ராஜாவுக்கும், கனிமொழிக்கும் ஏன் இந்த நெருக்கம் ?
இன்றிரவு headlines today ஆங்கிலத்தொலைக்காட்சியில்,
தமிழர்கள் அனைவருமே தலைகுனியும்படியான பல
விஷயங்களை அலசினார்கள் !
பாராளுமன்றத்தை இன்று உலுக்கிய ராஜா தொடர்புடைய
2 G ஸ்பெக்ட்ரம் விவகாரமாகவும்,
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ராஜா
மீண்டும் தொலைதொடர்பு அமைச்சரகத்தைப் பெற
கனிமொழி, ரீடா நாடியா என்ற பெண்ணின் உதவியுடன்
மேற்கொண்ட முயற்சிகளைப்பற்றியும் விலாவாரியாக
அலசினார்கள்.
சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள்
இப்படி ஒரு சம்பவம் நடைபெறுவதாகவே இதுவரை
கண்டுகொள்ளவில்லை !
அழகிரி மற்றும் தயாநிதி ஆகியோரையும் மீறி
ராஜா அதே அமைச்சகத்தை மீண்டும் பெற கனிமொழி
ஏன் அவ்வளவு அக்கரை காட்டினார் என்றும்
கேள்விகள் எழுப்பப்படுகின்றன !
ரீட்டா நாடியா என்கிற பெண்ணுடன் ராஜா பேசிய
தொலைபேசி உரையாடல்களை மத்திய அரசின்
ஒரு பிரிவே பதிவு செய்து அதன் பிரதி
தொலைகாட்சி நிறுவனத்திடம் மாட்டி இருக்கிறது !
விஷயம் விஸ்வரூபம் எடுக்கும்போல் தோன்றுகிறது !
உப்பு தின்றவர் தண்ணீர் குடித்து தானே ஆக வேண்டும் ?
கலைஞர் நேற்று தான் டில்லி சென்று எல்லாவற்றையும்
சரி செய்து விட்டு வந்ததாக இன்றைய காலை தின இதழ்கள் கூறின –
அதற்குள் இப்படி ஒரு திருப்பமா ?



தங்களது விமர்சனக்கட்டுரையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கட்டுரைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
ஆசிரியர்,
தமிழ்குறிஞ்சி
கருணாநிதி குடும்ப நிகழ்வுகளை கிளறினால் கூவத்தைவிட மோசமாக நாறும். இந்த குடும்பம் தமிழ்நாட்டை வழிநடத்துவது தமிழினத்திற்கு அவமானம்.
தலைப்பு அளவிற்கு செய்தியில் விவரம் இருப்பதாகத் தெரியவில்லையே?
தயவு செய்து headlines today ஆங்கில செய்தி
தொலைக்காட்சியை பார்க்கவும். விவரம் புரியும்,
தொலைபேசி உரையாடல்
பதிவை கொஞ்சம் கொஞ்சமாக
தொடர்ச்சியாக ஒளிபரப்பிக்கொண்டே
இருக்கிறார்கள். நான் லிங்கை மட்டும் தான்
\கொடுத்தேன், முழு விவரங்களும் கொஞ்சம்
கொஞ்சமாக வந்துகொண்டே இருக்கின்றன .
என்ன காரணமோ தெரியவில்லை தமிழ் நாட்டில்
இந்த செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன