ஜெர்மன் வங்கியில் கள்ளப்பணம் வைத்திருந்த
250 பேர் கொண்ட பட்டியல் …
(ஏன் இத்தனை மர்மங்கள் -4 )

உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவை
ஒட்டி, அநேக நாடுகளின் அரசுகள், தங்கள்
நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் பதுக்கி
வைத்திருக்கும் பணத்தை வெளிக்கொண்டு வர
முயற்சி செய்தன.
இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட ஜெர்மன் அரசும்
எப்படியோ ஜெர்மன் வங்கி ஒன்றில்
( Lichtenstein bank ) பதுக்கி
வைக்கக்ப்பட்டிருந்த ஊழல் பெருச்சாளிகளின்
பட்டியலைக் கைப்பற்றியது. ஜெர்மனைத் தவிர
மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களும்
அதன் வசம் சிக்கியதால்,
ஜெர்மன் அரசு பிப்ரவரி 2008 -ல்
தங்களிடம் இருக்கும் இந்த
பட்டியலை உலகில் எந்த நாடு கேட்டாலும்
எந்தவித நிபந்தனையுமின்றி தரத்தயாராக இருப்பதாக
அறிவித்தது.
சுமார் 250 இந்தியர்களின் பெயர்களும் இதில் அடக்கம்.
இப்படி பகிரங்கமாக ஒரு அறிவிப்பை ஜெர்மனி அரசு
வெளியிட்ட பிறகும், இந்திய அரசு இந்த பட்டியலைப்
பெற எந்தவித அக்கரையையும் காட்டவில்லை.
இதைப்பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை
பெரிய அளவில் பரபரப்பைக் கிளப்பிய பிறகு,
வேறு வழி இல்லாமல், இஷ்டம் இல்லாமலேயே
இந்திய அரசு ஜெர்மன் அரசுக்கு கடிதம் எழுதியது.
எப்படி ?
வெளிப்படையாக அனைத்து விவரங்களையும்
தரத்தயாராக இருந்த ஜெர்மன் அரசிடம், இந்த
விவரங்கள் “ரகசியம்” என்று வகைப்படுத்தப்பட்டு
தான் அனுப்பப்பட வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தி
எழுதியது ! கொள்ளையர்களின், ஊழல்வாதிகளின்
பெயர்கள் வெளிவந்து விடாமல் பாதுகாப்பதில்
இந்த அளவிற்கு சோனியா காந்தி/
மன்மோகன் சிங்கின் இந்திய அரசு அக்கரை
காட்டியது ஏன் என்பது தெரியவில்லை!!
இந்த பட்டியல் இந்திய அரசுக்கு வந்து சேர்ந்த பின்பும்
இதைப்பற்றி பேச்சுமில்லை – ஒரு மூச்சுமில்லை !
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல
வழக்கு போடப்பட்டது. மூத்த வழககுரைஞர்
ராம் ஜெத்மலானியும், மற்ற சிலரும் மத்திய அரசு
இந்த பட்டியலை வெளியிட வேண்டும் என்றும்,
அந்த பட்டியலில் உள்ளோர் மீது எடுத்த நடவடிக்கைகளைப்
பற்றிய விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும்
உச்ச நீதி மன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்ற வாரம் சுப்ரீம் கோர்ட் முன் விசாரணைக்கு
வந்த இந்த வழக்கில் மத்திய அரசின் தரப்பில் வாதாடிய
சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ( ஆமாம் –
ராஜாவிற்கு ஆதரவாக வாதாடிய அதே நபர் தான் !)
ஜெர்மனியிடமிருந்த கிடைத்த பட்டியலில் காணப்பட்ட
நபர்களுக்கு, உரிய வருமான வரியை கட்டும்படி
நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டதாகவும், ஆனால்
இது குறித்த விவரங்களை ரகசியமாக வைக்கவே
அரசாங்கம் வைக்க விரும்புவதாகவும் கூறி இருக்கிறார் !
என்ன காரணத்தால் மத்திய அரசு பெயர்களை
வெளியிட மறுக்கிறது என்று நீதிமன்றம் கேட்டதற்கு,
பெயர்களை வெளியிடும்படி அரசை யாரும் கட்டுப்படுத்த
முடியாது என்று அரசு வக்கீல் கூறி இருக்கிறார் !
