தமிழ் நாடு அரசின் மலையாள விளம்பரமும், முட்டாள் மந்திரிகளின் ரீ-ஆக் ஷனும்.

தமிழ் நாடு அரசின் மலையாள விளம்பரமும்,
முட்டாள் மந்திரிகளின் ரீ-ஆக் ஷனும்.

இன்று மிக புத்திசாலித்தனமான  காரியம் ஒன்றைச்
செய்திருக்கிறது தமிழ் நாடு அரசு.
( மற்ற விமரிசனங்கள எல்லாம் தனியே
வைத்துக்கொள்ளலாம். இது முல்லைப் பெரியார்
exclusive !) இன்றைய, புத்திசாலித்தனமான
செயலுக்காக “அம்மா”வுக்கு உளம் நிறைந்த பாராட்டுகள் !

மலையாள தேசத்தின் முக்கியமான நாளிதழ்கள்
அனைத்திலும் இன்று தமிழ் நாட்டின் சார்பில்
ஒரு முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
(தமிழ் நாட்டின் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது)

முல்லைப் பெரியார் அணை தொடர்பான அனைத்து
விவரங்களையும் அதில் கொடுத்து –

அணை உடைந்து விடும்
என்கிற அச்சமே கேரள மக்களுக்கு தேவை இல்லை.
அநாவசியமான பீதியை கிளப்பி விடுபவர்களின்
பின்னணியில் இருப்பவர்கள் பெரியாறு அணையின்
நீர்ப்பிடிப்பு பகுதியில் சட்டவிரோதமாக ரிசார்ட்டுகளையும்,
கட்டிடங்களையும் கட்டி இருக்கும் நில அபகரிப்பு கும்பலே !

நீண்ட காலமாக அணையில் 136 அடிக்கு மேல் நீர்
தேக்கப்படாததால், காலியாக இருந்த அந்த நீர்ப்பரப்பு
பகுதிகளை கேரளா  நில அபகரிப்பாளர்களால்,
நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தமிழ் நாட்டுக்கு
குத்தகைக்கு விடப்பட்ட பகுதிகளில் ரிசார்ட்டுகள்
மற்றும் பிற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

அணையில் நீர் மட்டத்தை இப்போது உயர்த்தினால் –
அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதாலேயே
கேரள மக்களிடம் பீதியைக் கிளப்பி அணையை
செயலிழக்கச் செய்ய சதி செய்கிறார்கள் –
இவர்கள் வலையில் மலையாள மக்கள் சிக்க வேண்டாம்
என்றும் இந்த முழு பக்க விளம்பரம் கூறுகிறது.

இந்த விளம்பரத்தால் எரிச்சல் அடைந்துள்ள
கேரளாவைச் சேர்ந்த மந்திரிகள் முட்டாள்தனமாக
தங்கள்  ரீ- ஆக் ஷனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மலையாள மந்திரி கே.எம்.மணி –

“எங்கள் எல்லைக்குள் புதிய அணையைக் கட்டுவதற்கு
எங்களுக்கு யாருடைய தயவும் தேவை இல்லை.
முக்கியமாக ஜெயலலிதாவின் அனுமதி தேவையே இல்லை.
புதிய அணை கட்டுவது என்கிற முடிவிலிருந்து
பின்வாங்குவது என்கிற பேச்சே இல்லை ”

மலையாள நீர்ப்பாசன  மந்திரி பி.ஜே.ஜோசப் –

(அணையை இடிக்க வேண்டும் என்பவர்களின்
வரிசையில் மற்ற எல்லாரையும் இடித்து தள்ளிவிட்டு –
முன்னால் வந்து நிற்பவர் இவர்.)

“தமிழ் நாடு முதலைமைச்சர் ஜெயலலிதாவின்
விளம்பரம் பொய்யான தகவல்களைத்தான்
தருகிறது. எந்த லேண்ட் மாபியா கும்பலும்
இதன் பின்னணியில் இல்லை. சுப்ரீம் கோர்ட்டே
நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடியாக
குறைக்க விரைவிலேயே எங்களுக்கு அனுமதி
தரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.”

அவர்களுக்கு தமிழ் மக்களின் சார்பாக
நான் சொல்ல விரும்புவது –

“முட்டாள் மந்திரிகளே – (முட்டாள் என்பது
அவதூறான வார்த்தை அல்ல. இது அவரது
மூளைத்திறன் குறித்த நமது கணிப்பு மட்டுமே !)

சுப்ரீம் கோர்ட்டே அனுமதி கொடுக்கும் என்கிற
நம்பிக்கை, உண்மையிலேயே உங்களுக்கு இருந்தால்,
தீர்ப்பு வரும் வரை அமைதியாகக் காத்திருக்கலாமே –
ஏன் ஆளாளுக்கு  இப்போது “பேட்டை” துள்ளல்
போடுகிறீர்கள் ?

