இத்தாலிய மருமகள் – ஒரு விவாதம் !
இத்தாலி நாட்டு தலைமையைப் பற்றி
நான் எழுதிய இடுகைக்கு மறுமொழியாக
ஒரு நண்பர் –
“நம்வீட்டு மருமகளை நாமே
குறை கூறுவது எந்தவிதத்தில்
நியாயம் ?”
என்று கேட்டு எழுதி இருக்கிறார்.
அவருக்கு பதிலாக எழுத நினைத்ததை
ஒரு இடுகையாகவே இங்கு போட்டு விட்டேன்.
என் கருத்தை ஏற்காதவர்களும்
இருக்கத்தான் செய்வார்கள். அவரவர் நியாயம்
அவரவருக்கு.
என் பக்க நியாயத்தை நான் எழுதுகிறேன்.
ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் அவரவர் உரிமை.
(வழக்கம் போல் நண்பர்களின் மறுமொழிகளை
வரவேற்கிறேன். இந்த இடுகையின்
பிரதிபலிப்பை உணர விரும்புகிறேன்.)
————————————————————
வந்தவர் மருமகளாக மட்டும்
இருந்திருந்தால் நாம் ஏன்
அவரை குறை சொல்லப்போகிறோம் ?
நாட்டுக்கே தலைமகளாக ஆசைப்பட்டதால்
ஏற்பட்டவை தானே இத்தனை பிரச்சினைகளும் !
முந்நாள் பிரதமர் நேருவின் பேரன் –
அப்போதைய பிரதமர் இந்திராவின் மகன் –
பணக்கார வீட்டுப் பிள்ளை –
பார்க்கவும் நன்றாக இருந்தார் –
காதலித்தார், கடிமணம் புரிந்துக் கொண்டார்.
எல்லாம் சரி. அதன் பிறகு ?
இவர் தன் கணவரின் வீட்டைப்
பார்த்துக் கொள்ள வந்தாரா –
இல்லை இந்த நாட்டைக் கட்டி ஆள வந்தாரா ?
இந்த நாட்டை ஆள அப்படி என்ன தகுதி
இருக்கிறது இவருக்கு ?
இந்த நாட்டின் மொழிகள் புரியுமா ?
சரித்திரம் தெரியுமா ?
நமது புராதன மதங்களைப் பற்றி தெரியுமா ?
அவை சொல்லும் தத்துவங்கள் தெரியுமா ?
இங்கு வாழும் இனங்களைப் பற்றி தெரியுமா ?
அவர்களின் பழக்க வழக்கங்கள்,பண்பாடு தெரியுமா ?
இமயம் முதல் குமரி வரை வாழும் மக்களின்
வாழ்க்கை முறை தெரியுமா ?
இந்த நாட்டின் நதிகளைத் தெரியுமா ?
அவை உருவாக்கிய கலாச்சாரத்தை தெரியுமா ?
இந்த தேசத்திற்காக
உயிரை விட்ட உத்தமர்களைப் பற்றி தெரியுமா ?
சுதந்திரப் போராட்டத்தில் சொல்லில்
அடங்காத அடக்குமுறைகளைச் சந்தித்த
தியாகிகளைத் தெரியுமா ?
கப்பலோட்டிய தமிழன் யாரென்று தெரியுமா ?
இல்லை வீரபாண்டிய கட்டபொம்மன் தான்
யாரென்று தெரியுமா ?
மணியாச்சி ரெயில் நிலையத்தில் சாகசம்
புரிந்து உயிர்த் தியாகம் செய்த வாஞ்சிநாதனை
தெரியுமா ? திருப்பூர் குமரன் யாரென்று
தெரியுமா ? பகத் சிங்கின் வீரம் புரியுமா ?
ஏன் -தமிழுக்கும் மலையாளத்துக்கும்
உள்ள வித்தியாசமாவது தெரியுமா ?
தன்னம்பிக்கை இல்லாத
காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு ஓட்டு வாங்க
நேரு குடும்பத்தின் வாரிசு என்று யார் முகத்தையாவது
காட்ட வேண்டும். இவரைப் பிடித்துக் கொண்டார்கள்.
அப்படியே பார்த்தாலும் நேருவின் வாரிசா இவர் ?
தேர்தல் நேரத்தில், விதம் விதமாக அந்தந்த மாநில
உடைகளை அணிந்து கொண்டு
காட்சி அளித்தால் போதுமா ?
ஒரு தகுதியும் இல்லாமல் – இவ்வளவு பெரிய
தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க இவர்
முன் வந்தது எப்படி ? ஏன் ?
எந்த நம்பிக்கையில் ? எந்த ஆசையில் ?
