கமல்ஹாசன் படம் –
பிரச்சினைக்கு யார் காரணம் ? ?

“படம் தடை செய்யப்பட்து அக்கிரமம்”
“ஒரு கலைஞனுக்கு செய்யப்பட்டுள்ள அநியாயம்”
என்று குஷ்பூ, பிரகாஷ் ராஜ்,
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி,
மத்திய காங்கிரஸ் மந்திரி மணீஷ் திவாரி ஆகியோர்
தொலைக்காட்சி காமிராமேனை பார்த்தவுடனேயே
தீர்ப்புக் கூறி விட்டார்கள் !
படத்தைப் பார்த்து விட்டு தீர்ப்பு கூறுவதாக
நீதிமன்றம் கூறி இருக்கிறது !
சிலர், கமலைப் போன்ற அற்புதமான கலைஞனுக்குத்
தான் எவ்வளவு பிரச்சினைகள்
என்று உண்மையாகவே வருந்துகின்றனர்.
உண்மையில் கமலின் பிரச்சினைகளுக்கு யார் காரணம் ?
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”
“புலி வந்து விட்டது – புலி வந்து விட்டது” என்று
பொய்யாகக் கத்திக் கொண்டிருந்த மாடுமேய்க்கும்
சிறுவன் உண்மையாகவே புலி வந்தபோது கத்தியதை
யாரும் நம்பவில்லை !
தனது ஒவ்வொரு படத்தின் ரிலீசின் போதும்
செயற்கையாக எதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பி –
அதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி, தன் படத்திற்கு
காசு செலவில்லாமல் விளம்பரம் ஏற்படுத்துவதை
வாடிக்கையாகக் கொண்டிருந்தார் கமல்.
அவரது வழக்கம் இந்தப் படத்தில் மாடு மேய்க்கும்
சிறுவனின் நிலைக்கு கொண்டு போய் நிறுத்தி விட்டது.
உடனடியாக என் நினைவிற்கு வருபவை –
ஹே ராம் – காந்திஜி குறித்த சர்ச்சையான கருத்துக்கள்.
சண்டியர்/சாமுண்டி – படத்தின் பெயரிலேயே
ஒரு இனத்தவர் குறித்த சர்ச்சைகள்.
மன்மதன் அம்பு – இலங்கைத் தமிழர் பற்றிய கிண்டல்.
பல படங்களை அறிவிப்பதோடு –
அல்லது பாதியிலேயே கைவிடும், அல்லது அதீதமாக தாமதப்படுத்தும் அவரது பழக்கம்
( மர்ம யோகி, தலைவன் இருக்கிறான்,
மருதநாயகம் ) தயாரிப்பாளர்களிடையே
அவர் குறித்து ஒருவித அவநம்பிக்கையை ஏற்படுத்தி
இருக்கிறது. அவரை நம்பி, முதல் போட்டு ரிஸ்க் எடுக்க
பல தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.
பாதிக்கப்பட்ட படத்தயாரிப்பாளர்கள்
(தற்கொலைக்கு முயன்ற ரோஜா கம்பைன்ஸ்
காஜா மொயிதீன்-கலைப்புலி தாணு )
நினைவிற்கு வருகிறார்கள் –
ஒரு திரைப்படத்தை –
தானே எழுதி, நடித்து, இயக்கி – தயாரிப்பது
என்பது ஒரு மிகப்பெரிய சாதனை தான்.
இது மிகச்சிறந்த படைப்பாளிகளால் தான் இயலும்.
கமல் ஒரு நல்ல கலைஞர், சிறந்த படைப்பாளி என்பதில்
எந்தவித சந்தேகமும், யாருக்கும் இருக்க முடியாது.
ஆனால், அந்த படைப்பாளி – தானே அந்தப் படத்தை
வெளியிட முயலும்போது ஒரு வியாபாரி ஆகிவிடுகிறார்.
