விபரீதத்திற்கு பொறுப்பு -தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் திருமதி சோனியாவும் திருவாளர் சிதம்பரமும் தான் ….

விபரீதத்திற்கு பொறுப்பு -தூண்டி விட்டு
வேடிக்கை பார்க்கும் திருமதி சோனியாவும்
திருவாளர்  சிதம்பரமும்  தான் ….

முல்லைப் பெரியாறு அணை தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது.  ஆனால், கட்டப்பட்டுள்ள இடம்
கேரளாவில் இருந்து குத்தகைக்கு பெறப்பட்ட இடம்.
கேரளாவின் எல்லைகுட்பட்ட, அதிகாரத்திற்குட்பட்ட
இடம். அங்கே தமிழக போலீசுக்கு, காவலுக்கு –
கேரளா அனுமதி மறுக்கிறது. எனவே அணை –
கேரள போலீசின் பொறுப்பில் தான் இருக்கிறது.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், அங்கே
நிறுத்தப்பட்டிருக்கும் போலீசுக்கான சம்பளத்தையும்
தமிழ்நாடு அரசிடமிருந்து வசூலித்து விடுகிறது கேரளா!

அணையை எப்படியாவது செயல் இழக்கச்செய்ய
வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர்
கேரள அரசியல்வாதிகளும், கேரள அரசும்.
அதனால் அவர்கள் தரப்பிலிருந்து எப்போது
வேண்டுமானாலும் அணைக்கு ஆபத்து வரலாம்.

எனவே தான் மத்திய தொழில் பாதுகாப்பு படையை
(Central Industrial Security Force)
அங்கு பாதுகாப்பு பணிகளுக்கு அனுப்புமாறு
தமிழக அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இது ஒன்றும் மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு
காட்டும் கருணை அல்ல.
அது நமது உரிமை. இந்த படை உருவாக்கப்பட்டதன்
நோக்கமே, மத்திய, மாநில அரசுகளுகக்குச்
சொந்தமான இடங்களுக்கும், கட்டிடங்களுக்கும்
பாதுகாப்பு அளிப்பது தான். இது எந்த இடத்தில்
பணிகளுக்காக அனுப்பப்பட்டாலும், அந்த இடத்தின்
சொந்தக்காரர்களே(இங்கு – தமிழ் நாடு அரசு )
அது தொடர்பான செலவை ஏற்க வேண்டும்.

இப்போது தான் தமிழக அரசு பாதுகாப்பை
கேட்கிறது என்றில்லை.

ஏற்கெனவேயே,சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த சமயம்,
2006ல் – இந்த அணைக்கு பாதுகாப்பு கொடுக்கும்
விஷயத்தை ஆராய்ந்து முடிவு செய்ய
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒரு குழு
ஏற்படுத்தப்பட்டது.அதில் உளவுத்துறை
அதிகாரி பிரிட்டோ ஹரிதாஸ், PWD நிர்வாகப்
பொறியாளர் பாஸ்கர், EB நிர்வாகப் பொறியாளர்
சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள்.

இந்தக் குழுவின் சார்பில் –
முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு
செய்த பின்னர் அணையின் நிரந்தர பாதுகாப்பிற்காக
மத்திய உள்துறைக்கு அவர்கள் 11 பரிந்துரைகளைச்
செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் இருக்கும் கேரள
போலீசை உடனடியாக நீக்கி விட்டு அதற்கு பதிலாக
மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை நியமிக்க
வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தனர்.

அணைக்கு உட்பட்ட இடத்தில்,
சுமார் 3914 ஏக்கர் நிலத்தில் –
சட்டத்திற்கு புறம்பாக பல ஆக்கிரமிப்புகள்
உள்ளன. அங்கு தங்கும் விடுதிகள், மது அருந்தும்
கூடம், வீடுகள் போன்றவை சட்டவிரோதமாக
அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருக்கின்றன. அவை
உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் இந்த
குழு பரிந்துரை செய்திருக்கிறது.