40 வயதில், 34 வயதை அயல் நாடுகளில்
ஊர் சுற்றுவதிலேயே கழித்த ஒரே வாரிசையும்
அடுத்து தலைமைப் பதவிக்குத் தயார்
செய்வது ஏன் ? நாட்டின் தலைமைப் பதவி
இவர்களின் குடும்பச் சொத்தா ?
அரசியலும் ஒரு பிழைப்பா ?
அரசியலை விட்டால் வேறு தொழிலே
தெரியாதா இவர்களுக்கு ?
மாமியார் அரசியல் காரணமாகவே
உயிர் துறக்க நேர்ந்தது.
கணவனும் அப்படியே.
அப்படியும் இவர் மகனை அடுத்து பதவிக்கு
தயார் செயவது ஏன் ?
எதை குறி வைத்து ?
இவர்கள் தலைமை இல்லாவிட்டால்
இந்த தேசம் நாசமாகி விடுமா ?
110 கோடி இந்தியர்களில் கிடைக்காத
ஒரு தலைமையா ?
ஏன் – இந்த நாட்டில் பிறந்தவர்களில்
யாரும் தலைமை தாங்கத் தகுதியற்றுப்
போய் விட்டார்களா ?
உணர்வுள்ள இந்தியர் எவரேனும் தலைமைப்
பொறுப்பில் இருந்திருந்தால்,
20 கிலோ மீட்டர்
தொலைவில் இத்தனை உயிர்கள்
பறி போயிருக்குமா ?
இத்தனை அவலங்கள் நிகழ்ந்திருக்குமா ?
கொட்டரோச்சியைப்போல் இன்னும்
எத்தனை பேர் இந்த நாட்டை கொள்ளை
அடித்துக்கொண்டு
போயிருக்கிறார்கள் ?
பிடிக்க முடிந்ததா யாரையாவது ?
அது என்ன சொல்லி வைத்தாற்போல்,
இவர் குடும்பத்தில் மட்டும் அனைவரும் ஏற்றுமதி
வியாபாரம் செய்வதற்கு
லைசென்ஸ் வாங்கி வைத்திருக்கிறார்கள் ?
இந்த நாட்டை
சுரண்டிக் கொண்டு போவதற்காகவா ?
பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத
அதிகாரம் – அதாவது power without
responsibility – என்பது ஜனநாயகத்தில்
மிகவும் ஆபத்தான விஷயம்.
இத்தனை விஷயங்கள் நடந்திருக்கிறதே –
இலங்கைப் படுகொலைகள் –
தமிழக மீனவர்கள் உயிரிழப்பு –
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் –
விஜிலன்ஸ் ஆணயராக டெலிகாம் தாமஸ் நியமனம்,
“எஸ்” பேண்டு அலைக்கற்றையில் –
தேவாஸ் -இஸ்ரோ கூட்டு சதி,
பார்லிமெண்ட் முடக்கம் – ஜேபிசி விவகாரம்-
எதைப்பற்றியாவது திருவாய் திறந்து
எதாவது கூறி இருக்கிறாரா ?
இவரைக் கேட்காமல் பிரதமர் எதையும்
செய்வதில்லை என்பதால் -ஒருவகையில்
இவரே அத்தனைக்கும்
பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறார்.
ஆனால் வாய் திறவாதது எப்படி ?
அமைச்சரோ, கவர்னரோ, மாநில கட்சித்
தலைவர்களோ – இவர் சொல்லாமல்
எவராவது நியமிக்கப்படுகின்றார்களா ?
ஆனால் இவர் எதைப்பற்றியாவது வாயைத்
திறக்கிறாரா ?
இந்த நாட்டைப் பற்றியும், நம் மக்களைப்
பற்றியும், கவலைப்படும் யாரும்,
இதை எல்லாம் யோசிக்காமல் எப்படி
இருக்க முடியும் ?
முடியும் – ஒருவேளை அவர்கள்
காங்கிரஸ்காரர்களாக மட்டும் இருந்தால் !



இந்தியர்கள் ஒரு பிரச்சினையை அணுகும விதமே தவறானது.அத்தனைகுழப்பங்களும் இதனால் தான் வருகின்றன.
இந்தியாவின் தலைவராக வர தேவையான நான்கு அடிப்படை தேவைகள்:திறமை,நேர்மை,மனஉறுதி,தேசப்பற்று.
ஆனால் நாம் ஒருவரை இந்த அடிப்படையில் சீர்தூக்கி பார்க்காமல்
அவர் எந்த ஜாதி,இனம்,மதம்,நாடு எனப்பார்க்கிறோம்.
என்னைப்பொறுத்தவரை சோனியா,மாயாவதி,ஜெயலலிதா அனைவரும் ஆளத்தகுதியில்லாதவர்கள்.அதேபோல் கருணாநிதி,ராமதாசு போன்றோரும் அப்படியே.
அப்போ யார்தான் வரவேண்டும்?
