என்ன இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியுமா ?
முடிகிறதே !
கதை போல் தோன்றும் ஒரு உண்மைச் சம்பவம் !
இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயரையோ, புகைப்படத்தையோ
வெளியிடாமல், அதிக அளவிற்கு
அவசியம் விளம்பரம்
கொடுக்கப்பட வேண்டிய ஒரு சம்பவம் இது !
அதனாலேயே எழுதுகிறேன்.
இரவு எட்டரை மணி. ஒரு இளைஞன். டாஸ்மாக் பாரில்
அமர்ந்து நண்பர்களுடன் உல்லாசமாகவும், ஆரவாரமாகவும்
மதுவருந்திக்கொண்டு இருக்கிறான்.
ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
உற்சாகமாக “இதோ வருகிறேன்” என்று பதில் கூறி விட்டு
“டேய் என் ஆள் கூப்பிடறாள்டா ” என்று சொல்லிக்கொண்டே
ஒரு நண்பனையும் இழுத்துக்கொண்டு டூ வீலரில்
பறக்கிறான்.
அதே இரவு பத்தரை மணிக்கு சாலை ஓரத்தில் இரண்டு
நபர்கள் இறந்து கிடந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற
போலீசார் குடிபோதையில் நடந்த விபத்து என்று தீர்மானித்து
உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மறு நாள் இரண்டு நண்பர்களும் கொலை செய்யப்பட்டு
வீசி எறியப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய
அந்த வட்டாரம் முழுவதும் பதட்டமடைந்தது.
காதலி வீட்டுக்குப்போனவர்கள் கொலையுண்டது எப்படி?
அந்தப்பெண் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே,
ஒரு தோழியின் மூலமாக அந்த பையன்
அவளுக்கு அறிமுகம் ஆனான்..
இளமை வேகம் – எதிர்பாலில் ஏற்பட்ட ஈர்ப்பு.
இருவரும் அடிக்கடி சந்தித்தனர்.
பழகினர், காதலிக்கத்துவங்கினர்.
பழகும்போது அந்தப் பையன் நிறைய பொய்
சொல்லி இருக்கிறான்!
இருவரும் ஒரே ஜாதி என்றும் சொந்தமாக
டிராவல் ஏஜன்சி வைத்திருப்பதாகவும் !
இதை எல்லாம் அந்தப்பெண் நம்பி நெருங்கி
பழகி இருக்கிறாள். இருவரும் நெருங்கி இருக்கையில்
அந்தப்பையன் செல்போனில் இருவரையும் சேர்த்து
புகைப்படமும் (அவளுக்கு தெரிந்தே ) எடுத்திருக்கிறான்..
இப்படியே சில காலம் கழிந்திருக்கிறது.
இப்போது அந்தப்பெண்
இஞ்சினீரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள்.
கொஞ்சம் கொஞ்சமாக அந்தப்பையனைப்பற்றிய
உண்மை விவரங்கள்
அவளுக்குத் தெரிய வருகின்றன. –
அவன் வேறு ஜாதியை சேர்ந்தவன்.
வெறும் வேன் டிரைவர் தான் –
சிறிய வயதிலேயே பெரிய குடிகாரன் வேறு .
நடவடிக்கைகள் சரி இல்லாதவன் – போக்கிரி !
அந்த பெண்ணுக்கு இரண்டு தங்கைகள் வேறு.
அந்த பையனின் உறவு தொடர்ந்தால்,
தன வாழ்வு மட்டும் அல்லாமல் தன்னுடைய
குடும்பமே சிதைந்து விடும் என்பது அவளுக்கு புரிந்தது.
தாங்கள் நெருங்கி பழகியது தவறு என்றும்
தன்னை மறந்து விடும்படியும் அந்த பையனிடம் கெஞ்சி
கேட்டிருக்கிறாள்.
இந்த உண்மைகளை அந்தப்பெண் தன பெற்றோர்களிடமும்
கூறி விடடாள். தனக்கு அவனை மணக்க விருப்பம் இல்லை என்றும் கூறி விடடாள். இதையே
அவள் அந்தப் பையனிடமும்
கூறி விடடாள்.
அவன் தன சுயரூபத்தை காட்டி இருக்கிறான்.
அவளை பிளாக்மெயில் செய்ய முற்பட்டிருக்கிறான்.
தாங்கள் இருவரும் நெருங்கி எடுத்துக்கொண்ட
புகைப்படத்தை போஸ்டர் அடித்து ஊர் பூராவும் ஓட்டுவேன்
என்று பயமுறுத்தி இருக்கிறான்.
இந்த நிலையில் அந்தபெண்ணின் பெற்றோர் தலையிட்டு
தங்கள் பெண்ணை விட்டு விடும்படி மன்றாடி இருக்கின்றனர்.
