தமிழக அரசு கேரள அட்வகேட் ஜெனரலை
பாதுகாக்க வேண்டும் …..

(மலையாள வலைகளை தோண்டித்
துருவிப் பார்த்தும் எனக்கு கிடைத்தது
அவரது இந்த கார்ட்டூன் மட்டும் தான் )
முல்லைப் பெரியாறு அணை உடைந்தாலும் பெரிய்
பாதிப்பு ஏதும் ஏற்படாது. அணை உடையும் பட்சத்தில்
வெளியேறும் நீரை சுலபமாக கீழே உள்ள இடுக்கி
அணையில் தடுத்து நிறுத்தி விடலாம் என்றும் –
மிஞ்சிப்போனால் 450 குடும்பங்களே பாதிக்கப்படக்கூடிய
சூழ்நிலை இருப்பதால் – அவர்களை உடனடியாக
பாதுகாப்பான இடத்திற்கு இட்டுச்செல்வதில் எந்த
சிரமும் இருக்காது என்றும் –
அணை 24 மணி நேரமும் தொடர்ந்து
கண்காணிக்கப்படுவதால் எந்தவித அச்சமும்
கொள்ளத் தேவையில்லை என்றும் –
கேரளா உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த
கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி
அவர்களுக்கு –
கேரளாவில் பெரிய அச்சுருத்தல் ஏற்பட்டிருக்கிறது.
ஆளும் கட்சி கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி,
மலையாளிகள் ஆகிய அனைவரும் அவரை
எதிரியாகப் பார்க்கின்றனர். மீடியா அவரை தொடர்ந்து
தொல்லைப் படுத்தி வருகிறது.
செவ்வாய்க்கிழமை கேரளா உயர்நீதிமன்றத்தில்
ஆஜரான தண்டபாணி எல்லாரும் தன்னை எதிரியாக
கருதி துன்புறுத்துவதாகவும், தன் வீட்டின் எதிரேயே
தன் கொடும்பாவியைக் கொளுத்துவதாகவும் கூறி
தன் குறையை குமுறல்களோடு நீதிபதிகளிடம்
வெளிப்படுத்தி இருக்கிறார்.
புதன்கிழமை அவர் கேரள கேபினட் கூட்டத்திற்கு
வரவழைக்கப்பட்டு, கே.எம்.மணி,
பி.ஜெ.ஜோசப் ஆகிய அமைச்சர்களின் கடுமையான
வசவுக்கு உள்ளாகி இருக்கிறார்.
இப்போதைக்கு உடனடியாக அவரை பதவி நீக்கம்
செய்தால் ஏதேனும் வேறு சிக்கல்கள் எழலாம்
என்பதால் அதைச்செய்யாமல் –
அவர் தொடர்ந்து தன்னிச்சையாக எதையும் செய்து
விடாதபடி, 5 அமைச்சர்கள் கொண்ட ஒரு குழு
அமைக்கப்பட்டு, அந்த குழு சொல்கிறபடி தான்
அவர் கோர்ட்டில் செயல்பட வேண்டும் என்று
வற்புறுத்தப்பட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து
கேரள அரசின் கட்டுப்பாட்டிற்குள்
வைக்கப்பட்டிருக்கிறார்.
கேரள அரசு பரம எதிரியாகப் பார்க்கும் இந்த
அட்வகேட் ஜெனரல் தண்டபாணி –
அவர் அங்கேயே, அந்த பதிவியிலேயே
தொடர்ந்தாலும் கூட – எதிர்காலத்தில்
தமிழ் நாட்டிற்கு மிகப் பெரிய சொத்தாக இருப்பார்.
எதிர்காலத்தில் -இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்
முன்பு விசாரணைக்கு வரும்போது,
அவரது சாட்சியமும், வாக்குமூலங்களும்
நமக்கு பேருதவியாக இருக்கும்.
எனவே அவரை பத்திரமாகப் பாதுகாக்க தமிழ் நாடு
அரசு அனைத்து முயற்சிகளையும் (நேரிடையாக
அல்லது மறைமுகமாக)எடுத்துக் கொள்ள வேண்டும்.



அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…