் அவர்களுக்கு ஒரு லட்சத்தை விட்டு வெளியே வர விருப்பமில்லை…)

2) ஜூ.வி. கூறுவது போல் இதில் 25 சதவீதம் வந்தாலே –
– சுமார் 60,000 கோடி ரூபாய் -அதுவே மிகப்பெரிய தொகைதான்..!

3) இந்த தொகை இன்றோ, நாளையோ, இன்னும்
ஆறு மாதத்திற்குள்ளோ வந்து விடும் என்று யாரும்
எதிர்பார்க்கவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளில் வரலாம்.

4) அது எப்போது வந்தாலும் – தமிழ்நாட்டின் எதிர்கால
வளர்ச்சிக்கு நல்லது தானே …?

5) இவர்கள் எதிர்பார்ப்பது போல், அடுத்த தேர்தலில் அதிமுக தோற்று வேறு யாராவது ஆட்சியைப் பிடித்து விட்டால்….?
( என்று கேள்வியை கேட்காமல் கேட்கிறார்கள்.. )

– அப்படியே ஆனால் தான் என்ன …?
அடுத்து வரும் ஆட்சிக்கும் இது நல்லது தானே …?

ஆட்சி மாறினால், இந்த முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்களா …?
செயல்படுத்த விட மாட்டோம் என்று சொல்கிறார்களா ..?
அவர்கள் சொல்ல விரும்புவது என்ன …?

தமிழ்நாட்டு மக்களை என்னவாவது செய்து,
எதையாவது செய்து, குழப்பி, ஏமாற்றத்திற்குள்ளாக்கி –
எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட்டால் …..

அதிகாரம் கைக்கு வந்து விட்டால் –
முதல் கையெழுத்தே – அரசு கேபிள் ஒழிப்பு… தானே…?

அப்புறம் ….?
இருக்கவே இருக்கிறது – வரிசையாக…..
குடும்பத் தேவைகள்….!!!

திரு எஸ்.எஸ்.வாசன் அவர்கள்
பார்த்து பார்த்து போற்றி வளர்த்த ஒரு நிறுவனம் –

அவரது மகன் திரு எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள்
கண் இமையாக இருந்து பாதுகாத்த விகடன் நிறுவனம் –

இன்று – 46.15 சதவீத பங்காளரிடம் மாட்டிக் கொண்டு
இப்படி உருமாறி விட்டதே ….!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to ஜு.வி.யின் போக்குக்கு காரணம் 46.15 % பங்குகளை வைத்திருப்பவர் தானே …..?

  1. thiruvengadam's avatar thiruvengadam சொல்கிறார்:

    ுன்னர் ஒருமுறை சுசாமி வெங்கட்ராமன் டிரஸ்ட் சம்பந்தமாக பதிவில் டிரஸ்ட் செயல்பாடு பற்றி இப்போது வேண்டியது இல்லை சுசாமி செயல் மட்டுமே விவாதப்பொருள் ஆகியதன் அடிப்படையில் விகடன் நிர்வாகம் பற்றி ஒதுக்கி அதன் கருத்தின் மீதுமட்டுமே ஆய்வு நலம். அதில் அண்டைமாநில முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு பற்றி குறிப்பிட்டு ஒப்புமை தங்கள் கவனிக்கவில்லை. பிரேமலதாவும் அனுமதிநாட்கள் பற்றி தவறு சுட்டிக்காட்டியுள்ளார். முதல்வரை குடிமக்கள் நேரடி சந்திப்புக்கு வாய்ப்பு இருந்தால் மேலும் சிறப்படயும்.

    • paamaran's avatar paamaran சொல்கிறார்:

      அய்யா … திருவேங்கடம் அவர்களே …! என்ன தான் சொல்கிறீர்கள் என்று — உங்களுக்காவது புரிகிறதா …. ? கொஞ்சம் தெளிவாக பதிவிட வேண்டுகிறேன் …!!