கற்புக்கும் திருமணத்திற்கும் சம்பந்தமில்லை என்று
குஷ்பூ போன்றவர்கள் வேண்டுமானால் சொல்லலாம்.
ஆனால் விவரம் வெளியில் தெரிந்தால் அந்த பெண்ணுக்கு
திருமணம் நடக்குமா ?
பையன் பேரம் பேசி இருக்கிறான். பதினான்கு லட்சம்
வரை கூட அவர்கள் தயாராக இருந்திருக்கின்றனர்.
பையன் இருபது வரை கேட்டிருக்கிறான்.
அவனுக்கு பக்க பலமாக ஒரு லோக்கல்
ஆளுங்கட்சி பிரமுகர் வேறு
செய்வதறியாத பெற்றோர்கள் அந்த பெண்ணின்
மூலம் அவனை செல்போனில் தொடர்பு கொண்டு
வீட்டிற்கு அழைத்திருக்கிறார்கள், வந்தவனிடம்
தங்கள் குடும்பத்தை நிம்மதியாக வாழ விடும்படி மீண்டும்
கெஞ்சி கேட்டுக்கொண்டுள்ளனர்.
திமிரிலும், குடிபோதையிலும் அவன் அவர்களை
எடுத்தெறிந்து பேசி இருக்கிறான்.
வேறு எதுவும் தோன்றாத நிலையில்,
எதற்கும் மசியாத அவனையும், துணைக்கு
அவன் கூட வந்த நண்பனையும்
வெட்டிக்கொன்று விட்டு சடலங்களை
நெடுஞ்சாலையில் கொண்டு சென்று வீசி விட்டனர்.
விவரங்கள் அனைத்தும் போலீஸ் விசாரணையில்
வெளிவந்து அந்த குடும்பமே இப்போது சிறையில் !
இதில் எது நியாயம் – எது நியாயமில்லை ?
பள்ளியில் படிக்கும்போது அந்தபெண்ணுக்கு மிஞ்சி போனால்
பதினைந்து அல்லது பதினாறு வயது இருக்கலாம்.
அந்த வயதில் ஒழுங்காகப் படித்து,
தொழில் கல்வியையும் முடித்து,
ஒரு நல்ல வேலையை தேடிக்கொண்டு,
தன்னையும், தன குடும்பத்தையும் நிலைநிறுத்திக்கொண்டு ,
அதன் பின்னர் துணை தேடவோ,
காதலிக்கவோ ஆரம்பித்திருக்க வேண்டும்.
அந்த நேரத்தில் சரியான நபரை தேர்ந்தெடுக்கும் பக்குவமும்
அவளுக்கு வந்திருக்கும்.
அவசரப்பட்டு பாலியல் உந்துதல்களுக்கு வசப்பட்டு,
தன்னையும், தன குடும்பத்தினரையும் படு குழியில்
தள்ளி விடடாள் அந்த அறியாச்சிறுமி.
.
இப்போது அவள் படும் வேதனையே அதற்கு போதுமான
தண்டனை தான்.
ஆனால் அவளைப்பார்த்து, மற்ற சிறுமிகள்
கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம் இந்த நிகழ்வில்
இருக்கிறது .
வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் விதிக்கப்பட்டுள்ள நேரம்,
வரைமுறை இருக்கிறது. இருபது வயதுக்கு மேல் செய்ய
வேண்டியதை பதினைந்திலேயே செய்தால் விளைவு
எது வரை செல்லக்கூடும் என்பதை அவள் வயதை ஒத்த
மற்ற சிறுமிகள் உணர இந்த சம்பவத்திற்கு விளம்பரம்
அவசியம் தேவைப்படுகிறது!
அதே போல அந்த பொறுப்பற்ற, பொறுக்கி இளைஞனை
பற்றிய நிகழ்வுகளும், அவன் நாயைப்போல்
நடுத்தெருவில் பிணமாக
கிடந்த செய்தியும் கூட வெளிஉலகத்திற்கு பரபரப்பாக
தெரியப்படுத்தப்பட வேண்டும்.
வாலிப திமிரில் அவனைப்போல் மனசாட்சியை மீறி
நடந்தால் முடிவு என்ன ஆகும் எனபது
இன்றைய வாலிபர்களுக்கு உணர்த்தப்பட வேண்டாமா ?.



நண்பரே, சினிமாவில் அத்தகைய கேவலமான காட்சிகளைப் பார்த்துவிட்டு, நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றத் துடிக்கும், பண்பற்ற செயல்களின் விளைவுதான் இது. கொலைகளை நியாயப் படுதலாமா என்றால், குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்றுக் குவிக்கிறார்களே, அதை எதில் சேர்ப்பது!
கலாச்சாரத்தை சீரளிபவைகள் :
௧.சினிமா
௨.குடி