இந்த பரிந்துரைகளின் மீது இன்று வரை எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த முடிவை
எடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மத்திய
உள்துறை அமைச்சர் ப.சி. அவர்கள்.

1)  2006-லேயே மத்திய தொழில் பாதுகாப்பு
படையினரை முல்லைப் பெரியாறு அணையின்
பாதுகாப்பு பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று
மத்திய அரசு நியமித்த குழுவே பரிந்துரை
செய்திருக்கிறது.

2) தமிழ் நாடு அரசு இதே வேண்டுகோளை
10 நாட்களுக்கு முன்னர் மத்திய அரசின் முன்
வைத்திருக்கிறது.

3) சுப்ரீம் கோர்ட்டிலும் தமிழ் நாடு  அரசு இதே
வேண்டுகோளை முன் வைத்திருக்கிறது.

4) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின்
முன்பாக முன்னாள் நீர்ப்பாசனத் துறை பொறியாளர்
சங்கத்தினர் சார்பாக இதே போன்ற ஒரு மனு
தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

கேரளத்தில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் கட்சி.
தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை
என்பதோடு எதிர்க்கட்சி அளவில் கூட இல்லை.

எனவே தமிழ் நாட்டிற்கு சங்கடம் கொடுக்க வேண்டும்
என்கிற நோக்கத்தில் கேரள அரசு கிளப்பி விடும்
புரளிகளை சற்றும் கண்டு கொள்ளாமல்,
கட்டுப்படுத்தாமல் ஒன்றையும் காதில் போட்டுக்
கொள்ளாமல் வேண்டுமென்றே மவுனமாக
இருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவி
திருமதி சோனியா காந்தி.

ஒரு தமிழர் என்கிற அளவில் உணர்வு இல்லா
விட்டாலும், மத்திய உள்துறை அமைச்சர் என்கிற
முறையில் தனக்கு இருக்கும் பொறுப்பையும்
நிறைவேற்றாமல் மவுனம் சாதிக்கிறார்
திருவாளர் ப.சிதம்பரம் அவர்கள்.

நாளுக்கு நாள், மணிக்கு மணி முற்றி வரும்
பிரச்சினையில் –
இரு மாநிலங்களின் எல்லையில் ஒரு லட்சம்
மக்கள் கூடி உணர்ச்சி வசப்பட்டு போராடும்
இந்த வேளையிலும் –
இவர்கள்  இருவரும் மவுனமாக இருப்பது
இந்த நாட்டிற்கு நல்லதல்ல.
நாளை விபரீதம் ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு
இவர்களின் செயலற்ற தன்மையே  பொறுப்பு.

தமிழ் நாடு அரசு அவஸ்தைப் படட்டும்,
சங்கடத்தை அனுபவிக்கட்டும்
என்று நினைத்து -அநாவசியமாக
லட்சக்கணக்கான மக்களின் உணர்வோடு,
உயிரோடு,   விளையாடாமல் –
இவர்கள் உடனடியாகச் செயல்பட வேண்டும்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to விபரீதத்திற்கு பொறுப்பு -தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் திருமதி சோனியாவும் திருவாளர் சிதம்பரமும் தான் ….

  1. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    //அநாவசியமாக
    லட்சக்கணக்கான மக்களின் உணர்வோடு,
    உயிரோடு விளையாட வேண்டாமல் –
    இவர்கள் உடனடியாகச் செயல்பட வேண்டும்//

