கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ?

கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச
வெட்கமாக இல்லை உங்களுக்கு ?

ராஜா கைதுக்கு காரணம் பார்ப்பனர்கள் –
உயர்ஜாதிக்காரர்களின் சதி !
நான் மகாபலி யைப்  போன்றவன்.
என் ஆட்சியைக் கவிழ்க்க,
தாழ்ந்த ஜாதிக்காரனான
என்னிடமிருந்து ஆட்சியைப்  பிடுங்க
உயர்சாதிக்காரர்கள் சதி செய்கிறார்கள்  என்று
கூசாமல் சொல்லுகிறீர்களே –
வெட்கமாக இல்லை  உங்களுக்கு?
50 வருடங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தால்
ஒரு வேளை
மக்கள் நம்பி இருப்பார்கள்.

இன்னமும் இளிச்சவாய் தமிழர்கள் நிறைய பேர்
இருக்கத்தான் செய்கிறார்கள் – என்றாலும்
நீங்கள்  நினைக்கின்ற அளவிற்கு அல்ல !

இன்றைய தினம் – சிபிஐ நிறுவனம்,
கைது செய்யப்பட்டுள்ள ராஜாவை
கோர்ட்டில் ஆஜர் செய்யும்போது
கூறியுள்ள காரணங்களில் சில  –

ஸ்வான் டெலிகாம்  மற்றும் யுனிடெக்
நிறுவனங்களுக்கு சட்டத்தை, விதிமுறைகளை
மீறி சலுகை கொடுத்தது.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்த
முறைதவறிய சலுகைகள்.

அவருக்கு வேண்டப்பட்ட சில நிறுவனங்களுக்கு
சட்ட விதிமுறைகளை மீறியும், வளைத்தும்,
மாற்றியும்
2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கியது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ராஜாவை அவரது
இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி
அரசாங்கம் எடுக்க இருந்த முடிவுகளை முன்கூட்டியே
தெரிந்து கொண்டது.

இரண்டு நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கி
உடனடியாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தங்கள்
பாதிப்  பங்குகளை மிக அதிக விலைக்கு விற்று
கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்தது.

அப்படிக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை
சென்னையில் ராஜாவின் உறவினர்கள் பெயரில்
நவம்பர் 2008 -ல் புதிதாகத் துவக்கப்பட்ட
கம்பெனிகளுக்கு திருப்பி விட்டு அதன் பயன்
ராஜாவிற்கு கிடைக்கச் செய்தது.

வேண்டுமென்றே தனக்கு வேண்டிய
சில நிறுவனங்களுக்கு மட்டும் லைசென்ஸ்
கிடைக்க விண்ணப்பங்களுக்கான கடைசி
தேதியை மாற்றியது.

இவை எல்லாம்
மகாபலியான கலைஞரிடமிருந்து
ஆட்சியைப் பறிக்க –
பார்ப்பனர்களோ –
உயர் ஜாதிக்காரர்களோ
கூறும் காரணங்கள் அல்ல.
ராஜா மீது  வழக்கு ஏன் தொடர வேண்டும் என்று
சிபிஐ, கோர்ட்டில் கூறியுள்ள காரணங்கள்.

இந்த நிலையில்,
என்ன செய்திருக்க வேண்டும் நீங்கள் ?

ஒன்று – ராஜா குற்றமற்றவர் என்று
நீங்கள் கூறுவதை உண்மையாகவே
நீங்களே நம்பினால் –
உங்கள் நெஞ்சில் துணிவிருந்தால் –

