கலைஞர் கருணாநிதி நடத்தி வைத்த – பிள்ளையார் கோயில் கும்பாபிஷேம் …!!

கலைஞர் கருணாநிதி நடத்தி வைத்த  –
பிள்ளையார் கோயில் கும்பாபிஷேம் …!!

நான்கு நாட்கள் முன்னர்  “தினமலர்”  (திருச்சி பதிப்பு)  நாளிதழில்
முழுப்பக்க விளம்பரம் ஒன்று வந்திருந்தது.

திருச்சியிலுள்ள (ஸ்ரீரங்கம் -நாச்சிக்குறிச்சி – முதல்வரின் தொகுதி )
பிள்ளையார் கோயில் ஒன்றின்  கும்பாபிஷேக  அழைப்பிதழே
பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரமாக வந்தது.

இதன் விசேஷம் என்னவென்றால் –  பிள்ளையாரை விட பெரிதாக
கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின், நேரு ஆகியோரின் புகைப்படங்களுடன்
இந்த அழைப்பிதழ் வெளியிடப்பட்டிருந்தது தான்.

முதலில் கருணாநிதி படத்துடன், கும்பாபிஷேக  அழைப்பிதழைப்
பார்த்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது.   இந்த காமெடியை
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று
நினத்தேன்.  பிறகு எப்படியோ – மறந்தே போனேன்.

இன்று – மறைந்த திமுக தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமி அவர்களின்
புகைப்படத்தை  அறிவாலயத்தில் திறந்து வைத்து கலைஞர் கருணாநிதி
பேசியது  செய்தியாக வெளிவந்திருந்ததை படித்தவுடன் எனக்கு
மறந்து போன கும்பாபிஷேக அழைப்பிதழ்  விஷயம்
நினைவிற்கு வந்து விட்டது.

முதலில் கருணாநிதி பேசியதன் சாரம்  –
பின்னர் – நீங்களும் பார்த்து ரசிக்க –
முழுப்பக்க கும்பாபிஷேக விளம்பரத்தின்  புகைப்படம்.. !!

“குப்புசாமியின்  “ஆன்மா” சாந்தி அடைய வேண்டும்  என்றெல்லாம்
பேசுவதை நான் ஏற்க மாட்டேன். “ஆன்மா”வில் எல்லாம் எனக்கு
நம்பிக்கை கிடையாது.
நாம் பயணிப்பது  சுயமரியாதை வழி..!
தந்தை பெரியார் வழி வந்த,
அறிஞர் அண்ணா வழி வந்த நாம்
மூட நம்பிக்கைகளை  வளர்க்கத் துணை போக முடியாது.
அறியாமையையும், மூட நம்பிக்கைகளையும்
தகர்த்து எறிவது  நம்  தலையாய பணி.”

kumbabishekam

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to கலைஞர் கருணாநிதி நடத்தி வைத்த – பிள்ளையார் கோயில் கும்பாபிஷேம் …!!

  1. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    ha..haa.. sema comedy..

    எதிரிக்கட்சிகளின் திட்டமிட்ட சதியாக்கூட இருக்கலாம். 😀

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    சில ஆண்டுகளுக்கு முன் நான் பதிவிட்டதை மீண்டும் நினைவு படத்த விரும்புகிறேன்.
    கருணாநிதி என்பவர்
    ஆத்திகரும் இல்லை நாத்திகரும் இல்லை
    சனாதன வாதியும் இல்லை பகுத்தறிவு வாதியும் இல்லை
    ஜாதி பற்று அற்றவரும் இல்லை ஜாதி பற்று கொண்டவரும் இல்லை
    திறமையாக வசனம் எழுதி/பேசியே மக்களை மயக்கி ஏமாற்ற முடியும் என
    தெரிந்துவைத்துக்கொண்ட ஒரு கைதேர்ந்த வியாபாரி.
    தன வியாபாரத்தை அறுபது ஆண்டுகளாக திறம்பட நடத்தி வருகிறார்.
    ஒரு முறை A,B இடம் ஏமாந்தால் B யை தண்டிக்கலாம்
    அதே A பலதடவை தொடர்ந்து அதே B இடம் ஏமாந்தால் தண்டிக்கப்படவேண்டியது A மட்டுமே.
    ஓட்டை போடுங்க என்ற கோஷத்தை நம் வாக்காளர்கள் தவறாக புரிந்து கொண்டு
    ஜனநாயகத்திலேயே பெரிய ஓட்டை போட்டு விட்டார்கள்.

