அநியாயத்திலும் ஒரு நியாயம்….
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம்
(அதாவது அரசாங்கம் நடத்தும்
சாராயக்கடைகளில் பணி புரியும்
ஊழியர்களின் சங்கம் )
ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில் கிடைக்கும் விபரங்களையும்
நியாயத்தையும் பாருங்கள் –
1) தமிழகத்தில் 75 லட்சம் பேர்
தினமும் சாராயம் குடிக்கிறார்கள் !
(தெரிந்து கொள்ள வேண்டியது –
தமிழ் நாட்டின் மொத்த மக்கள்
தொகை சுமார் 7 கோடி.
இதில் சரி பாதி பெண்கள் என்று
வைத்துக்கொண்டால் மீதி ஆண்களின்
ஜனத்தொகை 3.5 கோடி.
இதில் சிறுவர்கள் 1 கோடியை
கழித்து விட்டால் மீதி 2.5 கோடி பேர்.
ஆக தமிழ் நாட்டில் நான்கில் ஒருவர்
(2.5 கோடியில் – 75 லட்சம்)
தினமும் குடிக்கும் குடிகாரர் ! )
2) இதில் 80 சதவீதம் பேர்
(அதாவது சுமார் 60 லட்சம் பேர் )
நடுத்தர வகுப்பு மற்றும் வறுமைக்
கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் !
3) இவர்கள் தினசரி தங்கள்
வருமானத்தில் 90 சதவீதத்தை
சாராயத்திற்காக செலவழிக்கிறார்கள் !
4) இப்போது தமிழ்நாடு அரசு
டாஸ்மாக் சரக்குகளின் விலையை
குவார்ட்டருக்கு 5 ரூ, ஆப்பிற்கு(?)
10 ரூ,புல் (!)ல்லுக்கு 20 ரூபாய்
என்று உயர்த்தி இருக்கிறது.
5) இந்த விலை உயர்வு மக்களை
(அதாவது குடிகாரர்களை ) எந்த அளவிற்கு
பாதிக்கும் என்பதை தமிழ்நாடு அரசு
சிறிதாவது உணர்ந்திருந்தால்
இந்த விலை உயர்வை அறிவித்திருக்குமா ?
அதானே – சரியாகத்தான் சொன்னார்கள் –
அநியாயத்திலும் ஒரு நியாயம் இருக்க
வேண்டாமா ?
அடக்கடவுளே ! யார் யாரை எல்லாம்
நியாயம் கேட்டு புலம்ப வைத்து விட்டாய் நீ !




நண்பரே ! இந்த விலையேற்றம் சரியா தவறா?
விலையேற்றத்தினால் நன்மையும் உண்டு அல்லவா?
http://idlyvadai.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
சன் டிவியில்
ஒளிபரப்பப்பட்ட
நித்தியானந்த
சம்பத்தப்பட்ட
வீடியோ நிகழ்வை காணுங்கள்
நம்மை எப்படியெல்லாம்
முட்டாள் ஆக்கபார்கிறார்கள் ……………………..
thanks & blessings idly vadai and all of u
rajasekhar.p
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் கள்ளு அருந்துவதற்கு தடையை நீக்கலாமே?? அவை விலை மலிவுதானே!!