வியாபார நோக்கம் வரும்போது – அதிகபட்சம் லாபம்/
பணம் பண்ணுவது எப்படி என்கிற நோக்கில் தான் அவரது
எண்ணங்கள் அமைகின்றன.
திரைப்படத்துறைக்கு உள்ள
ஒரு பிரத்தியேகமான நிலை –
ஒருவர் தானே எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்த
படமானாலும், அதை ரசிகர்கள் பார்த்தால் தானே காசு வரும் ?
படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க
விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள்
ஆகியோர் தேவைப்படுகிறார்கள். இதில்,
விநியோகஸ்தர்களை
கூடத் தவிர்த்து விடலாம் –
ஆனால் திரையரங்கங்களையும்,
அதன் உரிமையாளர்களையும் தவிர்க்கவே முடியாது.
அதிக லாபத்தை விரும்பிய வியாபாரியாக கமல் இந்த
அவசியத்தை உடைக்கவும் விரும்பினார்.
அதிக லாபம் வரும் வழியாக படத்தை முதலில்
நேரடியாக தொலைக்காட்சி மூலமும்,
கூடவே திரையரங்குகள்
மூலமாகவும் வெளியிட முயற்சித்தார்.
புதிய முயற்சி என்று அனைவரும் பிரமித்தாலும்,
அவரது முயற்சி இறுதியில் தோல்வியில் முடிந்தது.
காரணம் ?
மற்றவர்களுடன் கலந்து பேசாமல்,
அனைவருக்குமான
ஒரு பாதையாக அதை உருவாக்காமல்,
தனக்கு வரும்படி வரும் ஒரு வழியாக மட்டும்
அதை யோசித்தார்.
அவர் படத்திற்கு 1000 ரூபாய் என்று விலை
நிர்ணயித்தார். ஆனால் மற்றவர்கள், மத்திய,
சிறிய பட்ஜெட் படங்கள் இந்தப் பாதையில் எப்படி
பயணிக்க முடியும் என்பதைப்பற்றி அவர்
கவலைப்படவில்லை. பலரும் தன்னைப் பின்பற்றி
அந்தப் பாதையில் வருவார்கள் என்பவர்
பாதை போட்டால் தானே மற்றவர்கள் வர முடியும் ?
ஜம்ப் அடித்து சென்று விட்டால் ?
ஜம்ப் அடிக்கும் திறமையும், சக்தியும் உடையவர்கள்
தானே வர முடியும் ?
DTH மூலம் திரையிட்டால், திரையரங்க வசூல்
குறையுமே என்று அரங்க உரிமையாளர்கள் எதிர்த்தபோது,
“என் படைப்பு -என் பொருள். எப்படி விற்பனை செய்வது
என்று தீர்மானிப்பது என் உரிமை” என்று ஆவேசம்
கொண்டார். தனக்கு வேண்டிய சிலரின் ஒத்துழைப்புடன் திரையரங்க உரிமையாளர் சங்கத்தையே
பிளவுபடுத்தவும் முயற்சிகள் நடைபெற்றன.
பல காரணங்கள் – எடுத்த நிலையை மேற்கொண்டு
எடுத்துச் செல்ல முடியாமல் இறுதியில் வழக்கமான
வழியைப் பின்பற்ற வேண்டியதாயிற்று.
DTH மூலமும் படத்தை வெளியிடுவது நல்ல வழி தான்.
ஆனால் அதை சம்பந்தப்பட்ட அனைவரிடமும்
கலந்து பேசி, அனைவருக்குமான பாதையாக அதை
உருவாக்கி இருந்தால், அவர் பாராட்டப்பட்டிருப்பார் –
அந்த முயற்சியும் வெற்றி பெற்றிருக்கும்.
இங்கேயும் சுயநலம் காரியத்தைக் கெடுத்து விட்டது.
விஸ்வரூபம் படம் வெளியாகும் முன்னர் –
இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு
கிளம்பியபோதே
இவர் என்ன செய்திருக்க வேண்டும் ?
