குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !!
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ?
வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ?
(பகுதி-7 )
வைகோ அவர்களால் மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.
வைகோவை மதிமுக வையும் தலையெடுக்க
விடாமல் கலஞர் தொடர்ந்து எடுத்த
முயற்சிகளால் இந்த இயக்கமும் மிகவும்
பலவீனப்பட்டு இருக்கிறது.
நடிகர் விஜய்காந்த் துவக்கிய தே.மு.தி.க வை
எந்த விதத்திலும்
திராவிட இயக்கமாக கருதி இந்த ஆய்வில்
சேர்த்து விட இயலாது !
13 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும்
ஒரு சந்தர்ப்பம் பெற்று
முதல் அமைச்சரான கலைஞர் கருணாநிதியோ –
இயக்கத்தின் 60 ஆண்டு கால வளர்ச்சியின்
முழுப் பலன்களும்
தன் குடும்பத்தையே சென்று சேரும்படி
மிக கவனமாகப்
பார்த்துக்கொண்டுள்ளார். கட்சியும் ஆட்சியும்
குடும்ப வளர்ச்சிக்காகவே
என்பது கொள்கையாகவே ஆகிப்போனது !!
தந்தை – முதலமைச்சர்
மூத்த மகன் – மத்திய கேபினட் அமைச்சர்
இளைய மகன் -துணை முதலமைச்சர்
மகள் – பாராளுமன்ற உறுப்பினர்
பேரன் – மத்திய கேபினட் அமைச்சர்
திராவிட இயக்கத்தின் தோற்றமும்,
வளர்ச்சியும், வீழ்ச்சியும்
இவ்வாறாக அமைந்தது என்று கூறி இதனை
முடித்திட என் மனம்
இடம் கொடுக்கவில்லை. ஏன் ?
திராவிட இயக்கம் இன்று சீரழிந்து
போய் விட்டாலும்,
பெரியார் ஈவேராவும், அறிஞர் அண்ணாவும்,
பெரும்பாடுபட்டு முயன்ற அத்தனை
உழைப்பும் வீணாகி விடவில்லை !
அவர்கள் உழைப்பிற்கு நிச்சயம்
அர்த்தம் இருக்கிறது !
தமிழ்ச் சமுதாயத்தில் நிச்சயமான
தாக்கங்களையும்
மாற்றங்களையும் அவர்கள் ஏற்படுத்தி
உள்ளார்கள் என்பது உண்மையே –
ஆனால் எந்த அளவிற்கு ?
தொடரும் –








ஒரே குடும்பமாக பாடுபடுகிறார்கள்.
எல்லோருக்கும் எல்லாம் இலவசமாக கொடுக்க முயற்சி செய்கிறார்கள்.
ஒரு காலகட்டத்தில் எல்லோருக்கும்
சாப்பாடும் ஓட்டில் தினப்படி ஸப்ளை செய்து விடுவார்களோ என்னவோ.குடும்பம் தானே வாழ்கிறது. இதெல்லாம் ஸகஜமான சாதாரண விஷயம்
worst family