      • thiruvengadam's avatar thiruvengadam சொல்கிறார்:

        Sometime back I brought abt trust run by RV daughters on a subject of Swamy RV. U said RV trust subject is not the current matter & only on Swamy. Likewise U R free to opine on Vikatan article. I insist on neutral analysis. Our C M is capable in many matters. Is it possible to have direct accepabilty by her ordinary citizen? Even live telecast chat will facilitate direct access without filters. Ur general opinion on continuation of projects are not in practice.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          நண்பர் திருவேங்கடம்,

          நிறைய ஞாபக சக்தி உங்களுக்கு….!
          ஒரு வருடத்திற்கும் மேலாகி இருக்கும் அந்த
          இடுகை போட்டு….!!

          மீண்டும் அதே விதி தான் இங்கும் …

          அந்த வலைப்பதிவு – சு.சுவாமியின் நடவடிக்கைகள்
          பற்றியது. நீங்கள் திசை மாற்றி ஆர்வி அவர்கள்
          பற்றி பேச ஆரம்பித்தீர்கள். அதற்குத்தான் அந்த பதில்.

          இப்போதும் அதே கதை தான்.
          இந்த பதிவு – தலைப்பை பார்த்தாலே புரியும்….
          ஜூ.வி.யின் போக்கு பற்றி…..
          இங்கும் நீங்கள் இடுகையின் மையப்பொருள் பற்றி
          எழுதாமல், உங்கள் விருப்பம் போல் எழுதுகிறீர்கள்….

          -வாழ்த்துக்களுடன்,
          காவிரிமைந்தன்

        • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

          //Even live telecast chat will facilitate direct access without filters.//
          எப்படி? பிரதமர் மோடி நிகழ்த்தும் மன்கிபாத் மாதிரியா? கொஞ்சம்விளக்குங்களேன் நண்ப திருவேங்கடம்…

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        நன்றி நண்பர் ……

        விஷயம் தெரிந்தவர்களை – பாமரன் என்று
        எப்படி கூறுவது ….!! ??

        எதாவது வேறு வழி சொல்லுங்களேன் 🙂

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

        • paamaran's avatar paamaran சொல்கிறார்:

          சர்க்கரை என்று காகிதத்தில் எழுதி நாக்கில் தடவினால் இனிக்குமா? முதலீட்டாளர் மாநாடு பற்றி கருணாநிதி …. !
          Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-criticise-tamilnadu-global-investors-meet-235556.html …… அய்யா … கா.மை. அவர்களே …! ” லாபமா — நஷ்டமா ” — சதாரம் பட பாடலை கேட்டீர்களா ….?

          • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

            நண்பர் …..பாமரன் என்றே கூப்பிடுகிறேன்.
            எனக்கு வேறு வழி காட்ட மறுக்கிறீர்கள்….!!!

            பழைய திரைப்படங்கள், பாடல்கள் பலவும்
            இன்னும் என் நினைவை விட்டு அகலாமலே
            இருக்கின்றன. சதாரத்தில் – சாரங்கபாணி போடும்
            ஆட்டம் மட்டும் எப்படி மறக்கும்….?

            நீங்களும், நானும் மட்டும் நினைத்து மகிழ்ந்தால் போதுமா…

            யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ….

            -வாழ்த்துக்களுடன்,
            காவிரிமைந்தன்

        • S. Selvarajan's avatar S. Selvarajan சொல்கிறார்:

          என்ன … நண்ப செல்வராஜன் …. என்று அழைபீர்களே … அப்படி வேண்டுமானால் அழைத்து கொள்ளுங்கள் ….! செல்வராஜன் Alias பாமரன் என்று தாங்கள் எப்போதே கண்டுகொண்டு விட்டிர்கள் தானே … !!

          • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

            நன்றி நண்ப செல்வராஜன்,

            நான் என் நிலையை சிறிது மாற்றிக் கொண்டு விட்டேன்.
            யார் தாங்கள் எப்படி அழைக்கப்பட வேண்டும் என்று
            விரும்புகிறார்களோ – அவர்களை அப்படியே அழைப்பது என்று.