  3. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    மேடைக்குத் தகுந்த வேடம்,
    இவர்களுக்கு சொல்லியா தர வேண்டும்.
    நன்றி திரு காவிரி மைந்தன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

  4. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    அந்த கும்பாபிஷேக பத்திரிகையில் எங்குமே தமிழினத் தலைவர்
    முத்தமிழறிஞர் டாக்டர் கலஞர் விழவை நடத்தித் தருகிறார் என்று
    இல்லை. “கலைஞர் நடத்திய கும்பாபிஷேகம்” என்று விஷமப்
    பிரச்சாரம் செய்து தமிழர்களைக் குழப்ப முயற்சிக்கிறீர்கள். அது
    நடக்காது.

    இது உள்ளூர் தி மு க பிரமுகரின் ஆதரவு பெற்ற, தலைமை
    விசுவாசமிக்க உள்ளூர் கைத்தடிகளின் வேலை.

    கட்சிக்காரர்கள் எது செய்தாலும் தலைமையையும் சேர்த்துக்
    கொள்வதென்பது அவர்கள் கற்ற் பகுத்தறிவின் முதல் பாடம்.

    நிற்க. பகுத்தறிவு பகலவன் ஒரு புரோகிதனைப் (ர் கூடாது?!)
    போல திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து, திருமணத்தை நடத்தி
    வைத்து தம்பதியரை ஆசீர்வதிக்கலாம்; கும்பாபிஷேகம் செய்யக்
    கூடாதா?

    சமீபத்தில் நடந்த திரு.ஸ்டாலின் அவர்களின் ஷஷ்டியப்த பூர்த்தி
    விழா கூட, வைதீக முறைப்படி விஸ்தாரமாக நடந்ததாக தகவல்
    உண்டு.

    என்னத்தை சொல்ல…

    • ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

      அடிப்படையில் கடவுள் மறுப்பையும், வேத எதிர்ப்பையும் தீவிரமாகக் கொண்டிருப்பதாக கூறப்படும் இந்த திராவிடக் கட்சி, அவ்வாறு கட்சிக் கொள்கைக்கு விரோதமாக செயல்படும் யாவரையும் கட்சியை விட்டே நீக்க வேண்டும். அப்படி நடக்கிறதா என்ன? கும்பாபிஷேகம் நடத்தியது உள்ளூர் ஆள் இல்லை. அந்த மாவட்டத்தின் இளைஞர் அணி அமைப்பாளர் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். கட்சித் தொண்டர்களிடம் தலைமையின் கருத்தினை நேரடியாகக் கொண்டுசெல்லும் இடத்தில் அவர் இருக்கிறார்.

      • venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

        கடவுள் மறுப்பும் வேத (பிராமண என்று வாசிக்கவும்) எதிர்ப்பும்
        தி மு கவின் கொள்கையல்ல. அது திராவிடர் கழகத்தின் கொள்கை.
        அண்ணா மற்றும் அவரது வழித்தோன்றல்களின் கொள்கை:
        “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்”.

        உலகின் பல பாகங்களிலும் இறை மறுப்பாளர்கள் இருக்கிறார்கள்.
        ஆனால், தமிழகத்திலே உள்ளது போல பல கோடி சொத்து
        கொண்ட ஒரு இயக்க தலைமை எங்கும் இல்லை.

        தந்தை பெரியார், அறிஞர் அண்ணா காலத்திலே, “சுயம்ரியாதை
        சூறாவளி” என்கிற தலைப்பிலே, அவர்களது கொள்கைகளை
        அலசி, தகர்த்து மறுத்து அவர்களின் ஒவ்வொரு வாதத்திற்கும்
        எதிர்வாதமாக 1000க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி பதில்
        கேட்டிருந்தார், திரு.அ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளை. அவரும்
        காலமாகிவிட்டார். ஆனால், அவர் கேள்விகளுக்கு இன்ருவரை
        பதில் வரவில்லை.

        “சுயம்ரியாதை சூறாவளி” எந்த மடாதிபதிகளாலும் SPONSOR
        செய்யப்பட்ட வெளியீடல்ல.

        நானறிந்தவரை, திராவிட இயக்கத் தலைவர்களிலே, காலஞ்சென்ற
        திரு. ராஜாராம் மட்டுமே, தணிகைவேலனை தரிசனன் செய்ததாகவும்
        அதனால், ஒரு மன நிறைவு பெற்றதாகவும் வெளிப்படையாக “ஒத்துக்
        கொண்டவர்”. அரைகுறை ஆத்திகம் பேசும் பெரியவர் ஒருவர்
        இருக்கிறார். அவர் பெயர், திரு. இராம வீரப்பன்.

