ராகுலின் கல்லூரி விஜயம்
ராகுல் காந்தியின் தமிழ் நாடு வருகையை முன்னிட்டு
அவர் செல்லவிருக்கும் எல்லா ஊர்களிலும்
முக்கியமான கல்லூரிகளில் மாணவர்களுடன்
கலந்துரையாடல், விவாதம்
போன்றவற்றிற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
ராகுலின் சுற்றுப்பயணம் காங்கிரஸ் கட்சியின்
வளர்ச்சி தொடர்பானது. முழுக்க முழுக்க கட்சி
அரசியல் தொடர்பானது.
இதற்கு கல்லூரிகளையும், பல்கலைகழகங்களையும்
பயன்படுத்தி கொள்வது முற்றிலும் தவறான
முன்னுதாரணமாகி விடும்.
நாளை இதை பின்பற்றி மற்ற அரசியல்
கட்சிகளும் இடம் கேட்டால் பிரச்சினை
வராதா ?
ஏன் பத்திரிகைகளும், கல்வியாளர்களும்
இதை கண்டிக்காமல் இருக்கிறார்கள்
என்பது தான் புரியவில்லை.




நிஜமான சாமியாரா இல்லை ….