            அவர்கள் ஆசையை நிறைவேற்றுவது தானே நியாயம். 🙂 🙂

            -வாழ்த்துக்களுடன்,
            காவிரிமைந்தன்

  2. paamaran's avatar paamaran சொல்கிறார்:

    // இவ்வளவு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெறுமனே அடுத்த தேர்தலைச் சந்திப்பதற்கான பிரசார உத்தி என்று அரசியல் கட்சிகள் அறிக்கை விடுவதும், இவை வெறும் ஏட்டுச் சுரைக்காய் என்று பலர் தங்கள் முகநூலிலும் கட்செவி அஞ்சலிலும் எதிர்க் கருத்தை முன்வைப்பதும், இந்த மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளின் படங்களையும், தொண்டர்களின் ஆட்டங்களையும் மட்டும் பதிவிட்டு அதன் தன்மையைக் குலைத்து, வெற்றியைக் கொச்சைப்படுத்தும் போக்கும் அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சியைவிடத் தங்கள் அரசியல் மனமாச்சரியங்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போடுகின்றன //…. இது 11 — 09 — 2015 அன்றைய தினமணி நாளேட்ட்டில் வந்த “முதலீடும், தமிழ்நாடும்! ” என்கிற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கத்தின் — ஒரு பகுதி …! என்ன எழுதி — என்ன செய்வது : திருந்தாத ஜென்மங்கள் இருக்கின்ற நாட்டில் …. !!

  3. ssk's avatar ssk சொல்கிறார்:

    இதே போல் Tasmac க்கு சரக்கு உற்பத்தி செய்து தருபவர்கள் எவ்வளவு சவிகிதம் பங்குகள் பற்றி எழுதினால் உண்மை நிலை அறிய முடியும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் ssk,

      Tasmac சரக்கு உற்பத்தியில் எனக்கு ஆர்வம் இல்லை…!

      உங்களுக்கு ஆர்வம் இருந்தால்,
      எல்லா சப்ளையர்களின் விவரங்களையும் விவரமாக
      தெரிந்து கொண்டு, உங்களுக்கு என்று எதாவது
      வலைப்பதிவு இருந்தால் – அதில் பதிந்து கொள்ளவும் 🙂 🙂

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

    • paamaran's avatar paamaran சொல்கிறார்:

      பகுதிகள்
      தினமலர் முதல் பக்கம் பொது செய்தி

      பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2015,23:50 IST
      Dinamalar Banner Tamil நியூஸ் ‘டாஸ்மாக்’ நிறுவனம், கடந்த நிதியாண்டில், 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, மது வகைகளை கொள்முதல் செய்துள்ளது. இதில், தி.மு.க., ஆதரவு முக்கிய நபர்களின், மதுபான ஆலைகளில் இருந்து மட்டும், 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள், ‘சப்ளை’யானது அம்பலமாகி உள்ளது. அதாவது, டாஸ்மாக்கில் சரிபாதிக்கு, இவர்களின் சரக்கு தான் விற்பனையாகி உள்ளது.

      தற்போது, அ.தி.மு.க., ஆட்சி நடந்தாலும், தி.மு.க., ஆதரவாளர்களால் நடத்தப்படும், மது ஆலைகளில் இருந்து தான், டாஸ்மாக் அதிகாரிகள், அதிகளவில் மது வகைகளை கொள்முதல் செய்கின்றனர். கடந்த, 2014 – 15ம் நிதியாண்டில், டாஸ்மாக் நிறுவனம், தி.மு.க., ஆதரவாளர்களால் நடத்தப்படும், எஸ்.என்.ஜே., கல்ஸ், கோல்டன் வாட்ஸ், எலைட், எம்பீ, அப்பல்லோ, ஏ.எம்., ஆகிய நிறுவனங்களிடம் இருந்து, 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 4.08 கோடி பெட்டி மது வகைகளை கொள்முதல் செய்துள்ளது.

