அதிர்ச்சி தரும் நீரா ராடியாவும் அவரது நெருங்கிய I.T. நண்பர்களும் …!!!

அதிர்ச்சி தரும் நீரா ராடியாவும்
அவரது நெருங்கிய I.T. நண்பர்களும் …!!!

nira  radia-2

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு –
அதில் பல வில்லங்கமான விவகாரங்கள்
வெளிவரக் காரணமாக
இருந்த (பெண் தொழிலதிபர் ?)-
அரசியல் புரோக்கர் நீரா ராடியாவை
நினைவிருக்கிறதா ?

மன்னித்துக் கொள்ளுங்கள் – நம் நாட்டில்
குற்ற விசாரணைகள் நடைபெறும் வேகம் (!)
இப்படிக் கேட்க வைக்கிறது.

2008-ல் மத்திய நிதியமைச்சகத்துக்கு –
வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக சில புகார்கள்
வந்ததைத் தொடர்ந்து, வருமான வரி இலாகாவிற்கு
அதை தீவிரமாக விசாரணை
செய்யும்படி நிதியமைச்சகம் உத்திரவு இட்டது.

அதைத் தொடர்ந்து, வருமான வரி இலாகா,
மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி
பெற்றுக் கொண்டு, முதலில்
ஆகஸ்ட் 20, 2008 முதல் 120 நாட்களுக்கும்,
பின்னர் மே 2009-ல் மேலும் 120 நாட்களுக்கும்
நீரா ராடியாவின் தொலைபேசி அழைப்புகளை –
புலன் விசாரணைக்காக பதிவு செய்தது.

இந்த பதிவுகளிலிருந்து சில பகுதிகள் தான் முன்பு
வெளியாகி, திருவாளர் ராஜா, திருமதி கனிமொழி,
தொழிலதிபர் ரத்தன் டாட்டா போன்றவர்களை
தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியது !

மொத்தம் 5851 தொலைபேசி அழைப்புகள் கொண்ட
இந்த தொகுப்பில் இன்னும் என்னென்ன ரகசியங்களும்,
அதிர்ச்சிகளும் அடங்கி இருக்கின்றன என்பது
யாருக்கும் முழுமையாகத் தெரியாது.
ஏனெனில், இதை இன்னும் முழுமையாகக்
கேட்டவர்கள் யாரும் கிடையாது ..!!

இந்த தொகுப்பை முழுமையாக ஆராய்ந்து
ஒரு அறிக்கை கொடுக்கும்படியும்,
கோர்ட் சொல்லும் வரை –
அவற்றில் உள்ள விவரங்களை ரகசியமாக
வைத்திருக்கும்படியும், சிபிஐ க்கு
உச்சநீதி மன்றம் உத்திரவிட்டிருந்தது.

நேற்று முன்தினம் (செவ்வாயன்று) உச்சநீதிமன்றத்தில்,
சிபிஐ ஒரு இடைக்கால அறிக்கையை அளித்தது.
இதுவரை 25% அழைப்புகள் தான் பரிசீலனை
செய்யப்பட்டிருக்கின்றன என்றும் முழுவதையும்
பரிசீலனை செய்து முடிக்க இன்னும் குறைந்த பட்சம்
3 மாத கால அவகாசமும்,
வருமான வரி இலாகாவிலிருந்து
சில அதிகாரிகளின் உதவியும் தேவைப்படும் என்றும்
சிபிஐ தன் அறிக்கையில் கூறி இருக்கிறது.

சமரிப்பிக்கப்பட்டிருக்கும் இடைக்கால அறிக்கையில்
உள்ள சில அதிர்ச்சியான விவரங்கள் –

– பல அந்தரங்கமான உரையாடல்கள் இதில்
அடங்கி இருக்கின்றன.

– இவற்றில் அடங்கி இருக்கும் சில தகவல்கள்
வெளியாவது – நாட்டின் பாதுகாப்பை
பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.

– இதுவரை ஆராய்ந்ததில் (25% பகுதி மட்டும்),
நீரா ராடியா பலத்த வருமான வரி மோசடியில்
ஈடுபட்டிருக்கிறார் –
அவருக்கு கிடைத்த பல கோடி ரூபாய் தொகைகள் –
வருமானத்தில் இருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன.

