பிழைக்கும் வழி – கலைஞர் காட்டும் பாதை !

பிழைக்கும் வழி –
கலைஞர் காட்டும் பாதை !

சிறிது நேரம் முன்பாக –
கலைஞர், தனது
கலைஞர் தொலைக்காட்சியில் –
உருக்கமாக
உரையாற்றிக் கொண்டிருந்தார்.
ஐந்து முறை முதலமைச்சராக இருந்தும்,
தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணி இன்னும்
முற்றுப்பெறவில்லை ஆதலால் –

ஆறாவது முறையும்
என்னை முதலமைச்சராக்கினால்,
கடைசி மூச்சு உள்ள வரையில்,
தமிழ் மக்களுக்காகப் பாடுபடுவேன்
என்று கரகரத்த குரலில் அவர்
பேசியதைப் பார்த்து
உணர்ச்சி வசப்பட்டு போனேன் !

இந்த மனிதருக்குத் தான் இந்த தள்ளாத வயதிலும்
மக்களைப் பற்றி,  தன் மக்களைப்பற்றி(!)
எவ்வளவு கவலை !

இவ்வளவு உழைத்திருக்கிறார் –
உழைக்கிறார் – ஆனால் இன்னும்
பணி முடிவடையவில்லை என்கிறாரே !

சரி -கலைஞர் ஐந்தாவது முறை முதலமைச்சராக
இருந்தபோது – கல்வித்துறை செழிக்க,
தம் மக்கள் (!) சிறக்க என்ன என்ன
செய்திருக்கிறார்
என்பதைப் பற்றி சிறிது ஆராய்வோம் என்று
முனைந்தேன் !

அடேயப்பா – எத்தனை எத்தனை கல்லூரிகள் –
பொறியியல் கல்லூரிகள், கலைக்கல்லூரிகள்,
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் !!

கிடைத்த தகவல்களை கீழே தந்திருக்கிறேன் –
நீங்களே பாருங்களேன் !

கலைஞர் ஆட்சியில் உருவாக்கப் பட்டிருக்கும்
தனியார் கல்லூரிகளின் பட்டியல் –

1)திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்,
தாயனூர்  கிராமம் கேர் எஞ்ஜினீயரிங் கல்லூரி
(நாராயணா அறக்கட்டளை )

2) மதுரை,திருமங்கலத்தை அடுத்துள்ள
சிவரக்கோட்டை –
தயா எஞ்ஜினீயரிங் கல்லூரி

3)கோவை அருகே  பாப்பம்பட்டியில்,
கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப்
டெக்னாலஜி கல்லூரி
(விஜயலட்சுமி பழனிச்சாமி சாரிடபுள் டிரஸ்ட் )

4)வி.எஸ்.ஏ. குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்,
வீரபாண்டிக்கருகே உள்ள உத்தம சோழபுரம்

5)ஆட்டையாம்பட்டி, வி.எஸ்.ஏ.
மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல்

6)காட்டுமன்னார் கோயில் – சந்திரவதனம்
ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சந்திரவதனம்
ஆசிரியர் கல்வி இயல்
கல்வி நிறுவனம்

7) பழஞ்சநல்லூர் – எம்.ஆர்.கே. கலை
மற்றும் அறிவியல் கல்லூரி, வீராணம் நல்லூர்
எம்.ஆர்.கே. இஞ்ஜினீயரிங் கல்லூரி

8)காட்பாடி அருகே – கிங்ஸ்டன் கலை
மற்றும்
பொறியியல் கல்லூரி

9)விழுப்புரம் அருகே – கப்பிலியாம்புலியூர்,
(சிகா அறக்கட்டளை) சிகா மேலாண்மைக் கல்லூரி,
சிகா டீச்சர் டிரெயினிங் கல்லூரி

10)விக்கிரவாண்டி அருகே –
சூர்யா பொறியியல் கல்லூரி

11)திருவண்ணாமலை – அருணை பொறியியல்
கல்லூரி,
கம்பன் பொறியியல் கல்லூரி,
கம்பன் கலை மற்றும்
அறிவியல் பெண்கள் கல்லூரி,
குமரன் பாலிடெக்னிக்,
கம்பன் ஐடிஐ,
ஜீவா வேலு உறைவிடப்பள்ளி

இவ்வளவு கல்லூரிகளையும் உருவாக்க
வேண்டுமானால், அதில் எவ்வளவு உழைப்பைக்
கொட்டி இருக்க வேண்டும் ?
எவ்வளவு பணம், பொருள், முதல்
போட்டிருக்க வேண்டும்?
எவ்வளவு பேரைப் பார்த்திருக்க வேண்டும் ?
எவ்வளவு துறைகளில் இருந்து,
எவ்வளவு மெனக்கெட்டு, மத்திய, மாநில அளவில்
அனுமதிகளைப்
பெற்றிருக்க வேண்டும் ?

