“என் நண்பனை போலீஸ்காரர் பிடித்துக்கொள்கிறார்”
காவல் துறை அமைச்சர் சொல்கிறார் !
அறியாமல் பேசுகிறாரா ?- இல்லை !
உண்மை தெரியாமல் பேசுகிறாரா ? – இல்லை !
சட்டம் தெரியாமல் பேசுகிறாரா ? – இல்லை !
பின் ஏன் இப்படி பேசுகிறார் ?
எதிரே இருப்பவன் –
கேட்டுக்கொண்டிருப்பவன் –
பார்த்துக்கொண்டிருப்பவன் –
செய்தியை படித்துக்கொண்டிருப்பவன் –
அத்தனை பேரும் வாத்து மடையர்கள்
என்று நினைத்துக்கொண்டிருப்பதால் தான் !
தமிழக காவல் துறை அமைச்சர் பேசுவதைப்
பாருங்கள் –
“எமர்ஜென்சி கொடுமை இன்றைக்கும் நடக்கிறது.
ஒரு பத்து ரூபாயை நண்பர்களிடத்திலே கொடுத்து
சில்லரை வாங்கிக் கொண்டு வா என்றால்,
அவர் அதை எடுத்துக் கொண்டு கடைக்குப் போனால்,
போலீஸ்காரர் பிடித்துக்கொண்டு,
நீ யாருக்கு கொடுப்பதற்கு வாங்கிக் கொண்டு
போகிறாய் என்று பிடித்துக் கொள்கிறார்.”
(பத்து ரூபாய்க்கு இந்த காலத்தில் என்ன மதிப்பு
என்று கூட இவருக்கு தெரியவில்லை பாருங்கள்.
பத்து ரூபாயை சில்லரை வாங்க (!) கடைக்கு
எடுத்துப் போனால் போலீஸ் பிடித்துக்கொள்கிறதாம்!
இவர் கதை வசனம் எழுதும் படங்கள் எல்லாம்
ஏன் ஊத்திக் கொள்கின்றன என்று நமக்குப் புரிகிறது –
இவருக்குப் புரிய மாட்டேனென்கிறதே ! )
“அப்படிப்பட்ட கொடுமை மேல்மட்டத்திலே போட்ட
அதிகாரத்தால் அல்ல,
அதைப் பயன்படுத்திக் கொண்டு
இன்றைக்கு ஒரு அடையாளம் தெரியாத,
அடையாளம் காட்ட முடியாத,
பெயர் சொல்லாத,
விளம்பரம் இல்லாத,
ஒரு எமர்ஜென்சி நாட்டில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நடைபெறுகிறது.”
(தமிழக்த்தில் எமர்ஜென்சி நடைபெறுகிறதாம்.
ஆனால் போலீஸ் அமைச்சராகிய இவருக்கு
அது எப்படி, யாரால், ஏன்,என்று புரியவில்லையாம் !
அப்புறம் இவர் ஏன் போலீஸ் அமைச்சராகத் தொடர
வேண்டும் ? வேறு யாராவது கெட்டிக்காரரை,
புரிந்து கொள்ளும் சாமர்த்தியம் உள்ளவரை போலீஸ்
அமைச்சராகப் போட வேண்டிய்து தானே ?
போலீஸ் துறையை யாரிடமும் கொடுக்க
மனம் வரவில்லை- புரிகிறது.
சரி டெல்லி அம்மையாருக்கு ஒரு போன் போட்டுப்
பார்க்க வேண்டியது தானே ?)
“அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக்
கழகக் கூட்டணியை உடைக்க,
கூட்டணியிலே இருப்பவர்களை தளர்க்க,
அவர்களை பயமுறுத்த,
இந்த நெருக்கடிக் கால கொடுமை
இங்கே வீசப்படுகிறது.”
(இவரது கூட்டணியில் இருப்பவர்களில் –
சொல்லிக் கொள்கிறாப் போல் இருப்பது
காங்கிரசும்,
பாமக வும் தான்.-
அப்படியானால் அவர்களை விலகிப் போக
வைக்க இந்த பயமுறுத்தல் நடக்கிறதா ?
இல்லை அவர்களே விலகி விடுவார்களோ
என்று பயமாக இருக்கிறதா ?
பாமக எந்த அதிகாரத்திலும் இல்லை.
மீதி இருப்பது காங்கிரஸ் மட்டுமே.
அப்படியானால் காங்கிரஸ் கட்சியை
பயமுறுத்தி கூட்டணியை உடைக்க,
காங்கிரஸ் கட்சியே வேலை செய்கிறதா ?
இவர் என்ன சொல்ல வருகிறார் என்று
யாராலாவது புரிந்து கொள்ள முடிகிறதா ?
(தயவு செய்து அவருக்கு தெரியவில்லை
என்று மட்டும் யாரும் நினைத்து விடாதீர்கள் –
முன்னாலே பார்த்தோமே –
வாத்து …. அது தான் விஷயம் !)
