இதோ கண்ணெதிரே உருவாகும் கருப்புப்பணம் ……

இதோ கண்ணெதிரே உருவாகும் கருப்புப்பணம் ……

எல்லாருக்கும் தெரிகிறது.  ஆனால் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை !
என்ன காரணம்  ….. யார் காரணம்… ????

இது சென்னையைத் தவிர – திருச்சி, மதுரை, கோவை,  என்று  தமிழகத்தின்
அனைத்து பெரிய நகரங்களிலும் தினமும் தொடர்ந்து நடைபெறும் ஒரு
விஷயம் – ஆனால் யாரும் கண்டுகொள்வதில்லை.

தமிழ்நாட்டில்multiplex theatreகளில் மட்டும் நுழைவுக் கட்டணம் ரூபாய் 120/-
என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
multiplex theatres  ஐத் தவிர மற்ற திரையரங்கள் அனைத்திற்கும்,
நகரங்களின் அளவைப்பொருத்தும், குளிர்சாதன மற்றும் பிற வசதிகளைப்
பொறுத்தும், அதிக பட்சம் இவ்வளவு ரூபாய்தான் நுழைவுகட்டணம் என்று –
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட,   அறிவிக்கப்பட்ட –   எழுதப்பட்ட
விதியே இருக்கிறது.

இந்த நகரங்கள் அனைத்திலும், குளிர்சாதன வசதியுடைய திரையரங்கங்களில்
பொதுவாக உச்சபட்ச நுழைவுக்  கட்டணம் ரூபாய் ஐம்பது தான்.
ஆனால் அனைத்து நகரங்களிலும் திரையரங்கங்களில் அவர்கள் மனம்போல்,
படத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்தும், கூட்டத்தைப் பொறுத்தும் –
அவ்வப்போது அரங்க உரிமையாளர்களே நுழைவுக் கட்டணத்தை
தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

ரஜினி, கமல் ஆகியோரின் புதிய ரிலீஸ் படங்க்களுக்கு  ரூபாய் 200/
அஜித், விஜய்  –  ரூபாய் 150/-
மற்றபடி – கூட்டம்  எதிர்பார்க்கப்படும் படங்களுக்கு – ரூபாய் 100/- லிருந்து 120/- வரை.

கீழே நான் புகைப்படச் சான்றுடன் கொடுத்திருப்பது –
திருச்சி, காவேரி திரையரங்கில் கடந்த ஏப்ரல் 12ந்தேதி மாலைக்காட்சிக்கு
கேடி ரங்கா, கில்லாடி பில்லா படத்திற்கான முதல் வகுப்பு டிக்கெட்.

kavery ticket-1

backside of the ticket kavery ticket-backside

டிக்கெட் கவுண்டரில் கட்டண விவரம் பற்றிய போர்டு எதுவும் இல்லை.
டிக்கெட்டில் அச்சடிக்கப்பட்டு இருப்பது 50 ரூபாய்.
இதன் பின் பக்கத்தில் அரசாங்க முத்திரையும் இருக்கிறது.
ஆனால் கவுண்டரில் சொல்லப்பட்ட கட்டணம் –
கொடுத்து வாங்கப்பட்டது – 100 ரூபாய்க்கு.

எனவே ஒரு டிக்கெட்டுக்கு 50 ரூபாய் – எந்தவித கணக்கும் இல்லாமல்
எந்தவித ஆதாரமும் இல்லாமல் வாங்குகிறார்கள்.
உள்ளே – இந்த வகுப்பில் சுமார் 200 பேர் இருந்தனர்.
200 x 50 = 10,000.  ஆக ஒரு காட்சிக்கு மட்டும் சுமார் பத்தாயிரம் ரூபாய்
இங்கே எந்தவித கணக்கும் இல்லாமல் கருப்புப்பணம்  உருவாக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 4 காட்சிகள்- எனவே 10,000 x 4 = 40,000.
சில காட்சிகளில் கூட்டம் குறைவாக இருக்கலாம். எனவே சராசரியாக
ஒரு நாளைக்கு ரூபாய் 30,000 என்று வைத்துக் கொள்வோம்.
ஒரே ஒரு ஊரில், ஒரே ஒரு திரையரங்கில், ஒரே ஒரு நாளில்
உருவாகும் கருப்புப் பணம் ரூபாய் 30,000/-

இதே திரையரங்கில், நேற்றையதினம், ஞாயிற்றுக்கிழமை,
வேறுபடம் – உதயம்.
இதற்கு 50 ரூபாய் டிக்கெட் விற்கப்பட்ட விலை 120 ரூபாய்.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும்,  பெரிய நகரங்களில் உள்ள அனைத்து
திரையரங்குகளையும் சேர்த்தால் உருவாகும் கருப்புப் பணம் எவ்வளவு
இருக்கும் ?  இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு ?
திரையரங்க உரிமையாளர்களுக்கு….. ?
விநியோகஸ்தர்களுக்கு……. ?
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு…… ?
ஹீரோ – ஹீரோயின்களுக்கு …….?
அதிகாரிகளுக்கு…….. ?
அரசியல்வாதிகளுக்கு…….. ?
இங்கு ஒரு இடத்தில் உருவாகும் கருப்புப்பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பு
இத்தனை பேருக்கும் பரவுகிறது ! ஒரு தொற்று நோய் ஆகிறது !!
கண்ணெதிரே உருவாகும் கருப்புப்பணத்தை –
கட்டுப்படுத்த வேண்டியவர்கள், கண்டுபிடிக்க வேண்டியவர்கள் எல்லாரும் –
கண்களை மூடிக்கொண்டிருந்தால் எப்படி ….?

