திருமாவளவனும் –
Son of ப.சிதம்பரமும் !
திருமாவளவன் பற்றி இன்று வந்துள்ள செய்தி-
———————————————
திருமாவளவன் எம்.பி. பதவியை
ராஜினாமா செய்ய வேண்டும்:
கார்த்தி சிதம்பரம் ஆவேசம்-
முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான்
இல்லத்திருமணம் இன்று காலை சிதம்பரத்தில்
நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இத்திருமண
விழாவில் பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,‘’காங்கிரஸ் கட்சி 125 வருட
பாரம்பரியமிக்கது. அந்த கட்சியை விமர்சிக்க
யாருக்கும் தகுதியில்லை. காங்கிரஸ் தயவால்
எம்.பி.யான திருமாவளவன் அந்த
கட்சியை விமர்சிக்கிறார்.
வேண்டுமென்றால் எம்.பி. பதவியை ராஜினாமா
செய்துவிட்டு விமர்சிக்கட்டும்.(திருமாவளவன்
ராஜினாமா செய்ய வேண்டும் என்று 10 முறைக்கு
மேல் சொன்னார்)
இலங்கைக்கு சென்று ராஜபக்சேவுடன் டீ-வடை
சாப்பிட்டுவிட்டு வேறு எதுவும் பேசாமல்
மவுனமாக இருந்துவிட்டு, இங்கே வந்து
கடுமையாக விமர்சிக்கிறார்.நேருக்கு நேர்
அங்கேயே பேச வேண்டியதுதானே.
———————————————
இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன –
1) திருமாவளவன் பாராளுமன்ற உறுப்பினர் ஆனது
தன் சொந்த செல்வாக்கினாலும், திமுக வின்
ஆதரவினாலும் மட்டும் தான்.
காங்கிரஸ்காரர் ஒருவர் கூட திருமாவளாவனுக்கு
ஓட்டுப் போட்டிருக்க மாட்டார். எனவே இதைப்பேச
தந்தையின் தோளில் சவாரி செய்து கொண்டிருக்கும்
கார்த்தி Son of ப.சிதம்பரத்திற்கு எந்த தகுதியும்
இல்லை.
2) திருமாவளவனுக்கு இதுவும் வேண்டும் –
இன்னமும் வேண்டும்.
எத்தனை நாள் தான் அவர் இரட்டைக் குதிரைகளில்
சவாரி செய்யப் போகிறார் ?
தமிழர் நலனா அல்லது திமுக-காங்கிரஸ் கூட்டணியா
என்று இரண்டில் ஒன்றை அவர் முடிவு செய்யும்
வரையில் இத்தகைய அவமானங்களை
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டி இருக்கும்.





நிஜமான சாமியாரா இல்லை ….