கோவை என்கவுண்டர் – தேவை ஒவ்வொரு
மாவட்டத்திற்கும் ஒரு ஷைலேந்திரபாபு !
கோவையில் இரண்டு சிறுவர்களைக் கடத்திச்சென்று
கொன்ற மிருகங்களில் ஒன்று இன்று வேட்டையாடப்பட்டு
விட்டது.
இரண்டாவதையும் சேர்த்தே அழித்திருக்கலாம்.
நல்லவர்களுக்கு போலீசைக் கண்டு அச்சம்
ஏற்படக்கூடாது.
திருடர்களும், ரவுடிகளும், கொலைகாரர்களும்
தான் போலீசைக்கண்டு அஞ்ச வேண்டும்.
ஆனால் இன்று நாட்டில் தலைகீழ் நிலை.
அரசியல்வாதிகளின் ஆதரவும், பணபலமும்
இருப்பதால் – பொறுக்கிகள் ஊர்வலம் வருகிறார்கள்.
நல்லவர்கள் அஞ்சுகிறார்கள்.
கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் –
அதுவும் உடனடியாக –
என்கிற பயம் இருந்தால் தான்
சட்டத்திற்கு மரியாதை இருக்கும்.
சமுதாயம் நிம்மதியாக வாழ முடியும்.
அரபு நாடுகளில் குற்றச்செயல்கள் குறைவாக
இருப்பதற்குக் காரணம், நிச்சயமான, விரைவான,
கடுமையான தண்டனை தான்.
மனித உரிமை – அது இது என்று பேசிக்கொண்டு
ஒரு கூட்டம் கிளம்பும். அவர்களை பொது மக்களே
அடக்க வேண்டும். கோஷம் போடும் வேலையற்ற
வக்கீல்களை பொது மக்களே கவனித்துக்
கொள்ள வேண்டும்.
பொது மக்கள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தால்
தான் இவர்கள் அடங்குவார்கள்
மனிதர்களுக்குத் தான் மனித உரிமை.
மிருகங்களுக்கு அல்ல.
கமிஷனர் ஷைலேந்திரபாபு பாராட்டுதலுக்கு உரியவர்.
இன்றைய கால கட்டத்தில் இதைவிட சிறப்பாக
ஒரு காவல் துறை அதிகாரியால் செயல்பட முடியாது.
இவரைப் பார்த்து – ஒவ்வொரு மாவட்டத்திலும்
ஒரு ஷைலேந்திரபாபு உருவாக வேண்டும்.




what done by covai commissioner is appreciable, I proud that I think so, he (sylendra Babu) was started his carrier as A.S.P at Chidambaram. He done his job well, Lawyers and other human rights organisation won’t appose because they may think that if it is occurs in their family….
சில சந்தேகங்கள்………
1.அதிகாலை 5 மணிக்கு இந்த கைதிகளை அழைத்துச்செல்ல வேண்டிய அவசியம் என்ன?
2.இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை கைதி எடுத்தார் என சொல்லப்படுகிறது.அப்படியானால் கைதிக்கு கை விலங்கு போடவில்லையா?மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் இவ்வளவு அஜாக்கிரதையாகவா தன துப்பாக்கியை வைத்திருப்பார்?
3 எதிர்காலத்தில் இவ்வாறு நிகழா வண்ணம் தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்?
நண்பர் கண்பத்,
நீங்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்ககம் அளிக்க தனி இடுகையே எழுதி விட்டேன்.
சில கேள்விகளுக்கான பதில்களை வெளிப்படையாகப்
பேச முடியாது. உணரத்தான் முடியும் – இல்லையா ?
அதற்கு ஒரு சந்தர்ப்பம் அளித்ததற்காக
உங்களுக்கு என் நன்றி.
வாழ்த்துக்களுடன் –
காவிரிமைந்தன்
உங்கள் ஆதங்கம் என்னால் உணர முடிகிறது. இருப்பினும் காவல் துறையின் இந்த செயல் வருந்த தக்கது மேலும் கண்டிக்கத்தக்கது. மாற்று கருத்து எனில், மன்னிக்கவும். நன்றி.
இந்தக் கொலை (என் கவுண்டர்) குற்றவாளிகளை குறைக்கும் என தெரியவில்லை. இறந்தவர் அரசியல் பின்புலம் இல்லாத சாமானிய மனிதன் என்பதால்தானே, இத்தனை எளிதாக ஒரு கதையும் கொலையும் நிகழ்ந்திருக்கிறது.
அரசியல் பிரமுகர்களிடம் தொடர்பில் இருந்தால் இந்த நிகழ்வே நிகழ்ந்திருக்காது. கொலைக்காக கட்டப்படும் சப்பைக் கதைகளை மக்கள் அறிவார்கள். எல்லோருக்கும் இதே தண்டனையை கொடுக்க முடியுமா….
பாராளுமன்றத்தில் குண்டு வைத்தவனுக்கும், கற்பழித்து கொன்றவர்களுக்கும் இருக்கும் பின்புலத்தை சாதாரண திருடர்களும் இனி அடைவார்கள். அப்படி நிகழாவிட்டால் தங்களுக்கு பாதுகாப்பி்ல்லை என்பதை இந்த என்கவுன்டர் உறக்க சொல்லுகிறது என்பதே மெய்.
மனித நேயம் என்று சொல்லி இதை எதிர்ப்பதற்கான காரணம் இதுவாகவே இருக்கும். மேலும், சட்டப்படி அவனுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று சட்டத்தை மக்களே கையில் எடுக்கத் தொடங்கும் அபாயமும் இருக்கிறது.
MR ஜெகதிஸ்வரன் கருத்து சரியாக படுகிறது.
ஷைலேந்திரபாபு romba nallavar http://www.savuku.com padichu paaru …. ???
இன்றைய கால கட்டத்தில் இதைவிட சிறப்பாக
ஒரு காவல் துறை அதிகாரியால் செயல்பட முடியாது.
இவரைப் பார்த்து – ஒவ்வொரு மாவட்டத்திலும்
ஒரு ஷைலேந்திரபாபு உருவாக வேண்டும்.
http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=159:2010-11-13-04-15-57&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2