2012
இது படத்தைப் பற்றிய விமரிசனம் அல்ல.
ஒரு கருத்து – அவ்வளவே !
படத்தின் மையக்கருத்து பூமிப்பந்தின் உட்பகுதி
வெப்பமடைவதால் விளையும் பேரழிவுகளை
தத்ரூபமாக உருவாக்கிக் காட்டுவதும் –
பூமிக்கு இதுவே கடைசி நாள் என்கிற நிலை வரும்போது
மனிதர்களின் மனோபாவங்கள் – செயல்கள் எப்படி எல்லாம்
இருக்கின்றன என்பதை சித்தரிப்பதுமே !
அருமையான கிராபிக்ஸ் மூலம் உண்மை போல
பல நிகழ்வுகளை திரையில் காட்டுவதால் –
பார்ப்பவர்களின் எண்ணங்களில்
நிச்சயம் ஒரு பாதிப்பு ஏற்படுகிறது.
பெரும்பாலானோர் மனதில்
ஒரு திகிலும் – தற்காலிகமாகவாவது – ஏற்படுகிறது !
புவி வெப்பமடைவதைப் பற்றிய ஒரு கவலையை எல்லார்
மனதிலும் ஏற்படுத்த இந்தப் படம் உதவுகிறது.
அந்த அளவில் இந்தப்படம் மிகவும்
வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
இந்த படம் ஏற்படுத்தும் பாதிப்பு மக்கள் மனதில்
சூடாக இருக்கையிலேயே
சுற்றுபுர சூழ்நிலை ஆர்வலர்களும்,
தொண்டு நிறுவனங்களும், அரசாங்கங்களும்,
புவி வெப்பமடைதலைக் குறைக்க பொதுமக்கள் என்னென்ன
செய்யலாம் , இதில் பொது மக்களின் பங்கு என்ன
என்பதை உணர வைக்க முன் வர வேண்டும்.