தங்கள் அரசுப்பொறுப்புகளையும்
கவனித்துக் கொண்டு,
மக்கள் பணியும் ஆற்றிக்கொண்டு, இடையே
ஊருக்காக அயராது உழைத்து,
இத்தனை கல்லூரிகளையும் உருவாக்கி,
தமிழ் இளைஞர்களும், இளைஞிகளும் அறிவுக்
களஞ்சியங்களாக உருவெடுக்க காரணமாக
இருந்த பெருமகனார்களின் பட்டியலைப்  பாருங்கள் –

(எந்த கல்லூரிக்கு யார் பொறுப்பு
என்று யூகித்து பொருத்திப் பார்க்கும் ஒரு
சிறிய  பொறுப்பை மட்டும் உங்களிடமே
விட்டு விடுகிறேன். (எல்லாம் காரணமாக தான்!)

1) கே.என்.நேரு (சகோதரர்கள் ராமஜெயம்,
ரவிச்சந்திரன்)

2) மு.க.அழகிரி

3) பொங்கலூர் பழனிச்சாமி

4) வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்

5) ராஜா சன் ஆப் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்

6) எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

7) கதிரவன்  சன் ஆப் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

8) துரைமுருகன்

9) பொன்முடி

10) கௌதம் சிகாமணி மற்றும் அசோக் சிகாமணி
சன்ஸ்  ஆப்  பொன்முடி

11)எ.வ.வேலு

தமிழர்கள் நன்றியறிதலுக்கு பெயர் போனவர்கள் !
எனவே ஒரு ஐந்தாண்டுக் காலத்திலேயே
இத்தனை கல்லூரிகள் உருவாகக்
காரணமாக இருந்த அத்தனை
மந்திரிப் பிரதானிகளையும், அவர்களை
வளர்த்து விட்ட கலைஞரையும் தொடர்ந்து
மக்கள் பணியாற்ற அவசியம்
தேர்ந்தெடுப்போம் – வாரீர், வாரீர் !!!

———————————————–

பின்குறிப்பு –
மேற்கண்ட இடுகையையும் இதையும்
அநாவசியமாக
தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டாம் !

டில்லியில் – உயர் நீதிமன்றத்திலும்,
உச்ச நீதி மன்றத்திலும்,அவ்வப்போது, பல PIL
(public interest litigation)
பொது நல வழக்குகள் – தாக்கல் செய்யப்படுகின்றன.

பல சமூக ஆர்வலர்களும், வழக்குரைஞர்களும்,
தனியார் தொண்டு நிறுவனங்களும்
இதில் ஈடுபடுகின்றன.

பல ஊழல் நிகழ்வுகள், சட்ட விதி முறை மீறல்கள்,
அதிகார துஷ்பிரயோகங்கள், இவற்றின் மூலம்
வெளிக்கொண்டு வரப்படுகின்றன.

துரதிருஷ்டவசமாக, தமிழ் நாட்டில்
பெரும்பாலான செய்தித் தாள்களும்,
தொலைக்காட்சி நிறுவனங்களும்,
சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் –
அரசைக் கண்டு, ஆளும் கட்சியைக் கண்டு
பயப்படுகின்றன.
இதனாலேயே ஊழல்கள் பெருத்துக் கொண்டே
போகின்றன.
(இதையும் மீறி – துணிச்சலுடன்  செயல்படும்
ஜூனியர் விகடன் போன்ற ஒன்றிரண்டு
இதழ்களை இந்த தருணத்தில், நாம்
பாராட்டியே ஆக வேண்டும் )

தமிழ் நாட்டில் –
தனிப்பட்ட நபர்கள் தயங்கினாலும்,
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு,
விழிப்புணர்வு தொண்டு நிறுவனங்களாவது,
சமுதாய அமைப்புகளாவது,
இத்தகைய  செயல்களில் முனைய
முற்பட வேண்டும். செய்தித்தாள்களும்,
துணிச்சலுடன் தங்கள்  கடமையைச்
செய்ய  வேண்டும்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to பிழைக்கும் வழி – கலைஞர் காட்டும் பாதை !

