இந்த வெறியர்களை சுட்டால் என்ன ?
நேற்று பங்களூர் கோர்ட் ஒன்றில் சுரங்க ஊழல்
மந்திரி ஜனார்தன ரெட்டியின் வழக்கு விசாரணைக்கு
வந்தபோது, அதை புகைப்படம் எடுக்க,
செய்தி சேகரிக்க முயன்ற பத்திரிகையாளர்களை,
ஜனார்த்தன ரெட்டியிடம் பணம் வாங்கும்
வக்கீல்கள் என்கிற அடியாட்கள் கூட்டம் தாக்கியது.
போலீசார் அவர்களை உடனடியாக அடக்கத்
தவறியதன் விளைவு –
பல பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர்.
அவர்களது காமிராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
அவர்கள் மீது, கண்ணாடி டம்ப்ளர்களும்,
நாற்காலிகளும் தூக்கி எறியப்பட்டன.
அருகிலிருந்த கல்லூரி மைதானத்தில் குழுமியிருந்த
கல்லூரி மாணவ, மாணவிகள் தாக்கப்பட்டனர்.
ஒரு ஜட்ஜ் உட்பட 86 பேர்கள் காயம் அடைந்தனர்.
ரகளையில் – மாடியிலிருந்து ஒரு பொறுக்கி வக்கீல்
தூக்கிப்போட்ட நாற்காலி, கீழே நின்று கொண்டிருந்த
ஒருவர் தலையில் விழுந்து அவர் சம்பவ
இடத்திலேயே மரணம் அடைந்தார்.
இந்த வெறிபிடித்த நாய்களை சுட்டுத் தள்ளாமல் –
போலீஸ்காரர்களைத் தடுத்தது எது ?
கொள்ளைக்கார ஜனார்த்தன ரெட்டிக்கு இன்னும்
அரசாங்கத்தில் இருக்கும் செல்வாக்கா ?
பண பலமா ? இல்லை எல்லாவற்றையும்
சகித்துக் கொள்ளும்,ஜனநாயகத்திற்கு தகுதியற்ற
நம் மக்களா ?









வாழ்க ஜனநாயகம். நாட்டில் வெறி நாய்கள் ஜாஸ்தியாகி விட்டது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? வாழ்க ஜனநாயகம்.
நண்பர்களுக்கு,காலை வணக்கம்
ஒரு சிறு திருத்தம் ..
இவர்கள் பொறுக்கி வக்கீல்கள் அல்லர்..
வக்கீல் வேஷமிட்ட பொறுக்கிகள்..
ஏற்கனவே
போலீஸ் வேஷமிட்ட பொறுக்கிகளையும்,
மாணவர் வேஷமிட்ட பொறுக்கிகளையும்,
நிறைய சந்தித்துள்ளோம்.
வளர்த்துமிருக்கிறோம்.
சமீப காலமாக,
ஆசிரியர் வேஷமிட்ட பொறுக்கிகளும்,
சாமியார் வேஷமிட்ட பொறுக்கிகளும்,
கூட வர ஆரம்பித்து விட்டார்கள்..
ஏன் எழுத்தாளர் வேஷமிட்ட ஓரிரு பொறுக்கிகளும்,
இவ்வலைதளத்தில் இல்லையா என்ன?
அனைத்திற்கும் மூலகாரணம்,
அரசியல்வாதிகள் வேஷமிட்ட பொறுக்கிகள்,
நாற்பது ஆண்டுகளுக்கும் முன் தோன்ற துவங்கிய போது,
முளையிலேயே அவர்களைக்கிள்ளி எறியாத
நம் மெத்தனம்தான்!
களையும்,நோயும்,தீயும்,விஷமும், பரவுவது,
அவைகளின் விருப்பம்போல!
நம் விருப்பத்திற்கிணங்க அல்ல!!
இந்நிலை தொடருமானால் ,
இந்த வேஷதாரி பொறுக்கிகளிடமிருந்து நாம் விடுதலைப்பெற,
உண்மையான பொறுக்கிகளின் உதவியை
நாட வேண்டி வரும்!
நன்றி கண்பத்,
பிரமாதமான பின்னூட்டம் !
அநேக சமயங்களில் உங்கள் பின்னூட்டங்கள்
இடுகைக்கு நல்ல வ்லு சேர்க்கின்றன.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
தாரளமாக சுடலாம். கொள்ளையர்களை சுடும் பொது கொலைகாரர்களை சுட கூடாதா என்ன! ஆனால் சுட மாட்டார்கள். நமது போலீஸ் அப்படி!
நன்றி கா.மை..
நீங்கள் இராமர்,நான் அணில்..
Period