……………………………………..

……………………………………….
விவேகானந்தர், ஒருமுறை ‘ ஜெர்மன் ‘ நாட்டிற்கு சென்றிருந்தார்.
இலக்கிய மேதையான டுஷ்சென் ‘( இது அவரின் பெயர் ) என்பவர் வீட்டில் அவரது சிறப்பு விருந்தினராக தங்கியிருந்தார்.
‘ மார்க்ஸ் முல்லர் ‘ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
பல விஷயங்களில் அவரைவிட ஆழ்ந்த ஞானம் பெற்றவர் ‘ டுஷ்சென் ‘
‘ டுஷ்சென் ‘ னின், உபநிடத மொழிபெயர்ப்பு நூல்கள் மிகவும் உலகப் புகழ்வாய்ந்தவை.
எந்த புத்தகத்தையும்- படித்த உடன்,
அதன் உண்மை பொருளை கிரகித்து விடும் திறமைகள் பெற்றவர்.
ஜெர்மனியில் உள்ள அவரது வீட்டில்தான் விவேகானந்தர் விருந்தினராக தங்கியிருந்தார்.
ஒருநாள் காலை, டுஷ்சென் தமது படிப்பறையில் அமர்ந்து ஒரு ஜெர்மன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.
அவ்வளவு பெரிய மேதை –
பதினைந்து நாட்களாக அந்த புத்தகத்தை படித்து கொண்டு அதில் உள்ள கருத்துகளை புரிந்து கொள்வதில் அவர்-
சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.
பதினைந்து நாட்களில், பாதி புத்தகத்தைக் கூட அவர் தாண்டவில்லை.
அந்த புத்தகம்,
அந்த அளவு நுட்பமான செய்திகளை உள்ளடக்கியதாக இருந்தது….
அப்போது விவேகானந்தர், அவரது அறைக்குள் நுழைந்தார்.
இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
‘ டுஷ்சென் ‘ தான் – சில நாட்களாக படித்துக் கொண்டிருக்கும் அந்த மகத்தான, நுட்பமான கருத்துக்கள் அடங்கிய,
தன் கையிலிருக்கும் புத்தகத்தை பற்றியும் விவேகானந்தரிடம் பேசினார்.
விவேகானந்தர்,
தானும் அந்த புத்தகத்தை படிக்க விரும்புவதாகவும்,
அதை கொடுத்தால், படித்துவிட்டு அன்று மாலை நேரத்துக்குள் திருப்பி தந்து விடுவதாகவும் சொன்னார்.
உடனே டுஷ்சென்,
‘ நோ…நோ.. அப்படியெல்லாம் உங்களால் முடியாது. இந்த புத்தகம் உங்களுக்கு புரியவும் புரியாது ‘என்றார்.
‘பரவாயில்லை….
படித்துப் பார்க்கிறேன்.
கொடுங்கள் அதை ‘ என்றுஅந்த புத்தகத்தை வாங்கி சென்ற விவேகானந்தர்,ஒரு மணி நேரத்தில், அந்த புத்தகத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்தார்.
நான் அப்போதே சொன்னேன்…..
உங்களால் முடியாது என்று. அறிவை குழப்பிவிட்டதா ? ‘
என்றார் டுஷ்சென்….
இல்லையே. மிக நல்ல புத்தகம்.
முழுவதும் படித்து முடித்து விட்டேன்.
உண்மையில் ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கியது இது.’
என்றார் விவேகானந்தர்…..
அதிர்ந்து போய்விட்டார் டுஷ்சென். விவேகானந்தர் பொய் சொல்ல மாட்டார் என்பது அவருக்குத் தெரியும்.
இருப்பினும்,அவரை சோதித்துப் பார்க்க முடிவு செய்தார்.
பதினைந்து நாட்களாக,
அந்த புத்தகத்தை படித்து தான் குழப்பிக்கொண்ட
செய்திகளை பற்றி ஒவ்வொன்றாக விவேகானந்தரிடம் கேட்டார்.
அதற்கு விவேகானந்தர்,
மிகத் தெளிவாக விளக்கமாக அவருக்கு சொன்னதோடு அல்லாமல்,
அவர் கேட்கிற செய்தி, அந்த புத்தகத்தில் எந்த பக்கத்தில் உள்ளது,
எந்த தலைப்பின்கீழ் சொல்லப்பட்டிருக்கிறது
என்பது பற்றியும் சொல்லிக் கொண்டே போனார்.
உறைந்து போனார் டுஷ்சென்.
இது என்ன அதிசயம் ?
இது எப்படி சாத்தியம் ?
அவ்வளவு பெரிய புத்தகம், நிதானித்து படிக்க வேண்டிய நுட்பமான செய்திகள்.
ஒரு மணி நேரத்தில் படித்து விட்டு இத்தனை விளக்கங்களா…???
அதை விவேகானந்தரிடமே கேட்டார் டுஷ்சென்.
அதற்கு – ‘ படிப்பதற்கு சில முறைகள், சில வகைகள் இருக்கின்றன.
நான் மனதுக்குள் படிப்பதில்லை…..
மனதால் படிக்கிறேன்.
ஒரு புத்தக ஆசிரியர், அவர் சொல்ல வந்த புத்தகத் தலைப்பில் இவ்வளவுதான் சொல்ல முடியும் என்பது என் மனதில் பட்டுவிடும்.
அந்த புத்தகத் தலைப்பிலும்,
பிறகு வருகிற குறுந்தலைப்பிலும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை என் மனம் உணர்ந்து விடும்.
வேறு அதில் என்ன இருக்கப் போகிறது?
என்றார் விவேகானந்தர் நிதானமாக…. !!!
……………………………………………………………………………………………………………………………………



//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…