காமம் போற்றும் வக்கிரக் கலைஞர் கமல ஹாசன் !

காமம் போற்றும்
வக்கிரக் கலைஞர் கமல ஹாசன் !

முந்தாநாள்  ஞாயிறு காலை விஜய்
தொலைக்காட்சியில் ஒரு  நிகழ்ச்சி.

50 ஆண்டுகளாகத் திரை உலகில் இருக்கிறார்.
இருந்தும் தன்னம்பிக்கை இல்லாத மனிதர் –

கமல் நல்ல நடிகர் தான் –
அவரது நடிப்புத் திறமையை
குறை சொல்வதற்கில்லை.
ஆனால்  வக்கிரம் பிடித்த மனிதர் –
கடைந்தெடுத்த சுயநலவாதி – வியாபாரி !

வயதாகி விட்டதால் தனக்கு மவுசு குறைந்து விட்டதோ
என்று அவருக்கே ஒரு  சந்தேகம் போலும் !

எனவே கடந்த சில ஆண்டுகளாக,
ஒவ்வொரு தடவையும் தன் படம் வெளியாகும் போது
எதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி
மலிவான விளம்பரம் தேட முயற்சிக்கிறார்.

7000 பேர், ஆண்களும், பெண்களும், சிறுவர்,
சிறுமியரும் குடும்பங்களாக கூடி இருந்த அரங்கில்
மகா கேவலமான
ஒரு பாடலை அரங்கேற்றி இருக்கிறார்.

அந்தப் பாடலை கமலும், அவரது தற்போதைய
துணைவி கவுதமியும்
மட்டுமே  ரசிக்க முடியும் – அதுவும்
அவர்களது  படுக்கையறையில் !

திருமண வயதில் இரண்டு பெண்களை உடைய
ஒரு தகப்பன் எழுதக்கூடிய,
பாடக்கூடிய பாட்டா அது ?

காதல் இல்லாத காமத்தையும், கூடலையும்
நியாயப்படுத்துபவர்  மனிதராகவே
இருக்க முடியாது.

தெரு நாய்களுக்கு மட்டுமே
பொருந்தக்கூடிய  பாட்டு –

இதைப் பாடும்போது – தமிழர்கள்
புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இதை
எழுதி இருக்கிறேன் என்று  விளக்கம் வேறு !

இந்த பாடலில் பாதிச் சொற்கள் தமிழே இல்லை-
புழக்கத்தில் இல்லாத, கடினமான  சொற்களைக்
கோத்து விட்டால் – அது சிறந்த பாடலாகி விடும்
என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.

அவர் சொந்த வாழ்வில் கொண்டுள்ள கொள்கை
அவரோடு போகட்டும் – அதை மற்றவர் மீதும்
திணிக்க  முயற்சி செய்ய வேண்டாம்.

திரைப்படப் பாடல்களை அடிக்கடி முணுமுணுக்கும்
பழக்கம்  நம்  சிறுவர்/சிறுமியருக்கு உண்டு.
இந்தப்  பாடல் அவர்கள் பாடக்கூடியதா ?
அக்காள் இல்லாத வேளையில் –
சக்காளத்தி வேண்டும் என்று
நம் சிறுவர்கள் பாடிக்கொண்டு
அலைய வேண்டுமா ?

காமத்தை முன்னிலைப் படுத்தி –
முழுக்க முழுக்க உடலுறவைப்பற்றியே பாடும்
ஒரு பாடல் அனைவரும் பார்க்கும் ஒரு
திரைப்படத்துக்கு  தேவையா ?
கமலுக்கு இது தெரியாதா ?
பின் ஏன் இந்த வக்கிர புத்தி ?

இந்தப் பாடல் கமலுக்கு எந்த விதத்திலும்
பெருமை சேர்ப்பதாக இல்லை என்று
அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

————————————————–

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்…
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை.

உடனே கையுடன் கைகோர்த்தாளா…
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை.

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்…
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை.

கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்…
காதலாய் மாறலாம் எச்சரிக்கை.

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா…
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம் அமைவது
பொதுவே நலமாகக் கொள்

கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்”

காமக் கழிவுகள் கழுவும் வேளையில்
கூட நின்று உதவிட வேண்டும்

– இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்

வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு

-வரம்தரக் கேட்ட வரலட்சுமி யுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?

நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?

பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?

அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்குமுண்டோ?”

மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட

அக்காளில்லா வேளையில் அவன்
சக்காளத்தி வேண்டும் என்றான்

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், ஆபாசம், இணைய தளம், உலக நாயகன், கட்டுரை, கமலஹாசன், கமல், சாட்டையடி, சினிமா, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மட்டமான விளம்பரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to காமம் போற்றும் வக்கிரக் கலைஞர் கமல ஹாசன் !

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அவர் காம ஹாசன் ஆகி நாட்கள் பல ஆகி விட்டன நண்பரே!
    வேறு என்ன அவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியும்.
    நாம் கண்ணதாசனை வழிபடுபவர்கள்..இதையெல்லாம் ஒரு கவிதையாக நினைப்பது கூட பாவம்!
    இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்கவேண்டுமோ?
    உங்கள் மன ஆறுதலுக்காக இதோ கவியரசரின் சாகா வரிகள்:
    மலராத பெண்மை மலரும்
    முன்பு தெரியாத உண்மை தெரியும்
    மயங்காத கண்ங்கள் மயங்கும்
    முன்பு விளங்காத சேதி விளங்கும்
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ

  2. Sreedharan's avatar Sreedharan சொல்கிறார்:

    This is nothing but a caution notice given to his daughter lest she should be deceived by some one like Kama(l)hasan.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.