நான் ஒரு படைப்பாளி. என் கருத்துக்களை
நான் விரும்பும் விதத்தில் உருவாக்க எனக்கு எல்லா
உரிமையும் இருக்கிறது. அதை தணிக்கை செய்யவும்,
ஏற்கவும், நிராகரிக்கவும் இந்த நாட்டின்
அரசாங்கம் ஏற்படுத்திய சென்சார் போர்டு என்கிற
அமைப்பு இருக்கிறது. அவர்களிடம் நான் ஒப்புதல்
சான்றிதழ் பெற்ற பிறகு – என் படைப்பில் குறுக்கிட
யாருக்கும் உரிமை இல்லை. படத்தைப் பார்த்த பிறகு
உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால்
அது குறித்து அந்த அமைப்பிடம் எடுத்துச் செல்லுங்கள்
என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.
நாங்கள் பார்த்து ஒப்புதல் கொடுத்த பிறகு தான்
படத்தைத் திரையிட வேண்டும் என்று அவர்கள் சொன்னதை
ஏற்று தானே -அவர்களுக்காக விசேஷ காட்சிக்கு
இவர் ஏற்பாடு செய்தார் ? அந்த ஏற்பாட்டை இவர்
செய்த அந்த தருணத்திலேயே – இவர் தன் படைப்பாளியின்
சுதந்திரம் என்கிற உரிமையை இழந்து விட்டார்.
எப்போது கையில் குரானையும், கோவையையும்,
மதுரையையும் தமிழ்ப் படத்தில் திணித்தாரோ, அப்போதே
அவரது எண்ணம் என்ன என்பது தெரிகிறதே !
தன் உரிமையைத் தானே மனமுவந்து
தத்தம் செய்து கொடுத்த பிறகு இன்று –
“ஒரு கலைஞனுக்கு தான் நினைப்பதை
சொல்லவோ, படைக்கவோ இங்கு உரிமை கிடையாதா ?
சென்சார் போர்டு அனுமதி கொடுத்த பிறகு இவர்கள்
யார் அதைத் தடுக்க” என்று கேட்பதில் என்ன பயன் ?
எப்போது மத்திய காங்கிரஸ் மந்திரி மணீஷ் திவாரியும்,
தன்மானத் தலைவர் வீரமணியும், பற்றாக்குறைக்கு
குஷ்புவும் இவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்தார்களோ
அப்போதே இவரது தரப்பு எவ்வளவு பலமாக இருக்கிறது
என்பது தெரிகிறதே !
டெல்லி நேஷனல் தொலைக்காட்சிகள் மூலம்
இந்த விஷயத்தில் கமலுக்கு ஒரே ஒரு நன்மை
நிகழ்ந்திருக்கிறது. அடுத்த தலைப்பு அவர்களுக்கு
கிடைப்பதற்குள், உடனடியாக இந்தி டப்பிங்கை
வெளியிட்டால், வட மாநிலங்களில் கொஞ்சம்
ஓடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.



காவிரிமைந்தன் சார்,
நீங்கள் கூறுவது உண்மை. சிறந்த ஒரு கலைஞாக
இருந்தாலும், அவரது அப்பட்டமான சுயநலமும்,
பண ஆசையும் அவரைக் கெடுக்கின்றன. அவரது
வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் – மனைவிகள், குழந்தைகள், ரசிகர்கள் என அனைவரிடமுமே அவர் சுயநலவாதியாகவே இருந்திருக்கிறார்.
ரமேஷ்
ஆப்கானிஸ்தானத்தில், அமெரிக்கர்களுக்கும்
தாலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும்
பிரச்சினையை சொல்லும்போது –
கமல் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரையும்,
மதுரையையும் தன் படத்தில் கொண்டு வந்தது தான்
எதிர்ப்புக்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது.
இது தமிழக முஸ்லிம்களை தொடர்பு படுத்துவதாக
இருக்கிறது என்று அவர்கள் கொதிப்படைகிறார்கள்.