  4. drkgp's avatar drkgp சொல்கிறார்:

    Tasmac சரக்கு உற்பத்தியில் திமுக சார்பினர் அதிமுக சார்பினரை முந்துவார்கள் போலிருக்கிறதே!

  5. பிங்குபாக்: ஜு.வி.யின் போக்குக்கு காரணம் 46.15 % பங்குகளை வைத்திருப்பவர் தானே …..? | Classic Tamil

  6. drkgp's avatar drkgp சொல்கிறார்:

    It is very difficult to find a periodical or daily without taint of political
    party bias. Either bought outright with the ill gotten money or bribing
    the editors/reporters , the political class rule the media. Regarding
    electronic media, it is free for all as even marginal parties are running their
    own TV channels. For the unsuspecting reader it is hard to avoid disinformation.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Dr.KGP,

      அநேகமாக பெரும்பாலான நாளிதழ்கள், வார இதழ்கள்,
      தொலைக்காட்சி சேனல்கள் எல்லாமே எதாவது ஒரு கட்சி
      சார்புள்ளதாகவே இருக்கின்றன.

      நான் சொல்ல வந்தது என்னவென்றால், வெளிப்படையாக
      இன்னார் முதலாளி, இந்த நிறுவனத்தின் சார்பாக இது
      செயல்படுகிறது என்பதாவது வெளியே தெரிந்தால் –
      அவர்களின் சார்பு நிலை தெரிந்து, அதற்கு தக்கவாறும்
      செய்திகளை நாம் புரிந்து கொள்ளலாம்.

      ( உதாரணமாக – சன், கலைஞர் என்றால் திமுக,
      ஜெயா, ஜெயா ப்ளஸ் என்றால் அதிமுக,
      கேப்டன் என்றால் தேமுதிக,
      மக்கள் என்றால் – பாமக …. என்கிற மாதிரி..! )

      ஜு.வி. விஷயத்தில் அதன் முதலாளிகள் யாரென்பதை
      வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

      – வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  7. தமிழ்ச்செல்வன்'s avatar தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    கலைஞர் குடும்பம் ஆட்சியில் இருந்தபோது கோவையில்
    நடத்திய செம்மொழி மாநாடு போல் இவர்களுக்கு நடத்தத்
    தெரியாதது தான் தவறாகி விட்டது போலிருக்கிறது.

    மாநாட்டில் ஒரு பேத்தி “செம்மொழியில்” வீணை வாசித்தார்.
    இன்னொரு பேத்தி “செம்மொழியில்” பரதநாட்டியம் ஆடினார்.
    இன்னொரு பேத்தி கவிதை வாசித்தார்.
    ஒரு மகள் கவியரங்கம் நடத்தினார்.
    இந்த கோவை குடும்ப மாநாட்டிற்கு தான் திமுக அரசு
    380 கோடி செலவழித்தது. அதைக்கேட்க இந்த ஜூ.வி.க்கு
    வக்கிருந்ததா ? 46.15 % ஆயிற்றே எப்படி கேட்கும் ?

  8. srinivasanmurugesan's avatar srinivasanmurugesan சொல்கிறார்:

    46.15% boss?can we know the boss?pl.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் ஸ்ரீநிவாசன் முருகேசன்,

      அதை விகடன் குழுமம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
      அதனால் தான் இந்த இடுகை இப்படி ……!!!

      ஒருவேளை எப்போதாவது சுமங்கலி கேபிள் விஷன்
      மீண்டும் வந்தால், அப்போது தெரிய வரலாம்….!!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  9. drkgp's avatar drkgp சொல்கிறார்:

    நாலணாகாலத்திலிருந்தே விகடன் , குமுதம் , கலைமகள் போன்ற இதழ்களை வாங்கி
    படித்தவன் என்ற முறையில் விகடனின் சமீபகால தர சரிவு மிக்க மன ஏக்கத்தை அளிக்கிறது
    என்றே கூறுவேன். குமுத்த்தின் தரம் அனைவரும் அறிந்ததே் விகடன் அப்படி அல்ல. குடும்பத்தில்
    அனைவரும் படிக்கலாம்ம் என அப்போது சொல்வர்.நடுநிலை அதன் பிரகடனம். விகடன் தரம் மாறி
    Junior நடுநிலை தடுமாறி நிற்பது பரிதாபம். என்ன நிர்பந்தமோ?