அவர் மீது பொய்யான குற்றம் சுமத்தி,
அமைச்சர் பதவியை விட்டு விலக வைத்து,
கைது செய்து,
சிறையில் அடைத்துள்ள
காங்கிரஸ்  தலைமையை கண்டித்து,
தைரியமாக அறிக்கை விடுங்கள்.
பொய் வழக்கு போட்ட சிபிஐ யை கண்டித்து
கடுமையாக அறிக்கை விடுங்கள்.
மக்களைத் திரட்டி
போராட்டம்  அறிவியுங்கள்.
குற்றமற்ற ராஜாவை அநியாயமாக வதைபட வைக்கும்
சோனியா காந்தியை எதிர்த்து கூட்டணியை
முறித்துக்கொண்டு
மத்திய அரசிலிருந்து வெளியே வாருங்கள்.
18 திமுக எம்பி க்களின் ஆதரவை
விலக்கிக்கொள்ளுங்கள்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின்
மானத்தைக் காக்க,
சுயமரியாதையைக் காக்க -முன்வரும் உங்களை
மக்கள் தலைமேல் தூக்கி
வைத்துக் கொண்டாடுவார்கள்.

இல்லை – ராஜா செய்திருப்பாரா மாட்டாரா
என்பது குறித்து உங்களால் ஒரு தீர்மானத்திற்கும்
வர முடியவில்லை என்றால் –

ராஜாவின் மீது  சுமத்தப்பட்டிருக்கும்
2ஜி ஊழலுக்கும் திமுக வுக்கும்  சம்பந்தமில்லை.
இது கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல.
அவர் அமைச்சராக செயல்பட்ட நிலை குறித்தது.
எனவே -தன் பணியில் ஏற்பட்ட பிரச்சினையில்,
தன்னை நிரபராதி
என்று நிரூபிப்பது அவர் பொறுப்பு.
இந்த வழக்கைச் சந்திக்க அவருக்கு
தேவையான உதவிகளை  கட்சி செய்யும் –
என்று சொல்லி விட்டு உங்கள்
கடமையைத் தொடருங்கள்.

இந்த இரண்டில் ஒன்றைச் செய்யாமல்,
பேடித்தனமாக  ஜாதியை இங்கு இழுப்பது –

இதில் சம்பந்தப்பட்டிருப்பது ராஜா மட்டுமல்ல.
சிஐடி காலனி வீடும் தான்.
இன்று ராஜா வரை வந்தது, நாளை நம் வீடு வரை
வந்து விடுமோ என்கிற பயம் தான் உங்களை
இப்படி எல்லாம் பேச வைக்கிறது.
டில்லியை முறைத்துக் கொண்டால் இன்னமும்
சிக்கலாகி விடுமோ என்கிற பயம் தான்
இப்படி எல்லாம் பேச வைக்கிறது –
என்றே நினைக்க வைக்கிறது.

இத்தனை வருடங்கள் பொது வாழ்வில் இருந்ததற்கு
ஒரு அர்த்தம் வேண்டும் – நம்மை நம்பி
இந்த உயரத்தில் கொண்டு வைத்துள்ள மக்களுக்கு
நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று
நீங்கள் நினைத்தால் இப்போதாவது நிறுத்துங்கள்
இந்த  பசப்பு வார்த்தைகளையும் – போலி
அரசியல் வேடங்களையும்.

வேண்டாம் உங்களுக்கு இனி அரசியல்.
இத்தனை வயதிற்கு
மேலாகவாவது – மக்களிடம் வேடம் போடுவதையும்
வசனம் பேசுவதையும் நிறுத்தி விடலாமே !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

27 Responses to கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ?

  1. padmahari's avatar padmahari சொல்கிறார்:

    சூப்பர்……நெத்தியடி!

