மும்பை கிரிக்கெட் மேட்ச் –
கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
சனிக்கிழமை மும்பையில் நடைபெறவிருக்கும்
இந்தியா-இலங்கை இறுதி கிரிக்கெட்
போட்டியை காண்பதற்காக என்றே-
ஜனாதிபதி பிரதிபா பாடீல் விசேஷ விமானத்தில்,
தம் குடும்பத்தினருடன்,
டில்லியிலிருந்து மும்பை போகப் போவதாக
சற்று முன்னர் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த ஜனாதிபதிக்கு இதை விட முக்கிய வேலை
வேறெதுவும் இருக்காது என்பது தெரிந்ததே !
தாராளமாக கிரிக்கெட் மேட்ச் பார்க்கட்டும்.
ஆனால் அதை தனது மாளிகையில்
உட்கார்ந்து கொண்டே செய்யலாமே !
அதற்காக மக்கள் பணம்
இவ்வாறு விரயம் செய்யப்பட வேண்டுமா ?
இத்துடன் வரும் மற்றொரு செய்தி
இன்னும் துன்புறுத்துகிறது.
கொலைகார ராஜபக்சேயும் இதைப்பார்க்க
மும்பை வருகிறானாம்.
இப்போது தோன்றுகிறது –
இந்த மேட்ச் மும்பைக்கு பதிலாக
சென்னையில் நடப்பதாக இருந்தால் நன்றாக
இருந்திருக்குமே என்று !
வரத் துணிவு வந்திருக்காதல்லவா ?



//வரத் துணிவு வந்திருக்காதல்லவா ?//
யார் சொன்னது? திருப்பதி வந்த பொது சென்னை வழியாகத்தானே வந்திருப்பார்? மறுபடியும் திருப்பதி வரப்போகிறாரே. அப்போதும் சென்னை வருவார். நமக்கெல்லாம் சூடு / சொரணை இருந்தால் வரமாட்டார். அவருக்கு தான் தெரியுமே, இந்த இலவசங்களுக்கு அலையும் கூட்டம் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வராது என்று. போனமுறை திருப்பதி போன போதே ஒரு லட்சம் பேர் சென்று அமைதியாக எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இன்னொருமுறை வரமாட்டார். எங்கே? நமக்கு தான் சினிமா பின்னால் அலையவும், டாஸ்மாக் சென்று வரவுமே நேரம் சரியாகி விட்டதே!
//இந்த மேட்ச் மும்பைக்கு பதிலாக
சென்னையில் நடப்பதாக இருந்தால் நன்றாக
இருந்திருக்குமே என்று !
வரத் துணிவு வந்திருக்காதல்லவா ?//
நீங்கள் சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. கழுகரசனை “மஞ்ச்ள்” கம்பளம் விரித்து வரவேற்பார்கள். எதிர்த்துக் கறுப்புக் கொடி காட்டுவோரை அதிரடியாகக் கைது செய்வார்கள். “விருந்தினரை மதிப்பதுதான் தமிழ்ப்பண்பு” என்று கவிதை எழுதுவார்கள். ”வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்” என்பார்கள் . இல்லாவிட்டால் “மறப்போம்; மன்னிப்போம்” என்பார்கள். இப்படி ஏதாவது பேசிக் குட்டையைக் குழப்பி விடுவார்கள்.
“சிவப்பும்” “மஞ்சளுமா”ய் அருகருகே அமர்ந்து, சின்னஞ்சிறு கதைகள் பேசி சிங்காரிகள் தரும் ‘சில்’ நீரை அருந்தி கட்டித் தழுவிப் பிரிவார்கள். இதுதான் நடக்கும்.
மக்கள் வழக்கம் போல வடிவேலுவின் பேச்சையும், விஜயகாந்தின் கும்மாங்குத்தையும், குஷ்புவின் சிவப்புத் தோல் அழகையும் சிலாகித்துப் பேசிக் கொண்டே சீரியல் கவலைகளில் (பெண்களாய் இருந்தால்) டாஸ் மார்க் கவலையில் (ஆண்களாய் இருந்தால்) மூழ்கி விடுவார்கள். இதுவும் கடந்து, மறந்து போகும்.
ஆனால்….
காலம் என்பது கழங்கு போற் சுழன்று மேலது கீழாய் கீழது மேலாய் மாறும்.
அது வரை..
கட்டுண்டோம், பொறுத்திருப்போம். காலம் மாறும் என்ற
நம்பிக்கையுடன்