“அம்மா” இப்படி செய்யலாமா ?
கலைஞரின் கவிதை இருந்திருக்கும் –
எரிச்சலூட்டும் அவர் படம் இருந்திருக்கும் –
பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் !
சரி – அவைகளை மட்டும் அகற்றி விட்டு –
தொடர்ந்திருக்கலாம் அல்லவா ?
கிட்டத்தட்ட 7 லட்சம் பிள்ளைகள்
படிக்கிறார்கள் இந்த வருடம் பத்தாம் வகுப்பில்.
பாதி புத்தகத்தை ஏற்கெனவே படித்து
முடித்து விட்டார்கள் –
வருவது பொது தேர்வு என்பதால்.
திடீரென்று புத்தகத்தை பிடுங்கி தூக்கி
எரிந்து விட்டு – புதிய புத்தகங்களை படி என்றால் ?
தவிக்கிறார்கள் சிறார்கள் –
பெற்றோர்களும் கூடத்தான்.
யாருக்கும் பாதிப்பில்லாமல் – அடுத்த வருடம்
வைத்துக்கொள்ளக்கூடாதா புதிய புத்தகங்களை ?
அம்மாவுக்கு தெரியாதா பிள்ளைகளின் இன்னல்கள் ?
“ஒரு அம்மா” வே பிள்ளைகளை துன்புறுத்தலாமா ?
“அம்மா” இப்படி செய்யலாமா ?



நிஜமான சாமியாரா இல்லை ….