ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் –
அதை தொடர்ந்தும் –
நான் கடந்த ஆறாம் தேதி இட்ட இடுகையைத் தொடர்ந்து
சில நண்பர்கள் இது பற்றி மேற்கொண்டு விவரமாக
எழுதும்படி மின்னஞ்சல்கள் அனுப்பி இருந்தார்கள்.
மேலும் சில விவரங்கள் எனக்குத் தெரிந்திருந்தாலும்
நான் இதற்கு மேல் எழுத முடியாதபடி சில தயக்கங்கள்
என்னைத் தடுக்கின்றன.
பொது வாழ்வுக்கு வந்தவர்களைப்பற்றிய விமரிசனங்கள்
தவிர்க்க முடியாதவை தான் என்றாலும், சம்பந்தப்பட்டவர்
ஒரு பெண்மணி என்பதால் நான் இந்த எல்லையைத் தாண்ட
முடியாதவனாக இருக்கிறேன் ,
நான் எழுதியது ஆறாம் தேதி. இன்றைய தினம்
(பன்னிரெண்டாம் தேதி ) வெளியாகியுள்ள
“துக்ளக்” வார இதழில் பழம்பெரும் எழுத்தாளரும்,
தமிழறிஞருமாகிய
பழ. கருப்பையா அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரை
ஒரு கோணத்தில் என் இடுகைக்கு வலிவு சேர்க்கின்றது.
அதிலிருந்து சில பகுதிகளை ( மட்டும் ) கீழே தந்து
இந்த இடுகையை இத்துடன் முடிக்கிறேன் –
” கருணாநிதிக்கு ஆ. ராசாவிடம் எந்த பற்றும் இல்லை.
ஆனால் ராசாவை மத்திய புலனாய்வின்
கையில் விட்டு விட்டால்
நாறப் போவது ராசா மட்டும் இல்லை – தானும் தான்
என்பது கருணாநிதிக்கு புரியாதா ?
உப்பு தின்ற கருணாநிதி தண்ணீர்
குடிக்கிறார் !
இது தாழ்த்தப்பட்டவர் மீது கொண்ட பாசம் அல்ல !
பாராளுமன்றக் கூக்குரல் கருணாநிதியை மிரட்டி விட்டது ஒரு புறம் –
அழகிரியின் ஒத்துழையாமை இன்னொருபுறம் –
அழகிரிக்கு மாற்றாக உட்கார வைப்பதற்கு முன்பாகவே
கனிமொழிக்கு கை மாறிய பங்கு எவ்வளவு என்பது
வெளிப்பட்டு விடுமே என்னும் தவிப்பு மூன்றாவது புறம் ! “



Hi i am antan kindly send me all article for Raja and Kanimozhi to my email address because i want to send some of my friends and futur any article aganinst Karunanethi Govt kindly email me also. Thanks for your help.
I want to read your web want to contribue but first I want to know whether you are one of the people who call LTTE ,Lankan Tamils-pushpavanam
வருக நண்பர் புஷ்பவனம் !
உங்கள் சந்தேகங்களுக்கான விளக்கம் –
நான் ஒரு தமிழன் –
நான் ஒரு இந்தியன் –
நான் எந்த ஒரு அரசியல் கட்சியையோ,
இயக்கத்தையோ சேராதவன்.
சேர விருப்பமும் இல்லாதவன்.
என் நோக்கம் சமுதாய நலன் –
முக்கியமாக தமிழர் நலன்.
எனக்குப் பிடித்தவர்கள் –
பாரதியும், பெரியாரும்,விவேகானந்தரும் !
(விசித்திரமாக இருக்கிறதா ?)
இந்த வலைத்தளத்தில் எழுதுவதன் நோக்கம் –
நல்லதைப் பாராட்ட வேண்டும்.
கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
(இன்றில்லா விட்டாலும்
நாளையாவது மாறுமல்லவா ? )
அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
ஆபாசமின்றி எழுத வேண்டும்.
உங்கள் ஐயங்கள் தீர்ந்திருக்கும் என்று
நம்புகிறேன்.
நீங்கள் தாராளமாக கலந்து கொள்ளலாம்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
வருக நண்பர் புஷ்பவனம் !
உங்கள் சந்தேகங்களுக்கான விளக்கம் –
நான் ஒரு தமிழன் – நான் ஒரு இந்தியன் – நான் எந்த ஒரு அரசியல் கட்சியையோ, இயக்கத்தையோ சேராதவன். சேர விருப்பமும் இல்லாதவன்.
என் நோக்கம் சமுதாய நலன் – முக்கியமாக தமிழர் நலன்.
எனக்குப் பிடித்தவர்கள் – பாரதியும், பெரியாரும்,விவேகானந்தரும் ! (விசித்திரமாக இருக்கிறதா ?)
இந்த வலைத்தளத்தில் எழுதுவதன் நோக்கம் –
நல்லதைப் பாராட்ட வேண்டும். கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும். (இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறுமல்லவா ? ) அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! ) ஆபாசமின்றி எழுத வேண்டும்.
உங்கள் ஐயங்கள் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.
நீங்கள் தாராளமாக கலந்து கொள்ளலாம்.
-வாழ்த்துக்களுடன் காவிரிமைந்தன்
நண்பரே வணக்கம் உங்களின் எழுத்துக்கள் வரவேற்க தக்கது.நன்றி
தாங்களின் பல இடுககைகலை படிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது பரவாயில்லை. ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத கொள்கைபரப்புச் செயளாலர் தாங்கள் செயல்பட்டுயிருப்பது மகிழ்ச்சி
வருக நண்பர் அப்துல் காதர்,
தங்களுக்கு நீடித்த மகிழ்ச்சியை
கொடுக்க இயலாத நிலை
ஏற்படுவதற்கு வருந்துகிறேன் !
ஜெயலலிதாவையும் விமரிசனம் செய்யும்
இடுகைகள் இந்த தளத்தில் வரும் காலம்
நெருங்கி வந்து விட்டது.
மீண்டும் சொல்கிறேன் – நான் எந்த கட்சியையும்
சேர்ந்தவன் அல்ல. எதாவது ஒரு கட்சியின்
விசுவாசியாகி விட்டால், சுதந்திரமாக
கருத்தை வெளியிடும் தகுதியை
இழக்க நேரிடும். அதற்கு நான் தயாரில்லை !
– வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
ar-u-me-i