சரியான தொகை இன்னும் தெரியவில்லையென்றாலும்,
இவை பல நூறு கோடிகள் இருக்கலாம்.

தனக்கு கிடைத்த –
கணக்கில் காட்ட முடியாத கருப்புப்பணத்தை –
-130 வெவ்வேறுபட்ட தொகைகளை –
வெவ்வேறு நபர்களிடமிருந்து கடனாகப் பெற்றதாக
தனது வருமான வரி கணக்கில் காட்டியுள்ளார்.
(கடனாக வந்த தொகைகளுக்கு வருமான வரி கட்ட
வேண்டியதில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு
அவை திரும்பக் கொடுக்கப் படாத கடனாக –
ஜீரணம் ஆகி விடும் !)

அவரது இந்த கோடிக்கணக்கான வருமான வரி
மோசடிக்கு, வருமான வரி இலாகாவில் பணி புரியும் –
அவருக்கு மிகவும் நெருங்கிய சிலரும் துணையாக
இருந்திருக்கிறார்கள் என்பது – நீரா ராடியாவுக்கும்
அவர்களுக்கும் நிகழ்ந்த சில உரையாடல்களிலிருந்து
சிபிஐ தற்செயலாகக் கண்டுபிடித்துள்ள
அதிர்ச்சித் தகவல்.

(இது போன்ற போலிக் கடன்களை, வருமான வரி
இலாகாவால் வெகு சுலபமாக கண்டு பிடிக்க முடியும் –
அதற்கென்றே சில நடைமுறைகள், வழிகள்
அவர்களிடம் இருக்கின்றன.
ஆனால் – சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
“கண்டு கொள்ள வேண்டிய விதத்தில்”
கண்டுகொள்ளப்பட்டால் – இந்த கடன்கள்
“கண்டு கொள்ளாமல்” விடப்படும் !!
நீரா ராடியாவிற்கு இதையெல்லாம் யாராவது
சொல்லித்தர வேண்டுமா என்ன ?)

இது குறித்து உச்சநீதிமன்றம், வருமான வரி
இலாகாவிற்கு கடுமையான கண்டனத்தைத்
தெரிவித்துள்ளது. வருமான வரி மோசடி
நிகழ்ந்திருக்கிறது என்று வந்த புகாரைத் தொடர்ந்து,
2008ஆம் ஆண்டிலேயே தொலைபேசி அழைப்புகளை
பதிவும் செய்த வருமான வரி இலாகா,
கடந்த 4 ஆண்டுகளாக இதன் மீது ஏன் எந்தவித
மேல் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று
கடுமையாக வினவி இருக்கிறது.

தற்போது கூட, 2ஜி ஊழல் தொடர்பாக எதாவது
தடயங்கள் கிடைக்கிறதா என்று சிபிஐ பரிசீலனை
செய்யும்போது, எதேச்சையாக – ஒரு விபத்து போல்
தான் இந்த மோசடி குறித்த தகவல்கள்
கிடைத்திருக்கின்றன. 25 % பரிசீலனையிலேயே
இவ்வளவு என்றால் – மொத்தத்தையும் பரிசீலனை
செய்தால் இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள்
வெளிவருமோ என்று வருமான வரி இலாகாவை
கடுமையாகச் சாடி தங்களது கண்டனத்தை பதிவு
செய்திருக்கிறது உச்சநீதி மன்றம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் –
நீரா ராடியா மீது இதுவரை 2ஜி வழக்கிலும் சரி,
அவரது வருமான வரி மோசடி குறித்தும் சரி –
எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஒரு F.I.R. கூடக் கிடையாது !

அவரும் தன் கடையை மூடிவிட்டு –
குஷியாக வெளிநாடு போய் செட்டிலாகி
விட்டார். சம்மன் வரும்போது மட்டும்
டூரிஸ்ட் போல் வந்து சாட்சி சொல்லி விட்டு,
மீண்டும் பறந்து போய் விடுகிறார்.
(கென்யாவில் பிறந்து,
லண்டனில் படித்து –
இந்தியாவில் தொழில் அதிபராக
அவதாரம் எடுத்தவர் –
இங்கே விவகாரங்கள் எசகுபிசகாக
வெளி வந்ததும் – வியாபாரத்தை
முடித்துக்கொண்டு வெளியேறி விட்டார் !)
இது போன்ற விசித்திரங்கள் நம் நாட்டைத்தவிர
உலகில் வேறு எங்கேயாவது நடக்குமா ?
இல்லை நடந்தால் மக்கள் தான் சகித்துக்
கொள்வார்களா ? என்ன இருந்தாலும் நம்மவர்களின்
பொறுமை மகத்தானது – ஈடு இணையே இல்லாதது !!

