குமுதத்தின் குற்றச்சாட்டு …
கடந்த வியாழன் அன்று (10/12/2009) வெளிவந்த
(16/12/2009 தேதியிட்டது ) குமுதம் வார இதழில்
அரசு கேபிள் டிவி பற்றி சரமாரியாக பல
குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன !
தன் அரசைப்பற்றி யார் குறை கூறினாலும் உடனுக்குடன்
சூடாக பதில் கூறும் கலைஞர் –
யாரும் கேட்காவிட்டாலும் கேள்வியும் நானே -பதிலும் நானே
என்று – தானே சுடச்சுட கேள்வி கேட்டு
பதிலும் கூறும் கலைஞர் –
இந்த பரபரப்பான குற்றச்சாட்டுகள் வெளியாகி முழுவதாக
ஐந்து நாட்கள் கடந்த பின்னரும் –
வாய்மூடி மௌனம் சாதிப்பதன் மர்மம் என்ன ?







தயவு செய்து முழு விவரங்களை வெளியிடுங்களேன். 10,354 இணைப்புகள் கொடுக்க ரூ. 40,34,22,640/- நிர்வாக செலவுகள் என்று மட்டும் குறிப்பிட்டால் ஒன்றும் செய்துவிட முடியாது!