    என்ன தான் இத்தாலி ஓட்டலில் அஞ்சுக்கும், பத்துக்கும் வேலை செஞ்சாலும் இன்று மன்மோகன் உட்பட தேசப் பற்று பீறிடும் அனைத்து இந்தியர்களுக்கும் அன்னையாக இருக்கும் சோனியா காந்திக்கு, எதை எடுத்தாலும் லட்சம் கோடி தான்… உதாரணம்: தமிழனை அழிக்க வேண்டுமா? 2 லட்சம் பேரை கொன்று விடு…. ரூபாயை திருட வேண்டுமா ? 1 .7 லட்சம் கோடியை திருடி பங்கிடு….!!! இந்த கணக்கு படி பார்த்தால் அடுத்த லட்சம் “தமிழனின் உயிர் தான்”…. அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்து விட்டன. உதாரணங்கள்: குமுளியில் நுழையும் தமிழனை கண்டது சுட கேரளா உத்தரவு, இன்று வரையிலும் மத்திய் படை வராது இருப்பது, கேரளாவில் குடி இருக்கும் தமிழர்களையும், அவரின் சொத்துகளையும் கேரளா இன வெறி அமைப்புகள் கணக்கெடுத்து வைத்திருப்பது….!!!

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    The Congress Govt at the centre has to be dismissed by the President.It has lost all the values and ethics and are simply counting days.The nation is at a grave emergent situation.Unfortunately we have a dummy President incapable of acting.God save India.
    It is a shame that a person who at the most can be a supervisor in a Pizza Hut outlet is being projected as Mother India!!Also her son whose IQ is half his age is being projected as the future Prime Minister!!!
    CONGRESS PARTY IS ALL SET TO DESTROY INDIA.
    CITIZENS BEWARE

  3. விஜயகாந்த்'s avatar விஜயகாந்த் சொல்கிறார்:

    இப்போது இதற்க்கு ஒரே தீர்வு இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைப்பது மட்டுமே……!

  4. chezhiyan's avatar chezhiyan சொல்கிறார்:

    அன்புள்ள காவிரிமைந்தன் அவர்களுக்கு,

    அற்புதம்.எப்படித் திரட்டுகிறீர்கள் இந்த
    விவரங்களை எல்லாம் ?
    முக்கியமான நடப்புகளைத் தேர்ந்தெடுத்து
    அக்கரையாக எழுதுகிறீர்கள். நல்ல இயல்பான
    தமிழில் எழுதுகிறீர்கள். நல்ல அழுத்தத்துடன்,
    நிறைய புள்ளி விவரங்களுடன் ஆதாரபூர்வமாக
    எழுதுகிறீர்கள்.
    நடுநிலையான, உறுதியான செய்தித்தாள்கள்
    இல்லாத, நம் தமிழ்ச் சமுதாயத்திற்கு உங்களைப்
    போன்றவர்களின் பணி மிகவும் உதவியாக இருக்கும்.
    உங்கள் பணி நன்கு தொடர வாழ்த்துக்கள்.

    உங்களைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள
    விரும்புகிறேன். உங்கள் பெயர் மற்றும் புகைப்படத்தையும்
    உங்கள் தளத்தில் போடுங்களேன். என்னைப் போல்
    நிறைய பேர் இதை விரும்புவார்கள்.

    வணக்கத்துடன் – செழியன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் செழியன்,

      உங்கள் பாராட்டுகளுக்கும்,
      வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நான் இப்போதைக்கு சென்னையில் இருக்கிறேன்.
      பல பொது நிகழ்ச்சிகளையும்,
      அரசியல் நிகழ்வுகளையும் அருகில் இருந்து
      பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது.

      என்னைப் பற்றி யாருக்கும் தெரியாது என்பதால்,
      நான் நிறைய விஷயங்களைக் கூர்ந்து கவனிக்கவும்,
      பலருடன் கலந்து பேசி பல விவரங்களைத்
      தெரிந்து கொள்ளவும் முடிகிறது.

      என் பெயரோ, புகைப்படமோ வெளியானால் –
      இப்போது எனக்கு இருக்கும் இந்த சுதந்திரம்
      பறி போகும்.
      என்னால் இதே போல் எழுத முடியாது.

      என் பெயரோ, புகைப்படமோ வெளியாவதை விட,
      நான் தொடர்ந்து பயனுள்ள வகையில்
      செயல்படுவதையே விரும்புகிறேன்.