முல்லைப் பெரியாருக்கு பதிலாக புதிய அணையைக்
கட்ட வேண்டும் என்று கேரள சட்டமன்றத்தில்
ஒரு மனதாகத் தீர்மானம் போடுவது இது 3வது முறை.

முதல் தடவை -1993ல் கே.கருணாகரன் காலத்தில்.

2வது தடவை – 2009ல் வி.எஸ்.அச்சுதானந்தன் காலத்தில்.

3வது தடவை – இப்போது 09/12/2011 அன்று
விசேஷமாக கூட்டப்பட்ட சட்டமன்றத்தில் –
உம்மன் சாண்டியின் காலத்தில்.

உங்களுக்கு எந்தவித சந்தேகமும் வேண்டாம் –
மீண்டும் அதே அனுபவம் கிடைக்கும்.

முந்தைய தீர்மானங்கள் போன அதே இடத்திற்கு
இதையும் அனுப்பும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை.
இன்றைய குமுளி ஓட்டம் அதன்  துவக்கம் தான்.”

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to தமிழ் நாடு அரசின் மலையாள விளம்பரமும், முட்டாள் மந்திரிகளின் ரீ-ஆக் ஷனும்.

  1. சத்ரியன்'s avatar சத்ரியன் சொல்கிறார்:

    //முந்தைய தீர்மானங்கள் போன அதே இடத்திற்கு
    இதையும் அனுப்பும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை.
    இன்றைய குமுளி ஓட்டம் அதன் துவக்கம் தான்.”//

    உண்மைதான். ஆனாலும்,

    போராட்டத்தையும், எதிர்ப்பையும் தொடர்ந்து பலப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கிருக்கிறது.

  2. surendra's avatar surendra சொல்கிறார்:

    nalla padhivu malayala arasiyalvaadhigalukku mandaiyil uraiththal sari
    nandri adhusari enakku oru iyyappadu irukkindradhu en endha arasiyal prachchanai vandhalum kooththadigalukku ennavelai
    nandri

  3. Bava Sulaiman, Nagercoil's avatar Bava Sulaiman, Nagercoil சொல்கிறார்:

    Sir,
    Thanks for the wounderful aricle… Tamilan Just woke up…. ONE IMPORTANT POINT…. The Eearth quake in Iduki disti…28 time in last 6 monthes ) – the center of quake is just 1.5km from IDUKI DAM and 45KM from MP DAM… the TUKLAK commnet is correct. the Earth Quake is happaning because of IDUKI DAM not because of MP DAM. It was said by the Kairali TV yesterday…..The land mafia issue also true.. in a TV interview Fm of Keral Mani agreed that his relatives has resorts in Iduki Disti..

  4. boopathy's avatar boopathy சொல்கிறார்:

    Kerala politician and people tottally forgetton that, in tamilnadu around 40 to 45 lakhs malayalees are residing if we recersed to them what will happen.

  5. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    அக்டோபர் தீபாவளி சீசன், ஜனவரி பொங்கல் சீசன் மாதிரி முல்லை பெரியாறு பிச்சனையை மலையாளி எழுப்புவதும், அதை எதிரிக்க நாம் போராடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விரும்பியோ, விரும்பாமலோ ஒரு பிடி அரிசி,பருப்பு,மாட்டு கரி கூட தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கு நாம் அனுப்ப கூடாது. இன்று கேரளாவில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.65 க்கும், ஒரு கிலோ மாட்டிறைச்சி ரூ.500 க்கும் விற்க படுகிறது. இன்னும் ஒரு மாதம் போனால் இந்த விலை குறைந்தது 10 மடங்கு உயரும். அப்போது தான் கேரள மக்களுக்கு (விளைவித்து தருபவனுக்கே) “வயிற்றில் அடித்தால் எப்படி வலிக்கும்” என்று புரியும்… இனி எந்த காலத்திலும் முல்லை பெரியாறு பற்றி கனவில் கூட தமிழனுக்கு எதிராக சுண்டு விரலை நீட்ட மாட்டார்கள். எனவே இப்போதைய தேவை கேரளாவின் மீது பொருளாதார தடையே…!!! யார் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது தான் நடக்கும்…!!!!

  6. akbarmydeen's avatar akbarmydeen சொல்கிறார்:

    Dear Tamilians, We should wait to see supreme courts verdict but we have to push our demands, not to build a new Dam on Periyar, in all ways and means and an apppeal to all political parties in Tamil Nadu to fight with hand and hand for our water resource, please not to let tamilpeople down.

  7. mahendran's avatar mahendran சொல்கிறார்:

    Mullai periyarai patri pesumpodum thandai periyar patri pesi evanuckum tamilan endra vunarvu vanduvidacioodathu viyabaram paduthu vidacoodathu endru ennum karunanithicku munnal jayalalitha evvalavoe uyarndhu nirckirar tamilan VAIKO pondravarghal iruckum varai tamilan tamilanaga soodu,soranai ullavanaga iruppan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.