  2. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    MK past history from the Day one his not honest. I do not know how people believe this MK & JJ

  3. RAJASEKHAR.P's avatar RAJASEKHAR.P சொல்கிறார்:

    வேண்டாம் உங்களுக்கு இனி அரசியல்.
    இத்தனை வயதிற்கு
    மேலாகவாவது – மக்களிடம் வேடம் போடுவதையும்
    வசனம் பேசுவதையும் நிறுத்தி விடலாமே !
    RAJASEKHAR.P

  4. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    //வேண்டாம் உங்களுக்கு இனி அரசியல்.
    இத்தனை வயதிற்கு
    மேலாகவாவது – மக்களிடம் வேடம் போடுவதையும்
    வசனம் பேசுவதையும் நிறுத்தி விடலாமே !//

    நாங்க என்ன கிறுக்கங்களா.. பேசிப் பேசியே தமிழ் தமிழ் என்று சொல்லியே ஒரு தலைமுறையை நாசம் செய்த மாதிரி, இலவசம் இலவசம் என்று கொடுத்து இப்போதும் நாசம் செய்து கொண்டிருக்கிற மாதிரி இன்னமும் அடுத்த தலைமுறைகளையும் நாசம் செய்ய வேண்டாமா.. அதற்காக இப்படி ஏதாவாது உளறி, பார்ப்பனர், சோர்ப்பனர் என்று புளுகி ஏமாற்றிக் கொண்டுதான் இருப்போம். முட்டாள்கள் இருக்கும் வரை எங்களுக்குக் கொண்டாட்டம்தான். நீங்கள் பார்த்து வயிறெரிய வேண்டியது தான்.

    ஹஹ்ஹ்ஹ்ஹா.. ஹஹ்ஹ்ஹ்ஹா..

    தமிழர்களே, தமிழர்களே.. நாளை நமதே! இந்த நாடு முழுவதும் நமதே! இதை உணர்ந்து செயலாற்றுங்கள்.

  5. ramesh's avatar ramesh சொல்கிறார்:

    Vazthukkal. Ungal thunichalukku.

  6. Sivanesan's avatar Sivanesan சொல்கிறார்:

    அரசியலில் இது சகயம் உடன்பிறப்பே 

  7. வேந்தன்'s avatar வேந்தன் சொல்கிறார்:

    85 வயதில் திருந்தி இனி என்ன செய்யபோகிறார்.. அவரது 7 வது தலைமுறையின் இறுதி நாள் பருக்கை நெய்யுடன் தீர்மானிப்பட்டுவிட்டது. அந்த அளவுக்கு செல்வம் சேர்த்தாகிவிட்டது. பொது நலன் என்பது திருந்தும் விஷயம் அல்ல.. அது ஒரு வாழ்க்கைமுறை ஒரு சிறு சந்தேகம் கூட தாங்காமல் உயிரை விடக்கூடியது.. இறந்து போன திவ்யா B com ன் கால் மண்ணை எடுத்து பூசிக்கொள்ளச்சொல்லுங்கள். குறைந்தபட்சம் சிரமப்படாமல் விடைபெறுவார். .. தயை கூர்ந்து பதிவாளர்களே… கருணாநிதி பற்றி எழுதுவதை விட நம்மை போன்று மானத்திற்கு பயந்து வாழும் திவ்யா போன்ற சகோதரிகளை பற்றி எழுதுங்கள் .. மேற்கண்ட இழிபிறவிகளால் நம் எழுத்துகளே அசுத்தமாகின்றன்.

  8. natramizhan's avatar natramizhan சொல்கிறார்:

    கைது செய்யப்பட்டதாலே யாரும் குற்றவாளி அல்ல‍. கருணா

    மக்களே இது இராசாக்கு சொன்னது அல்ல, முன்வரிசையில் உட்கார்ந்து இருந்த அழகிரியை பார்த்து சொன்னது.

    கலைஞர் விளக்கம். கைது செய்யப்பட்டதாலே யாரும் குற்றவாளி அல்ல. மறை பொருள்… வெளியில் இருப்பதாலே யாரும் நிரபராதியும் அல்ல(அழகிரியை பார்த்து சொன்னார்)

  9. asokaraj's avatar asokaraj சொல்கிறார்:

    செம சூடு அய்யா. இன்னும் இவனுங்களுக்கு பின்னாலே ஒரு ஆட்டு மந்தை கூட்டம் கை தட்டிக் கொண்டு நிக்குதே அதை என்னன்னு சொல்றது? இன்னும் 100 வருஷம் ஆனாலும் நாம் இப்படியே புலம்பிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.