மாநிலத்தில் பெரும்பாலான படங்களுக்கு கேளிக்கை வரி இல்லை
என்பதால், மாநில அரசுக்கு இதனால் எந்தவித நிதி இழப்பும் இல்லை.
அதனால்  மாநில அதிகாரிகள் இதில் அக்கரை காட்டுவதில்லையோ ?

மத்திய அரசின் வருமான வரி இலாகா,  enforcement directorate
ஆகியவை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு விழித்திருந்து
பார்ப்பார்களே ?
அவர்களுக்குத் தெரியாமல் இந்த ஏமாற்று வேலை  சாத்தியமாகுமா ?
தெரிந்து தான் நடக்கிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம் … ?

இந்தச் செயல் – தொடர்ந்து, துணிச்சலாக, வெளிப்படையாக நடைபெற
காரணம் என்னவாக இருக்க முடியும் ?

சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  அடையும் ஆதாயம்… ?
அரசியல்வாதிகளுக்கு பங்கு … ?
மொத்தத்தில் அரசாங்கத்தின்,
அரசு அதிகாரிகளின்  அக்கரையின்மை  …?

இந்த மாபெரும் நாட்டில் –
கருப்புப்பணம்  உருவாகும் விதத்திற்கு just  இது ஒரு sample  மட்டுமே !!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இதோ கண்ணெதிரே உருவாகும் கருப்புப்பணம் ……

  1. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    People should watch movies from their homes only .Going to theatres should be discouraged
    cvs

  2. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    சைதாப்பேட்டையில் ஒரு டாக்டர் மாலையில் (மட்டும்) கிளீனிக் நடத்துகிறார்.
    இவர் ஒரு நோயாளிக்கு just 30 ரூபாய்தான் வாங்குவார். வரும் நோயாளிகளோ, ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கானவர்கள். 6pm to 9pm part time-ல் ஒரு நாளைக்கு ரூ.3000+ அப்படி கணக்கு போட்டால் மாதத்திற்கு ரூ ஒரு லட்சம். நோ கணக்கு நோ வரி. இவருடைய டெக்னிக் இத்துடன் முடிவதில்லை.
    சில மாதங்களுக்கு பின்னால் அந்த கிளீனிக்கை நல்ல விலைக்கு விற்றுவிடுவார். பின்னர் மீண்டும் புது கிளீனிக்… புது நோயாளிகள்… லாபமீட்டும் கடையை மற்றவருக்கு விற்பது!!!
    நல்ல வியாபார மருத்துவர்.
    இது மாதிரி பல டெக்னீக்குகள் இருக்கின்றன, கருப்பு பணப்புழக்கத்தில்.
    வாழ்க இந்தியா!

  3. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    அவ்வளவு ரூபாய் கொடுத்து ஏன் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்? மக்கள் முதலில் திருந்த வேண்டும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பரே -தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது பற்றி தனி இடுகையே
      போடக்கூடிய அளவிற்கு விஷயங்கள் இருக்கின்றன.

      கருப்புப்பணம் எவ்வளவு சகஜமாக உருவாகிறது – கண்களைத்
      திறந்து வைத்துக் கொண்டு அத்தனை பொறுப்பாளர்களும்
      எப்படி தங்களுக்குச் சம்பந்தமே இல்லாதது போல் இருக்கிறார்கள் என்பதை சொல்ல வந்தேன் – அதற்குத் தான் இந்த இடுகை.

  4. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    நான் ஆந்திராவில் கொஞ்ச நாள் குப்பைக் கொட்டினேன். அப்போது,
    இரவு காட்சி முடிந்த கையோடு, புதிய படத்தை, குறிப்பாக நாகாரிஜுனா,
    சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோரின் படங்களை, திரையிடுவார்கள்.
    தமிழகத்தைக் காட்டிலும் ஆந்திர இளைஞர்கள் சினிமா மோகம் அதிகம்
    கொண்டவர்கள் (என்பது எனது அபிப்ராயம்). எனவே கூட்டம் அலை
    மோதும். அங்கீகாரமற்ற காட்சி. போலீசார் அனேகமாக இருக்க
    மாட்டார்கள். அசம்பாவிதம் நடக்க பல விதங்களிலும் வாய்ப்புகள்
    அதிகம். ஆனாலும், கேட்பார் யாருமில்லை.
    சினிமா பெரிய வியாபாரம். பிள்ளையார் பூஜை தொடங்கி, உள்
    நடக்கும் எந்த விஷயத்திற்கும் “உரிய கணக்கு” தயாரிப்பாளரிடம் கூட
    இருக்காது. தயாரிப்பு நிர்வாகி சொல்வதுதான் அவரது கணக்கு..
    வெளியீட்டில் சொல்லவே வேண்டாம். “ஓடாத” படத்திற்கு
    வினியோகஸ்தரும், தியேட்டர் அதிபரும் காட்டும் கணக்கே கூட
    “நம்பகத்தன்மை” உடையது அல்ல. அது சம்பந்தபட்ட நடிகரை
    “குறி வைக்கும்” கணக்கு.
    “இது ஓடும்” என்ற யூகத்தின் அடிபபடையில் நடைபெறும் “எந்த
    வியாபரத்திலும்” பொய் கணக்குகள் இருக்கும். கணக்கில் பொய்
    கலந்து விட்டால், “கருப்பு” தானே வந்துவிடும் தானே.

  5. palaniappan's avatar palaniappan சொல்கிறார்:

    idai matra mudiyathu! thalai vidi

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.