இறுதி ஆணையைப் பிறப்பிக்கும் முன்னர்,
இது குறித்து அரசின் இறுதி நிலை என்ன என்பதைக்
கேட்டுச் சொல்ல வேண்டும் என்று நீதிமன்றம்
அரசு வழககுரைஞரிடம் கூறி விசாரணையை
ஒத்தி வைத்திருக்கிறது.
சோனியா / மன்மோகன் சிங் அரசு ஊழல்வாதிகளின்
பெயர்களை வெளியிட மறுப்பது யாரைப் பாதுகாக்க
என்கிற விஷயம் தான் மர்மமாகவே உள்ளது.
(இன்றைய தினம் -19/01/2011 – சுப்ரீம் கோர்ட்
முன்பாக இந்த விஷயம் விவாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் விவாதம் முடிவடையவில்லை. இவற்றைப்
பற்றி -பின்னர் தனியே பார்ப்போம் )
இது மட்டுமல்ல –
மற்றுமொரு மிகப்பெரிய ஊழல் வழக்கும்
ஒன்றுமே இல்லாமல் மறைக்கப்பட்டு விட்டது.
மஹாராஷ்டிர மாநிலம், புனேயைச் சேர்ந்த
குதிரை வியாபாரி (?) ஹசன் அலியின்
இருப்பிடங்களை (நிஜமாகவே)
தெரியாத்தனமாக ஏதோ சின்ன விஷயமாக
சிபிஐ ரெய்டு போக,
அவர் மிகப்பெரிய ஹவாலா
வியாபாரி என்பதும், அவருக்கு ஸ்விஸ் வங்கியில்
கணக்கில் வராத பணம் சுமார் 1.5 லட்சம் கோடி
ரூபாய் ( ராஜாவை விட 26 லட்சம் கோடி கம்மி !)
இருப்பதும் தெரிய வந்திருக்கிறது !
இதில் எத்தகையோர் எல்லாம் சம்பந்தப்பட்டு
இருக்கிறார்கள் என்பது தெரியாமல்,தெரியாத்தனமாக
உள்ளே புகுந்து விட்ட
வருமான வரித்துறை உடனடியாக “ஜகா” வாங்கி,
உடனடியாக 71,848 கோடி ரூபாயை
(மயக்கம் வரவில்லை?)
வருமான வரியாகச் செலுத்தும்படி நோட்டீஸ் மட்டும்
அனுப்பி விட்டு சந்தடி இல்லாமல்
பின் வாங்கி விட்டனர்.
இவ்வளவு பெரிய தொகை இந்த ஹசன் அலியிடம்
எப்படி வந்தது ? அப்படி இவர் என்ன தான்
வியாபாரம் செய்தார் ? அத்தனை பணமும் ஸ்விஸ்
நாட்டிற்கு சென்றது எப்படி ? தனிப்பட ஒரு ஆள்
மட்டும் இதை எப்படிச் செய்திருக்க முடியும் ?
இதில் இன்னும் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்
என்பது போன்ற எந்த விவரங்களையும்
வெளிக்கொண்டு வர தீவிர முயற்சி எதுவும்
மத்திய அரசால் மேற்கொள்ளப்படவே இல்லை !
71,848 கோடி ரூபாயை வருமான வரியாகக் கட்டு
என்று சர்வ சாதாரணமாக நோட்டீஸ் அனுப்பி விட்டு
தூங்கப் போய் விட்டார்கள் – நம்மைத் தூங்க
விடாமல் செய்து விட்டார்கள் !
– நான் சொல்ல வந்ததை
விட்டு விட்டு இப்படி –
எதை எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறேனே !
சரி – நாளை சந்திப்போமா ?



The party wise breakup of the 250 Indians!
Congress :40
BJP :44(with photo identities)
CPI :19
CPM :17
DMK :32
AIADMK :28
Cong(Pawar) : 9
Telugudesam :24
Samajwadi :23
Independents : 14
Same regionwise:
Northern India: 46
Western India : 46
Eastern India : 46
Southern India : 46
Central India : 46
Andaman/Nicobar/
Union territories:20
நண்பரே,
தயவு செய்து உங்கள் தகவலுக்கான
ஆதாரங்களையும்
எழுதி விடுங்களேன்.
ஹா ஹா ஹா!
பழிக்குப் பழியா?
ஆதாரம்:
சுதந்திர பாரதத்தில் அரசியல்வியாதிகளின் பழக்க வழக்கங்கள்
based on our 60 years experience
=ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..பெருந்தலைவர் சொன்னது.
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி சிறந்தது?–பழமொழி