ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு
கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் !
2g ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் பயன் பெற்ற
கம்பெனிகள் ராஜாவின் ஆலோசனைப்படி
கனிமொழியின் தமிழ் மையத்திற்கு பணம்
கொடுத்துள்ள விவரங்களை
வட இந்திய செய்தித்தளம் ஒன்று இன்று
வெளியிட்டுள்ளது.
2008, ஜனவரி 10ந்தேதி ராஜா மூலம் 2ஜி
ஸ்பெக்ட் ரம் அலைவரிசை ஒதுக்கப்பெற்ற
கம்பெனிகள் – அதற்கு மிகச்சில நாட்கள் முன்னதாக
அதாவது, ஜனவரி 5ந்தேதியும் 7ந்தேதியும் கீழ்க்கண்ட
தொகைகளை கனிமொழியின் தமிழ் மையத்திற்கு
கொடுத்துள்ளதற்கான ஆதாரங்கள் சிபி ஐ வசம்
கிடைத்துள்ளன என்று செய்தி வெளியாகி உள்ளது.
யுனிடெக் நிறுவனம் – 50 லட்சம் – ஜனவரி 5ந்தேதி
டாடா டெலிசெர்விஸஸ் – 25 லட்சம் – ஜனவரி 5ந்தேதி
ரிலெயன்ஸ் கேபிடல் – 25 லட்சம் -ஜனவரி 7ந்தேதி
ஷாம் டெலிகாம் – 10 லட்சம் -ஜனவரி 7ந்தேதி
ஈடியே ஸ்டார் நிறுவனம் – 10 லட்சம்- ஜனவரி 7ந்தேதி
இதெல்லாம் ஒரு தொகையா – வெறும் ஜுஜுபி என்று
தோன்றும். ஆனால் தொகை எவ்வளவாக இருந்தாலும் –
இன்னாரிடமிருந்து இன்னார் மூலமாக இன்னாருக்கு
இந்த தேதியில் பணம் வந்திருக்கிறது என்பது தான்
முக்கியம்.
இன்னொரு முக்கியமான விஷயம் இது ஒரே முறை
நடந்துள்ள பணப்பரிமாற்றம். இதற்கு முன்னும்
இவர்கள் யாரும் கொடுக்கவில்லை. இதற்கு பின்னும்
கொடுக்கவில்லை. லைசென்ஸ் கிடைக்க 5 நாட்கள்
இருக்கும்போது மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.
எனவே சலுகைகள் கொடுக்கப்பட்டன என்பதற்கான
அடிப்படை ஆதாரங்களாக இவை அமையும்.




அய்யா! நீங்கள் ஊரில் இல்லாத,உங்கள் மனைவி மட்டும் தனியாக வீட்டில் இருந்த, ஒரு மாதத்தில்,
1-3-11 அன்று,A என்பவர் இரவு 10 மணி முதல காலை 6 மணி வரை உங்கள் வீட்டில் தங்கி சென்றார்.
அப்புறம்?
2-3-11 அன்று,B என்பவர் இரவு 10 மணி முதல காலை 6 மணி வரை உங்கள் வீட்டில் தங்கி சென்றார்.
அப்புறம்?
3-3-11 அன்று,C என்பவர் இரவு 10 மணி முதல காலை 6 மணி வரை உங்கள் வீட்டில் தங்கி சென்றார்.
அப்புறம்?
……
……
……
……
26-3-11 அன்று,Z என்பவர் இரவு 10 மணி முதல காலை 6 மணி வரை உங்கள் வீட்டில் தங்கி சென்றார்
அப்புறம்?
அதற்கு மேல் நாங்கள் பார்க்கவில்லை அய்யா !
ஆஹா! நல்ல சந்தர்ப்பம் கை நழுவிப்போய் விட்டதே!!
27,28,29,30,31 தேதிகளிலும் WATCH செய்திருந்தால், அவளை கையும் களவுமாக பிடித்திருக்கலாமே!!!
ஓகே. வெய்ட் அண்ட் சீ. பட்
மேலே கண்பத் என்ற பெயரில் வந்திருக்கும் கமெண்ட் உண்மையிலேயே நண்பர் Ganpatஇன் மறுமொழிதானா? எனக்கு என்னவோ சந்தேகமாக உள்ளது. அவர் இந்த மாதிரி (ஆபாசம் தொனிக்கும் வகையில்) நிச்சயம் எழுத மாட்டார் என்றே நம்புகிறேன். உறுதிப்படுத்தவும்.
நண்பர் ramanans க்கு வணக்கம்;
இது Ganpat என்கிற அடியேன் எழுதியதுதான்.
இதில் இங்களுக்கு ஆபாசம் தொனித்திருந்தால்
மன்னிக்கவும்.
நம் அரசியல்வாதிகள் மீது நாம் குற்றங்களை அடுக்கிக்கொண்டே போகிறோம்
ஆனால் இன்னும் முதலில் சொல்லிய குற்றத்திற்கே
தீர்ப்பு/தண்டனை வழங்கப்படவில்லை என்றுநினைக்கும் போது கோபம்,ஆயாசம், விரக்தி ஆகியவை மேலிடுகிறது என்னும் உண்மையை சற்று நகைச்சுவையாக பிரதிபலிப்பதே என் பின்னூட்டத்தின் நோக்கம்.
2011 இல் இவ்வளவு pure mind உடன் ஒருவர் இருப்பது சற்று வியப்பையும் தருகிறது
நன்றி.