  1. sollasollainukkuthada...'s avatar raja1969 சொல்கிறார்:

    தமிழ் நாட்டில்
    பெரும்பாலான செய்தித் தாள்களும்,
    தொலைக்காட்சி நிறுவனங்களும்,
    சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் –
    அரசைக் கண்டு, ஆளும் கட்சியைக் கண்டு
    பயப்படுகின்றன.
    இதனாலேயே ஊழல்கள் பெருத்துக் கொண்டே
    போகின்றன………………..இதுதான் உண்மை இந்தநிலை மாரும்தூரம் வெகு தொலைவில் இல்லை …???!!!மாறினாலும் வரும் ஆட்சியில் இதெல்லாம் தொடராது என்று என்ன உத்திரவாதம் ? நாம் இவர்களுக்கு அடிமைப்பட்டு வழவேன்றும் என்பது தான் நியதியா?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் ராஜா,

      பொது மக்கள்,
      பொதுவான மக்களாக
      இருக்க வேண்டும்.
      எந்த கட்சிக்கும்,
      நிரந்தர விசுவாசிகளாக மாறி
      கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும்
      நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

      தவறு செய்யும் கட்சியை
      ஆட்சியில் இருந்து எப்போது
      வேண்டுமானாலும் தூக்கி எறியத் தயாரான
      மனநிலையில் இருக்க வேண்டும்.

      ஜனநாயகம் தழைத்து வளர வேண்டும்
      என்றால் – பொது மக்கள் விழிப்புடன்
      இருக்க வேண்டும்.
      கட்சி சார்பற்று இருக்க வேண்டும்.
      நல்லது – கெட்டதுகளை
      பாரபட்சமின்றி உணரக்கூடிய
      பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

      வரும். அந்த நிலை வர இன்னும்
      காலமாகும். வளரும் நிலையில் தானே
      இருக்கிறது நமது ஜனநாயகம்.

      – வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  2. Prakash's avatar Prakash சொல்கிறார்:

    You are biased against DMK, everyone in Tamil Nadu knows that Private Engg Colleges were started by Politicians stared only in ADMK MGR rule. Later many ADMK ministers have stared Engg colleges across TN.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் பிரகாஷ்,

      இதில் எனக்கு எந்தவித கருத்து
      வேறுபாடும் இல்லை.

      என் நோக்கில் –
      கல்வியை வியாபாரமாக
      யார் செய்தாலும் – தவறு தான்.
      மீண்டும் கூறுகிறேன்.
      யார் செய்தாலும் –
      நிச்சயமாகத் தவறு தான்.

      நான் – இப்போது அதிகாரத்தில்
      இருப்பவர்களின் செயல்களைத் தானே
      விமரிசனம் செய்து வருகிறேன் ?

      அமைச்சர் பதவிகளில் அமர்ந்து கொண்டு.
      அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி,
      புதிய புதிய தனியார் கல்லூரிகளை
      துவங்கி வருபவர்களைப் பற்றி தான்
      எழுதி இருக்கிறேன்.

      நான் எழுதி இருக்கும் விஷயங்கள்
      திமுக வுக்கு எதிரானதாக
      இருக்கலாம். சரி.
      ஆனால் செய்தி உண்மை தானே ?
      நான் தந்திருக்கும் செய்தி
      பொய் இல்லையே.
      முன்பு மற்றவர்களும் செய்தார்கள்
      என்பதால், இப்போது இவர்கள்
      செய்வது சரி என்று நியாயப்படுத்த முடியுமா ?

      இந்த அரசியல் பின்புலமும்,
      செல்வாக்கும் இல்லா விட்டால் –
      அவர்களால் இதைச் செய்ய முடியுமா ?

      சரி விடுங்கள். இன்னும்
      நிறைய விஷயங்களை எழுதி
      வருகிறேனே. அவற்றைப்
      பற்றியும் உங்கள் கருத்துக்களை
      கூறலாமே !

      – வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.