வாழ்த்துக்கள் -நீதிபதி சந்துரு அவர்களுக்கு !
அடுத்தது மாற்றல் உத்திரவா ?

தமிழக அரசைத் தொடர்ந்து விமரிசனம்
செய்யும் தமிழருவி மணியன் அவர்களை
எப்படியாவது விரட்ட வேண்டும் என்று
இயன்ற வரையில் முயன்ற தமிழக அரசுக்கு
சாட்டையடியாகத் தீர்ப்பு
வழங்கி இருக்கிறார் சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்கள்.
அவரது தீர்ப்பிலிருந்து சில வரிகள் –
—————————-
மனுதாரர் குடியிருப்பை காலி செய்ய
வேண்டும் என்கிற நோக்கில் தான்
இந்தக் காரணத்தை வாரியம்
கண்டுபிடித்துள்ளது. வீட்டு வசதி வாரியம்
பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலக
கட்டடத்தின் மேல், பெரிய அளவில்
நியான் விளக்கு பொருத்தப்பட்ட போர்டு
உள்ளது. அதில், “தமிழ் வாழ்க’
என்கிற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது.
இதை உண்மையாக நடைமுறைப்படுத்த
வேண்டுமென்றால்,
கொள்கை ரீதியான
மாறுபாடுகள் இருந்தாலும்
மனுதாரரைப்
போன்ற தமிழ் எழுத்தாளர்கள்,
தமிழ் அறிஞர்கள்,
தமிழ் சிந்தனையாளர்களை
கவுரவப்படுத்த வேண்டும்.
தமிழ் சிந்தனையாளர்களை பாதுகாப்பதன்
மூலமே தமிழ் வாழும்.
அப்போது தான், நியான் விளக்கு
பொருத்தப்பட்ட போர்டில் உள்ள,
“தமிழ் வாழ்க’ என்கிற வாசகம்
மேலும் மிளிரும்.
——————————-
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
ஆனால் தமிழக அரசு இதை அவ்வளவு
எளிதில் ஜீரணிக்குமா?
உடனடியாக மேல்முறையீட்டை
எதிர்பார்க்கலாம் !
கூடவே – மாற்றல் உத்திரவும்
வரலாம். எந்த மாநிலம் அந்த
பாக்கியத்துக்கு கொடுத்து
வைத்திருக்கிறதோ !



[…] […]