தேர்தல் கமிஷன் பார்வையாளர்களின் கவனத்திற்கு ….

தேர்தல் கமிஷன் பார்வையாளர்களின்
கவனத்திற்கு ….

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை பத்திரிகைச்
செய்திகளின்  ஒளி நகல்கள் (xerox copy)-



தமிழ் நாடு  சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட
தேர்தல் கமிஷன்/அரசாங்கம் அனுமதித்துள்ள
அதிக பட்ச செலவு வேட்பாளர் ஒருவருக்கு
ரூபாய் பத்து லட்சம்.

மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளின்படி
ஒரு கட்சி ஒவ்வொரு வேட்பாளருக்கும்
குறைந்த பட்சம் இரண்டு கோடி
ரூபாயும், இன்னொரு கட்சி 1.25 கோடியும்
செலவழிக்க இருக்கின்றன.பத்திரிகைச் செய்தி
மிகையாகவும் இருக்கலாம். குறையாகவும்
இருக்கலாம்.ஆனால் விசாரிக்கப்பட வேண்டிய
செய்தி அது.

இதுவரை ஆட்சியில் அமரும் பாக்கியம் பெறாத
சிறிய கட்சிகள் இவை. இந்த கட்சிகளே
இவ்வளவு செலவழிக்குமானால், வருடக்கணக்கில்
ஆட்சியில் அமர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து
குவித்து  வைத்துள்ள  திமுக, அதிமுக,
காங்கிரஸ்,பாமக போன்ற கட்சிகள்
எந்த அளவு வரை செலவு செய்யும் என்பதை
ஓரளவு யூகிக்க  முடிகிறது.

தேர்தல் கமிஷனால் – வேட்பாளர்களின்
செலவுகளை  கண்காணிக்க  நியமிக்கப்பட்டுள்ள

பார்வையாளர்கள் –

எங்கிருந்து, எத்தகைய
தகவல்கள் தரப்பட்டாலும், அவற்றைப்பற்றி,
சட்டபூர்வமாக  விசாரித்தறியவும்,
மேல் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம்
அளிக்கப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள்
இதை கவனித்து  தேவையான நடவடிக்கைகளை
எடுப்பார்களா ?

வருமான வரி (புலனாய்வுப் பிரிவு)இலாகாவும்,
வேட்பாளர்களின் செலவு ஆதாரங்களை
விசாரித்தறியவும்,

அவர்களுக்கு இந்த அளவுக்கு
செலவு செய்ய  நிதி ஆதாரம் எங்கிருந்து,எப்படி,

கிடைக்கிறது என்பதை தகுந்த விசாரணைகள்
மூலம் கண்டு பிடிக்கப்பட்டு,

அது பற்றிய விவரங்கள் தேர்தல் கமிஷனுக்கு
அறிக்கை மூலம் தரப்படவும் ஆணைகள்
பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.

என் பார்வைக்கு கிடைத்த செய்திகளை
மேலே தந்திருக்கிறேன்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  இவற்றை
கவனித்து ஆவன செய்ய வேண்டுமென்று
கேட்டுக்கொள்கிறேன்.

—-
பி.கு.
____
இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
அனுப்பி வைக்கப்படுகிறது.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, தமிழீழம், தமிழ், திமுக, தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தேர்தல் கமிஷன் பார்வையாளர்களின் கவனத்திற்கு ….

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    Office of the Election Commissioner
    Govt Of India
    New Delhi
    Ref:abcd/227/efgh/123/ijkl/321/mnop/333/qrst/456/TN/2011/AE/231/009
    To:
    Mr.Kaviri Mainthan
    Chennai

    Sub:Complaint regarding election expenses of candidates
    Ref: Your letter dated 22/3/2011

    With reference to your above letter,pl.be informed that the same has been forwarded to our concerned dept in Tamil Nadu for verification and further action if found needed.You may quote our ref.number mentioned above for all your future correspondence

    Thanking you

    Yours truly,
    (sd)
    (Vijay James Khan)
    for Election Commissioner

    cc:E/C TN
    PMO
    MPO
    OPM
    POM
    OMP
    MOP

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.