ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த இன்னும் சில விவரங்கள் –

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இன்று கிடைத்த
இன்னும் சில விவரங்கள் –

1) ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற கம்பெனிகள்
பல  பினாமி வகையைச் சேர்ந்தவை. சில
இதற்காகவே  ஒரு மாதம் முன்னரே துவங்கப்பட்ட
கம்பெனிகள்.

இதில் முக்கியமானவை – தமிழ் நாட்டைச் சேர்ந்த
க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்,  ஈகுவாஸ் எஸ்டேட்ஸ்,
சிவகாமா டிரேடர்ஸ், கோவை ஷெல்டர்ஸ் ஆகியவை.
இதில் இரண்டு நிறுவனங்களில் ராஜாவின் மனைவி
இயக்குநராக இருந்திருக்கிறார்.(விஷயம் வெளியானவுடன்
விலகி இருக்கிறார் )

2) இதற்கு முன்னர் தான் பார்த்து வந்த சுற்றுச்சூழல்
துறையில் தனக்கு அறிமுகமான சில காண்ட்ராக்டர்களை
(தகவல் தொடர்பு துறைக்கு சற்றும் சம்பந்தமோ,
அறிமுகமோ, அனுபவமோ இல்லாதவர்களை) அழைத்து
தன்னையும் அதில் ஒரு பங்குதாரராக பாவித்து
இதற்கு விண்ணப்பிக்கும்படி செய்திருக்கிறார்.

3)தமிழ் நாட்டைச்சேர்ந்தவர் சையத் சலாவுதீன்.
(கலைஞர் மேகலா பிக்சர்ஸ் வைத்திருந்தபோது,
இவர் திருச்சியில் திரைப்பட விநியோகஸ்தராக
இருந்தார் – கலைஞரின் பழைய நண்பர் ) தற்போது
ஸ்டார் இன்சூரன்ஸ் திட்டம் போன்ற தமிழகத்தின்
பல திட்டங்களை ஒப்பந்தம் மூலமாகப்  பெற்று
கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள
நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இவரது மகன் டைரக்டராக உள்ள
நிறுவனம் தான் ஈடிஏ அஸ்கான் ஸ்டார்.

ஸ்பெக்ட்ரம்  லைசென்ஸ் பெற்ற ஸ்வான் டெலிகாம்
கம்பெனியில்  இவருக்கு 380 கோடி (கோடி) ரூபாய்
பங்கு இருக்கிறது. வெறும்  ஒரு லட்சம் ரூபாய்
மூலதனத்துடன் துவங்கப்பட்ட நிறுவனம் இது.

4) இவற்றில் பெரும்பாலான கம்பெனிகள் ஆகஸ்ட்
அல்லது செப்டம்பரில் துவக்கப்பட்டு,  அக்டோபரில்
லைசென்ஸ் பெற்று விட்டன.

5) இதில் ஸ்வான் கம்பெனி 1600 கோடி ரூபாய்க்கு
லைசென்ஸ் உரிமை வாங்கி, சில நாட்களுக்குள்ளேயே
அதில் 40 சத வீத பங்குகளை 4500 கோடி ரூபாய்க்கு
மற்றொரு வெளி நாட்டு கம்பெனிக்கு விற்று கொள்ளை
லாபம் சம்பாதித்திருக்கிறது. ( விற்பதற்காகவே
வாங்கி இருக்கிறது என்று சொல்லலாம்)

6) இன்னொரு கம்பெனியான  யுனிடெக் தன்னுடைய
60 சத வீத பங்குகளை மட்டுமே 6200 கோடி ரூபாய்க்கு
விற்று மீண்டும் ஒரு கொள்ளை நிகழ்த்தி இருக்கிறது.

7)  முதலில் விண்ணப்பங்கள் செப்டம்பர் 30ந்தேதி
வரை பெற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்து விட்டு
25ந்தேதி திடீரென்று, அன்று மாலையுடன் விண்ணப்பங்கள்
பெறுவது நிறுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

மதியம் 2.45 மணிக்கு அறிவிக்கிறார்கள் –
மாலை 3.30 மணிக்குள்  எல்லா விதத்திலும் பூர்த்தி
செய்யப்பட்டு, பணத்துக்கான  டிமாண்டு டிராப்டு,
வங்கி உத்திரவாதம் உட்பட எல்லாம் சேர்த்து
கொடுக்கப்பட வேண்டும் என்று.
வெறும் 45 நிமிட நேரம் மட்டுமே கொடுக்கிறார்கள்.

இதில் என்ன விந்தை என்றால், 13 கம்பெனிகள்
உடனடியாக இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்து
விண்ணப்பங்களைக் கொடுக்கின்றன.
(அந்த கம்பெனிகளுக்கு மட்டும் முன்னரே
தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது)

45 நிமிடத்தில் டிடி யும், வங்கி உத்திரவாதமும்
வாங்கி வர எந்த நிறுவனத்தாலும் முடியாது. இந்த
13 கம்பெனிகள் மட்டும் ஏற்கெனவே (தொகை
அறிவிக்கப்படும் முன்னரே) சரியான தொகைக்கு
டிடி வாங்கி வைத்திருக்கின்றன.

எப்படி ?

இன்னும்  பல விவரங்கள்  வந்து கொண்டே
இருக்கின்றன.
அசைக்க முடியாத  ஆதாரங்கள் –
மறைக்க முடியாத,
மறுக்க முடியாத ஆதாரங்கள். வழக்கு தொடர்ந்து
நடக்கும் ஒவ்வொரு நாளும் புதுப்புது விவரங்கள் !

இத்தனையும் தெரிந்தும் ஒருவர் இவரை
தக தகத்த  கதிரவன்  என்று கூறினால், அதற்கு
இந்த தக தகப்பின் பலன் அவருக்கும்  போயிருக்கிறது
என்பதைத் தவிர வேறு காரணம் ஏதாவது
இருக்க முடியுமா?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.