      உங்கள் நல்லெண்ணங்களுக்கு நன்றி.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

      பின் குறிப்பு – ஒரு விதத்தில் என் புகைப்படத்தை
      நீங்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள்.
      காவிரிமைந்தன் gravator-ல் தொடர்ந்து
      வந்து கொண்டிருப்பது 3 வயதில், என் வாழ்நாளில்
      எடுக்கப்பட்ட முதல் புகைப்படமே !

  5. dhinakar's avatar dhinakar சொல்கிறார்:

    thank you sir!thank you very much..!how much electricity goes from NEYVELI to kerala….how it has destroyed farmers life in and around NEYVELI….how many malayalees are working there…..besides neyveli….the detail of the electricity goes from KALPAKKAM to KERALA should well be informed to tamil people.we tamilians are losing our land in NEYVELI and we are living in radiation zone around kalpakkam…..but kerala enjoys benefits …..everything should be discussed in detail.every educated tamil should be aware of reality

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    செழியன் சொல்வதை நான் வழி மொழிகிறேன்.காவிரிமைந்தன் வலைத்தளம் மிக பொறுப்பான சீரிய முறையில் நடத்தப்படுகிறது.ஒரு நல்ல குடிமகன் என்ன செய்யவேண்டுமோ அதை அவர் செவ்வனே செய்து வருகிறார்.
    அதே சமயம் அவர் தான் வெளிச்சத்திற்கு வர விரும்பவில்லை என்பதும் முற்றிலும் சரியானதே.தேவையில்லாத பிரச்சினைகளை அது உருவாக்கும்.

  7. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    தவறு பொன்ராஜ் அந்த காவிரிமைந்தன் வேறு நபர.(என நம்புகிறேன்!!)

  8. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக நண்பர்களே,

    என்னைப் புரிந்து கொண்டமைக்கு
    மிக்க நன்றி கண்பத்.

    நண்பர் பொன்ராஜ் மதியழகன் –

    மன்னிக்கவும். அந்த புகைப்படத்தில்
    இருப்பது நான் இல்லை.

    காவிரி மைந்தன் என்கிற பெயரில்
    வேறு ஒரு எழுத்தாளரும் இருக்கிறார்
    என்று நினைக்கிறேன்.

    தங்கள் அக்கரைக்கு நன்றி.

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

    • Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

      ஆர்வகோளாறு. வேறொன்றும் இல்லை. முகம் தெரியாத நபராக இருந்தாலும் ஒருவரின் கருத்து எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அனுபவத்தில் நானும் உணர்ந்துள்ளேன். மற்றபடி உங்களை வெளிக்காட்டாமல் செய்யும் இந்த சீரிய பணிக்கும் என்றும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  9. kingston.'s avatar kingston. சொல்கிறார்:

    விபரீதத்திற்கு பொறுப்பு -தூண்டி விட்டு
    வேடிக்கை பார்க்கும் திருமதி சோனியாவும்
    திருவாளர் சிதம்பரமும் தான் ….

    இல்லை. இவர்கள் வெறும் கைக்கூலி தான்.

    2ஜி ஊழலையும்
    ஜெயிலில் – களிதின்று
    ஜாமீனில் – வெளிவந்திருக்கும்
    கனியையும் நாமெல்லாம் மறந்து விட வேண்டும்,
    மக்களுக்காக மகத்தான தியாகம் செய்து சிறை புகுந்த குட்டி தலைவியாக பார்க்க வேண்டும்.

    இதற்காக தி.மு.க. தான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் உடன் போட்டுள்ள கூட்டுகளவாணித்தனம் தான் கேரள காங்கிரஸ் ஆட்சியின் வெறித்தனமான போக்கு.

    அதற்கு காங்கிரஸ்க்கு தி.மு.க. தர வேண்டிய பதில் உபகாரம் – கூடங்குளம் பிரச்சினையை நாமெல்லாம் மறந்து விட வேண்டும், போபுர்ஸ் ஊழல் முதல் இன்று வரை சுவிசில் குவித்ததை நாமெல்லாம் மறந்து விட வேண்டும்.

    தமிழனுடைய ஞாபக மறதியே ! நீ நீடூழி வாழி ..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.