  10. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    காவிரிமைந்தன் ,
    மிக அருமையான பதிவு.உங்கள் தார்மீக கோபம என்னை சிலிர்க்க வைத்தது.
    வேந்தன் ,உங்கள் பின்னூட்டம் ,என்னை கண்ணீர் சிந்த வைத்தது.
    ஒருபக்கம்,இட்லிவடையில் விஸ்வாமித்திரர்,உண்மைத்தமிழனில் சரவணன் ,இங்கே கா.மை பின்னி பெடல் எடுக்கிறார்கள்
    இவ்வளவு நேர்மையான துணிச்சலான நல்ல உள்ளங்களா,வலைதளத்தில்?உங்கள் தொடர்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறேன்.இதற்கு மூல காரணமான நம் முதலமைச்சருக்கு என் நன்றி.
    இந்தப்பதிவை அவரவர் தளத்திலும் போடப்போகிறேன்
    நன்றி.

  11. M.S.Vasan's avatar M.S.Vasan சொல்கிறார்:

    /பேடித்தனமாக ஜாதியை இங்கு இழுப்பது –

    இதில் சம்பந்தப்பட்டிருப்பது ராஜா மட்டுமல்ல.
    சிஐடி காலனி வீடும் தான்.
    இன்று ராஜா வரை வந்தது, நாளை நம் வீடு வரை
    வந்து விடுமோ என்கிற பயம் தான் உங்களை
    இப்படி எல்லாம் பேச வைக்கிறது.
    டில்லியை முறைத்துக் கொண்டால் இன்னமும்
    சிக்கலாகி விடுமோ என்கிற பயம் தான்
    இப்படி எல்லாம் பேச வைக்கிறது /
    Small correction after 214 crores reveal of DB realtors investment on Kalaignar TV, NOW it is “நம் வீடுகள் வரை”

  12. Kalee's avatar Kalee சொல்கிறார்:

    Please share the deatils on death of திவ்யா B com. I was not sure what was the news. Sorry as I was not upto date on this news.

  13. VELS's avatar velumani1 சொல்கிறார்:

    ராசா என்னமோ செய்யட்டும். அந்தப் பணத்தையெல்லம் முதல்ல திருப்பி வாங்குங்க சி.பி.ஐ. ராஜாக்களே…..

  14. suresh's avatar suresh சொல்கிறார்:

    கேள்வி ஒவ்வென்றும் கலைஞரை தூக்கு மேடையில் நிற்க வைக்கிறது. அருமை மானங்கெட்ட ஜென்மங்கள்…எங்காவது தொலைந்தால் தான் என்ன…?

  15. துளசி கோபால்'s avatar துளசி கோபால் சொல்கிறார்:

    எல்லாம் அசிங்கப்பட்டு நிக்கும்போதும்…..பேச்சுக்கு ஒன்னும் குறை வைக்கலை ‘அவர்’ 😦

  16. meenakshi's avatar meenakshi சொல்கிறார்:

    கருப்பு சாயம் வெளுத்து போச்சு
    டும் … டும் … டும் ..
    சிகப்பு சாயம் வெளுத்து போச்சு
    டும் … டும் … டும் ..
    கருப்பு சிகப்பு சாயம் வெளுத்து போச்சு
    டும் … டும் … டும் ..
    மக்கள் நலம்
    மக்கள் நலம் என்பார் நாட்டினிலே
    தன் மக்கள் நலம் மேம்படவே
    புளுகிடுவார் இந்த நாட்டினிலே
    தன் மக்கள் நலம்
    …து , .. ரி ,….வி,…ன்,… சு,…ழி
    பத்தாதுன்னு ..ஜா
    மக்கள் நலம் மேம்படவே காக்கும்
    தமிழ் குடி தாங்கி
    புளுகிடுவார் இந்த நாட்டினிலே

  17. venkat's avatar venkat சொல்கிறார்:

    நெத்தியடி!

