இவருக்கு அவரே தேவலையா ? இல்லை அவருக்கு இவர் தேவலையா ?

இவருக்கு அவரே  தேவலையா ?
இல்லை அவருக்கு இவர் தேவலையா ?

இரண்டு நாட்களாக பல உள்ளங்களில்
அலைபாயும் எண்ணங்கள்.
மனதுக்குள் கேள்விகள் –

இவருக்கு அவரே  தேவலையோ ?

குடும்ப ஆட்சி –
இந்த மகன், அந்த மகன்,
மகள்,துணைவி,பேரன்கள்,
சென்னை, மதுரை, கோபாலபுரம்,
சிஐடி காலனி என்று
ஏராளமான அதிகார மையங்கள்.
எங்கும்,எதிலும்  – ஊழல், லஞ்சம்.
சுற்றிலும் துதிபாடும் கூட்டங்கள் –
தினந்தோறும் பாராட்டு விழாக்கள் – மீண்டுமா ?
அய்யோ தாங்காது – அவர் வேண்டவே வேண்டாம் !

சரி –

புத்தி கூர்மை, அசாத்திய துணிச்சல்,
சாமர்த்தியம், அனுபவம், நிர்வாகத் திறமை
அனைத்தும் நிரம்பியவர் என்று
மீண்டும் தேர்ந்தெடுத்தோமே –

சட்டமன்ற கட்டிடம், சமச்சீர் கல்வி,
மருத்துவ காப்பீடு, நூலகம், தோட்டம் –
ஆக மொத்தம் அவர் துவக்கிய எதையும்
விடுவதில்லை என்று கொசு அடிப்பது போல்
இவர் தேடித்தேடி ஒழிப்பதிலேயே
கவனம் செலுத்துகிறாரே!

பால், பஸ், மின்சாரம் என்று சாதாரண மக்கள்
அன்றாடம் பயன்படுத்தும் அனைத்திலும்
கை வைக்கிறாரே.

விலையை உயர்த்த – காரணங்கள்,
நியாயங்கள் இருக்கின்றன – உண்மை தான்.

ஆனால் மக்களின் –
தாங்கும் சக்தியை,
வாங்கும் சக்தியை –
எண்ணிப் பார்க்க வேண்டாமா?

2 குழந்தைகள், கணவன், மனைவி ஆக
4 பேர் மட்டுமே உள்ள சிறு குடும்பம் கூட
மாதம் ஆயிரம் ரூபாயை தனியே
எடுத்து வைக்க வேண்டுமே !
எப்படி முடியும் ?

——————————————————————————-
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
( குறள் எண் : 475 )

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் ,
அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்)
அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால்-
அச்சு முறியும்.
———————————————————————————-

எந்த வரியாகட்டும், விலை உயர்வாகட்டும் –
ஒரே சமயத்தில் இத்தனை பாரத்தை
தாங்கிக் கொள்ள மக்களுக்கு சக்தி இருக்குமா
என்று யோசிக்க வேண்டாமா ?

மக்களின் நிஜமான கஷ்டங்களும், உணர்வுகளும்
ஆள்பவருக்குப் புரிய வேண்டாமா ?

ஆவின் பால், பஸ்ஸை விடுங்கள்.
கரெண்ட் ? – மின்வெட்டை
முற்றிலுமாக,
முழுவதாக –
நீக்கி விட்டு கட்டணத்தை  உயர்த்தினாலாவது
எதாவது நியாயம் இருக்கும்.

புது ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆன பிறகும்
முன்னைவிட மோசமான நிலையில் மின்வெட்டு
தொடரும்போது ...எந்த நியாயத்தை
வைத்துக் கொண்டு   கட்டணத்தை  உயர்த்த முடியும் ?

6 மாதத்திற்குள்ளாகவே இவ்வளவு என்றால் –
5 வருடங்களில் ?

அதிர்ச்சி பலமாக இருந்தாலும் – மீண்டும்
நமக்கு ஒரு பாடம் இது.

அவர் தேவலையா –
இல்லை இவர் தேவலையா ? –
என்று மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்வதை
நிறுத்தி விட்டு,

ஏன் இன்னும் இவர்கள் பின்னாலேயே
ஓட வேண்டும் –
இவர்களை விட்டால் வேறு யாரும் இல்லையா
என்று இப்போதே  யோசிக்க ஆரம்பித்தால் –
5 வருடங்களுக்கு அப்பாலாவது எதாவது
மாறுதல் வரக்கூடும் –

இல்லையா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to இவருக்கு அவரே தேவலையா ? இல்லை அவருக்கு இவர் தேவலையா ?

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    தமிழகம் என்னும் வயலை அழிக்கும் இரண்டு பொதிககாளைகள்;

    இரண்டும் ஒன்றுக்கொன்று விரோதி போல நடிக்கும்.
    ஆனால் இரண்டும் சேர்ந்து மூன்றாவது காளை வராமல் பார்த்துக்கொள்ளும்

    ஒன்று ஐந்துவருடம் மேய்ந்துவிட்டு அடுத்த ஐந்துவருடம் அசைபோட்டு ஜீரணம் செய்யும்.

