நழுவல் திலகம் !
வழுக்கல் சக்கரவர்த்தி !!
இன்றைய தினம் காலையில்
மன்மோஹன் சிங் அவர்கள் தான்
பிரதமராக பொருப்பேற்ற கடந்த
6 வருடங்களில் 2வது முறையாக
பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்!
இந்தியாவின் தலைசிறந்த பத்திரிக்கையாளர்கள்
கேள்விகளை அள்ளி வீசினர் !
நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளான –
நக்சல் தீவிரவாதம்,
விலைவாசி உயர்வு,
பாகிஸ்தானுடன் உறவு,
பொருளாதார நெருக்கடி,
அமைச்சர்களிடையே கருத்து வேற்றுமை
2ஜி ஸ்பெக்ட்டிரம் ஊழல் –
போன்றவைகளைப்பற்றி !
அதிசயமாக பிரதமரே
பத்திரிக்கையாளரை
அழைக்கிறாரே – பல கேள்விகளுக்கு இன்று
பதில் கிடைத்துவிடும் என்று ஆவலோடு
தொலைக்காட்சி முன் அமர்ந்தவர்கள்
எல்லாரும் நொந்தே போனார்கள் !
“வழுக்கல் மன்னன்” என்ற பட்டம்
பெற இவரை விடச்சிறந்த ஆசாமி
இந்தியாவிலேயே இருக்க முடியாது !
ஆனால் –
அத்தனை கேள்விகளில் –
– ஒரே ஒரு கேள்விக்கு மட்டும்
மிகத்தெளிவாக விடை கூறினார் !
தான் ஆற்ற வேண்டிய கடமைகள் இன்னும்
மீதம் இருப்பதால் (? ) பிரதமர் பதவியிலிருந்து
ஓய்வு பெறும் உத்தேசம் மட்டும் தனக்கு
கிடையவே கிடையாது
என்று மிகத்தெளிவாகக்கூறினார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு எதற்காக
ஏற்பாடு செய்யப்பட்டது என்று தெரியாமல்
குழம்பிய ஆங்கில செய்தித்
தொலைக்காட்சியாளர்கள்
பின்னர்
மிகப்பிரமாதமான, சுவையான
கலந்துரையாடல்களை நிகழ்த்தி
ஏமாற்றங்களை ஈடு செய்ய முயற்சி
செய்தார்கள் !
நமது தமிழ் தொலைக்காட்சிகள்
வழக்கம்போல் செம்மொழி மாநாட்டிற்கு
கலைஞர் மனைவி, மகன், மகளுடன்
கோவை உலா சென்றதையும்,
புரட்சித்தலைவி தோழியுடன் திருப்பதி சென்று
வெங்கடாசலபதி தரிசனம் செய்ததையும்
விவரமாகக் காட்டின !



நிஜமான சாமியாரா இல்லை ….