  18. C S Lakshmi's avatar C S Lakshmi சொல்கிறார்:

    அடி வயிற்றிலிருந்து வரும் கோபம் இது. சில சமயம் எதுவும் மாறாத போது இது அத்தனையும் பேடிக் கோபம்தானா என்ற மனச் சோர்வு உண்டாகிறது.

  19. Mubarak's avatar Mubarak சொல்கிறார்:

    இந்த வசனம் லாம் பராசக்தி
    படத்துலயே பார்த்தாச்சு ….!!!!
    தண்ணிய குடிங்கோ ….!!!!!!!!!

  20. C.K.Kumaresan's avatar C.K.Kumaresan சொல்கிறார்:

    excellent publication

  21. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    It is simply super. This is the exact wordings I had thought of. You have refected what I had in mind. Keep it up. By the way, in my sincere opinion, you need not reply for the comments seen in thatstamil.com site. Since majority of those comments are vulgar and do not reflect a true sense

  22. P Muthu's avatar P Muthu சொல்கிறார்:

    very exelent publication

  23. chokka's avatar chokka சொல்கிறார்:

    anan

  24. KargilJay's avatar KargilJay சொல்கிறார்:

    //இன்னமும் இளிச்சவாய் தமிழர்கள் நிறைய பேர்
    இருக்கத்தான் செய்கிறார்கள்//

    — Sir,
    you are plain wrong in the above statement. People are not fools as you claim to believe him. They just enjoy what he says or don’t care. If they are honest, they will throw him out in election. People are tuned and they enjoy caste relevant remarks and like MK since he does it (even if Vivek does it they will like it). Say there is a insulting joke about Brahmins in a movie. 99% of people will laugh seeing it. They won’t consider it as an offending remark on specific minority.

    By whatever MK said about Brahmins, you became angry either since you like brahmin or you don’t like MK. But what if you are neutral or his supporter? now you become angry, but did you become angry when 100s of Tamil Fishermen were killed by SL? Did tamil people care about hundreds of thousand pandits killed in Kashmir? What if you don’t care when thousands of Tamil people died in SL?

    I am asking the above seemingly irrelevant questions to let you know, people won’t care, unless they are directly affected. There are millions of SC/STs, Christians, Muslims, Barber caste people who are enjoy whatever Karunanidhi says especially he insults hindus.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பரே,

      ஜாதிகளைப் பற்றி என் எண்ணங்களை நான்
      ஏற்கெனவே ஒரு பதிலில் சொல்லி இருந்தேன்.

      இன்றைய தினத்தில் ஜாதிகள் வழக்கத்தில்
      இருக்கத்தான் செய்கின்றன.
      இருந்தாலும்
      அவை யாரையும் உயர்ந்தவர் –
      அல்லது தாழ்ந்தவர்
      என்பதை குறிப்பதற்காக அல்ல –

      தங்கள் தங்கள் குடும்பங்களின் கலாச்சாரங்கள்,
      பழக்க வழக்கங்கள் இன்னின்ன மாதிரியானவை
      என்பதை குறிப்பதற்காக மட்டும் தான்- என்பதை

      மக்கள் புரிந்துகொண்டாலே போதும்
      ஜாதிப்பூசல்கள்
      நிச்சயம் காணாமல் போய்விடும்.

      இன்றைய தினத்தில் ஜாதி வித்தியாசங்களை
      பெரிது படுத்தி பயன்பெறுபவர்கள்
      கடைந்தெடுத்த அயோக்கியர்களான
      அரசியல்வாதிகள் தான் என்பதே என் கருத்து.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  25. srijanakasViswamithran's avatar srijanakasViswamithran சொல்கிறார்:

    You are absolutely right KM

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.