    இது அசைபோடும்போது மற்றொன்று வந்து மேயும்.அடுத்த ஐந்துவருடம் அசைபோட்டு ஜீரணம் செய்யும்.

    இப்படியே இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன.
    தமிழகமும் காட்டாந்தரை ஆகிவிட்டது.

  2. r v ramani's avatar r v ramani சொல்கிறார்:

    அவருக்கு இவரே தேவலை என்றும் இவருக்கு அவரே தேவலை
    என்றும் மாறி மாறி வாக்களித்து மனம் நோக வேண்டும். சூரியனால் காய்வதும், பின் இலை துளிர்வதுமாகவே தமிழனின் வாழ்க்கை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கரைகிறது. இது தமிழன் வாங்கி வந்த வரம்.
    எவனாவது நம்பிக்கை தருவது போல வந்தாலும், அவனுடைய
    கேரக்டரை இருவரும் சேர்ந்து டேமேஜ் செய்து விடுவார்கள். தமிழன், தலைவரும் அம்மாவும் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற மன நிலைக்கு வந்து (தள்ளப்பட்டு) மீண்டும் இவருக்கு அவரே பரவாயில்லை என் நினைத்து, வாக்களித்து காயப்படுவான். வரமே சாபம் ஆகிவிட்டது. என்ன செய்ய?

  3. palaniappan's avatar palaniappan சொல்கிறார்:

    neenga solvathu – aadangapaduvathu ellam purikirathu;aanaal yarai nampuvthu? padavi + panam = oolal : idu marathu; then eduthavan purankaiya nakkamal irukka mudiyathu; idarku vilakkam sonnal adu neendukonde irkkum; eppodu nam makkal cinema enkira mayaia vittu veliya varukirarkalo anru kurainda thavaru seiyum nabarai elect panna muarchi seyalam; ithu ennudaia thanipatta karuthu; yaraium kurram solla virumbavillai

  4. chennaiveeran's avatar chennaiveeran சொல்கிறார்:

    இவர்களை விட்டால் வேறு யாரும் இல்லையா???

    இல்லை !!! இல்லை!!! இல்லை!!!

  5. yatrigan's avatar yatrigan சொல்கிறார்:

    இது குறித்து இன்றைய தினமணி நாளிதழ்
    தலையங்கத்திலிருந்து சில வரிகள் –

    “டாஸ்மாக்’ மது ரகங்களின் விலையை இரட்டிப்பாக்கி
    போக்குவரத்துக் கழக, மின்வாரியக் கடன் சுமையை
    சற்று இறக்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

    பஸ் கட்டண, மின் கட்டண, பால் விலை உயர்வுக்கான
    காரணங்களை எடுத்துக்கூறி, ஏன் இந்தக் கட்டண உயர்வு
    என்பதற்கான தன்னிலை விளக்கத்துடன்கூடிய முதல்வரின்
    அறிக்கையில் உள்ள அத்தனை நியாயங்களையும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறோம். ஆனால்…

    உங்களுக்காகத் தமிழக மக்கள் சுமையைத்
    தாங்கிக் கொள்ளத் தயார்.

    பாரத்தை ஏற்றி வையுங்கள்,
    தாங்குவார்கள்.
    அதற்காக, பாறாங்கல்லைத்
    தூக்கிப் போட்டால் தாங்கமாட்டார்கள்.

  6. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    ”தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டது” இது பக்தவத்சலம் அன்று சொன்னது.

    இன்று நாம் பல்கிப் பெருகிய அந்தக் கிருமிகளின் விளைவை மாறி மாறி அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்குத் தீர்வு அடுத்த தலைமுறை மக்களுக்காவது கிடைக்கும் என்று நம்புவோம். நம்பிக்கைதான் வாழ்க்கை!

  7. K. Jayadev Das's avatar K. Jayadev Das சொல்கிறார்:

    காமராஜரைத் தோற்க்கடிச்சு மூக்குபொடி டப்பா காரனைத் தேர்ந்தெடுத்த முட்டாள்தனத்திற்க்கான பலனை தமிழர்கள் இன்னமும் அனுபவித்து வருகிறார்கள். இரண்டுமே கொள்ளை கூட்டம், மூன்றாவதாக யாருமே இல்லை, என்னதான் செய்வது? அல்லது மாநிலம் முழுவதும் ஆட்சியாளர்கள் செய்யும் அட்டூழியங்களை ஒன்று சேர்ந்து எதிர்க்கும் ஒற்றுமையாவது இருக்க வேண்டும். ஆனால், அந்தந்த கட்சியின் வட்டம் மாவட்டம் என்ற இரண்டு கொள்ளை கூட்டமும் இது மாதிரி மக்களிடம் விழிப்புணர்வு வராமல் பார்த்துக் கொள்கின்றன? விடிவுதான் என்ன?