நரேந்திர மோடி,T.N.சேஷன் அல்லது லீ க்வான் யூ (lee Kuan Yew)
அல்லது………அல்லது……..
….
…..
…..
காவிரி மைந்தன்
Yes Sir I mean it
வருக நண்பர் கண்பத் –
எங்கே காணோமே என்று
பார்த்துக் கொண்டே இருந்தேன்.
கடைசியில் ….. காலை வாருகிறீர்களே –
நியாயமா ?
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
வந்தவர் மருமகளாக மட்டும்
இருந்திருந்தால் நாம் ஏன்
அவரை குறை சொல்லப்போகிறோம் ?
நன்றி கா.மை அவர்களே…..
அவர்தான் கேட்டாரா ? நான் தான் கட்சிதலைமையில் இருப்பேன்
பிரதமராவேன் என்று …
தூக்கிவைத்து கொண்டாடியது யார் ?
120 கோடி
மக்களில் நல்ல தலைவர் இல்லையா?
நீங்களும் நானும்
மட்டும் பேசினால் போதாது..
ஒவ்வொருவருக்கும்
நான் இந்தியன் என்ற
துடிப்பு வேண்டும் …
அதன்பிறகுதான் கட்சி கொடிஎல்லாம் ??
தூக்கி வைத்து
கொண்டடிகொண்டிருபோர்
யார்?
இத்தாலியனா..
இல்லையே இந்தியன் தானே
எய்தவனை விட்டு
அம்பை நொந்து என்னபயன்…?
சரி…………..
அடுத்துவருகிறேன்
உணர்வுள்ள இந்தியர் எவரேனும் தலைமைப்
பொறுப்பில் இருந்திருந்தால்,
20 கிலோ மீட்டர்
தொலைவில் இத்தனை உயிர்கள்
பறி போயிருக்குமா ?
மன்மோகன் சிங் உணர்வுள்ள இந்தியர் இல்லையா ?
அவர் யாருக்கு பயப்படுகிறார் ..
ஏன்? பயப்படவேண்டும்
முதலில் நீங்கள் சொன்னதுபோல
இந்தியரா இல்லையா?
சரி……
தமிழ் நாட்டில் தமிழர் தானே
ஆட்சிசெய்கிறார் ?
அதில் சந்தேகம் இல்லையே?
இவர் கூட்டணி தயவில் தானே
மத்திய அரசு வாழ்கிறது?
தமிழனுக்கு……
உதவாத அரசு எதற்கு?
விட்டுவரவேண்டியதுதானே….
அய்யா ..
நமக்கு நாமே குழி வெட்டிக்கொண்டு
உள்ளே விழுந்து கொண்டிருக்கிறோம்
என்பதை ஒவ்வொரு
மனிதனும் புரிந்துகொள்ளும் வரை
நம் ஒத்த கருத்துள்ளோர் போராட்டம் தொடரவேண்டும்…
வெள்ளையனிடம் மீட்டு
கொள்ளையர்களிடம் கொடுத்து விட்டோம் …
இவர்களிடம் மீட்கும் நாளே
உண்மையான சுதந்திர தினம்
நன்றியுடன் ……
ராஜசேகர்.ப
ஐயா,
அவரை இந்த இடுகையைப் படிக்கச் சொல்லுங்கள்.
http://janataparty.org/sonia.html
எனக்கு என்னமோ சோனியா இந்தியாவின் மருமகளாக வந்ததே ஒரு கான்ஸ்பிரசி தியரி என்று தான் தோன்றுகிறது. சமீபத்தில் “The Ghost Writer” என்ற ஆங்கில திரைப்படம் பார்த்தேன் அதில் வரும் கதை அமைப்பிணை நமது ராஜீவ் – சோனியா கதையுடன் ஒப்பிடலாம்.
மேலும் நான் படித்த புத்தகங்கள் பல ராஜிவின் சுவிஸ் வங்கி மற்றும் அவரது ஊழல்களை அலசியுள்ளது.
உம்: The Polyester Prince. (கடைசி மூன்று அத்தியாயங்கள்), Janathaa Party Website.
மும்பை வட்டாரங்களில் உலவிய அக்கப்போர் இது, அம்பானி யும் ராஜீவும் நேர் துருவங்களாக இருந்து பின் எப்படி ராஜீவ் அம்பானியின் சமர்த்தராக மாறினார் என்பது பற்றியது.. அம்பானி ராஜீவிடம் “தங்கள் அன்னைக்கு நான் பெருந்தொகை தர வேண்டும் அதனை எப்பிடி கொடுப்பது என்று தெரியவில்லை என்று தொலைபேசியில் கூறியதாகவும் அதன் விளைவே ராஜீவ் அம்பானி சமர்த்தராக மாறியது என்றும் ஒரு உண்மை வதந்தி உண்டு….
