கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ?

கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி
கொடுக்கப்பட்டது உண்மையா ?   எதற்காக ?

இன்று  வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு செய்தி
நிறுவனம் பரபரப்பான தகவல் ஒன்றை
வெளியிட்டு உள்ளது.

2009-10 ஆண்டில் மும்பையைச் சேர்ந்த
டிபி ரியல்டி என்கிற நிறுவனத்தின் துணை
நிறுவனமான சினியுக் என்கிற நிறுவனம்
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி
ரூபாய் கொடுத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

பரபரப்புக்கு காரணம் –

இந்த டிபி ரியல்டி நிறுவனத்தின் இன்னொரு
பிரிவு தான் (தொலை தொடர்பு
பிரிவு நிறுவனம்) ராஜாவால் முறைகேடாக
2ஜி அலைக்கற்றை அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படும்
ஸ்வான் நிறுவனம்.

தொலை தொடர்பு துறையில்
எந்தவித முன் அனுபவமும் இல்லாத
இந்த ஸ்வான் நிறுவனம் 1600 கோடி ரூபாய்க்கு
2ஜி அலைக்கற்றையை வாங்கி விட்டு உடனடியாக
அதில் 45 % பங்கை மட்டுமே 4500 கோடிக்கு
துபாயைச் சேர்ந்த எடிசலாட் என்கிற ஒரு
நிறுவனத்திற்கு விற்று  கொள்ளை லாபம்
சம்பாதித்தது.

இந்த லாபத்தில் ஒரு பங்கு ராஜா கை காட்டும்
நபர்களுக்குப் போய்ச் சேர்ந்ததாக சிபிஐ சந்தேகித்து
விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சினியுக் நிறுவனம் மூலமாக
டிபி ரியல்டார் ( ஸ்வான் நிறுவனம் )
எதற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு இந்த அளவு
பணம் கொடுக்க வேண்டும் என்று விசாரணை
நடக்கிறதாம்.

சொல்லப்படும் காரணங்களில் ஒன்று –
கலைஞர் தொலைக்காட்சியில் 30 % பங்கு
வாங்குவதற்காக இந்தப் பணம் கொடுக்கப்பட்டது.

சொல்லப்படும் மற்றோர்  காரணம் –
பங்கு வாங்கும் விஷயம் சரிவர ஒத்து வராததால்
இந்தப் பணம் கடனாகக் தந்ததாக கருதப்பட்டது.

மற்றோர் சமயத்தில்(ஊழல் புகார் கிளம்பிய பிறகு ?)
இந்தப் பணம் வட்டியுடன் திரும்பத்
தரப்பட்டு விட்டதாகவும் இந்த
செய்தித் தளத்தில்  கூறப்பட்டுள்ளது.
(அது பற்றிய மேல் விவரங்கள்
ஏதும் தரப்படவில்லை !)

கலைஞர் தொலைக்காட்சி உண்மையில்
யாருக்கு சொந்தமானது
என்று தெரிந்து கொள்ளும்  ஆவல்
உங்களைப் போலவே எனக்கும்
ஏற்பட்டது.

இந்த செய்தி தளத்தில் காணப்படும் தகவல் –
60 % பங்கு தயாளு அம்மாளுடையது.
20 % பங்கு கனிமொழியுடையது.
20 % பங்கு கலைஞர் தொலைக்காட்சியின்
சியிஓ சரத்குமாருடையது !

இந்த செய்திகள் இதுவரை
மறுக்கப்படவில்லை.

 

தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் –
மிகவும் பரபரப்பான இந்த செய்தியைப் பற்றிய
முழு விவரங்களையும்
சம்பந்தப்பட்டவர்களே விவரமாக வெளியிடுவது
தான் நல்லது. அப்போது தான் பொது மக்கள்
சரியான விவரங்களை முழுமையாகத்
தெரிந்து கொள்ள முடியும்.

இது பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள்
குறித்த செய்தி என்பதால் –
இது பற்றிய முழு உண்மைகளையும்
தெரிந்து கொள்ளக் கூடிய உரிமை
இந்த நாட்டு மக்களுக்கு உண்டு.


Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, வரி ஏய்ப்பு, ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ?

  1. RAJASEKHAR.P's avatar RAJASEKHAR.P சொல்கிறார்:

    இது பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள்
    குறித்த செய்தி என்பதால் –
    இது பற்றிய முழு உண்மைகளையும்
    தெரிந்து கொள்ளக் கூடிய உரிமை
    இந்த நாட்டு மக்களுக்கு உண்டு.

  2. sEkkaaLi's avatar sEkkaaLi சொல்கிறார்:

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

  3. Prakash's avatar Prakash சொல்கிறார்:

    Payment made to Kalaiger TV by DB investment is false news. This is an as usual cooked up story by North Indian TV Channels and Brahmin Vested elements.
    Pls check http://thatstamil.oneindia.in/news/2011/02/04/2g-scam-kanimozhi-kalaingnar-tv-under-scanner-aid0090.html
    No payment is made to Kalaiger TV.
    Why most of the blogers believe whatever North Indian TV Channels and Brahmin Vested elements says. May be they think that Men with White Skin won’t lie.

  4. vallal's avatar vallal சொல்கிறார்:

    we know kalaingar is a womeniser.we ignored for his tamil mastery.we know he is not honest,yet we ignored for we belived him to be saviour of tamil race.we know he is corrupt,yet we accepted him kuraloviam etc.We have only now come to know he is a traitor of tamils and traitor who is instrumental in selling 2g to pakistanis and chinese.he never expressed remorse when thousands of innocent tamils were run over by army tankers by shingalese.He forget his principles and fell from grace

  5. vallal's avatar vallal சொல்கிறார்:

    Ban DMK from contesting in elections.verify the properties accumulated by all district sectretaries of the party over past 5 years.put every swindler in the party behind bars.

  6. metro boy's avatar metro boy சொல்கிறார்:

    //Payment made to Kalaiger TV by DB investment is false news. This is an as usual cooked up story by North Indian TV Channels and Brahmin Vested elements//

    //Why most of the blogers believe whatever North Indian TV Channels and Brahmin Vested elements says. May be they think that Men with White Skin won’t lie.//

    Even after so much water has flowed in the 2-G spectrum issue, we still have people who talk of Brahmin vested interests!
    May God save TamilNadu!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.