  8. உன் மனசாட்சி ......'s avatar உன் மனசாட்சி ...... சொல்கிறார்:

    யாரை தேர்ந்தெடுத்து என்னபலன் ?
    தமிழனுக்கு வந்தகதி எவனுக்கும் வரக்கூடாது….
    இதுவரை தமிழனை ஆண்டதில்
    M .G .R ,
    கலைஞர்,
    ஜெயலலிதா
    இவர்கள் சுத்த தமிழனா ?….
    நம்மை சுற்றி உழன்று கொண்டிருக்கும்
    தலைவர்களில் எத்தனைபேர் தமிழன் !
    நம்மில் அனைவரும்
    “தடி எடுத்தவனெல்லாம் வேட்டைக்காரனாக”
    கிழம்பிவிடுகிறோம் !
    இல்லையென்றல்
    தமிழ் நாட்டில் மட்டும் எத்தனை கட்சிகள் ???
    ஏன் இவர்களுக்கு இத்தனை ஆசைகள் …
    நான்தான் தலைவன் !
    நான்தான் தலைவன் !!
    நான்தான் தலைவன் !!!
    நல்லதலைவனை தலைமை ஏற்று
    தொண்டனாக கூடவே இருக்க வேண்டியது தானே ….மாற்றான்தாய் எப்படி நடந்துகொள்வாள் என்பதை உணர்கிறீர்கள்தானே!!!!!

  9. GANESH's avatar GANESH சொல்கிறார்:

    //புது ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆன பிறகும்
    முன்னைவிட மோசமான நிலையில் மின்வெட்டு
    தொடரும்போது …எந்த நியாயத்தை
    வைத்துக் கொண்டு கட்டணத்தை உயர்த்த முடியும் ?//

    when J took charge she told after 6month power will not go because power will buy from Gujarat, but she not did this and she increased MLA salary and gave LAPTOP to all MLA.MLA are poor peoples?? Funny…THINK!!!
    In this 6month can u say any good news she(JAYALALITHA) did??
    I agree DMK did wrong but they not play with poor peoples.
    So better any other new good person will lead us!!!(???)

  10. கருத்து கந்தசாமி's avatar கருத்து கந்தசாமி சொல்கிறார்:

    வடிவேல் காமெடியில்
    வடிவேல் அடிவாங்கிக்கொண்டு ஒத்தடம் வாங்கும் காமெடியில் இதனை படிக்கவும்…!
    இதில் அடிவாங்கிய வடிவேலாய் “தமிழக மக்களையும்”… ரவுண்டு கட்டி அடித்தது “ஜெயா அரசும்”….

    துணைநடிகை : ஏன்? இப்படி அடிவாங்கியிருக்கீங்க….!

    வடிவேல் (தமிழகமக்கள்) : இல்லேம்மா…! முதல்ல… ஆட்சிக்கு வந்து ரெண்டுமாசத்துல “நாலாயிரம் கோடி” ரூபாய்க்கு வரி ஏத்துனாங்க…! சரி…! பாவம்னு விட்டுட்ட…! இந்த வரிஎத்துறப்பவே… மச்சா.. இங்கே ஒருத்த (தமிழ்மக்கள்) சிக்கிரிக்கா… வாடா இன்னும் குமுருலான்னு சொன்னா…! இல்லாடா…! நா இப்ப பிஸ்சியா இருக்கே…! உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சதும் வைசுக்கலாண்டான்னு… அவன் சொன்னா…! அடிச்சி விட்டாங்க.. சரி நம்மள இதோட விட்டாங்கன்னு பார்த்தா… என்னை… ஒரு மூதுர சந்துக்கு… அதாவது “பஸ் கட்டணம்”னு மாத்து மாத்துன்னு அடிச்சாங்கம்மா…! இதுக்கப்பால… என்னை ஒரு மீன்பாடி வண்டில போட்டு… “பால்விலை உயர்வு”ன்னும்… “மின்சார கட்டணமுன்னும்” பத்துபேரு ரவுண்டு கட்டி அடிசாங்கம்மா…! நான் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது…!

    துணை நடிகை : ஏன்…! திருப்பி நீங்க அடிக்கலையா…?

    வடிவேல் (தமிழகமக்கள்) : இல்லேம்மா…!

    துணை நடிகை : ஏன்…!

    வடிவேல் (தமிழகமக்கள்) : இல்லேம்மா…! அடிச்சவன்ல ஒருத்த சொன்னா “இவன் எவ்வளவு அடிச்சாலும் அழமாட்டேகிராண்டா…! ரொம்ப நல்லவன்டா…!” அப்படீன்னு சொன்னம்மா…!

    (இந்த அடிவாங்கிய வடிவேல் காமடி மாதிரிதான்… தமிழக மக்கள் நிலையும்…!)

    தேளின் இயல்பு கொட்டுவது…!
    பாலூட்டி வளர்த்தாலும்
    பாம்பின் இயல்பு கொத்துவது…!

    வாக்களிக்க பணமெனும்
    “கோன்ஐஸ்” கொடுத்துவிட்டு
    “கோவண”த்தை உருவிக்கொண்டனர்….!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.