அசுர வேகத்தில் தப்பான செயல்கள் –
கலைஞரின் புதிய மதுபான தொழிற்சாலைகள் !
தமிழ் நாட்டில் உள்ள ஒன்றிரண்டு பத்திரிகைகளைத்
தவிர மீதி அத்தனையும் அரசுக்கு அடங்கிக்
கிடக்கின்றன.காரணம் –
பணமா – பயமுறுத்தலா – தெரியவில்லை.
ஒரே ஒரு இதழில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
அவசர அவசரமாக கடந்த ஒரு மாத காலத்துக்குள்
நான்கு புதிய மதுபானத் தொழிற்சாலைகள்
துவங்க அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
ஏற்கெனவே கலைஞர் அரசில் புதிதாக அனுமதி
கொடுக்கப்பட்ட 5 தொழிற்சாலைகளையும் சேர்த்தால்
மொத்தம் 9 ஆகிறது.
புதிதாக துவங்கப்படும்
மற்ற தொழிற்சாலைகளைப் பற்றி அவ்வப்போது
அறிவித்துக்கொண்டே இருக்கும் அரசு இந்த
தொழிற்சாலைகள் புதிதாக
வருவதைப்பற்றிய செய்தியை மட்டும்
மர்மமாக வைத்திருப்பது ஏன் ? புதிய வேலை
வாய்ப்புகள் உருவாவதில் மக்கள் மகிழ்ச்சி தானே
அடைவர் !
காரணம் இருக்கிறது.
புதிய தொழிற்சாலைகளுக்கு யார் உண்மையான
சொந்தக்காரர்கள்
என்று வெளியே தெரிந்தால் அரசியல் வாழ்வு
சிக்கலாகி விடும் !
ஒருவர் உளியின் … படத்தயாரிப்பாளர் !
இன்னொருவர் மத்திய அமைச்சகர் … ரட்..கன்.
(இது வாலாஜா அருகே )
மற்றுமொருவர் முன்னாள் கப்பல் அமைச்சரின் மகன்.
( இது திருவாரூர் அருகே)
இப்போது கடைசியாகச் சொல்லப்போகும்
நபர் தான் புதிய விஐபி –
கலைஞர் தொலைக்காட்சியின்
நிர்வாக இயக்குனர் — கும்மிடிப்பூண்டியில் புதிய
தொழிலைத் துவங்குகிறார்.
இவர் பினாமி. இவ்வளவு முதலீட்டுக்கு
இந்த மேனேஜர் எங்கே போவார் ? ஒரிஜினல் ஓனர்
யார் என்பது அவருக்கே சொல்லப்படவில்லையாம் !
இந்த செய்திகள் இன்னும் மறுக்கப்படவில்லை.
ஆசிரியர் எப்போது உள்ளே போவாரோ தெரியவில்லை!
குடிமகன்கள் பெருகி விட்டார்கள் –
தேவை அதிகரிக்கும்போது
புதிய தொழிற்சாலைகள் வருவதில் தவறு என்ன
என்று கேட்கப்படலாம். பணமும், செல்வாக்கும்
உள்ளவர்கள் புதிய தொழில்களைத் துவக்குவது
சகஜம் தானே என்றும் கேட்கப்படலாம்.
உண்மை தான்.
நான் என்ன சொல்ல வந்தேன் என்றால் –
கலைஞர் அண்மையில் மதுக்கடைகளை
மூடுவதைப்பற்றி
தீவிரமாக யோசித்து வருகிறேன்
என்று அறிவித்தாரே –
அதை சீரியசாக எடுத்துக்கொண்டு சில
தமிழ்க் குடிமகன்கள் மிகவும் கவலையுடன்
ஒவ்வொரு நாளையும் திகிலுடன் கழிக்கிறார்கள்.
அவர்களுக்கு இந்த செய்தி தெரிந்தால் மிக்க
மகிழ்ச்சி அடைவார்களே என்று தான்.நான் இந்த
இடுகையை எழுதுவதும் அவர்கள் நிம்மதிக்காக
மட்டும் தான் !
மற்றபடி கலைஞர் அரசைக் குறை கூறி விட்டு
உள்ளே போக எனக்கென்ன ஆசையா ?



[…] […]