        உண்மையில் பகுத்தறிவு என்பதே பரிகாசத்திற்குரியது தான்.
        அறிவைக் கொண்டு ஆராய்வதென்பது “அளவுக்குள்” (மிக
        முக்கியமாக ஆராய்பவரின் “அறிவின் வீச்சுக்குள்) அடங்கிவிடுவது.
        ஆனால், பிரபஞ்ச சக்தியின் வீச்சு எந்த அளவுக்குள்ளும்
        அடங்காதது.

        எல்லைகளுக்குள்ளும் அளவுகளுக்குள்ளும் அடங்கா அந்த
        பேரியக்கத்தைப் பற்றிய சக்திப் பற்றி முழுமையாக அறிந்தவர்
        யார்? ஆனால், போதிய அறிவின்றி மறுப்பவர் பலர்.

        ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைக் “கண்டுபிடித்தார்” என்பது
        பள்ளியில் கற்பிக்கும் பாடம். உண்மையில். புவீயீர்ப்பு நியூட்டனின்
        முப்பாட்டனுக்கு முப்பாட்டனுக்கு முன்பிருந்தே இருக்கிறது. அவர்
        அறிந்து அறிவித்தது: “பழுத்த ஆப்பிள் கீழே விழ “புவியீர்ப்பே”
        காரணம் என்பதைத்தான்.

        கற்பித்தலிலும் கற்பதிலும் கோளறு இருப்பதாலும், இவர்களின்
        அடிப்படையற்ற வாதங்க்களை மறுக்க போதிய விஷய ஞானம்
        இல்லாத காரணத்தாலும், இவர்கள் இன்னமும் பிழைத்துக்
        கொண்டு இருக்கிறார்கள்.

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தொழிலாளர் அணிச்செயலாளர் குப்புசாமி அவர்களின் உருவப்படத்தை
    திறந்து வைத்த தலைவர் வெளிப்படுத்திய இன்னொரு சிந்தனை முத்து –
    முன்னர் கூற மறந்து விட்டேன். நண்பர் கண்பத் தின் பின்னூட்டம்
    கண்டவுடன் நினைவிற்கு வந்தது.

    —————–
    “அண்ணா இன்று உயிருடன் இருந்திருந்தால் –
    குப்புசாமி இடத்தில் நான் தான் தொழிலாளர் அணிச் செயலாளராக
    இருந்திருப்பேன் ! அந்த அளவிற்கு தொழிலாளர்களிடமும்,
    தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் பற்று கொண்டவன் நான் !””
    ——————

    இதைப் படித்துக்கொண்டிருந்தபோது என் நண்பர் ஒருவரும் என்னுடன்
    இருந்தார். அவரது comments இது –

    “அண்ணா இருந்தால் – அவரை இதுவரை கலைஞர் திமுக வில்
    விட்டு வைத்திருப்பாரா ? MGR மாதிரி,. வைகோ மாதிரி
    எதாவது பழி சுமத்தி அண்ணாவையும் கட்சியிலிருந்து
    வெளியேற்றி இருப்பார்.. அண்ணா பாவம் நெடுஞ்செழியன் மாதிரி
    எங்காவது இரண்டாவது இடம் தேடி அலைந்து கொண்டிருப்பார். !”

    ———————————

    உண்மை தான்.- தமிழக வரலாறு இதுவரை இத்தகைய
    தலைவர் ஒருவரைக் கண்டதே இல்லை !

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  6. srini's avatar srini சொல்கிறார்:

    aanma saandhi adaivathil nambikai illadha karuna irandhu avaradhu aanma saandhi adayaamal tamilargalayum, tamil naatu makkalayum suttri konde iruka pogiradhu…

    ellorum orunaal eraka pogirom, indha thalaivar, irandhu pona pinnum nammai vida maatar pola irukiradhu…

    oru manidhanin vazhkai avanadhu nambikyaiyai poruthathu… evaruku aanma saandhi adaivathil nambikai illai… adhanaal, kandipaga evaradhu aanma sandhi adaya povathillai…

    yaanai irandhalum aayiram ponnu…. adhu pola karuna irandhalum, tamilanaku vidivu kidayadhu… idhu pudhu mozhi

  7. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    ஐயா உங்களுக்கு தெரியாதது அல்ல,.ஆங்கிலத்தில் turning in his grave என்றொரு சொற்றொடர் உண்டு. ஆனால் கருணாநிதி புண்ணியத்தில் Anna must be revolving in his grave for past so many years.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.