சரத் பவார், பிரபுல் படேல் , ஷஷி தரூர், லலித் மோடி –
8௦௦௦ கோடி கள்ளப்பணம், வரி ஏய்ப்பு, அந்நிய செலாவணி மோசடி –
சிறையில் தள்ள தைரியம் உண்டா மத்திய அரசுக்கு ?
அரசு கவிழ்ந்து விடுமே என்கிற பயமா ?
சரத் பவர் – ஏற்கெனவே கோதுமை,சர்க்கரை ஏற்றுமதி,
இறக்குமதியில் கோடிக்கணக்கில் கொள்ளை ,
தற்போது அவரது மகளின் – சுப்ரியா சுலேயின் கணவர்
சதானந்த சுலேயின் பெயரில் பினாமியாக ஐபிஎல் ஏலத்தில்
கோடிக்கணக்கில் கள்ளப்பணம்,
பிரபுல் படேல் தன மகள் பூர்ணாவின் மூலமாக
கொள்ளையில் பங்கு –
அவர் மகள் பூர்ணா தந்தையின் பெயரை பயன்படுத்தி
ஏர் இந்தியா விமானத்தையே ரத்து செய்தசெய்து
மாற்றுபாதையில் பயன்படுத்திய
பதவி துஷ்பிரயோகம் –
சஷி தரூர் – காதலிக்காக அடித்த கொச்சின் டீம்
ஏல கொள்ளை !
லலித் மோடியின் கணக்கில் அடங்காத
ஊழல்கள், கொள்ளைகள –
கடைசியாக வெளிவந்திருக்கும் –
சோனி நிறுவனத்திடமிருந்து
நேரடி ஒலிபரப்பு ஏலத்திற்காக
பெற்ற 4௦௦ கோடி ரூபாய் லஞ்ச விவகாரம்
அப்பப்ப தங்க முடியவில்லை ஊழல் நாற்றம் !
இவை அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக,
முழுவதையும் வெளிப்படுத்தி
கிரிமினல் நடவடிக்கை எடுக்க மன்மோகன்
சிங்கும், சோனியா காந்தியும்
முன் வருவார்களா ?
இல்லை சரத் பவாரின் ஆதரவு வாபஸ்
பிளாக் மெயில் தந்திரத்திற்கு உட்பட்டு
மத்தியிலும், மகாராஷ்ற்றவிலும்
ஆட்சியை தக்க வைத்துகொள்வதிலேயே
குறியாக இருக்கப்போகிறார்களா ?
வயிறு எரிகிறது – தாங்கவொண்ணா
கோபம் வருகிறது இந்த நவீன
கொள்ளைகாரர்களைக்கண்டு –
அரபு நாடுகளில் உள்ளதுபோல் இவர்களை
நடுத்தெருவில் நிறுத்தி சாட்டையால்
அடித்தால் என்ன ?
இந்திய சுதந்திர போராட்டத்தின் முழு
வரலாறும் நிறைய பேருக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.
நான் கூட நேற்று தான் தமிழருவி மணியனின்
ஒரு கட்டுரையில் படித்தேன் –
இந்திய விவகாரங்களை கவனித்து வந்த
இங்கிலாந்து அமைச்சர்
கர்சன் வில்லியை சுமார் 9௦ ஆண்டுகளுக்கு
முன்னர் நேருக்கு நேர் நின்று சுட்டுக்கொன்ற
சுதந்திர போராட்ட வீரன் மதன்லால்
தின்க்ராவைப்பற்றிய
எழுச்சிமிகு வரலாறை.
இதனால் அவனுக்கு மரண தண்டனை
விதிக்கப்பட்டவுடன்
அவன் கூறிய வார்த்தைகள் இவை –
“இந்த நாடு சுதந்திரம் அடையும் வரையில்
இந்தியத் தாயின் மடியில்
நான் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும்.
இதே போல் சுதந்திர வேள்வியில்
மீண்டும் மீண்டும் என் உயிரை
பலி கொடுக்க வேண்டும் !”
இருபத்தி இரண்டு வயதில் என்ன ஒரு பக்குவம் ?
இந்திய சுதந்திரத்திற்காக மீண்டும் மீண்டும்
பிறந்து பிறந்து தூக்கு தண்டனை
பெற விரும்பி இருக்கிறான் இந்த வீர வேங்கை !
இத்தைகைய வீரத்தியாகிகள் தங்கள்
இன்னுயிரை பறிகொடுத்து இந்த
நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுகொடுத்தது
எதற்கு ?
இந்த வெட்கங்கெட்ட நாய்கள்
கொள்ளை அடிப்பதற்கோ ?
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று பாடினானே பாரதி – அவன்
இன்றிருந்தால் என்று தொலையும்
இந்த கொள்ளையர் ஆட்சி என்று தானே
கேட்பான் ?
அரும்பாடு பட்டு சுதந்திரத்தை பெற்றது
நாடு வளமடியவும்
மக்கள் வளமடையவும் தானே ஒழிய
இந்த கொள்ளைக்காரர்கள்
வளம் பெற அல்ல !



பல உள்ளங்களின் வேதனையை மிக சரியாகச் சொல்லியிருகிறீர்கள்.
மெஜாரிடியினர் பெருமூச்சு விடுவதே ஜனநாயகமா?