அமிதாப் பச்சன் மற்றும் ராஜீவ் குடும்பம் மிகவும் நெருக்கமான ஒன்று, டைம்ஸ் ஆப் இந்தியாவில் திரு குருமூர்த்தி ரிலையன்ஸ் பற்றிய கட்டுரைக்கு ஆய்வு செய்யும் போது வெளி வந்த விஷயம் இது, சுவிஸ் நாட்டில் அமிதாப் சகோதரர் மற்றும் இத்தாலி நாட்டினை சேர்ந்த பெயர் விபரம் அறியப்படாத இருவர் பங்காக கொண்டு நடத்தப்படும் நிறுவனத்தில் ஏகப்பட்ட இந்திய முதலீடு உள்ளது என்று அறியப்பட்டது. நமது தேசத்தில் பிறந்த ராஜீவே இப்படி இருந்த பட்சத்தில் வெளிநாட்டு சோனியாவினை நாம் எந்த வகையில் சேர்ப்பது? மேலும் அந்த விபரங்கள் அப்படியே அமுக்கப்பட்டு குருமூர்த்தி மற்றும் அவர் சார்ந்த பத்திரிகை நிறுவனத்திற்கு பல வகையில் இன்னல் கொடுத்து மக்கள் அறியா வண்ணம் செய்து விட்டார்கள்….
நமது குடியாட்சியில் மட்டுமே இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும்…
தங்களது பதிவினை அடிக்கடி படித்து வருகிறேன். நானும் அவ்வபோது பல கான்ஸ்பிரசிகளை படித்து அறிந்து வருகிறேன்.. தங்கள் ஆய்வு தொடரட்டும்.
நேருவின் வாரிசு என்றால் அவரது மருமகன் பெரோஸ்காந்தியை சொல்லலாம். ஒரு காந்திய – சோசியலிசம் பிடிப்பு கொண்ட அரசியல் தலைவர். இந்தியாவின் முதல் காங்கிரஸ் சார்ந்த முந்த்ரா ஊழலை திரு கோயங்காவுடன் இணைந்து வெளிக்கொணர்ந்தார். தன் இன ரீதியான உறவினர்களான டாட்டா நிறுவனத்தின் பாரபட்சமான அணுகுமுறையையும் (இரயில என்ஜின் விலை நிர்ணயம்) வெளிக்கொணர்ந்தார். என்னை பொறுத்தவரையில் அவரது புதல்வர்கள் அவரது வரலாற்றை மறந்தே விட்டனர். ஏன் காங்கிரஸ் மக்களே அவரை மறந்து விட்டனர் என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் பெரோஸ் காந்தியின் கொள்கை காங்கிரஸ் காரர்களிடம் இருந்து வேறுபட்டது அல்லவா (சுரண்டல்) ?
வருக நண்பர் மணவாளன்.
பெரொஸ் காந்தியைப் பற்றி படிக்க வேண்டும்
என்று நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறேன்.
எங்கே படித்தீர்கள் நீங்கள் ?
எதாவது புத்தகம் பற்றி சொல்ல முடியுமா ?
பல வருடங்களுக்கு முன்னர் “ஆந்தி”
என்கிற இந்தி திரைப்படம் ஒன்று வந்தது.
இந்திரா – பெரொஸ் காந்தி திருமண வாழ்வைப்
பற்றியது. நேருவின் ஈகோ காரணமாக
அவர்கள் எப்படி பிரிய நேர்ந்தது என்பது பற்றியும்.
வெளிவந்த மூன்றாம் நாளே மத்திய அரசால்
தடை செய்யப்பட்டு விட்டது.
நல்ல வேளையாக நான் அதற்குள்ளாக
பார்த்து விட்டேன்.
குணச்சித்திரங்களை பிரமாதமாக பிரதிபலிக்கும்
மிக அருமையான, பாரபட்சமற்ற, உண்மையான
கதையை பிரதிபலிக்கும் படம்.
சஞ்சீவ்குமார் -சுசித்ரா சென் நடித்தது.
அப்போதிருந்தே பெரொஸ் காந்தியின்
வாழ்க்கையைப் பற்றி விவரமாக
படிக்க வேண்டும் என்று ஆவல்.
– வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
iaree withu 100%
கா.மை..
நீங்கள் இப்படி சொல்வீர்கள் என எதிர்பார்த்துதான் “I mean it” என்று முடிவில் குறிப்பிட்டு இருந்தேன்.
மீண்டும் சொல்கிறேன் இப்போ நமக்கு தேவையானது நேர்மையாக சிந்திக்கும் ,மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதனே.அதற்கு எல்லா தகுதியும் உங்களிடம் உள்ளது.
இது கேலியோ நகைச்சுவையோ அல்ல .உண்மை.. உண்மை.. உண்மை.
இந்தியா அழிந்தது,அழிவது கயவர்களால் தான் ..திறமையற்றோர்களால் இல்லை!