  10. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    விகடன் குரூப் நடுனிலைமை தவறிப் பல வருடங்களாகின்றன. அமைச்சருக்குள்ள அல்லது அரசுக்குள்ள அதே எதிக்ஸ், பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சி சேனல்களூக்கும் இருக்கவேண்டும் (கட்சி சார்பானவைகளைத் தவிர. அப்படிப்பார்த்தால், கட்சி சார்பு இல்லாத பத்திரிகை தினமணி, தினமலர்(?). தொலைக்காட்சி எது என்பது எனக்குத் தெரியவில்லை). எப்போது விகடன் மீடியா ஆரம்பித்து சன் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பானதோ, அப்போதே அவர்களுக்கு நடுனிலைமை காற்றோடு போயிற்று. (இந்த லட்சணத்தில் மதன் அதிமுக சார்பு என்று சொல்லி அவரை வெளியேற்றினார்கள்) இப்போது அவர்கள் பெரும்பாலும் திமுக ஜால்ரா. வாசகர்கள் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, ஒரு வாரம் வைகோ, அடுத்த வாரம் திருமா என்று ஜால்ரா திரும்பும்.

  11. today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

    நண்ப பாமரன், காமைஜி, மற்றும் மற்ற நண்பர்களுக்கு,

    கருணாநிதிக்கு நான் பகிரங்கமாகவே சவால்விடுகிறேன்,
    அன்புமணியாகட்டும் முகவாகட்டும் இருவருமே முதலமைச்சர்களாக முடியாது என்பது என் கருத்து.

    ஆனாலும்,

    நான் ஆட்சிக்கு வந்தால் என் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று அன்புமணி சொல்லுவதுபோல

    முகவுக்குத் திராணியிருந்தால்,
    நான் ஆட்சிக்கு வந்தால் “என் முதல் கையெழுத்து இந்த சக்கரை என்று எழுதப்பட்ட சீட்டுக்களை கொடுத்திருப்பதாக அவர் கூறும்- இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்புதல் அளித்திருக்கும் அனைத்து மெமொரண்டங்களையும் நீக்குவேன்” என்று சொல்லமுடியுமா?

    திமுக சார் நண்பர்கள் இருநதாலும் பதிலளிக்கவேண்டுகிறேன்.

    • paamaran's avatar paamaran சொல்கிறார்:

      திமுக ஆட்சியில் தான் தமிழக தொழில் வளர்ச்சியில் அமைதி புரட்சி ஏற்பட்டது…கருணாநிதி பெருமிதம்
      Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-leader-karunanithi-said-that-industrial-revolution-arise-235564.html …. இந்த பெருமிதத்தையும் — அறிக்கையையும் கூட அவர் மட்டுமே நினைத்து — நினைத்து இனிப்பை உணருவார் ….. ! மற்றவர்களால் முடியாது …. !! நண்பா டு டே அண்டு மி //இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்புதல் அளித்திருக்கும் அனைத்து மெமொரண்டங்களையும் நீக்குவேன்” என்று சொல்லமுடியுமா? // அவரால் முடியவே — முடியாது ….. ஆனால் ஒருவேளை அவர் ஆட்சி அமைத்து செயலுக்கு வந்தாலும் — முன்னதை எப்படியெல்லாமோ மறைத்து —- கல்வெட்டுகளில் அவர் பெயர் வர விரும்பும் — ஒரே நபர் : கலைஞர் அவர்களே என்பது நாடறிந்த உண்மை ….!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.