எதிர்ப்பில் நியாயம் தெரிகிறது.
முக்கியமாக – அண்மைக் காலங்களில்
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு முஸ்லிம் விரோத
திரைப்படத்தை எதிர்த்தும், பிறகு “துப்பாக்கி”
திரைப்படத்தை எதிர்த்தும் தமிழ் நாட்டில் நிகழ்ந்த போராட்டங்களை பார்த்த பிறகாவது,
கமல் தானாகவே இந்த பகுதிகளை
மாற்றி அமைத்திருக்க வேண்டும்.
அவர் அதைச் செய்யாதது –
வேண்டுமென்றே பிரச்சினையை உருவாக்கி, விளம்பரம்
தேட முயற்சிப்பதாகவே தோன்றுகிறது.
செலவில்லாமல் விளம்பரம் தேட முயற்சித்தது –
விஷயம் முற்றிப்போய், படத்தின் வெளியீட்டையே
அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு கொண்டு போய்
விட்டிருக்கிறது.
இனியாவது சம்பந்தப்பட்ட அமைப்பினருடன் கலந்து பேசி,
படத்தில்அவர்களை அதிகம் காயப்படுத்தும் இடங்களை
விலக்கி படத்தை முடிந்த வரை விரைவாக வெளியிடுவது
கமலுக்கு நல்லது. இத்தகைய வெறுப்பு சூழ்நிலை
தொடர்வது சமுதாயத்திற்கு நல்லதல்ல.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
wordpress தளத்தில் ஏதோ பிரச்சினை.
இரண்டு மூன்று தடவை அச்சேறி விட்டதென்று
நினைக்கிறேன். என்ன கோளாறோ தெரியவில்லை.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Kamal himself is the problem.others utilising the opportunity,it is now their TURN.
கமலின் விஸ்பரூபம் குறித்தும், அவரது தனிப்பட்ட பண்புக்கூறுகள் குறித்தும் தாங்கள் அலசியிருந்த விதம் அருமை.
//கமல் ஒரு நல்ல கலைஞர், சிறந்த படைப்பாளி என்பதில்
எந்தவித சந்தேகமும், யாருக்கும் இருக்க முடியாது//
என்ற உங்களது கருத்திலிருந்து முரண்பட வேண்டியுள்ளது. காரணம், படத்திற்கு படம் மாறுபட்ட தன்மையில் வேசம் கட்டத் தெரிந்த ஒரு நாடகக் கலைஞருக்கு ஒப்பானவரே கமல். அவர் ஒரு கலைஞர், படைப்பாளி என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. உலகத் திரைப்படங்களை நுணுகி ஆய்ந்த எவரிடமாவது கமலின் நடிப்பாற்றலைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்வார்கள். ‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்ற அளவில் தான் கமல் இங்கு நடிகரானாரே தவிர மற்றபடி அவர் திறமைக்குரியவர் என்பது தருக்கத்திற்குரியது. கலைவாணர், நடிகவேள் எம்.ஆர்.இராதா, நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சந்திரபாபு, மனோரமா இவர்களைத்தான் சிறந்த கலைஞர்கள் வரிசையில் வைக்க வேண்டும். இந்த வரிசையில் கமலுக்கு இடம் கிடைக்க, அவர் தன்னை நிரூபித்தாக வேண்டும். வெறும் வேசம் கட்டினால் மட்டும் போதுமா? ஹாலிவுட் நடிகர்கள் பலரின் நடிப்பை அப்படியே நகலெடுக்கும் கமலை மிகச் சிறந்த நடிகர் என்று ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. வேசம் என்பது வேறு. நடிப்பு என்பது வேறு. இதனைப் புரிந்து கொண்டால் கமலையும் புரிந்து கொள்ள முடியும் என்பது எனது கருத்து.
