தி.மு.க.பெருமை கொள்ள வேண்டிய
விஷயம் – மாறன் தம்பதியினரின்
வருடச்சம்பளம் – 741 லட்சம் அதாவது
74.16 கோடிகள் !!
கடந்த பல ஆண்டுகளாக திமுக தொடர்ந்து
மத்தியில் பதவி வகித்தாலும், தமிழ் நாட்டில்
ஆட்சி செய்தாலும் தமிழ் மக்களுக்கு
எந்த பயனும் கிடைக்கவில்லை
என்று குற்றம் சாட்டும்
எதிர்க்கட்சிகளுக்கு சாட்டையடி !
இன்று வெளியாகியுள்ள திமுகவின்
சாதனை வரலாறு – (இந்த செய்தி
தமிழ்ப் பத்திரிகைகள்
எதிலும் வெளிவரவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது )

கலாநிதி மாறன், சன் குழும நிறுவனத்தின்
மேனேஜிங் டைரெக்டர் என்கிற முறையில்
பெறும் வருட சம்பளம் ரூ.37.8 கோடிகள்.
அவரது மனைவி காவேரி, இதே
நிறுவனத்தின் இணை மேனேஜிங் டைரெக்டர்
என்கிற முறையில் பெறும் வருட சம்பளம்
ரூ.37.8 கோடிகள்.
ஆக கணவர், மனைவி இருவரும் சேர்ந்து
மார்ச் 2010 -ல் முடிந்த நிதியாண்டில்
பெற்றுள்ள மொத்த சம்பளம்
74.16 கோடிகள் –
அதாவது 741 லட்சங்கள் –
அதாவது
மாதச்சம்பளம் சுமார் 61 லட்சங்கள் !!
இந்த தொகை அவர்கள் பெறும் சம்பளம்
மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
லாபத்தில் பங்கு என்பது தனி விஷயம் –
அது ஆண்டு வரவு செலவு தணிக்கைக்கு
பின்னர் தெரிய வரும்.
பங்கு மார்க்கெட்டில் சன் நிறுவனம்
இருப்பதால் – இந்த விவரங்கள் வெளியே
வந்திருக்கின்றன.இல்லை என்றால்
இவை வெளியே தெரியவும் வாய்ப்பு இல்லை!
ஒரு கொசுறு செய்தி –
இன்னும் ஒரு பெருமைப்படத்தக்க செய்தி –
ஸ்பைஸ் ஜெட் என்கிற விமான நிறுவனத்தின்
39 சதவீத பங்குகளை கலாநிதி மாறன்
சுமார் 750 கோடி ரூபாய்க்கு வாங்கி
இருக்கிறார் ! (இது இரண்டு நாட்களுக்கு
முன்னர் வந்த செய்தி )இதன் மூலம்
அதிக அளவில் பங்குகளை வைத்திருக்கும்
தனி நபர் என்கிற முறையில்,
இந்த நிறுவனத்தின்
முழு கட்டுப்பாடும் இவர் கீழ் வருகிறது !



Hard work leads success. Kalignar and Maran worked hard now Maran brothers and Kalignar Family reap the Money and Familiarity. Don’t be jelaous.
நீங்கள் கணக்கில் ஏன் இவ்வளவு வீக்காக இருக்கிறீர்கள். தங்கள் கணக்குப்படி கலாநிதி தம்பதியரின் மாத வருவாய் 6.3 கோடி (630 லட்சம்).
வாழ்க கலைஞரின் தம் மக்கள் தொண்டு ?
கொள்ளை அடிக்கவில்லை. உங்களுக்கு ஏன் பத்திகிறது அவர்கள் சம்பாதித்தால்