மேலும் என்ன சொல்கிறார் பாருங்கள் –
“வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் இருந்த போலீஸ்
பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அழகிரி வீட்டில் பாதுகாப்பு
திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் பாதுகாப்பில் உள்ள போலீசாரை
திரும்பப் பெற யார் உங்களுக்கு அனுமதி தந்தது ?”
(பொது மக்களைக் கேட்டு என்ன பயன் ?
உங்கள் கீழ் பணி புரியும் –
அந்த போலீஸ் துறை ஐஜி யை கேட்டுப்
பார்ப்பது தானே –
ஏன் பயமாக இருக்கிறதா ?)
அதான் உயர்நீதிமன்றம் வெட்டு ஒன்று
துண்டு ரெண்டாக விளக்கம் கொடுத்து உத்திரவு
போட்டு விட்டதே !நியாயமாகவும் நேர்மையாகவும்
தேர்தலை நடத்த தேர்தல் கமிஷனுக்கு அனைத்து
அதிகாரங்களும் உள்ளன என்றும் யாரும்
அதற்கு குறுக்கே நிற்கவோ – தடங்கல் செய்யவோ
கூடாது என்று. பின்னும் ஏன் புலம்பல் ?
——————-
பி.கு. – இதைப் பதிவில் ஏற்றும்போது
கலைஞர் தொலைக்காட்சியில் கலைஞர் பேசுவதை
பார்த்தேன்.
சவாலாகச் சொல்லிக்கொண்டிருந்தார் –
“நான் மீண்டும் முதலமைச்சராக ஆகக்கூடாது
என்று எதிர்க்கட்சியில் “பூணூலை” உருவி
விட்டுக்கொண்டு வேலை செய்கிறார்கள்.”
நானும் நன்கு யோசித்துப் பார்த்து விட்டேன்
-அது யாராக இருக்குமென்று.
ஜெயலலிதா பிராம்மணர் தான் – ஆனால்
பெண் என்பதால் பூணூல் கிடையாது.
அடுத்து விஜய்காந்த் … ஊ ஹூம் கிடையாது.
பிறகு – மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணன்,
வலது கம்யூனிஸ்ட் தா.பாண்டியன்,
புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி,
மனித நேய கட்சி ஜவஹருல்லா .... யாரும்
கிடையாதே – இவர் யாரைச் சொல்கிறார் ?
ஒரு வேளை தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார்
பூணூல் போடுவாரோ ? (பீகார் காரர் –
தெரியவில்லை )
ஆ…. மாட்டி விட்டார் !
எஸ்.வி.சேகரைத் தானே சொல்கிறார் (!!!)
இருக்கும் இருக்கும – அவர் தானே
பூணூலை வெளியே இழுத்துவிட்டுக்கொண்டே
திரிந்தார். வகையாக மாட்டினார் கலைஞரிடம் !!
தொலைந்தார் இனி !
(கலைஞரிடம் சொல்லி விட வேண்டியது
தான். அது எஸ்.வி.சேகர் தானென்று !)



நீங்க ரொம்ப அப்பாவி கா.மை.
சொன்னவர் சட்டை,பனியனை கழட்டிப்பார்த்தால் தெரியும்
பூணூல் போட்டிருப்பது அவர்தான் என்று!!!
மனுஷர் பெசன்ட் நகர போகும் வரை பொய் சொல்வதையும் எமாற்றுவதையும் விடமாட்டார் போல இருக்கு’
இப்படி ஒரு ஈனப்பிறவியா?
இவரைவிட ஈனப்பிறவி இவரிடம் பணம் வாங்கி இவருக்கு ஒட்டு போடுபவர்கள்!
ஒருவேளை சுப்ரமண்ய சாமியைச் சொல்கிறாரோ? இல்லை சோ? ஆமாம், அவரே தான். துக்ளக் அட்டைப்படத்தில் அமைச்சர்களுக்குப் பூணூல் மாட்டி அழகு பார்த்தவர், அவர்தான்.
சரி. ஆனால், ஒரே ஒரு சந்தேகம். பூணூலை உருவி விடுவது எப்படி? ‘டெமோ’வா எதுனா ஆடியோ, வீடியோ டேப் வருமா?
இந்த எல்லா புலம்பல்களுக்கும் அலம்பல்களுக்கும் காரணம் ஒன்றே ஒன்று தான். “ஜாபர் செட் விடுப்பில் சென்றுவிட்டார்….!!!”.
மத்தியில் இருந்து மாநிலம் வரைக்கும் அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் கருணாநிதி இப்படி புலம்புவதை பார்த்தால் “அவர் ஒரு டம்மி பீசு” என்று அவரே ஒத்துக் கொள்கிறார் என்று அர்த்தம். ‘டம்மி பேசு என்று தெரிந்தும் யாராவது சூரியனுக்கு ஒட்டு போடுவாங்களா?’