இரா.சிவக்குமார், இதழாளர், மதுரை
his family says that they got the hassan surname from their father;s family friend who was a muslim. in the past we have seen him in many muslim meetings, athiest group meetings supporting them. even now he says that this is one of the most mulsim friendly movie. whatever be it….. everything happens for some reason. let this happen and let him undergo some pain. he deserves that. he is getting handlful from the community whom he claimed he supported.
for all the hindu bashing he has done in the past and hurting hindu sentiments – let him undergo this pain. let him think for a second the freedom his hindu religion has given him in expressing his so called art or movie. i am sure that this episode will come to end very soon. movie will be released everywhere, it may be a hit or flop. but let him learn a lesson from this episode for good. its not good to hurt sentiments of any community – hindu or muslims
under law of cause and effect, effect need not come from the same source. it can be be from other side also. Also time and again people who have proved themselves as very”smart” have always failed. simple, honest and straightforward people have always won.
Dear Srini,
Your comments are quite realistic.
Thank you.
with all best wishes,
Kavirimainthan
கமலஹாசன் மிகச் சிறந்த கலைஞர் உண்மைதான்.ஆனால் அதைவிட அவரிடம் அகம்பாவம் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.
அவர் நடிக்கும் படங்களில் அவர்தான் அனைத்தையும் தீர்மானிக்கக் கூடியவராகவும்,அந்த படத்தின் முழு முடிவும் அவருடையதாகத்தான் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால்தான் அந்த படம் ஒழுங்காக வெளி வரும்.இல்லை என்றால் ஆளவந்தான் கதிதான்.அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பல முறை இதனை ஊடகங்களில் சொல்லி உள்ளார்.
அதே போல வேட்டையாடு விளையாடு தயாரிப்பாளர் காஜாமைதீன் சாகத் துணிந்தார்.
அதில் அவர் உயிர் பிழைத்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்.பல இடங்களில் பல கோடி ரூபாய் வட்டிக்கு வாங்கி படத்தை ஆரம்பித்தேன்.ஆனால் என்னால் படத்தைத் தொடா்ந்து தயாரிக்க முடியாத அளவிறகு பல பிரச்னைகள் வருவதால்
படத்தை தயாரித்து வெளியிட்டு கடனை அடைக்க முடியாது என்ற நிலையில்தான் இந்த முடிவை எடுத்தேன்.என்றார்.
அதன் பின் சினிமா வட்டாரத்தில் ஒரு சமரசம் ஏற்பட்டு செவன்த் சானல் நாராயணன் அந்த படத்தைத் தயாரித்தார்.
படம் வெளிவந்து வெற்றிகரமான படமானது.
மன்மத அம்பு ரிலீசான சமயத்தில் ஜெயா டிவியில் கோலிவுட் கோர்ட் என்ற நிகழ்ச்சியில் செவன்த் சானல் நாராயணன் வேடடையாடு விளையாடு என்ற படத்துக்கு எந்தெந்த வகையில் கமல் தொல்லை கொடுத்தார் என்பதை விலாவாரியாக சொல்லி இருப்பார்.(கௌதம் மேனனை எந்தெந்த வகையில் அவமானப்படுத்தினார் என்பதெல்லாம் சொல்லி இருப்பார.மற்றும் பேக் புரடக்சன்,டப்பிங் என அனைத்திலும்)
பேட்டியின் முடிவில் வேட்டையாடு விளையாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் ஏதாவது ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்து இருக்கிறாரா ?என ஒரு கேள்வி கேட்டார்.
எனக்கென்னமோ அந்தக் கேள்வி இப்போது வரை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
விஷ்வரூபம் அந்த கேள்வியை கொன்று விடும் எனத் தெரிகிறது.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
கமலஹாசன் ஒரு சினிமா வியாபாரி .அவர் படம் காட்டுகிறார். அதற்காக பல தகிடுதத்தங்களை செய்கிறார். தாங்களும் அவர் படத்திற்கு விளம்பரம் செய்யவேண்டாமே .