ஒரு வேளை இத்தாலியில் நடக்கக்கூடுமோ …?

———————————————————–
எப்போதும் நிலைத்திருக்கக்கூடிய,
என்றும் மாறாத ஒருவரை – மனதில் இருத்தி,
நடப்பவற்றை அமைதியாக கவனித்துக் கொண்டிரு.
(ஒரு பெரியவர்…!)

-முடியவில்லையே சுவாமி ..
———————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to அதிர்ச்சி தரும் நீரா ராடியாவும் அவரது நெருங்கிய I.T. நண்பர்களும் …!!!

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    சுவாமி தான் என்ன செய்வார் பாவம். உச்ச நீதி மன்றம் அவரை ப.சி
    வழக்கில் கை விட்டு விட்டது. நமது I.T.Dept.க்கு salaried class and middle
    income மக்கள் தான் மக்களாக தெரிவார்கள். நம்மவர்களின் பொறுமைக்கு அளவேது.
    ம் …..ம்….ம்… நன்றி.
    பரமசிவம்

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நண்பர் காவிரி மைந்தன்.
    மோடி தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால் இவர்களுக்கெல்லாம் சட்டப்படி தண்டனை வாங்கி கொடுப்பார் என நீங்கள் நினைக்கிறீர்களா?உங்கள கருத்தினை அறிய ஆவலுடன் இருக்கிறேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் கண்பத்,

      1) மோடி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று –
      பிரதமரும் ஆவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா ?

      2) ஆள் மாறினால் போதுமா – system மாற
      வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா ?

      3) இருக்கும் system அவ்வளவு சுலபமாக
      மாற்றப்பட்டு விடுமா ?

      4) system மாற்றப்பட வேண்டுமென்றால்
      என்ன செய்ய வேண்டும் …?

      நீங்கள் தான் சொல்லுங்களேன் …!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • ganpat's avatar ganpat சொல்கிறார்:

        எனக்கு..
        மோடி வருவார் என்ற நம்பிக்கை-60%
        மோடி மாற்றுவார் என்ற நம்பிக்கை-30%
        அப்படி ஒரு வேளை மாற்றினால்,
        அவர் மீண்டு(ம்) வருவார் என்ற நம்பிக்கை-10%
        இந்தியர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை-0%

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி ரிஷி.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  4. ராயன்-சென்றாயன்'s avatar ராயன்-சென்றாயன் சொல்கிறார்:

    கண்பத் – காவிரிமைந்தன்,

    முதலில் நரேந்திர மோடியால் 200 சீட்டுக்கு மேல் ஜெயிக்க முடியுமா ?
    அப்படி ஜெயித்தாலும் அவருடன் கூட்டு சேரக்கூடியவர்கள் யார் யார் ?
    மோடியை பிரதமர் ஆக்க அம்மா ஒத்துழைப்பாரா அல்லது
    அம்மாவை பிரதமர் ஆக்க மோடி தான் ஒத்துழைக்க வேண்டுமா ?
    இந்த லட்சணத்தில் ஸிஸ்டத்தை யார் மாற்றுவார்கள் ? யாரால் மாற்ற முடியும் ?
    கனவு – எல்லாம் பகல் கனவு. இவர்களில் யார் வந்தாலும் நடக்காது.
    இவர்கள் யாராவது ராகுல் காந்தியை போல் ஏழைகளின் குடிசையில் இரவில்
    தங்கி இருக்கிறார்களா? அல்லது ஏழைகளின் கஷ்டம் தான் தெரியுமா ? ஜூபிடரின்
    வேகத்தை இவர்களால் கொடுக்க முடியுமா ?

  5. maasianna's avatar maasianna சொல்கிறார்:

    I am 100 percetage accept with Ganpat

  6. M.S.Vasan's avatar M.S.Vasan சொல்கிறார்:

    அவள் ஒரு தொடர்கதை
    தினம் தினம் ஒரு சிறு கதை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.