ஐயா, கீழ் கண்ட செய்தியை கொஞ்சம் பாருங்கள்:
http://timesofindia.indiatimes.com/india/Chidambaram-Im-not-as-foolish-as-you-think-I-am/articleshow/17837551.cms
ரஜினியை போல விழாவுக்கு போனமா வந்தமா என்று இல்லாமல் ப.சி. பிரதமராக தகுதியுள்ளவர் என்று கூறிவைக்க அதை காங்கிரஸ்சின் வாழ் நாள் அடிமையாகி விட்ட ‘கருணாவும்’ வழி மொழிய… இந்நிலையில் ஜெக்கு ஏற்கனவே பிரதமர் கனவு, தகுதியுடையவர் என்று கூறப்படுவதோ பரம வைரி ப.சி.. எனக்கு என்னவோ கமல்ஹாசனுக்கு ஏழரை இங்கு தான் ஆரம்பித்ததாக படுகிறது.
சரி படத்தை ஜெயா டிவிக்கு விற்றிருந்தால் ஒரு வேளை தப்பியிருக்கலாம், ஆனால் கமல் விற்றதோ சன் டிவிக்கு. கூடவே ரெட் ஜயண்ட்டும் ஒரு விநியோகத்தர். மேலும், படத்துக்கு எதிராக ஓங்கி குரல் கொடுப்பவர்கள் ஜெவுடன் கூட்டணியில் உள்ளவர்கள் என்பது மேலும் சந்தேகத்தை கூட்டுகிறது.
எது எப்படி இருப்பினும், நீங்கள் கூறியிருப்பது போல வரலாற்று ரீதியாக (on historical basis) கமல் வினையை அறுத்து தான் ஆகவேண்டும். ஆளவந்தான் எடுத்து நொந்து போன தாணு, வேட்டை ஆடு விளையாடு எடுத்து தற்கொலைக்கு முயன்ற காஜா மைதீன் போன்ற தயாரிப்பாளர்களின் சாபத்திற்கு கமல் எனும் தயாரிப்பாளர் பதில் சொல்லி தானே ஆகவேண்டும்.
ஆனால் நிகழ்வு ரீதியாக (on this particular incident basis) பார்க்கும் போது இந்த ஆர்பாட்டம் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் தவறான முன்னுதாரணமாக போய் விடுமோ என்று பயப்பட வேண்டி இருக்கிறது. புதிய தலைமுறை டிவியில் விவாதத்தில் கலந்து கொண்ட ஒரு இஸ்லாமியர் “கமல் ஏன் ஆப்கானிஸ்தானையும் அங்குள்ள போராட்டகார்களை பற்றியும் படம் எடுக்க வேண்டும்… வேறு கதையே இல்லையா” என்றார். இந்த எண்ணம் ஒருவரின் கருத்து சுதந்திரத்தை பறிப்பது போன்றது தானே!
இது சரியான கருத்தாக தெரிகிறது. இப்படியே இருந்தால், நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ?
நம் வீட்டில் புகுந்து நம்மையும் நம் குடும்பத்தையும் அவதூறு பேசும் ஒரு போக்கிரியைக் கண்டும் காணாமல் அஞ்சி ஒதுங்கும் நாம்,அவன் அடுத்தவீட்டில் நுழைந்து அதையே செய்ய முற்படும்போது அவர்களால் நைய புடைக்கப்படுவதைக்கண்டு ரசித்து மகிழ்வதை வீரம் என சொல்வதா அவலம் என சொல்வதா?
நீண்ட சிந்தனைக்கு பின் எனக்கு தோன்றியது – அவலம்
மிகவும் நன்றி, எழில்..பொறுத்திருந்து பாருங்கள்.இனிமேல் அந்த போக்கிரி அடுத்த வீட்டுபக்கம் தலை வைத்துக்கூட படுக்கமாட்டான்.அத்தனை கோபத்தையும் நம் வீட்டில் தான் காட்டுவான்.